Pages

Sunday, November 8, 2009

கண்டேன் காதலை ... ரசித்து அனுபவிக்க ..


கண்டேன் காதலை

எப்பொதும் லோட லோட வெகுளியாக பேசும் பெண்ணும் , மூடி டைப் ஆக ஒருவனும் வாழ்க்கையில் சந்தித்தால் என்ன நடக்கும் என்பது தான் இந்த படத்தோட கதை .


பரத் , அப்பா உருவாக்கித் தந்த கம்பெனியின் முதலாளி . அப்பா இறந்து போக , அம்மா ஆடிட்டருடன் ஓடிப் போக , கம்பெனி நஷ்டத்தில் போகிறது . இதனால் மனமுடைந்த பரத் வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்ய போகிறார் . ரயிலில் , சும்மா தொணதொணவென பேசும் தமன்னாவை சந்திக்கிறார் . இதனால் எரிச்சல் அடைந்த பரத் , பாதி வழியில் ரயிலை விட்டு இறங்கும் பரத்தை பிந்தொடரும் தமன்னா ரயிலை தவறவிடுகிறார் .

அதன் பின் நடக்கும் சம்பவங்கள் ரொம்ப சுவாரசியம் . தமன்னா மேல் பரத்துக்கு காதல் வருமோ என்று நாம் நினைக்கும் முன்னரே , தமன்னா தான் காதலிப்பதாகவும் , காதலனுடன் ஓடி போகபோவதாக சொல்லி , நம்மை ஏமாத்திட்டாங்க .

தமன்னா , மனச்சோர்வில் இருந்த பரத்தை திருத்தி தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். தமன்னா வீட்டை விட்டு ஓடிப்போகும் போது பரத்தும் வீட்டை விட்டு வெளியேறுகிறார் . இதனை தப்பா நினைக்கும் தமன்னா குடும்பத்தினர் இருவரையும் தேடுகின்றனர் .

பரத் தன் கம்பெனிக்கு திரும்பி , கம்பெனியை பழைய நிலைக்கு கொண்டு வந்து வெற்றிப்பாதையில் செல்கிறார் . தமன்னாவை பத்தி எந்த தகவலும் இல்லாததால் தமன்னாவை தேடி செல்கிறார் . தமன்னாவை அவர் காதலருடன் சேர்த்து வைத்து தமன்னா வீட்டுக்கு அழைத்து வருகிறார் .

தமன்னா குடும்பத்தினர் தமன்னாவின் காதலை ஏத்துக்கிட்டாங்களா ... இல்லையா ... என்பதை படம் பாக்காதவங்க படம் பாத்து தெரிஞ்சிக்கோங்க .



ஒரு அருமையான கதை . நல்ல திரைக்கதை ரொம்ப சூப்பர் .

ஹிந்தியில் வெளியான ஜப் வீ மெட் ( Jab We Met ) படத்தோட ரீமேக் என்றாலும் நல்ல திரைக்கதை , வசனம் காட்சி அமைப்புகள் இந்த படத்தோட வெற்றிக்கு காரணம் . மனச்சோர்வில் இருப்பவர்கள் இந்த படத்தை பாக்கும்போது ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் .

பரத் இந்த படத்தில் ரொம்ப நல்லா நடிச்சிருக்கிறார் . முன்னாடி சும்மா லொப்பை படத்துல நடிச்சிக்கிட்டு இருந்த பரத்துக்கு இந்த படம் ஒரு மைல்க்கல் . ரொம்ப அனுபவப்பட்டு நடிச்சிருக்காரு .

தமன்னா இந்த படத்தில் ரொம்ப சூப்பரா நடிச்சிருக்காரு . வெகுளித்தனத்துக்கு ஏத்தமாதிரி அவருடைய கண்களும் நடிச்சிருக்கே . அப்பப்பா .. நல்லாருக்கு .
அதுவும் ரயிலை தவறவிட்ட பின் நடக்கும் சம்பவங்களில் தமன்னா நல்ல ஸ்கோர் . தண்ணீர் பாட்டிலுக்காக கடைக்காரருடன் சண்டையிடும் போது ரயில் செல்ல , மறுபடியும் தமன்னா ரயிலை தவறவிடும் போது , தன் கண்களாலே பதில் சொல்கிறார் .

முற்பாதியில் தமன்னா பகுதி என்றால் பிற்பாதி சந்தானத்தின் பகுதி . படத்தோட இடையில் வந்தாலும் காமெடி அட்ட்காசம் . படம் பார்க்கும் நாம் சோர்வில்லாமல் இருக்க இவரின் காமெடி ஒரு டானிக் .

ரவிச்சந்திரன் , நிழல்கள் ரவி , அழகம்பெருமாள் , மனோபாலா ,சிங்கமுத்து அளவான நடிப்பு .

இந்த படத்தோட காட்சி அமைப்புகள் ரொம்ப சூப்பர் . ஒளிப்பதிவாளரின் உழைப்பு வீணாகவில்லை .

இசை வித்தியாசாகர் . பிண்ணனி இசை ரொம்ப சூப்பர் என்று சொல்ல வைத்தவர் , பாடல்கள் சுமார் என்று சொல்ல வைத்திருக்கிறார் .

படத்தில் சிறுசிறு குறைகள் இருந்தாலும் நாம் தம்மடிக்க போகாமல் வைத்திருக்கிறார்கள் .

கண்டேன் காதலை ‍... ரசித்து அனுபவிக்க ..

இந்த படத்துக்கு எத்தனை மார்க் போடலாமுன்னு நீங்களே சொல்லுங்க...

ஸ்டார்ஜன்

Post Comment

21 comments:

  1. படத்தை விட உங்கள் விமர்ச்சனம் அருமை.

    ReplyDelete
  2. இப்போதான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.. முடியல.. தாங்க முடியல..

    ReplyDelete
  3. இப்போதான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.. முடியல.. தாங்க முடியல..

    ReplyDelete
  4. //லொப்பை//

    அப்படினா என்ன?? புது வார்த்தையா இருக்கு .....

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம்.

    ஜெட்லி, லொப்பைன்னு அட்டுன்னு அர்த்தம்

    ReplyDelete
  6. வாங்க அக்பர் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. வாங்க யாத்ரீகன் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. படத்த இந்தில பார்த்துட்டேன். நல்லாருக்குன்னா சொல்றீங்க ....அப்ப தமிழ்ல யும் ஒருதடவை பார்த்துர்றேன். படத்தை நல்ல உள்வாங்கிருக்கீ்ங்களே... நைஸ்

    ReplyDelete
  9. //அப்பா இறந்து போக , அம்மா ஆடிட்டருடன் ஓடிப் போக , கம்பெனி நஷ்டத்தில் போகிறது . இதனால் மனமுடைந்த பரத்// மன்னிக்கவும் கம்பெனி நஷ்டம் ஒரு காரணம் என்றாலும் காதலும் ஒரு காரணம் என்பது என் கருத்து

    ReplyDelete
  10. வாங்க ஜெட்லி ,

    லொப்பைன்னா அட்டுன்னு அர்த்தம்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. வாங்க சுரேஷ் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. வாங்க முரளிகண்ணன் , நலமா ...வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. வாங்க பிரதாப் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  14. வாங்க sridhar , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  15. நிஜமாவா சொல்றீங்க..:(

    ReplyDelete
  16. வாங்க கேபிள் , சொன்னா நம்புங்க

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  17. நல்ல அருமையான விமர்சனம்

    ReplyDelete
  18. படம் பார்த்த உணர்வு , உங்கள் விமர்சன‌த்தில் ...

    ReplyDelete
  19. வாங்க ராஜா வருகைக்கு நன்றி

    ReplyDelete
  20. வாங்க கட்டபொம்மன் வருகைக்கு நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்