Pages

Monday, October 5, 2009

இது நல்லாருக்கா - சொல்லுங்க ...


பாகிஸ்தான் - இந்தியா பிரச்சனைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது .
இந்தியா - பாகிஸ்தான் இடையே , சமீபத்தில் நிறைய பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகிறது .

சமீபத்தில் பா.ஜ.க தலைவர் ஜஸ்வந்த் சிங் , பாகிஸ்தான் தலைவர் ஜின்னா அவர்களை பத்தி ஒரு புத்தகம் வெளியிட்டார் .

அந்தப் புத்தகத்தில் ஜின்னா மதச் சார்பற்றவர் என்றும், இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு அன்றைய காங்கிரஸ் கட்சியே காரணம் என்றும் பொருள்படும் வகையில் எழுதியுள்ளாராம். அதனால் பா.ஜ.க. அவரை கட்சியில் இருந்து வெளியேற்றியுள்ளது. நரேந்திர மோடியின் குஜராத் அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று புத்தகத்தையே தடை செய்துள்ளது.

இப்போது இன்னொரு சர்ச்சை கிளம்பியுள்ளது . அது என்னவென்றால் :

பாகிஸ்தானின் முதல் தேசியகீதத்தை இயற்றியவர் ஒரு இந்து என்று, பத்திரிகையில் கட்டுரை வெளியானதை அடுத்து, புது சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியாவில் இருந்து பிரிந்தது பாகிஸ்தான்; 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைய, மூன்று நாட்களுக்கு முன் நாட்டின் தலைவர் முகமது அலி ஜின்னா, லாகூரைச் சேர்ந்த உருது கவிஞர் திலக்சந்த் மக்ரூம் என்பவரது மகன் ஜகன்னாத் ஆசாத்தை பாக்., தேசிய கீதத்தை எழுதும்படி கூறினார்.

அதன்படி, ஆசாத் உருது மொழியில் தேசிய கீதத்தை இயற்றினார். "அயி சர்சாமேனே பாக் சர்ரே...' என்ற அந்த பாடல் ஆறு மாதங்கள் நடைமுறையில் இருந்தது.ஜின்னா, 1947 செப்டம்பரில் மறைந்து விட்டார். ஜின்னாவுக்கு பின்னர் பதவியேற்ற அரசு அப்பாடலை நீக்கிவிட்டது.
பின், தேர்வுக்குழுவின்பரிந்துரையின் படி புதியதாக எழுதப்பட்ட 723 பாடல்களில், ஹபீஸ் ஜலந்ரி என்ற முஸ்லிம் கவிஞர் எழுதிய பாடல் தேர்வு செய்யப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது.

சமீபத்தில் "டான்' என்ற பிரபல பாக்.,பத்திரிக்கை, பீனா சர்வார் என்ற கவிஞர் கட்டுரை ஒன்றை எழுதி யுள்ளார். அதில் அவர், மதச்சார்பின்மையை கடைபிடிப்பவரான ஜின்னா,பாக்., தேசிய கீதத்தை ஒரு இந்துவை எழுதச் சொல்லி இருக்கிறார்."ஒரு இந்து, இந்து மதப்பாடல்களை தான் பாடவேண்டும்; முஸ்லிம் தன் மதப் பாடல்களை தான் பாடவேண்டும் என்பதில்லை.

இந்தியாவில், இக்பால் என்ற முஸ்லிம் கவிஞர் எழுதிய சாரே ஜகான் சி அச்சா என்ற பாடலை குழந்தைகள் அனைவரும் உச்சரித்து இன்றளவும் பாடி வருகின்றனர். அப்படியிருக்கையில், பாக்.,கில் இந்து எழுதிய தேசிய கீதத்தை ஏன் பின்பற்றக் கூடாது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இவங்க ஏன் இப்படி இருக்காங்க ?.
மதப்பிரச்சனை , ஜாதிப்பிரச்சனை என்று சொல்லி நாட்டை பிரிக்கணுன்னு கங்கனம் கட்டிக் கொண்டு அலைறாங்க. குண்டு வைக்கறது ,அடாவடி வன்முறை தாக்குதல்னு சொல்லி அப்பாவி மக்களை கொல்றாங்க .
இப்படித்தான் கொல்லனும்ன்னு எந்த மதத்துல சொல்லிருக்கு ?, சொல்லுங்க பாப்போம் .

எல்லா மதமுமே அன்பைத்தான் போதிக்கிறது . யாரையும் வெட்டனும் , குத்தனுன்னு சொல்லிருக்கா ? , சொல்லுங்க .

அப்புறம் ஏன் இந்த கொலவெறி ? .

முதல்ல பொழைக்கிற வழிய பாருங்க . எல்லாம் தானா சரியாகும் .

அவங்க அவங்க மனதிலே அன்பு , சகோதரத்துவம் , சாந்தி , மதக்கோட்பாடு , இருந்தாலே போதும் .

மனித நேயத்தை போற்றுங்கள் . அதுவே போதும் .
இது நல்லாருக்கா - சொல்லுங்க ....

ஸ்டார்ஜன்

Post Comment

19 comments:

 1. நல்லாருக்கு !!!!!

  ReplyDelete
 2. அருமை நண்பரே...

  அன்பு,பாசம்,நட்பால் மனங்கள் இணைவதை மதங்கள் தடுக்குமா என்ன...

  எல்லா மதங்களும் மனிதரை நல்வழிப்படுத்தத்தான் என்பதை அறியாமல் "மதம்" பிடித்து அலையும் மனிதரை எந்த ஒரு தெய்வமும் மன்னிக்காது.....

  ReplyDelete
 3. ஸ்டார்லின்.....மிக அழகா சொல்லிருக்கீங்க...அவரவர்கள் அவர்களுடைய மதங்களை ஒழுங்காக பேணினால் பாம் வெடிக்காது அறிவால் வெட்டாது கத்தி குத்தாது....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வாங்க ரவி , வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. வாங்க துபாய் ராஜா ,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 6. நல்லாருக்கு பதிவைச் சொன்னேன்

  ReplyDelete
 7. நாட்டின் அமைதி அந்த படம் போல் சகோதரத்துவத்துடன் அமையுமா? இல்லை சில ஓனாய்கள் அரசியல் பண்ணுவதற்காகவே எதையாவது கையிலெடுத்து வைத்து நாடகம் ஆடுகின்றார்கள், என்ரு ஓயும் இந்த நாடகம்

  நல்ல கேள்வி கருத்து

  ReplyDelete
 8. வாங்க இஸ்மத் பாய் , நலமா

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 9. வாங்க T.V.Radhakrishnan

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 10. வாங்க முரளி கண்ணன் , நலமா ? ..

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 11. வாங்க அபு அஃப்ஸர்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 12. வாங்க டாகடர் சுரேஷ் ,

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 13. வருகைக்கு நன்றி வசந்த்

  ReplyDelete
 14. //"டான்' என்ற பிரபல பாக்.,பத்திரிக்கை//

  'பத்திரி(க்)கை'
  என்பதை மட்டும்
  பத்திரிகை என்று மாற்றி
  விடுங்கள்; நல்லா இருக்கு.

  ReplyDelete
 15. வாங்க நிஜாமுதீன்

  வருகைக்கு நன்றி

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்