Pages

Saturday, April 17, 2010

கரகர மொறுமொறு - 17/4/2010

நாய் துரத்தலும் கிரிக்கெட்டும்


நாங்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலையில் பாகிஸ்தான் டீமுடன் மேட்ச் போடுவது வழக்கம்.. அப்படித்தான் நேற்று காலையில் நானும், அக்பரும், அக்பர் தம்பி, உறவினர், கேரளா நண்பர்களும் உபி நண்பரும் விளையாடுவதற்கு பாகிஸ்தான் நண்பர்களின் இருப்பிடம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தோம். எல்லோரும் முன்னாடி சென்று கொண்டிருந்தார்கள்.

நான் வீட்டில் இருந்து போன்வந்ததால் பேசிக்கொண்டும் மிஸ்டுகால்கள் கொடுத்துக்கொண்டும் சென்றுகொண்டிருந்தேன். நண்பர்கள் அனைவரும் முன்னால் ஒரு 20மீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்தனர். நான் பின்னால் வந்து கொண்டிருந்தேன். இங்கே சவூதியில் நாய்கள் மிக குறைவு. நாயை பார்ப்பது அபூர்வம். நாங்கள் செல்லும்வழியில் நாய் ஒன்று சென்றுகொண்டிருந்தது. நம்ம ஆட்கள்தான் நாயைக் கண்டால் கல்லெடுத்து அடிக்கணும் என்பது எழுதப்படாத விதியா என்று தெரியலை.

நாயை பார்த்ததும் முன்னால் போய்க்கொண்டிருந்த கேரளா நண்பன் ஒருவன் கல்லைக் கொண்டு நாயின்மேல் எறிந்தான். அது விருட்டென திரும்பி பார்த்தது. நான் அதன்அருகில் கொஞ்சதூரத்தில் சென்று கொண்டிருந்ததால் நாந்தான் அதன்மேல் எறிந்துவிட்டேனென என்னை பார்த்து குரைத்துக்கொண்டே என்னை நோக்கி வந்தது. நான் இதைக்கண்டு ஓட ஆரம்பித்தேன். நாய் என்னை துரத்தியதால் வேகமாக ஓடினேன்.

நான் ஓடுவதைபார்த்த பக்கத்துல இருந்த சவுதி நாயை விரட்டி திசை திருப்பினார். அப்பாடி என்று சவுதிக்கு நன்றி சொன்னேன்.

நாங்கள் டாஸ் வென்று பாகிஸ்தானிகளை முதலில் பேட் செய்ய சொன்னோம். முதலில் பந்துவீசிய உபி நண்பர் கட்டுகோப்பாக பந்துவீசினார். பின்னர் அக்பரின்தம்பியும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். அவர்களின் ரன்விகிதம் மெதுவாகவே உயர்ந்தது. 15 ஓவருக்கு பாகிஸ்தானிகள் 100 ரன்கள் எடுத்தனர்.

நான் ஒருஓவர் கட்டுக்கோப்பாக பந்துவீசி 2 ரன்கொடுத்து 1 விக்கெட் சாய்த்தேன். அக்பரின் தம்பி 3 விக்கெட் சாய்த்தார். உபி நண்பர் 2 விக்கெட் சாய்த்தார். கேரளா நண்பர் 2 விக்கெட் சாய்த்தார். கட்டுக்கோப்பாக பந்துவீசிய அக்பருக்கு இந்தமுறை விக்கெட் கிடைக்கவில்லை.

பின்னர் களம் இறங்கிய நாங்கள் தொடக்கம்முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தோம். முதலில் இற‌ங்கிய கேரளா நண்பர் சிறப்பாக 25 ரன் அடித்து தொடக்கம் அமைத்துகொடுத்தார். பின்னர் இறங்கிய அக்பரின் தம்பி அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார்.மேலும் ஒரு விக்கெட் விழ அக்பர் இறங்கினார். இருவரும் ரன் விகிதத்தை அதிகரித்தனர். தம்பி 24 எடுத்த நிலையில் அவுட் ஆனார். அக்பர் தொடர்ந்து ஆடி ஒரு நான்கு அடித்து ஆட்டத்தை வெற்றி பெற செய்தார். அவர் எடுத்தது 24 ரன்கள்.

பொதுவா பாகிஸ்தானிகள் நல்ல வலுவானவர்கள். அவர்களின் வேகப்பந்துவீச்சுக்கு நாங்கள் ஆரம்பத்தில் தோத்ததுண்டு. அவர்களிடம் தொடர்ந்து விளையாடி நல்ல அனுபவங்களை பெற்றதால்‌‌ இப்போதெல்லாம் நாங்கள் ஒன்று ஜெயித்தால் அவர்கள் ஒன்று ஜெயிப்பார்கள்.

*******************************

இதோ வந்திட்டேன் உங்கள் ஸ்டார்ஜன்.

நான் வலைச்சரத்தில் எழுதிக்கொண்டிருக்கும் இந்தவாரத்தில் கதையின் மூலம் பதிவர்களை அறிமுகப்படுத்துவதற்கு அமோகஆதரவு தந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கொஞ்சம் பிஸியாக இருப்பதால் உங்கள் எல்லோருடைய பதிவையும் என்னால் படிக்கமுடியவில்லை. ஆயினும் எனக்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்டு தொடர்ந்து ஆதரவைத் தரும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

‌********************************

பதிவர் சந்திப்பு

நேற்று நண்பர் சரவணக்குமார் ஊரிலிருந்து வந்தபின் இங்கே எங்களை சந்திப்பதற்கு வந்திருந்தார். மேலும் விவரங்களுக்கு அக்பரின் பதிவை படிங்க. நாங்கள் மூவரும் கலந்துரையாடியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

********************************

கேள்விக்கு என் பதில் 6

கேள்வி 6:

சினிமா/சீரியல்கள் பெண்களுக்கு முன்னேற்றம் அமைத்துக் கொடுக்கிறதா இல்லை இழிவுபடுத்துகிறதா...


இந்த கேள்வி பெண்கள் சிந்திக்கவேண்டிய கேள்வி. இந்த கேள்விக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

சினிமா/சீரியல்களில் பெண்களை இழிவுபடுத்தாத காட்சிகளே இல்லை எனலாம். அந்தகாலத்திலிருந்து இந்தகாலம்வரை பெண்களை மையப்படுத்தாத திரைப்படங்களே இல்லையெனலாம். அந்தகாலத்திலிருந்து சினிமாக்களில் கவர்ச்சிபொருளாகவும் மோகப்பொருளாகவும் வியாபாரநோக்கோடும் பெண்கள் இன்றுவரை ஆக்கப்பட்டிருக்கின்றனர். அப்போது கவர்ச்சி ஆட்ட நடிகைகள் மூலம் கவர்ச்சி பாடல்கள் வைத்து தங்கள் படங்களை காண்பித்து பணம் சம்பாதித்தனர். ஆனால் அந்த வேலையை இன்றைய கதாநாயகிகளை செய்யவைத்து பணம் ஈட்டுகின்றனர்.

மாமியார் மருமகள் சண்டை பிரதானமாக உள்ள சினிமாக்கள் மக்கள் ஆர்வமுடன் ரசித்துபார்த்தனர். கணவன் கொடுமை, மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை இப்படி நிறைய கொடுமைகளை கொண்ட படங்கள் மக்கள் மத்தியில் உலாவரத் தொடங்கின. இதனை பார்த்து எத்தனை எத்தனை குடும்பங்களில் குழப்பம் உண்டாயின எனபதை படம் எடுத்தவர்கள் என்னைக்காவது நினைத்து பார்த்ததுண்டா?..

இந்தமாதிரி படங்களை மக்கள் சினிமாவா நினைக்காமல் தங்கள் வாழ்க்கையோடு சம்பந்தபடுத்தி நிஜத்திலும் அப்படித்தான் இருக்கவேண்டும்போல மாயபிம்பம் உருவாகத்தொடங்கியது. இந்த படங்களின் ஹீரோ அவர் படங்களில் காட்டப்படும் குடும்பங்களில் உள்ள பிரச்ச்னையை தீர்த்து வைப்பாராம். உடனே படத்துல உள்ள குடும்பம் திருந்தி நல்வாழ்வை வாழ தொடங்கினர் என்பதை படத்தின் இறுதியில் காட்டுவார்கள். உண்மையில் இப்படியெல்லாம் ஒரு குடும்பத்திலும் நடக்கவே நடக்காது. மக்கள் இந்த படங்களை பார்த்து நாமும் அப்படி இருக்கவேண்டும், என்று நினைக்கத் தொடங்கினர்.

இதுதான் சீரியலின் ஆரம்பம் என்று சொல்லலாம். பின்னர் காலப்போக்கில் மக்கள் தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பது குறைந்து கொண்டே வந்தது. இதனால் சீரியல் என்ற பூதம் ஒவ்வொருவோர் வீட்டிலும் கிளம்பத்தொடங்கியது. இன்று எண்ணற்ற சீரியல்கள் வந்து கொண்டிருக்கிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து டிவி பார்க்கமுடியவில்லை.

எப்படியெல்லாம் குடும்பத்தில் பிரச்ச்னைகளை உண்டுபண்ணலாம் என்று ஒவ்வொருவருக்கும் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது, இந்த சீரியல்கள். இதில் உள்ள உண்மைகளை புரிந்து கொள்ளாமலே பெண்கள் விவாகரத்துவரை செல்லுகின்றனர். இதெல்லாம் பாவமாக தெரியலியா அவர்களுக்கு.. என்னே ஒரு ராஜதந்திரம்.

இதுபோதாதென்று டிவிகளில் வரும் நடனநிகழ்ச்சி, பாட்டுப்போட்டி, மற்ற நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் இப்படி நிறைய நிகழ்ச்சிகளில் பெண்களை அரைகுறை உடைகளில் உலாவரச் செய்து பணம் சம்பாதிக்கின்றனர். ரொம்ப கேவலமாக பெண்களை சித்தரிக்கின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என்று நீங்கள் கேட்கலாம். அது உங்கள் கைகளில்தான் உள்ளது. ஆகவே மக்களே பெண்களை கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகள், சினிமாக்கள், சீரியல்களை பாக்காதீங்க. புறக்கணிப்பு செய்துவிடுங்கள்.

மக்களை இந்தநிலையை நீங்கள்தான் மாற்றமுடியும், என்று சொல்லியவனாக நானும் இங்கே என்னுடைய கருத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

அடுத்தவாரம் மீண்டும் உங்களை வேறொரு கேள்வியுடன் சந்திக்கிறேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

36 comments:

  1. கரகர மொறு மொறு சுவை சூப்பர்.

    என்னை பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி. (யாருங்க அது எவ்வளவு கொடுத்தேன்னு கேக்குறது?)

    நாட்டமை தீர்ப்பு சூப்பர். டிவி பார்க்காமல் இருந்தா இவங்க டி ஆர் பி ரேட்டிங் எப்படி உயரும்னு பார்க்கலாம்.

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான பதிவு. வலைச்சரத்தில் 'எங்களை' அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  3. இங்கே சென்னை அணி சரியாக விளையாடவில்லை என்று எல்லாரும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்; வந்து விடுங்கள் அண்ணே! :-))

    ReplyDelete
  4. பாகிஸ்தானுடன் மேட்ச் என்று லலித் மோடி போல இறங்கிவிடீர்கள் என்று நினைத்துவிட்டேன் .. அருமை ..

    ReplyDelete
  5. நண்பரே உங்களின் கருத்துகளுக்கு நன்றி..உங்கள் வலைப்பதிவை இன்று தான் கண்டேன். தினமும் படிக்கத்துவங்குகிறேன்..நன்றி.

    விஜய் ஆம்ஸ்ட்ராங். ஒளிப்பதிவாளர்

    ReplyDelete
  6. கிரிக்கெட்டில் வெற்றி பெற்றது பற்றி கேட்க ரொம்ப மகிழ்ச்சி.

    சினிமா, சீரியல் இழிவு செய்வதைப் பற்றி நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  7. கிரிக்கெட்டு வேற ஆடுகிறீர்களா? சீக்கிரம் ப்ளாக்கர்ஸ்க்கு IPL நடத்திருவமா?

    ReplyDelete
  8. மொறுமொறுப்பு நல்லா இருக்கு.

    ReplyDelete
  9. //இதுபோதாதென்று டிவிகளில் வரும் நடனநிகழ்ச்சி, பாட்டுப்போட்டி, மற்ற நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் இப்படி நிறைய நிகழ்ச்சிகளில் பெண்களை அரைகுறை உடைகளில் உலாவரச் செய்து பணம் சம்பாதிக்கின்றனர்//

    த‌மிழ‌னின் தானைத் த‌லைவ‌ர் டிவியிலேயே அப்ப‌டித்தானே.குழ‌ந்தைக‌ளையும் கெடுத்து வைத்துள்ள‌ன‌ர்.

    ReplyDelete
  10. சீரிய‌ல் ப‌ற்றிய‌ பார்வை அருமை ஸ்டார்ஜ‌ன்..

    ReplyDelete
  11. பாகிஸ்தான் கூட ஜெயிச்சாச்சா... உங்களை நான் IPL ல் 1 ரூவாய்க்கு ஏலம் எடுக்கலாம்னு நினைக்கறேன். நீங்க என்ன சொல்றீங்க..

    :))

    ReplyDelete
  12. சுவாரஸ்யமான பதிவு.பதிவின் வேகத்தியே தெரிகிறது நீங்கள் பிசிஎன்று.நாய் துரத்திய மேட்டர்..அச்சச்சோ..

    ReplyDelete
  13. வாங்க அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  14. வாங்க ஸ்ரீராம்.

    நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  15. ///////இதுபோதாதென்று டிவிகளில் வரும் நடனநிகழ்ச்சி, பாட்டுப்போட்டி, மற்ற நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் இப்படி நிறைய நிகழ்ச்சிகளில் பெண்களை அரைகுறை உடைகளில் உலாவரச் செய்து பணம் சம்பாதிக்கின்றனர். ரொம்ப கேவலமாக பெண்களை சித்தரிக்கின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என்று நீங்கள் கேட்கலாம். அது உங்கள் கைகளில்தான் உள்ளது. ஆகவே மக்களே பெண்களை கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகள், சினிமாக்கள், சீரியல்களை பாக்காதீங்க. புறக்கணிப்பு செய்துவிடுங்கள்.//////////


    மிகவும் சிறப்பான கருத்துகள் . இந்த சினிமா மோகம் தொடர்ந்தால் விரைவில் முட்டாள்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடம் பிடிக்கும் என்பது மட்டும் உண்மை . சிந்தித்தல் என்ற வார்த்தையை காலப்போக்கில் அகராததிகளில் தேடும் நிலை விரைவில் வரலாம் .

    ReplyDelete
  16. அனைத்து குறிப்புக்களும் சுவை.
    டீ.வீ. சீரியல்கள், நடன நிகழ்ச்சிகள் பற்றி
    நன்றாக குமுறியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  17. நாய் துரத்திய பயத்தில் பந்தை அடித்து துவைத்தீரோ?
    நல்ல இருக்கு பதிவு.

    ReplyDelete
  18. சினிமா சீரியல். அதை சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை அனைவருக்கும்.
    தெரிந்தும் தெரியாததுபோல் நடிப்பவர்களை என்ன செய்ய ஷேக்.

    //அப்ப‌டித்தானே.குழ‌ந்தைக‌ளையும் கெடுத்து வைத்துள்ள‌ன‌ர்
    //

    இது முற்றிலும் உண்மை.

    ReplyDelete
  19. வாங்க சேட்டைக்காரன்

    நான் ரெடியாக இருக்கேன்.., ஆனா பேசுனபடி சம்பளம் கொடுத்திடணும் என்ன.. :))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  20. வாங்க ஸ்ரீ.கிருஷ்ணா

    அந்தளவுக்கு நான் பெரியஆளு இல்ல..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  21. வாங்க விஜய் சார்,

    நன்றிகள் உங்க அலுவலுக்கும் மத்தியில் எனது தளத்துக்கு வருகைதந்ததுக்கு..

    ReplyDelete
  22. வாங்க ராகவன் அண்ணே

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  23. வாங்க மயில்ராவணன்

    ஆரம்பிச்சிருவோமா.. நான் ரெடி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  24. வாங்க சைவகொத்துப்பரோட்டா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  25. வாங்க கரிசல்காரன்

    ஆமாங்க ரொம்ப மோசம்..

    நன்றி கருத்துக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  26. வாங்க ஸ்டீபன்

    நன்றி கருத்துக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  27. வாங்க கண்ணா

    நான் ரெடியாக இருக்கேன்.., ஆனா பேசுனபடி சம்பளம் கொடுத்திடணும் என்ன.. :))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  28. வாங்க ஸாதிகா அக்கா

    ரொம்பல்லாம் பிசி இல்லக்கா.. நன்றி தங்கள் அன்புக்கு..,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  29. வாங்க பனித்துளி சங்கர்

    சரியா சொல்லிருக்கீங்க.. நன்றி கருத்துக்களுக்கு..

    ReplyDelete
  30. வாங்க நிஜாமுதீன்

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  31. வாங்க குமார்.

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  32. வாங்க மல்லிக்கா

    நன்றி கருத்துக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  33. //கண்ணா.. said...
    உங்களை நான் IPL ல் 1 ரூவாய்க்கு ஏலம் எடுக்கலாம்னு நினைக்கறேன்.//

    பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஒரு ரூவாயா? துபாய்ல இருக்கீங்க, செஞ்சாலும் செய்வீக!!

    ReplyDelete
  34. //எப்படியெல்லாம் குடும்பத்தில் பிரச்ச்னைகளை உண்டுபண்ணலாம் என்று ஒவ்வொருவருக்கும் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது//

    அக்மார்க் உண்மை.

    ReplyDelete
  35. வாங்க ஹூசைனம்மா

    ஏதோ பாத்து செய்யுங்க..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  36. வாங்க அமைதிசாரல்

    ஆமா உண்மைதான்..

    நன்றி கருத்துக்கும் வருகைக்கும்..

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்