Pages

Friday, April 9, 2010

கலையாத நிழல்கள்

கலையாத‌ நிழல்கள்

என்னவென்று நான் சொல்ல
வழிநெடுக தோரணம்
தலைவரின் வருகையை
பறைசாற்றியது.

அண்ணார்ந்து பார்த்தேன்
ஏணியிலிருந்து, கீழே
கனவெல்லாம் மேலே உயர‌...

தலைவர் சென்றபின்னாலும்
சண்டை மூண்டது
அவர் உக்கார்ந்த
சேரை தூக்குவதில்..


ஆம்! ஒருசாண்
வயிற்றிலும் களேபரங்கள்
என்னடா என்னை
கவனிக்கவில்லையென்று..

ஏசியும் தன் வேலையை
சரியாக செய்தது..
தலைவரின் சயனத்தில்
இடையூறு இல்லாமல்..

ஆம்! கால்கள் இடம்
மாற மறுத்தன‌
கதிரவனும் தன் வேலையை
சரியாக செய்தது..
மனமோ ஸ்ப்பா என்றது..

திட்டங்கள் எல்லாம்
போட்டதும் வால்களின்
கைகளில் தஞ்சம்..

ஆம்! நாளைக்கு
கிடைக்கும் என்ற
நம்பிக்கையில்
நாளும் நாளும்...


அடுத்த தேர்தலிலும்
தலைவர்தான் வெற்றி!

யார்வந்தா என்ன‌
பணம் நிறைய
கிடைக்குமா?...

,

Post Comment

21 comments:

  1. நல்லா இருக்கு ஸ்டார்ஜன். உங்கள் மனவலி குறித்து எனது எண்ண அலையாக மனசு வலைப்பூவில் "தங்கமலரும்... " என்ற தலைப்பில்... பாருங்கள்.

    ReplyDelete
  2. கவிதை அருமை.//அண்ணார்ந்து பார்த்தேன்
    ஏணியிலிருந்து, கீழே
    கனவெல்லாம் மேலே உயர‌...//வரிகள் அருமையோ அருமை.

    ReplyDelete
  3. அட!!! இது வித்தியாசமா
    இருக்கே, வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  4. //யார்வந்தா என்ன‌
    பணம் நிறைய
    கிடைக்குமா?...//


    ''கையில காசு வாயில தோசை
    குத்தினேன் முத்திரை
    கொடுத்தாங்க சில்லரை
    ஜனங்க என்ன ஆனா என்ன அண்ணாச்சி-நம்ம
    பணநாயகம் வாழ்ந்தாப் போதும் அண்ணாச்சி
    வாழ்க ஜனநாயகம்! வாழ்க பணநாயகம்''
    என்ற பாடல்தான் நினைவிற்கு வருகிறது.
    அருமை!

    ReplyDelete
  5. என்ன செய்ய கட்சிக்காரர்கள் காய்ச்சியடிக்கிறார்கள்.

    அன்றாடங்காய்ச்சிகள் என்ன செய்வார்கள். கிடைக்கும் வரைக்கும் லாபம்ன்னுதான் பார்ப்பாங்க. நல்ல சொல்லியிருக்கீங்க கவிதையில்.

    ReplyDelete
  6. செறிவு மிக்க கவிதை

    ReplyDelete
  7. ந‌ல்லா இருக்கு ஸ்டார்ஜ‌ன்....

    ReplyDelete
  8. நல்லாருக்கு ஸ்டார்ஜன். நன்றி.

    ReplyDelete
  9. அருமையான கவிதை ஸ்டார்ஜன். யதார்த்தமான வரிகள்

    ReplyDelete
  10. வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய கவிதை....

    ReplyDelete
  11. அண்ணார்ந்து பார்த்தேன்
    ஏணியிலிருந்து, கீழே
    கனவெல்லாம் மேலே உயர‌...//

    இந்த வரிகளை மிக ரசித்தேன் ஸ்டார்ஜன்

    ReplyDelete
  12. அர்த்தமுள்ள வரிகள்.. கவிதை ஒக்கேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....

    ReplyDelete
  13. வாங்க குமார் @ ரொம்ப நன்றி உங்கள் வலைப்பூவில் குறிப்பிட்டதுக்கு

    வாங்க ஸாதிகா @ மிக்க நன்றி பாராட்டுகளுக்கு

    வாங்க டிவிஆர் சார் @ மிக்க நன்றி பாராட்டுகளுக்கு.

    ReplyDelete
  14. வாங்க சைவகொத்துப்பரோட்டா @ நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும்

    வாங்க நிஜாம் @ நன்றி கருத்துக்கு.., அருமையான பாடல் வரிகளை குறிப்பிட்டதுக்கு நன்றி., பாடலை அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  15. வாங்க ஜெரி சார் @ நன்றி வருகைக்கும், கருத்துக்கும்

    வாங்க அக்பர் @ நன்றி வருகைக்கும், கருத்துக்கும்

    வாங்க இளங்கோ @ நன்றி வருகைக்கும், கருத்துக்கும்

    ReplyDelete
  16. வாங்க ஸ்டீபன் @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    வாங்க ராமசாமி கண்ணன் @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    வாங்க மின்மினி @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  17. வாங்க சங்கவி @ கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

    வாங்க தேனக்கா @ பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    வாங்க இர்ஷாத் @ நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  18. கவிசிவாவின் இணைப்பு லின்க் இதோ

    http://kavippakam.blogspot.com/

    ReplyDelete
  19. கவிதை சிந்தனை சிறப்பு !
    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் . மீண்டும் வருவேன் .

    ReplyDelete
  20. வித்தியாசமான முயற்சி. நன்று.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்