Pages

Saturday, June 27, 2009

அன்பே என் அன்பே .... உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்புக்கான சிறுகதை

இது 'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக
நான் எழுதிய சிறுகதை இதோ :


அம்மாவ் பசிக்குதுமா என்ற எனது மகன் செல்வத்துக்கு எதுவும் கொடுக்க முடியவில்லையே எனும் போது சே என்ன வாழ்க்கை இது என்று தோன்றியது . என் செல்லம் இருப்பா உன் அப்பாரு இப்ப வந்துருவாக . இல்லம்மா ரொம்ப பசிக்குது என்னால முடியல என்ற மகனை மடியில் போட்டு தாலாட்டிக் கொண்டிருந்தேன் . எங்கப்போனாரு இந்த மனுசன் , பய வேற பசியில துடிக்கிறானே என்ன செய்ய இப்போ .


எதாவது இருக்கா தேடிப்பார்த்தாள் ஒன்னுமே இல்லையே இருந்தாதானே இருக்க என்று நொந்துக்கொண்டாள் செண்பகம் . இந்தாப்பா இந்த தண்ணியக்குடி , அப்பாரு வந்த உடனே சேர்ந்து சாப்பிடலாம்பா என்ன சரியா . சரிம்மா என்ற செல்வத்துக்கு கிறக்கமா இருந்தது .செண்பகம் தன் மகனை மடியில் வைத்து தூங்க வைத்துக் கொண்டிருந்தாள் . அவனும் நன்றாக தூங்கினான் . உடனே வெளியில் சென்று எட்டிப்பார்த்தேன் .கண்ணுக்கெட்டிய தூரம் யாரையும் காணல . சே எங்க போனாரு , இன்னும் ஆளையே காணலையே . வேல முடிஞ்சி வர இம்புட்டு நேரமா , வெள்ளன்ன வர வேண்டியதுதானே .நாம பசியை பொறுத்துக்குவோம் . ஆனா சின்ன வுசுரு தாங்குமா .எனக்கு கவலையா இருந்தது.

எனக்கும் கண் அசருதே .சே தூக்கமா வருதே .நடைய சாத்திட்டு வந்து படுத்தேன் . கொஞ்சம் கண் அசரும்போது கதவு தட்டுற சத்தம் கேட்டு எழுந்து கதவை திறந்தேன் . என்னய்யா இம்புட்டு நேரமா பாரு புள்ள சுருண்டு கிடக்கிறான் . என்ன செய்றது புள்ள எசமான் வீட்டுல காடு கழனிய முடுச்சிட்டு வர்றதுக்குள்ள இம்புட்டு நேரமாச்சு . சரி சரி இந்தா இதை வச்சி கஞ்சிய காச்சு குடிச்சிட்டு செத்த படுக்கனும் . காலையில வெள்ளன்னக்கே வரச்சொல்லிட்டாக என்று மாணிக்கம் சொல்லிட்டு சட்டைய கழட்டினான் .

இந்தாயா கஞ்சிய குடி , எல என் ராசா எந்திரு செல்லம் கஞ்சிக்குடிப்பா .என்று செல்வத்தை எழுப்பினாள் செண்பகம் . வேண்டா போம்மா எனக்கு தூக்க தூக்கமா வருதுமா . அப்படியெலாம் சொல்லாதீகப்பு , இங்கப்பாரு அப்பாரு வந்திருக்கேன் குடிமா . போ உங்கூட பேசமாட்டேன் இம்புட்டு நேரமா . அம்மா கொடுத்த கஞ்சியை வாங்கி குடித்தான் . அவன் குடிப்பதை ஆசைதீர பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும் .


மாணிக்கம் அந்த ஊர் பண்ணையார் பழனியாண்டியிடம் வேலை பார்த்து வந்தான் . அவர் தரும் ஏதோ கொஞ்ச பணத்துல தன் குடும்பத்தை நடத்தினான் . அவனுக்கென்று அந்த ஓலைக்குடிசை மட்டும் தான் . அத்தை மகள் செண்பகத்தை கல்யாணம் செய்து கொண்டான் . செல்வத்துக்கும் 5 வயது ஆகிறது .


கோழி கொக்கரக்கோ என கூவி அன்றைய பொழுதை அறிமுகப்படுத்தியது . அய்யோ விடிஞ்சிருச்சா என வாரி எழுந்தேன் . என்ன இந்த மனுசன காணோம் அதுக்குள்ள போயிட்டாரா .சே பாவம் எம்புட்டு வேல செய்றாரு .செல்வம் வெளிய போய் விளாண்டுட்டு வரெம்மாவ் என்று சொல்லிட்டு குடுகுடு என்று ஓடினான் .

புள்ள செம்பவம் என பக்கத்து வீட்டு மாரியம்மா குரல் கேட்டு வெளிய வந்தேன் நான் . என்ன மாரியம்மாக்காவ் , நான் சந்தைக்கி போறேம்புள்ள வாறியா . இல்லக்கா நா வரல என்றுசொன்னேன தவிர எனக்கும் போக ஆசைதான் என்ன செய்வது துட்டு இல்லய்யே .

ஏ செம்பவம் எனக்குரல் கேட்டு திரும்பினேன் . என்ன வாத்தியாரம்மா நல்லா இருக்கீகளா என்று கேட்டேன் . ஆமா புள்ள நல்லா இருக்கியா மாணிக்கம் நல்லா இருக்கானா . செல்வத்துக்கு இப்போ என்ன வயசாகிறது என்று கேட்டார் . முத்துலட்சுமி டீச்சர் . இந்த ஜுன் வந்தா ஆறாகும் வாத்தியாரம்மா என்றேன் . அப்ப நாளைக்கே வந்து பள்ளிக்கூடத்தில வந்து சேத்துப்புடு , நா வர்றேன் என்று சொல்லி வாத்தியாரம்மா சென்றதை பார்த்துக் கொண்டிருந்தேன் .


செல்வத்தை இஸ்கூல்ல சேத்து பெரிய்ய படிப்பெல்லாம் படிக்கவைக்கோனும் . அப்போது செல்வம் வந்தான் . எலே செல்வம் நாளைக்கு உன்னை இஸ்கூல்ல சேக்க போறேன் என்றேன் மாட்டேன் போம்மாவ் என்றான் செல்வம் . என் ராசால்ல அங்க போனா உனக்கு முட்டாய் எல்லாம் கொடுப்பாக .நீ பெரிய்ய படிப்பெல்லாம் படிச்சி இந்த ஊருக்கே ராசாவாகனும் . என்ன சரியால . அய்யா முட்டாய்லாம் கொடுப்பாகலா அப்ப சரிம்மாவ் நா இஸ்கூலுக்கு போறென் . என் ராசா என்று செல்வத்தை முத்தமிட்டேன் .

ஏன்யா இன்னிக்கி நம்ம வாத்தியாரம்மா முத்துலட்சுமி வந்தாக , நம்ம செல்வத்தை நாளக்கு இஸ்கூல்ல சேத்துப்புட்டு வந்துடுக என்றேன் . மாணிக்கம் ஆமா புள்ள நானும் சொல்லத்தான் நினைச்சு வந்தேன் நீயே கொண்டு சேத்துப்புடு , எனக்கு நாளைக்கு நிறய்ய வேலக்கிடக்கு என்றான் . ஆமா உனக்கு எப்பவும் ஒரே வேல வேல ... சரி சரி இந்தா சாப்பிடு என்று ஆக்கி வச்ச சாம்பாரும் தொட்டுக்க ஊருகாயும் கொடுத்தேன் .

செல்வம் விடிஞ்சிருச்சி எழுந்திருல . இஸ்கூலுக்கு போவோனும் பல்லு விலக்கிட்டு வந்து இந்த நீசுத் தண்ணியக்குடி என்று செல்வத்தை எழுப்பினேன் . அவனை குளிக்க வைத்து ஒரு சொக்காயும் ( கிழிந்து போனதை ) தைத்து வச்சிருந்த டவுசரை போட்டு இஸ்கூலுக்கு கூட்டி சென்றேன் .

வா புள்ள செம்பவம் , ஆங் செல்வம் நல்லா படிக்கனும் . இந்தா முட்டாய் சாப்பிடு , பெரிய்ய படிப்பெல்லாம் படிக்கனும் என்ன சரியா , செம்பவம் நீ போ நா இவனை பாத்துக்கிறேன் என்று முத்துலட்சுமி டீச்சர் சொன்னார் .


எலய் செல்வம் இங்க வால இஸ்கூல்ல என்ன சொல்லிக்குடுத்தாக என்றுக் கேட்டான் மாணிக்கம் . எப்பொய் எனக்கு முட்டாய் , சோறு கொடுத்தாக . ஆத்திச்சூடி நிறய்ய பாட்டெல்லாம் சொல்லிக்கொடுத்தாக அப்புறம் , சிலட்டு குச்சி பொஸ்தகமெல்லாம் வாங்கிட்டு வரச்சொன்னாங்கப்பா என்று செல்வம் சொல்லியதைக்கேட்டு மாணிக்கம் திகைத்துப்போனான் . என்ன செய்வது புள்ள துட்டுக்கு ஒரே கவலயா இருக்கு . மனசு கஷ்டமா இருக்கு என்ற என் கணவனுக்கு சரிய்யா கவலப்படாத நானும் பத்துபாத்திரம் தேய்க்கப்போட்டா என்று ஆறுதல் சொன்னேன் .

என்ன இந்த மனுசன காணோம் புள்ளக்கி சிலெட்டு சொக்கா பொஸ்தகமெலாம் வாங்கனுமே கவலைய்யா இருந்தது . ஒரு எட்டு பண்ணையார் வீடு வரைக்கும் போய் பாத்துடுவோமா என்று கிளம்பினேன் . பண்ணையார் ரொம்ப பெருசா இருந்தது . பணக்காரவுக அப்படிதான் இருப்பாக . யாரு அது என்று கேட்டுக்கொண்டே வந்தார் பண்ணையார் . ஏன்வூட்டுகாரவுக இங்க தான் இருக்காக என்றேன் பண்ணையாரிடம் . ஓ மாணிக்கம் பொஞ்சாதியாலா நீ என்று கேட்டு அவளை மேலிருந்து கீழாக பாத்துட்டு ரொம்ப அழகா இருக்காளே . என்ன புள்ள வேனும் .என்றவரிடம் அவுகளை பாத்துட்டு போலாம்னு வந்தேங்க என்றேன் . இவளை எப்படியாவது அனுபவிக்கனும் என்ற எண்ணம் பண்ணையார் மனதில் ஓடியது . சரிப்போ அவனை வரச்சொல்லுறேன் என்று சொன்னவுடன் நான் வீட்டுக்கு வந்தேன் .

ஏப்புள்ள இங்கப்பாரு எசமான் எம்பூட்டு ரூவாத் தந்துருக்காக ... ஆமாய்யா அவருக்கு ரொம்ப பெரிய மனசு என்றேன் என்வூட்டுக்காரரிடம் . பய சாப்பிட்டானா தூங்குறதப்பாரு ஏன்ராசா என்றுக்கொஞ்சினான் மாணிக்கம் .

செல்வத்தை இஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு நானும் கொஞ்ச பழயகஞ்சியை குடிச்சிட்டு வேலக்கி கிளம்பினேன். அப்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது . யாரு என்றுக்கேட்டு கொண்டே கதவை திறந்தேன் . பண்ணையார் நின்று கொண்டிருந்தார் .

அய்யா வாங்க வாங்க என்றுசொல்லி தடுக்கு எடுத்துப் போட்டேன் .என்ன செண்பகம் நல்லா இருக்கியா பையன் இஸ்கூலுக்கு போய்ட்டானா என்றுகேட்டார் பண்ணையார் . அய்யா நல்லாயிருக்கோமுங்க உங்க தயவுல . - இது நான் . அதான்வேனும் . அப்புறம் உம்மேல எனக்கு ஆச வந்திருச்சு ஒன்னழகு என்னை பாடாப்படுத்துது .அதனால ஒரே ஒருநாள் மட்டும் என்னோட மச்சி வீட்டுக்கு வந்திடு என்று பண்ணையார் சொன்னதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது .என்னைய்யா சொல்றீக .உங்க மேல எம்பூட்டு மரியாதை வச்சிருக்கோம் என்ன இப்படி பேச அசிங்கமா இல்ல .நாங்க ஏழைகதான் மானந்தான் எங்க உசிரு சீ வெளியப்போங்க . ஏய் இங்கப்பாரு இதுக்கு மட்டும் சம்மதிக்கலைன்னா அப்புறம் வேலக்கி போன ஒன்வூட்டுக்காரன் திரும்பி வரமாட்டான் பாத்துக்கோ என்று சொல்லிட்டு போனார் பண்ணையார் . என்னடா இது இப்படியாகிருச்சே எனக்கு அழுகையாக வந்தது . தேம்பித்தேம்பி அழுதேன் .

வெளியே ஒரே சத்தமாக்கேட்டது . பார்த்தால் ஒரே கூட்டமா இருந்தது .அங்கே நான் கண்ட காட்சி மேலும் அதிர்ச்சியானது . பண்ணையார் மண்டையில் அடிப்பட்டு இறந்து கிடந்தார் . எங்கருந்து வந்தாருன்னு தெரியல கல்தடுக்கி தந்திக்கம்பத்துல விழுந்து மண்டை ஒடந்சிருச்சி அய்யோ எங்க ராசா என்று மாரியம்மா அழுதாள் . ஒரே அழுகை கூப்பாடாக இருந்தது .எனக்கு ஒரே சந்தோசமா இருந்தது .


கணவன் வருகைக்காக என் மனம் எதிர்ப்பாத்துக் கொண்டிருந்தது........

Post Comment

26 comments:

  1. அருமையான கதை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  2. நல்ல கதை திடீர் முடிவு.
    அத‌ர்ம‌ம் எப்போதும் வென்ற‌தில்லை
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உரையாடல்களை தனி வண்ணத்தில் தயாரித்துள்ளது நன்றாயிருக்கிறது. இம்மாதிரி வித்தைகள் இணையத்தில் மட்டும் சாத்தியம். சிறுகதையை அதன் முடிவுக்கு எவ்வளவு பக்கத்தில் ஆரம்பிக்க முடியுமோ, அவ்வளவு பக்கத்தில் ஆரம்பிப்பது ஒரு நுணுக்கம். இந்தக் கதையை ​செண்பகத்ததை பண்ணையார் சந்திக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?

    ReplyDelete
  4. வாங்க கலையரசன் ,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. வாங்க அக்பர்

    வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  6. வாங்க சுரேஷ்

    வாழ்த்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  7. வாங்க ஜெகநாதன்

    வருகைக்கு நன்றி

    வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜான்

    ReplyDelete
  9. வாங்க குறை ஒன்றும் இல்லை

    ReplyDelete
  10. வெற்றி பெற வாழ்த்துக்கள் !
    தேவா

    ReplyDelete
  11. உங்களைப் பின் தொடர்கிறேன்/

    ReplyDelete
  12. வாங்க தேவா

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள்..,

    உங்கள் கதையில் தடுக்கிவிழுந்து கொன்றுவிட்டது..,

    ReplyDelete
  14. வாங்க தல

    வருகைக்கு நன்றி

    கரெக்டா சொல்லிட்டீங்க‌

    ReplyDelete
  15. // அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள்..,

    உங்கள் கதையில் தடுக்கிவிழுந்து கொன்றுவிட்டது..,//

    இது பஞ்ச்..

    ReplyDelete
  16. வாங்க அக்பர்

    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  17. கதை மிக மிக அருமை....

    ஒரு யதார்த்தமான கிராமத்து தென்றல்

    அருமையாக உள்ளது ...

    பண்ணையார் பாத்திரம் பண்ணையாருக்கே உண்டானது...


    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. கதை நன்றாக உள்ளது.

    வட்டார வழக்கு நன்றாக வந்திருக்கிறது, உரையாடலில் சிறு சிறு சறுக்கல்

    //இந்த ஜுன் வந்தா ஆறாகும் வாத்தியாரம்மா என்றேன் . //

    கிராமத்தினர் ஆங்கில மாதம் பெயர் சொல்லமாட்டார்கள், அப்படிச் சொன்னால் ஜூனை சூன் என்பார்கள், பெரும்பாலும் தமிழ் மாதப் பெயரைச் சொல்லுவார்கள்.

    பண்ணையார் குடிசைக்குள் நுழைய மாட்டார். யாரும் பார்த்துவிட்டால் கவுரவம் போய்விடுமாம். மாறாக அவருடைய பண்ணையில் உள்ள குடிசையில் தான் வேலையை வைத்துக் கொள்வார்.

    சிறு சிறு குறைகள் தவிர்த்து கதை எழுதும் உங்கள் திறனில் குறை எதுவும் இல்லை. வாழ்த்துகள்

    ReplyDelete
  19. வாங்க ராஜா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  20. வாங்க கோவி கண்ணன்

    நல்ல பாயிண்ட் சொல்லிருக்கீங்க

    இனி சிறு த‌வறுக‌ள் இல்லாம‌ல் பாத்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  21. வாங்க ரிஷான் ஷெரிப்

    உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்