Pages

Monday, October 26, 2009

ஆதவன் - விமர்சனம்

ஆத‌வ‌ன்


வேலைப்பளு காரணமாக என்னால் பதிவு எழுத முடியவில்லை . ‌சமீபத்தில் அண்ணன் உண்மைத்தமிழன் வலைப்பதிவில் ஆதவன் திரைப்பட விமர்சனம் பார்த்தேன் . அதில் வடிவேலு தான் ஹீரோ என்று எழுதியிருந்தார் . எனக்கு சிரிப்பாக இருந்தது .


அப்படி என்ன தான் படத்துல இருக்குது என்று நேற்றுதான் படம் பார்த்தேன் .


அட ஆமா !! உண்மைத்தமிழன் உண்மையைத்தான் சொல்லிருக்காரு .


இப்ப படத்தோட கதைக்கு உள்ளே போவோமா ....



பிறப்புலேயே கடத்தல் ,கொள்ளை ,கொலை என்று தப்பான வளர்ப்பால் உருவாகிறார் நம் சூர்யா . நீதிபதியாக வரும் மலையாள முரளி வீட்டில் சமையல்காரர் நம் வடிவேலு .


குழந்தைகளின் உடலுறுப்புக்களைத் திருடி விற்கும் ஒரு கும்பலைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு நேர்மையான நீதிபதி முரளியிடம் வருகிறது. உடனே அதில் சம்பந்தப்பட்ட ஒரு பிராடு டாக்டர், நீதிபதியைக் கொல்லத் திட்டமிட்டு, கூலிக்கு கொலை செய்யும் சூர்யாவை அனுப்பி வைக்கிறார்.


முரளி வீட்டுக்கு செல்லும் சூர்யா , முரளியை கொல்ல திட்டமிட்டு , எல்லோர் மனதிலும் இடம்பிடிக்கிறார் . பிறகு தான் தெரிகிறது முரளியின் மகன் சூர்யா என்று . தன் தந்தையை கொன்றாரா இல்லை கடத்தல் குமபலை பழி வாங்கினாரா .... என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .



சூர்யா ஒவ்வொரு தடவையும் முரளியை கொல்ல நினைக்கும் போது காமெடியில் முடிகிறது . அதுவும் வடிவேலுகூட அடிக்கும் லூட்டி இருக்கிறதே அப்பப்பா ...


பத்து வயது கெட்டப்பில் ரொம்ப மெனக்கெட்டு நடித்திருக்கிறார் சூர்யா .
இந்த படத்தில் பாராட்டபட வேண்டியவர் வடிவேலுதான் . வடிவேலு காமெடி இந்த படத்தில் ரொம்ப சூப்பர் . நாம் திரை அரங்கை விட்டு ஓடாமல் இருக்க நம்மை பெவிக்கால் போட்டு ஒட்டி விட்டார் .


படத்தின் மூவாயிரத்து சொச்சம் மீட்டரிலும் வைகைப்புயலின் ராஜ்ஜியம்தான் கொடிகட்டி பறக்கிறது.


தனது மச்சான் சத்யனுக்கு பதிலாக வீட்டுக்குள் நுழைந்துவிடும் ஹீரோவை வெளியேற்ற இவர் பாடுபடுவதும், அது நடக்காமல் போகும் போதெல்லாம் அரற்றி அழுவதுமாக செம களேபரம். அதிலும், சரோஜாதேவியை அவர் கிண்டலடிக்கும் போதெல்லாம் செம சூப்பர் .


ஒவ்வொரு முறை ஹீரோ நீதிபதியை கொல்லப் போகும்போதெல்லாம் பதறுகிற வடிவேலு, ஒருகட்டத்தில் தானே கொலை செய்ய ஐடியா கொடுத்துவிட்டு நாக்கை கடித்துக் கொள்கிறாரே, செம கிளாப்ஸ்...


கைகுலுக்க வேண்டிய இன்னொருவர் நம்ம சரோஜாதேவிதான். 'அன்று வந்ததும் அதே நிலா' பாட்டுக்கு அவர் காட்டும் அபிநயம், காலம் கடந்து கம்பீரமாக நிற்கும் அதிசயம்!


அந்த‌ கொஞ்சும் த‌மிழ் ரொம்ப சூப்ப‌ர் ஆனாலும் இது ஓவ‌ர் .


இந்த‌ ப‌ட‌த்தோட‌ ஹீரோயின் ந‌ய‌ன்தாராவாம் . பாட‌ல்க‌ளில் க‌ல‌ர்கல‌ராக‌ வ‌ரும் ந‌ய‌ன்தாராவுக்கு வேலையே இல்லை . ஆயில்மேக்க‌ப்பும் அவ‌ரும் !! ச‌கிக்கலை . பாத்துங்க‌ அம்ம‌ணி , ம‌க்க‌ள் ம‌றந்துறாம‌ பாத்துக்கோங்க‌ ...


ஆனந்தபாபுவுக்கு ந‌ல்ல‌ ரோல் கொடுத்திருக்காங்க‌ . நல்ல‌ ந‌டிப்பு .


இசை ஹாரிஸ் ஜெய‌ராஜ் . பாட‌ல்க‌ள் அதே மெட்டு தான் என்றாலும் , கேட்ப‌த‌ற்கு ஓகே . ஆனால் பிண்ண‌னி இசை ப‌ட‌த்துக்கு பொருந்த‌வில்லை .


ஒளிப்பதிவாளர் ரா.கணேஷ்ன் ஒளிப்ப‌திவு சூப்ப‌ர் .


க‌தை ர‌மேஷ்க‌ண்ணா .


இய‌க்க‌ம் கே எஸ் ர‌விக்குமார் . க‌ம‌ர்சிய‌ல் ஹிட் கொடுக்க‌ முய‌ற்சித்திருக்கிறார் .


ஆத‌வ‌ன் , ர‌ஜினியின் தாய்வீடு பட‌த்தை ஞாபக‌ப‌டுத்தியிருந்தாலும் வ‌டிவேலு காமெடிக்காக‌ பார்க்க‌லாம் .


ஆத‌வ‌ன் - பெட்ரோமாக்ஸ் லைட்


ஸ்டார்ஜ‌ன்



Post Comment

12 comments:

  1. ஸ்டார்ஜான் நல்ல விமர்சனம். வேலைப் பளு அதிகமா?

    ReplyDelete
  2. வாங்க டி வி ஆர் சார்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. வாங்க முரளிக்கண்ணன்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. சூர்யா ஒவ்வொரு தடவையும் முரளியை கொல்ல நினைக்கும் போது காமெடியில் முடிகிறது . அதுவும் வடிவேலுகூட அடிக்கும் லூட்டி இருக்கிறதே அப்பப்பா ...

    ஒரு சின்ன காமெடி சொல்லுங்க பார்க்கலாம்.... நீங்க சூர்யா ரசிகரா....

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி நாகராஜன்

    ReplyDelete
  6. எப்படி உங்களால் மட்டும் ஆவ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  7. வாங்க அக்பர் , நலமா

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. /ஒரு சின்ன காமெடி சொல்லுங்க பார்க்கலாம்.... நீங்க சூர்யா ரசிகரா....//

    haaaaaaaaaaaaaaa haaaaaaaaaaaaaaaaaaa


    Repeateeeeeeeeeeee

    ReplyDelete
  9. ஹலோ ராஜ்குமார் , நலமா

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. ஆதவன் இந்த படத்துக்கு இப்படி ஒரு விமர்சனமா

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி கட்டபொம்மன்

    அதென்ன கட்டபொம்மன் ...

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்