ரயில்ல ஏறி உக்காந்தவுடன் தடக் தடக் என சத்தத்துடன் புகையை விட்டுக் கொண்டே போகும் போது ரொம்ப ஜாலியா இருக்கும் . முகம் தெரியாத ஆளுடன் ஒரு நட்பு கிடைக்கும் பாருங்க . ரயில் சினேகிதம் , பேசிட்டு போக ஜாலியா இருக்கும் .
நான் சில வருடங்களுக்கு முன் , ஒரு வார இதழில் ( ஆனந்த விகடனோ , குமுதமோ ) ஒரு கதை படித்தேன் .
அதாவது , வயதான ஒரு கணவனும் ஒரு மனைவியும் அவங்க மகளை பாக்க பாம்பேயிலிருந்து டெல்லிக்கு போறாங்க . அவங்க மகன் ஜனசதாப்தி ரயிலில் ஏத்தி விட்டுறாரு .
இந்த அம்மாவுக்கு ,புதிய அனுபவமா இருக்கு . யார்ட்டேயும் பேசமுடியல . ஏ சி கோச் . அவங்க கணவனிடம் புலம்பிக்கிட்டே வாராங்க . இதை பாத்துக்கிட்டே இருந்த , பக்கத்துல இருந்த சிங் அந்தம்மாக்கிட்ட பேச்சுகொடுத்துக்கிட்டே வாராரு.
அவர் (சிங் )தமிழ் குடும்பம் என்றும் , தனக்கு பெண் தேடுவதாகவும் , அந்தம்மாக்கிட்ட சொல்றாரு . உடனே , இவங்க தனக்கு , சொந்தத்தில் ஒரு பெண் இருப்பதாகவும் ; இப்படியே பேசிக்கிட்டயே வராங்க . பக்கத்துல இருந்த அந்தம்மாவுடைய கணவர் கேட்டுகிட்டே வாராரு.
டெல்லியும் வந்தாச்சு . எல்லோரும் இறங்கிட்டு இருக்காங்க . இந்தம்மா , அந்த சிங் ஆளிடம் , உங்க அட்ரஸ் கொடுங்க , பொண்ணு பாக்க வரச்சொல்ல ஏற்பாடு பன்ணலாம் என்று கேட்கிறாங்க .
உடனே அந்த சிங் , எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டது . எனக்கு பூர்வீகம் சண்டிகர் தான் . தமிழ்காரங்க யாரும் தெரியாது . நீங்க , உங்க கணவர்கிட்ட புலம்பிக்கிட்டதாலே உங்கக்கூட பேசிக்கிட்டே வந்தேன் . ஒகே , வருகிறேன் என்று சொல்லி கிளம்பினார் அந்த சிங் .
இந்தம்மாவுக்கு முகத்துல அசடு வழிந்தது . இதை பார்த்த அவங்க கணவருக்கோ சிரிப்பை அடக்க முடியல .
-----------------------------------------------------
எனக்கு , எங்க ஊர் வழியா போகும் திருநெல்வேலி கொல்லம் ரயில் தான் தெரியும் . அப்ப ஜாலியா இருக்கும் ஏ ரயில் போகுதே ! என்று . நான் முதன்முதலில் ரயிலில் பயணம் செய்தது மதுரையிலிருந்து திருநெல்வேலி வரும்போது .
இப்ப ரயில்ல எவ்வளோ முன்னேற்றம் பாருங்க .
எத்தனை வசதியில்லாம் வந்துட்டது .
ஆடம்பரமான மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில், மும்பை - டில்லி இடையே, அடுத்தாண்டு, ஜனவரி முதல் இயக்கப்படுகிறது.
அனைத்து வசதிகளுடன் கூடிய, ஆடம்பரமான மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், குளிர்சாதன வசதிகள் கொண்ட, 23 பெட்டிகள் இருக்கும்.
இந்த ஆடம்பர ரயில், அடுத்தாண்டு ஜனவரி முதல், மும்பை - டில்லி இடையே இயக்கப்படும்.
இந்த ரயிலில், இரு உணவகங்கள், மதுபான பார், லைவ் 'டிவி'க்கள், தொலைபேசி, இன்டர்நெட் வசதிகள் என, அனைத்து வசதிகளும் உள்ளன. அடுத்தாண்டு, ஜனவரி 9ம் தேதி முதல், மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த ரயில், வதோரா, உதய்பூர், ஜோத்பூர், பிகானீர், ஜெய்ப்பூர், ரத்தம்போர் மற்றும் ஆக்ரா ரயில் நிலையங்கள் வழியே இயக்கப்படும்.
ஜன., 17ம் தேதி டில்லியிலிருந்து கிளம்பும். இந்த ரயிலில், 88 வெளிநாட்டு பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இதில், பிரசிடென்ஷியல் அறைக்கு, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 75 ரூபாயும், சாதாரண சூட்டுக்கு 66 ஆயிரத்து 682 ரூபாயும், டீலக்ஸ் அறைக்கு 42 ஆயிரத்து 867 ரூபாயும், ஜூனியர் அறைக்கு 38 ஆயிரத்து 104 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்கேற்ப, ஒவ்வொரு ரயில் பெட்டியிலும், அறைகள் வித்தியாசமாக அமைக்கப்படுகின்றன. ஆடம்பர ரயிலை, இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிசம் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி.,) யும், காக்ஸ் அண்டு கிங்ஸ் என்ற தனியார் சுற்றுலா நிறுவனமும் இணைந்து அமைத்து வருகின்றன. இந்த ரயில், மும்பை - டில்லி - மும்பை மற்றும் டில்லி - கோல்கட்டா - டில்லி மார்க்கங்களில் இயக்கப்பட உள்ளது.
டில்லி - கோல்கட்டா பாதையில் இயக்கப்படும் ரயில், ஆக்ரா, குவாலியர், கஜுராஹோ, வாராணாசி, கயா வழியாக இயக்கப்படும். இந்த ரயிலின் அறிமுக தினத்தில் பயணம் செய்ய, ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், 'புக்கிங்' செய்துள்ளனர். மகாராஜா எக்ஸ்பிரஸ், அக்., முதல் மார்ச் மாதம் வரை, இந்த பாதைகளில் இயக்கப்படும். பிற மாதங்களில், சார்ட்டர்டு சர்வீஸ் ஆக இயக்கப்படும் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.
நம் நாடு எவ்வளோ முன்னேறி இருக்கிறது பாருங்க ...
ஸ்டார்ஜன்
இரயில் பயணங்களில்......
ReplyDeleteஅருமையான தகவல் தம்பி.
புதிய ரயில் பற்றிய கட்டுரையில்
ReplyDeleteபொருத்தமாக, அந்த வயதான
தம்பதியின் ரயில் பயண சுவையான
கதையையும் சாமர்த்தியமாகச்
சேர்த்து விட்டீர்கள்.
ஆனால்,
//இரண்டு வயதான கணவன் ,மனைவி //
எனற வாக்கியம்தான் சிறிது குழப்புகிறது.
அதை, "வயதான ஒரு கணவனும்
ஒரு மனைவியும்" என்று மாற்றினால்,
நலம் என எண்ணுகிறேன்.
//இந்தம்மாவுக்கு முகத்துல அசடு வழிந்தது . இதை பார்த்த அவங்க கணவருக்கோ சிரிப்பை அடக்க முடியல .//
ReplyDeleteஇரண்டாவது பகுதிக்கும் சேர்த்துத்தானே தல
அழகான பதிவு.
ReplyDeleteஅருமையான தகவல்கள்.
வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.
கொல்லத்திற்கு பல தடவை டிரெயின்ல போயிருக்கேன்.அழகான படங்களோடு சீக்கிரம் ஒரு பதிவு போடறேன்.
வாங்க கோவி அண்ணா ,
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க நிஜாமுதீன்
ReplyDeleteநீங்க சொன்னமாதிரி மாத்திட்டேன் .
வருகைக்கு நன்றி
வாங்க டாகடர் சுரேஷ்
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க துபாய் ராஜா
ReplyDeleteவருகைக்கு நன்றி
அருமையான தகவல்
ReplyDeleteநல்லாருக்குப்பா...
ReplyDeleteவாங்க டி வி ஆர் சார் ,
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க வசந்த் வருகைக்கு நன்றி
ReplyDeleteமிக அருமை.........
ReplyDeleteரயில் பயணங்களில் எப்போதும் இனிமைதான்!
ReplyDeleteவாங்க கனவுகள் உலகம் பாலா ,
ReplyDeleteவருகைக்கு நன்றி
வாங்க அருணா மேடம் ,
ReplyDeleteவருகைக்கு நன்றி
மது பான பார் வைப்பது முன்னேற்றமா தோழரே
ReplyDeleteவாங்க கார்த்திக்
ReplyDeleteஎன்ன செய்வது கார்த்திக் !
உலகம் ரொம்ப ஸ்பீடு ...
வருகைக்கு நன்றி
ஆடம்பர ரயிலின் கட்டணம் அறிந்த பின் நான் அறிய வேண்டிய இன்னொரு விஷயம்,இந்த ஆடம்பர ரயில் ஒட்டும் தண்டவாளம் தங்கத்தினால் செய்திருக்கிறார்களா?
ReplyDeleteவாங்க கோமதி
ReplyDeleteவருகைக்கு நன்றி