Pages

Sunday, July 5, 2009

முரளிக்கண்ணனும் நானும்

ஸ்டார்ஜன் : ஹலோ முரளி !!!

முரளிகண்ணன் : யாரு ... ஸ்டார்ஜனா ? எப்படி இருக்கீங்க .. பதிவெல்லாம் எப்படி போயிக்கிட்டிருக்கு ? ...

ஸ்டார்ஜன் : நல்லாருக்கேன் .. பதிவெல்லாம் நல்லா போகுது.. அப்புறம் , நா இப்போ ஊருக்கு வந்திருக்கேன் .

முரளிகண்ணன் : அப்படியா ரொம்ப சந்தோசம் ... எப்போ சென்னைக்கு வாரீங்க ?...

ஸ்டார்ஜன் : நான் 2 நாள்ல வருவேன் ... அப்போ உங்களையும் , எல்லாத்தையும் பாக்கனும்......

முரளிகண்ணன் : சரிசரி வாங்க ... அப்புறம் , பழனி சுரேஷ் , கிராம மக்களுக்கு கல்வி விழிப்புணர்வு மற்றும் சுகாதார விழிப்புணர்வை பத்தி ஒரு கேம்ப் அவங்க கிராமத்துல வச்சிருக்காராம் . நாம அவரையும் பாத்துட்டு அந்த கேம்ப்ல கலந்துக்கிட்டு வருவோமா ....

ஸ்டார்ஜன் : அப்படியா சரி வாரேன் . ..


நான் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸில் சென்றேன் . எக்மோரில் என்னை வரவேற்பத்தற்கு முரளி வந்திருந்தார் . அங்கே எல்லா இடத்தையும் சுத்திப்பாத்திட்டு , மாலையில் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் . அதில் கலந்து கொண்டு , பழனி சுரேஷை பார்ப்பதை பற்றி டிஸ்கஸ் செய்தோம் . அப்போ , முரளி , நானும் ஸ்டார்ஜனும் செல்கிறோம் என்றார் . பதிவர் சந்திப்பு முடிந்து அன்று இரவு பழனி செல்வதற்கு பஸ் ஏறினோம் .

பழனி சென்றதும் முரளி , சுரேஷ்க்கு போன் செய்தார் .

முரளிகண்ணன் : ஹலோ சுரேஷ் ! நானும் ஸ்டார்ஜனும் பழனிக்கு வந்துட்டோம் .

சுரேஷ் : அப்படியா .. வாங்க வாங்க ..... நீங்க 9 ம் நம்பர் பஸ்ஸுல ஏறி கவுண்டர்ப்பாளையம் வந்திடுங்க . அங்க டீக்கடை ஒன்று இருக்கும் . அங்க இறங்கிடுங்க .. அங்க நம்ம ஆளுங்க இருப்பாங்க . அவுங்க உங்களை ஊருக்குள்ள கூட்டிட்டு வருவாங்க .

முரளிகண்ணன் : சரி அப்படியே வந்திடுதோம் . ...

நாங்க கவுண்டர்பாளையம் வந்தவுடன் பஸ்ஸிலிருந்து நான் சுரேசுக்கு போன் செய்தேன் .

ஸ்டார்ஜன் : ஹலோ சுரேஷ் கவுண்டர்பாளையம் வந்திட்டோம் . இறங்கிடவா .....

சுரேஷ் : வாங்க தல .. நம்ம ஆளுங்க நிக்கிறாங்களா ...

ஸ்டார்ஜன் : ஆமா

சுரேஷ் : அப்ப இறங்கிடுங்க ...


நாங்க இறங்கினதும் தான் தாமதம் . ஒரே ஆட்கள் கூட்டம் , மாலையும் கையுமா ... இரண்டுபேருக்கும் மாலைப் போட்டாங்க .

ஏனுங்க மசமசன்னு நிக்கிறீங்கோ வந்து மாலப்போடுங்கோ ...

ஏய் அந்த பட்டாசக் கொளுத்துங்கோ ... வெடிக்கிறதுல எட்டுருக்கும் கேக்கனுங்கோ .....


அங்க இருந்த பெரியவர் வாங்க வாங்க சவுக்கியமுங்களா .....

ஏது இம்பூட்டு நேரமா...

என்ன முரளி இப்படி ஒரே அமர்க்களமா இருக்கு ...

நீங்க ஊருல இருந்து வந்திருக்கீங்களா அதான் சுரேஷ் ஏற்பாடு பண்ணிருப்பாருன்னு நினைக்கிறேன் ...

நாங்க போற வழியெல்லாம் வாங்க வாங்க என்று வரவேற்பா இருந்தது .

அய்யா நாங்க சுரேஷ்சை பாக்க வந்தோம் ....

நீங்க எதுவும் பேசப்படாது .... எல்லாத்தையும் சுரேஷ் சொல்லிப்புட்டாக ....

மேக்கொண்டு எதுவும் பேசப்படாது .....

வழிநெடுக தெருவுல உள்ள பொம்பளைங்க எல்லாம் பாத்திட்டு

ஏப்புள்ள இவுக நம்ம செல்லத்துர அய்யா வீட்டுக்கு வந்திருக்காக ...

ஓ அப்படியாப்புள்ள , கொடுத்து வைத்தவுக தான்

ஆளு செவப்பா இருக்காருல்ல ....



ஒரே சிரிப்பா இருந்தது அவங்களுக்கு .

கொஞ்சதூரம் போனவுடன் ஒரு பெரிய காரவூடு ( பங்களா ) வந்தது .

உடனே அந்த பெரியவர்

ஏப்புள்ள அந்த ஆலாத்திய எடுத்திட்டு வா

ஒரு நடுத்தர வயது பெண் ஆரத்தி எடுத்தாள் .

எங்களுக்கு ஒரே ஆச்செர்யமா இருந்தது . என்னடா இது இப்படியெல்லாமா வரவேற்பு கொடுப்பாங்கன்னு .....

அந்த பெரியவர் வாங்க வாங்கன்னு வழி காட்டிக் கொண்டே வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனார் .

வீட்டுக்குள் ஒரே கூட்டமா இருந்தது . இன்னும் பல பேர் வந்தவண்ணமாக இருந்தனர் .

நாங்கள் இருவரும் ஒருத்தரையொருத்தர் பாத்தவண்ணமாக இருந்தோம் .

வயசுப்பெண்கள் எல்லாம் எங்களைப்பார்த்து ஓடி ஒளிந்தனர் .

எல்லோரும் குசுகுசுவென அவங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர் .

அய்யா சுரேஷ் எங்க ? என்று அந்த பெரியவரிடம் கேட்டேன் .

சுரேஷ் இப்ப வந்துருவாக . எல்லாம் பேசிப்புட்டோம் மேக்கொண்டு நீங்க எதுவும் பேசப்படாது .

அப்போது அந்த கூட்டத்துல இருந்த இன்னொரு பெரியவர்

ஏ கோமதி , புள்ள கையில அந்த காப்பித் தண்ணியக் கொடுத்தனுப்பு ...

சட்டுபுட்டுன்னு காரியத்த முடிச்சிட்டு போகவேணாமா .....

அப்போது ஒரு பெண் கீழே குனிந்து கொண்டே வந்து

முரளிக்கு காப்பி கொடுத்திட்டு , எனக்கு காப்பி கொடுத்துட்டு போகும் போது வெக்கப்பட்டு சிரிச்சிட்டு போனாள் .

ஒரு 20 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன் .

அப்புறமென்ன ஆக வேண்டியத பாருங்கோ என்று கூட்டத்துல இருந்து ஒரு குரல் கேட்டது .

என்ன ஆக வேண்டியது எங்களுக்கு ஒன்னுமே புரியலியே என்றேன்

மாப்பிளைக்கு குசும்பப்பாரு .... சரிசரி தட்ட மாத்திக்கிருவோமா .... என்றார் பெரியவர் .

என்னது மாப்பிள்ளையா !!!....யாரு .... என்றார் முரளி .

ஆமா உங்க பக்கத்துல இருக்காறே அவருக்கு தான் எம்பொண்ணக் கொடுக்கிறோமுங்க ....

என்ன பொண்ண புடிச்சிருக்கான்னு கேட்டு சொல்லுங்க ....

எனக்கு மயக்கம் வர்றமாதிரி இருந்தது .

ஏனுங்க கொஞ்சம் இருங்க , நீங்க தரகர் சுரேஷ் சொல்லி வந்தவங்க தானே - பெரியவர்

இல்லிங்க நாங்க டாக்டர் சுரேஷை பாக்க வந்தோமுங்க - முரளி

அச்சச்சோ அவரு , பக்கத்து ஊருல்ல

ஏதோ தெரியாம இதல்லாம் நடந்துபுடுச்சு ....

நீங்க ஒரு வார்த்த சொல்லிப்புடலாமுல்ல
- பெரியவர்

எங்க சொல்ல விட்டீங்க இப்பவாது புரிந்ததுங்களா !! ..சரி நாங்க கிளப்புறோமுங்க .. - முரளி

எப்பொய் இங்க வாங்க அந்த பொண்ணு அவங்க அப்பாவை கூப்பிட்டாள் .

எப்பொய் , அவுகளை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு கட்டி வைங்கப்பா

சரி வந்தது வந்திட்டீங்க , எங்க பொண்ணுக்கும் ரொம்ப புடிச்சி போச்சு , தட்ட மாத்திக்கிருவோமா ...- பெரியவர்

என்னது அவர புடிச்சிருக்கா ..!!. ஏம்மா அவருக்கு இப்பதான் கல்யாணம் ஆகிருக்கு .. - முரளி

ஏன்வீட்டுக்காரிக்கு மட்டும் தெரிந்தது அவ்வளவுதான் , ஆள விடுங்கப்பா என்று ஒரே ஓட்டம் எடுத்தேன்

நல்லவேளை கல்யாணத்தை முடிச்சி அனுப்பாம இருந்தாங்களே !!!

முரளிக்கு என்னைப் பாத்து சிரிப்பா வந்தது .....









Post Comment

30 comments:

  1. கலக்கல் காமெடி,
    இது வீட்டுக்கு தெரியுமா.

    ReplyDelete
  2. இதெல்லாம் அடிமனது ஆசைகள்....

    கண்டுக்க கூடாது....,

    ReplyDelete
  3. யாரும் போய் தல வீட்டில் போட்டுக் கொடுத்திடாதீங்க

    ReplyDelete
  4. வாங்க அக்பர்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. வாங்க சுரேஷ்

    நீங்க சொல்றத பாத்தா நீங்களே போட்டுக் கொடுத்துவிடுவீங்க போல‌

    ReplyDelete
  6. சரியான காமெடிதான் போங்க....

    ReplyDelete
  7. வாங்க தல‌

    சூப்பர் தல

    நன்றி தல‌

    ReplyDelete
  8. வாங்க வசந்த்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. உங்களுக்கு 4 வது ஓட்டு அளிக்கப்பட்டது

    ReplyDelete
  10. வாங்க டி வி ஆர் சார்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. வாங்க என் தோழா

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. போச்சு,

    போச்சு !

    அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே ன்னு யாரும் பாடலையா ?
    :))))))))

    நல்லா இருந்தது காமடி !

    ReplyDelete
  13. முரளியை பொண்ணு பாத்து ஓகே சொல்லியிருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும்.

    ReplyDelete
  14. வாங்க முரளிகண்ணன்

    உங்களத்தான் அந்த ஊருல தேடிக்கிட்டு இருக்காங்க‌

    ReplyDelete
  15. வாங்க டக்ள‌ஸ்

    வ‌ருகைக்கு ந‌ன்றி

    ReplyDelete
  16. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    SENTHAழல் ரவி (நார்வேயிலிருந்து)

    ReplyDelete
  17. வாங்க கோவி.கண்ணன்

    பாட ஆசைதான் இளையராஜா இல்லியே

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  18. வாங்க கேபிள் சங்கர்

    இது கூட நல்ல ஐடியாவா இருக்கே

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  19. வாங்க டாக்டர் புருனோ



    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  20. வாங்க வாங்க செந்தழல் ரவி

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. வாங்க வாங்க நச்ரேயன்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  22. நல்ல காமெடி கலக்குங்க‌

    ReplyDelete
  23. வாங்க ராஜா

    வருகைக்கு நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்