Pages

Tuesday, November 17, 2009

மாயமான 2012 ....


எல்லோரும் கேட்டுக்கோங்க !! உலகம் அழியப் போகிறதாம் ; அப்படின்னு நான் சொல்லலை . இப்போ புதுசா ஒரு ஆங்கில படம் வந்திருக்கிறது , அதுல சொல்றாங்க . என்ன சொல்லுறாங்கன்னு கேட்போமா ....

கதை இன்றைய 2009ல் துவங்குகிறது. பூகம்பம் மற்றும் சுனாமி மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை விஞ்ஞானிகள் அமரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். பூமியைக் காக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பலனில்லை. 2012ல் உலகின் அழிவு துவங்குகிறது.

பெரும் ஆக்ரோஷத்தோடு பூமி வாய்பிளக்க பெரிய பெரிய நகரங்கள் புதையுண்டு போகின்றன. கண் முன்னே பெரும் அவலம் நடக்க என்ன செய்வதென்று தெரியாமல் கைபிசைந்து நின்று அந்த அழிவில் ஐக்கியமாகின்றன.

ஆனா ஒரே ஒரு குடும்பம் மட்டும் அதுல இருந்து தப்பிக்கிறாங்க .

அமெரிக்காவில் வசிக்கும் ஜான் குசேக் ( அதான் நம்ம ஹீரோ ) தனது குடும்பத்தினரை காப்பாற்ற போராடுகிறார். பூமி மேலடுக்கு அதன் பாதாளத்துக்கு இறங்கும் நிலையில் ஜான்குசேக் காரை வேகமாக ஒட்டி குடும்பத்தினரை காப்பாற்றி விமானத்தில் ஏற்றி மயிரிழையில் உயிர் தப்புகிறார்... என்று போகிறது கதை.

நடிப்பு: ஜான் குசெக், அமெண்டா பீட், சிவிடெல் எஜியோபர், தாண்டி நியூடன்

இயக்கம்: ரோலண்ட் எமிரிக்

தயாரிப்பு: கொலம்பியா பிக்சர்ஸ்

இந்த படத்தைப் பொறுத்தவரை காட்சி அமைப்புகள் ரொம்ப நல்லாருக்கு .

இந்த மாதிரி படங்களுக்கு கதை, திரைக்கதையை விட அதை பிரமாண்டமாய், ரசிகர்கள் வாய் பிளக்கும் விதத்தில் படமாக்குவதுதான் சவால். அந்த வகையில் மிரட்டியிருக்கிறார் ரோலண்ட்.

இந்த படம் இப்போது தமிழில் ருத்ரம் என்ற பெயரில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது .

நாயகன் குடும்பத்தோடு தப்பிக்கும் காட்சி அச்சு அச‌ல் சினிமாத்தனம் என்றாலும், அந்த காட்சியமைப்பு சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது ரசிகர்களை.

எரிமலை தீப்பிடிப்புகள் பூமிக்குள் இருந்து சீறி பாய்வது, மலைகள் பிளந்து உருள்வது, வானளாவிய கட்டிடங்கள் சரிந்து மண்ணில் புதைவது, மேம்பாலங்கள் உடைந்து கார்கள் பொம்மைகளாய் வானில் இருந்து விழுவது, பாலம் உடைந்து ரயில் தூக்கி வீசப்படுவது, ஒரு பல மாடி சூப்பர் மார்க்கெட் பாதியாக பிளப்பது, சுனாமி பேரலை நிலப்பகுதியை விழுங்குவது, கப்பல்கள் தூக்கி வீசப்பட்டு குடியிருப்புகளில் வந்து விழுவது என நம்மை உறைய வைக்கின்றன காட்சிகள்.

உலக்ம் அழியப்போகும் காட்சிகள் ரொம்ப தத்ரூபமாக எடுத்திருக்காங்க . நல்ல கிராபிக்ஸ் .

இந்த படம் வெற்றியா ஓடுதோ இல்லையோ ; இதை பத்திய வதந்தி மட்டும் ரொம்ப சூப்பரா பரவிக்கிட்டு இருக்கு .

உலகம் பூரா இதை பத்திதான் பேச்சா இருக்கு . உலகம் அழிய நேர்ந்தால் என்னவாகும் !! இதை கற்பனை செஞ்சு பாருங்க பார்ப்போம் . முடியல இல்லை .

இது ஒரு கற்பனையான படம் . அவ்வளவு தான் .

ஆனா ரியலா எப்படி உலகம் அழியும்ன்னு நம்ம யாருக்குமே தெரியாது . அது நம்மை படைத்த இறைவனுக்கு தெரிந்த ஒன்று .

இது நம் அறிவுக்கு அப்பாற்பட்டது .

படம் பார்த்தோமா , வீட்டுக்கு சென்று சாப்பிட்டுட்டு தூங்குனோமா நல்ல கனவு வந்ததா என்று தான் இருக்கணும் .

இதுல உங்களுக்கெல்லாம் ஒரு ஜாலி ; இல்ல ...

என்ன உலகம்டா சாமி ....

எனக்கு தெரிஞ்சி , இப்படித்தான் 2000 ல் உலகம் அழியப்போகுதுன்னு வதந்திய கிளப்பி விட்டாங்க . 31 / 12 / 1999 நைட் படுக்கும் போது ரொம்ப ஃப்லீங் ஆக இருந்தது .

ரொம்ப பயம் வேறு . கண்ணை இறுக்க மூடிக்கொண்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டேன் ; காலையில் எழுந்திருக்க வேண்டும் என்று .

அப்படியே இன்னும் 3 வருஷத்துல உலகம் அழியுதுன்னு வைச்சிக்கோங்க , அப்போ பிறக்கிற உயிர்கள் கதி ?... அவங்க என்ன பாவம் செஞ்சாங்க .

நாம இந்த பூமியில இருக்கிறது கொஞ்ச நாள்தான் . அதுலயும் வீணான வதந்திகளை நம்பாம சந்தோசமா இருங்கங்க . உலகம் அழியும் போது அழியட்டும் .

எப்போ இந்த உலகத்துல ஒரு ஆணோ அல்லது பெண்ணோ இறைவனை பற்றி நினைப்போ அல்லது வணங்காமல் இருக்காங்களோ அப்போது தான் உலகம் அழியும் . அது வரைக்கும் கவலைப்படாம இருங்க .

Post Comment

12 comments:

  1. எனக்கு தெரிஞ்சி , இப்படித்தான் 2000 ல் உலகம் அழியப்போகுதுன்னு வதந்திய கிளப்பி விட்டாங்க . 31 / 12 / 1999 நைட் படுக்கும் போது ரொம்ப ஃப்லீங் ஆக இருந்தது .

    ரொம்ப பயம் வேறு . கண்ணை இறுக்க மூடிக்கொண்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டேன் ; காலையில் எழுந்திருக்க வேண்டும் என்று .//

    ஸ்கைலாப் என்று ஒரு செயற்கைக்கோள் விழுந்து உலகம் அழியும்னு ஒரு வதந்தியைப் பரப்பினர்!! இது போல் நிறைய முறை... இப்பொ சாதாரணமாப்போச்சு!!!

    ReplyDelete
  2. இப்படித்தான் சொல்லிகிட்டே இருப்பாங்க. ஆனா இதுல கஷ்டம் என்னான்னா நான் சொன்னது பலிச்சிருச்சி பார்த்தியான்னு சொல்ல ஒருத்தரும் இருக்க மாட்டாங்க.

    ReplyDelete
  3. வாங்க தேவா சார் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. வாங்க அக்பர் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. ஐயா ஜாலி ஜாலி பூமாதேவி வாயப் பொளக்கப் போறா

    ReplyDelete
  6. வாங்க பட்டாசு பாண்டி ,

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. வாங்க ஜெட்லி ,

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. என்னா புரளி !! இதை வேலையாப் போச்சு ....

    ReplyDelete
  9. வாங்க கட்டபொம்மன் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. நண்பரே.. நீண்ட நாள் கழித்து ஒரு பதிவு வலுக்கட்டாயமாக எழுதி இருக்கிரேன்.. படித்து கருத்து சொல்லவும்!!

    ReplyDelete
  11. வாங்க ராஜ்குமார் , வருகைக்கு நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்