போக்குவரத்து எவ்வளோ இப்போ பெருகிருச்சு . பயண நேரமும் கம்மியாயிருச்சு ! .
விமான பயணமே ஒரு ஜாலி தான் . ஒரு அலுப்பும் இல்லாமல் சொகுசாக நாம போக வேண்டிய இடத்துக்கு சீக்கிரம் போயிரலாம் . நல்ல ஜாலியா இருக்கும் .
ஆனால் நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது நினைத்து பார்ப்பேன் . நாமளும் ஒரு நாள் பிளைன்ல போகணும் என்று .
அதை இறைவன் இப்போ தான் நிறைவேத்தி தந்திருக்கான் . ஆமாம் ! நான் நாலு வருசத்துக்கு முன்னாடி முதல் முறையாக சவுதி அரேபியாவுக்கு பயணப்பட்டேன் .
அப்போ நான் புதியதால் எல்லோரும் அதை பற்றிய விழிப்புணர்ச்சி கொடுத்தனர் . அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும் என்று .
நான் எல்லோரிடமும் விடைபெற்று கனத்த இதயத்துடன் ஏர்போர்ட்டு உள்ள போயிட்டேன் .
அங்கே லக்கேஜ் வெயிட் போட்டு , போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு இமிக்ரேசன் முடிந்து விட்டது .
அதற்கு அடுத்து பாதுகாப்பு செக்கிங் . பாதுகாப்பு செக்கிங்கில் செக் பண்ணும் போது மெட்டல் டிடக்டரில் ஒலி வருகிறது . என்ன இது என்று கேட்டார் ஆபிஸர் . நான் ஒண்ணும் இல்லையே என்று பேண்ட் பெல்ட்டை கழட்டினேன் .
மறுபடியும் ஒலி வருகிறது . என்ன இது என்று பார்க்கும் போது , என் பேண்ட் பாக்கேட்டில் 5 ரூபாய் நாணயம் ஒன்று கிடந்தது . அப்பாட .. அதுக்கப்பறம் தான் பெருமூச்சு வந்தது .
இதுக்கே இப்படின்னா நெற்றிக்கண் படத்துல ரஜினிகாந்த் அணிந்து வருவாரே எகஸ்ரே கண்ணாடி அதுமாதிரின்னா என்ன ஆகும் .
அந்த படத்துல சொன்னது உண்மையோ பொய்யோ தெரியாது . ஆனா இது இப்போ உண்மையாகிடும் போல !
என்ன பாக்குறீங்க அட உண்மையோ உண்மை !!!
விமான நிலைய பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையிலும், பரிசோதனை ஊழியர்களின் பணியை இலகுவாக்கும் வகையிலும், பயணிகளை நிர்வாணமாக காட்டும் ஸ்கேனர்களை வைத்துள்ளனராம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் விமான நிலையத்தில்.
இந்த எக்ஸ்ரே ஸ்கேனர் முன் ஒருவர் நின்றால் அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் அது காட்டிக் கொடுத்து விடுமாம்.
ரேபிஸ்கேன் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இந்த எக்ஸ்ரே சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்த சாதனம் முன் நிற்கும் யாரையும் அது நிர்வாணமாக ஸ்கேனர் கருவியில் காட்டும். அத்தோடு நில்லாமல், மார்பகப் பெருக்க அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதைக் கூட அது காட்டிக் கொடுத்து விடுமாம்.
மேலும், செயற்கையான கால்கள், கைகள், உடலில் போடப்பட்டுள்ள துளைகள், பயணிகளின் அந்தரங்க உறுப்புகள் என அத்தனையையும் அக்கு வேறு ஆணி வேறாக காட்டிக் கொடுக்குமாம்.
கருப்பு வெள்ளையில் தெரியும் இந்த நிர்வாண ஸ்கன் படத்தை ஒரே ஒரு அதிகாரி மட்டுமே பார்ப்பாராம்.
இதுகுறித்து மான்செஸ்டர் விமான நிலைய வாடிக்கையாளர் பிரிவு தலைவர் சாரா பாரட் கூறுகையில், இந்தப் படம் பாதுகாத்து வைக்கப்படாது. படம் எடுக்கப்பட்டவுடன் அதை ஆய்வு செய்து பின்னர் அழித்து விடுவோம்.
பெரும்பாலான பயணிகள், உடல் முழுவதையும் தடவி சோதனையிடுவதை விரும்பவில்லை. அது தங்களது அந்தரங்கத்தில் தலையிடும் செயலாக உணர்கிறார்கள். எனவே இந்த ஸ்கேனர் யாரையும் தொடாமல் அவர்களுடைய உடலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அறிய உதவும். யாரையும் இனிமேல் உடைகளை கழற்றச் சொல்லி சோதனை போடத் தேவையில்லை.
இந்த ஸ்கேனர் மூலம் கிடைக்கும் படங்கள் ஆபாசமானவையாக இருக்காது. மேலும் இவற்றை நாங்கள் எங்குமே ஸ்டோர் செய்து வைக்கப் போவதும் இல்லை. எனவே பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது.
இருப்பினும் இந்த சோதனை வேண்டாம், உடலைத் தழுவி சோதனையிடுங்கள் என்று பயணிகள் கூறினால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
தற்போது சோதனை ரீதியாக இந்த நிர்வாண ஸ்கேனரை வைத்துள்ளனராம். விரைவில் இது நிரந்தரமாக வைக்கப்படுமாம்.
என்ன நண்பர்களே !!! பாத்து உசாரா இருந்துகோங்க !! இல்ல பாத்துருவாங்க !!
ஸ்டார்ஜன்
//இந்த ஸ்கேனர் மூலம் கிடைக்கும் படங்கள் ஆபாசமானவையாக இருக்காது. மேலும் இவற்றை நாங்கள் எங்குமே ஸ்டோர் செய்து வைக்கப் போவதும் இல்லை//
ReplyDeleteஅப்பிடியே நம்புவோம்
அவ்வ்வ்வ்வ்வ்வ்...
:-)))
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteada.. appadiyaa.... aavvvvvvvvvvvv
ReplyDeleteஅட நினைத்துக் கொண்டிருந்தேன், இங்கே உடனே பதிவாக வந்திருக்கிறது. நல்லதொரு இடுகை.
ReplyDeleteவருகைக்கு நன்றி வசந்த்
ReplyDeleteவருகைக்கு நன்றி T.V.Radhakrishnan
ReplyDeleteவருகைக்கு நன்றி ராஜ்குமார்
ReplyDeleteவருகைக்கு நன்றி நையாண்டி நைனா
ReplyDeleteபாவம் அந்த ஆபீசர், எல்லோரையும் எல்லாத்தையும் பார்க்கனும்
ReplyDelete:)
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ராஜ்குமார்
ReplyDeleteவருகைக்கு நன்றி Rads
ReplyDeleteவாங்க கோவி கண்ணன் அண்ணே , வருகைக்கு நன்றி
ReplyDeleteஇது குறித்து ஏற்கனவே படித்து உள்ளேன், ஆனால் மிகுந்த விபரமாய் படைத்த உங்களக்கு நன்றி,
ReplyDeleteவாழ்த்துக்கள்,
இதை முறியடிக்கவும் ஏதாவது ஒரு ஐடியாவை 'குருவிகள்' கண்டுபிடிப்பார்கள்..!
ReplyDelete/// ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
ReplyDeleteஇது குறித்து ஏற்கனவே படித்து உள்ளேன், ஆனால் மிகுந்த விபரமாய் படைத்த உங்களக்கு நன்றி,
வாழ்த்துக்கள், ///
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜோதிஜி. தேவியர் இல்லம்.
//// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteஇதை முறியடிக்கவும் ஏதாவது ஒரு ஐடியாவை 'குருவிகள்' கண்டுபிடிப்பார்கள்..! ////
அப்படியா அண்ணே !!
செஞ்சாலும் செய்வாங்க ...