Pages

Saturday, May 1, 2010

மனைவி அமைவதெல்லாம் ...

ஒருவனுடைய வாழ்க்கையை இரண்டா பிரிக்கலாம். கிறிஸ்து பிறப்பதுக்கு முன் கிறிஸ்து பிறப்பதற்கு பின் என்றமாதிரி திருமணத்துக்கு முன் திருமணத்துக்கு பின். எதனால அப்படிஎன்றால் ஒருவன் என்னதான் சல்லித்தனம் பண்ணினாலும் கல்யாணம் ஆயிருச்சி என்றால் அவ்வளவுதான் பொட்டிப்பாம்பா அடங்கிருவான். நேத்துவரைக்கும் காடுமேடெல்லாம் சுத்தித்திரிஞ்சவனை இன்னைக்கி காணோமென்று கேட்டால் அவனுக்கு கல்யாணம் ஆயிருச்சிப்பா என்பார்கள். அந்தளவுக்கு ஒருவனுடைய வாழ்க்கையில் ஒரு பெண் வந்துட்டான்னா கேட்கவே வேண்டாம் அவனோட வாழ்க்கை டோட்டல் சேஞ்ச்தான். அந்தளவுக்கு மனைவியோட முக்கியத்துவம்.

மனைவி அமைவது இறைவன் கொடுத்தவரம்ன்னு சும்மாவா சொன்னாங்க.. ஆமா கல்யாணம் என்கிறது ஆயிரம் காலத்துப்பயிர்தான். ஒருவனுக்கு அவனோட டேஸ்ட்டுக்கு தகுந்தமாதிரி அவனது பெற்றோர், தன்பிள்ளைக்கு ஏத்த மனைவியை எவ்வளோ கஷ்டப்பட்டு தேடி அவனுக்கு கல்யாணம் செய்துவைக்கிறாங்க. காதல் கல்யாணங்களில் இந்த நிலை மாறலாம். அவனே/அவளே அவன்/அவள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கிறாங்க. இந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த இறைவன், பெற்றோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம்.

ஒரு பெண்ணுக்கு என்னதான் பெற்றோர்கள் வளர்ப்பில் இருந்தாலும் கல்யாணம் பண்ணிகொடுத்ததும்தான் முழு அந்தஸ்து பெறுகிறாள். அதேமாதிரி ஆணுக்கும் நேத்துவரைக்கும் அலட்சியமா நினைத்தவர்கள் இன்னக்கி ரொம்ப மரியாதை கொடுப்பாங்க. ஏ அவன் குடும்பஸ்தன் அவனுக்கு எல்லா முன்னுரிமையும் கொடுங்கப்பா என்று கொண்டாடுவாங்க. மனைவிதான் ஒருவனுக்கு வாழ்க்கையோட அர்த்தத்தை புரியவைக்கிறாள். அதேமாதிரி ஒருவனுக்கு பாதிபலம் அவனோட மனைவிதான்.

ஆணுக்கு இரவில் மட்டும் சுகத்தை கொடுப்பது மட்டுமல்ல பெண்ணோட வாழ்க்கை. அவனுக்கு துணையாக இருந்து அவனோட கஷ்டநஷ்டங்களில் பங்கெடுத்து அவனுக்கு நேரான வழி இதுதான் என்று சுட்டிக்காட்டிபவ‌ளும் அவனோட மனைவிதான். கணவன் எதாவது கோல்மால் பண்ணினானென்றால் அவன மண்டையில தட்டி திருத்துபவளும் அவன் மனைவிதான். கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்த வீட்டையும் தன் புத்தியால் திறமையால் முன்னுக்கு கொண்டுவருவது அவன் மனைவிதான்.

கணவன் இதயத்தில் மட்டும் இடம்பிடிப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டில் உள்ள மாமனார் மாமியார், நாத்தனார், கொழுந்தனார் இவர்களின் மனதிலும் இடம் பிடிக்கும் பெண் ஒரு புத்திசாலி என்றால் அது மிகையாகாது. தன் புகுந்த வீட்டில் எத்தனை குறையிருந்தாலும் அதனை மறைத்து தன் குடும்பத்துக்காக வாழும் ஒரே ஜீவன் மனைவிதான். இதே நகரத்தில் வாழும் பெண்கள் தன் கணவனுக்காக கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று குடும்ப கஷ்டத்தை தீர்க்க பாடுபடுகின்றனர். கணவனை ஊதாரித்தனமாக செலவு செய்யவிடாமல் கட்டுக்கோப்பாக வைத்து சிக்கனமாக்கி குடும்பத்தை முன்னேற்றுகிறாள்.

ஒவ்வொரு ஆணோட வெற்றிக்கு பின்னால் ஒவ்வொரு பெண்தான் அடித்து சொல்லலாம். ஒவ்வொரு ஆணின் பலமும் பலவீனமும் அவன் மனைவிதான். புகுந்தவீட்டில் தான் எதிர்பார்த்தமாதிரியெல்லாம் இல்லாததால் கல்யாணம் முடித்த இரண்டே நாளில் தனிகுடித்தனம் அமைக்க காரணமும் இதே மனைவிதான். மனைவி சொல்வதை கேட்டு குடும்பத்தை பிரிக்கும் ஆண்கள் தங்கள் பெற்றோர்கள் எவ்வளவு மனம் குமுறுவர், வேதனைக்குள்ளாவர் என்பதை அறிய வாய்ப்பில்லை. மனைவி சொல்லே மந்திரம் என்று வாழும் ஆண்களும், கணவனுக்கு தலையணை மந்திரம் போட்டு தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் பெண்களும் நல்லாவே வாழ்ந்ததா சரித்திரம் இல்லையெனலாம்.

அதேபோல குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே சண்டை மூட்டிவிட்டு குடும்பத்தை இரண்டாக பிரித்து தான்மட்டும் நல்லா வாழணும் என்று நினைக்கும் சுயநலமிக்க மனைவிகள் நிறைய பேர் உண்டு. மனைவி சொல்வதை கேட்கலாம் தப்பில்லை. ஆனால் அது நன்மைபயக்கும் விஷயமாக இருக்கவேண்டும். சில குடும்பங்களில் கணவனை தன் கட்டுக்கோப்பில் வைத்து மாமியார், மாமனாரை கொடுமைப்படுத்தும் மருமகள்கள் பலேபலே.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தன் பெற்றோர் பேச்சை கேட்கும் பெண்கள் ஏன் தன்கணவன் மாமியார், மாமனாருக்கு மரியாதை கொடுப்பதில்லை என்பது இன்றுவரை விடை தெரியாமலே உள்ளது. அதேமாதிரி தன் பெற்றோர் பேச்சை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தும் ஆண்கள் நிறைய பேர் உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் துணையாக வரும் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுப்பது ஏனென்றே தெரியல.

இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்துவரை சென்று பிரிந்துவாழும் தம்பதிகள் நிலைமை வருத்தத்துக்கு உரியது. ஈகோவை மறந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி என்ற தூண்கள்தான் தாங்கி நிற்கிறது. அதில் ஒன்று சரிந்தாலும் அவ்வளோதான். நினைக்கவே வருத்தமாக இருக்கிறது. இதில் பெரிய கஷ்டம் குழந்தைகள்பாடு திண்டாட்டம். குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது.

எனவே இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் ஒரு குடும்பம் ஒரு இனிய இல்லறமாகும்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

44 comments:

  1. எங்க வீட்டுல எப்பவுமே சின்ன பிரச்சினைகளுக்கு என் மனைவி முடிவெடுப்பா !
    அதாவது வீட்டுக்கு என்னென்ன தேவை , உறவுகளுக்கு என்ன செய்யனும் அப்புறம் பிள்ளைகள் விஷயம்
    நான் பெரிய பிரச்சினைகள் பற்றி முடிவெடுப்பேன்
    அதாவது நளினியை விடுதலை செய்வது , லலித் மோடி பதவி விலகுவது, அழகிரிக்கு பதவி தருவது பற்றியெல்லாம்
    ஹி.. ஹி .. இன்னைய வரைக்கும் ஒரு பிரச்னையும் இல்லங்க.

    ReplyDelete
  2. // ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி என்ற தூண்கள்தான் தாங்கி நிற்கிறது. அதில் ஒன்று சரிந்தாலும் அவ்வளோதான். நினைக்கவே வருத்தமாக இருக்கிறது. இதில் பெரிய கஷ்டம் குழந்தைகள்பாடு திண்டாட்டம். குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது.//
    நல்ல பயனுள்ள கருத்து ,பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. புரிந்து கொண்டு, அவசியமான நேரங்களில் இருவரும்
    விட்டு கொடுத்து வாழ்தல் சிறப்பு.

    ReplyDelete
  4. என்னங்க.. ரொம்ப textual ஆ போய்ட்டீங்க...போங்க...இதே exam னா இந்த கேள்விய choice ல விட்டுடுவேன்!!

    ReplyDelete
  5. //மனைவி சொல்லே மந்திரம் என்று வாழும் ஆண்களும், கணவனுக்கு தலையணை மந்திரம் போட்டு தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் பெண்களும் நல்லாவே வாழ்ந்ததா சரித்திரம் இல்லை//

    ஆட்டோ பின்னாடியே எழுதலாமே!! நல்ல தத்துவம்.

    ReplyDelete
  6. நான் என்ன‌த்த‌ சொல்ல‌.. வ‌ந்த‌ பிற‌கு பார்த்திடுவோம் ஸ்டார்ஜ‌ன்....

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு. இப்படி இருந்து விட்டால் பிரச்சினை இருக்காது போலும்!
    (அவசரத்துலே சினேகா கல்யாண போட்டோவோன்னு பயந்து போயிட்டேன்!)

    ReplyDelete
  8. சரி டைட்டில பார்த்துட்டு நம்ம ஸ்டார்ஜன் கல்யாண ஃபோட்டோவெல்லாம் இருக்கும்னு வந்து பார்த்தா............?!

    நல்லாயிருக்கு.....

    ReplyDelete
  9. ஒவ்வொரு ஆணோட வெற்றிக்கு பின்னால் ஒவ்வொரு பெண்தான் அடித்து சொல்லலாம்

    எப்படி கரெக்டா பின்னாடி போய் நின்னுடறாங்க..!

    விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லைன்னு சொல்வாங்க..
    பெண்களை மதிக்கும் சமூகம் மேனமை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை..

    ReplyDelete
  10. //சரி டைட்டில பார்த்துட்டு நம்ம ஸ்டார்ஜன் கல்யாண ஃபோட்டோவெல்லாம் இருக்கும்னு வந்து பார்த்தா............?! //

    நானும் தான்.

    ReplyDelete
  11. //ஈகோவை மறந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை//

    //பெரிய கஷ்டம் குழந்தைகள்பாடு திண்டாட்டம். குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது.//

    நேற்று பசங்க படம் பார்த்தேன் அதிலேயும் இதையே வலியுறுத்துவார்கள்.. நீங்களும் பார்த்தீங்களோனு நினைத்தேன்

    ஈகோ என்ற வார்த்தையய் நீக்கினால் இல்லறம் நலம்பெறும்

    ReplyDelete
  12. //ஒவ்வொரு ஆணோட வெற்றிக்கு பின்னால் ஒவ்வொரு பெண்தான் அடித்து சொல்லலாம். ஒவ்வொரு ஆணின் பலமும் பலவீனமும் அவன் மனைவிதான். புகுந்தவீட்டில் தான் எதிர்பார்த்தமாதிரியெல்லாம் இல்லாததால் கல்யாணம் முடித்த இரண்டே நாளில் தனிகுடித்தனம் அமைக்க காரணமும் இதே மனைவிதான். மனைவி சொல்வதை கேட்டு குடும்பத்தை பிரிக்கும் ஆண்கள் தங்கள் பெற்றோர்கள் எவ்வளவு மனம் குமுறுவர், வேதனைக்குள்ளாவர் என்பதை அறிய வாய்ப்பில்லை. மனைவி சொல்லே மந்திரம் என்று வாழும் ஆண்களும், கணவனுக்கு தலையணை மந்திரம் போட்டு தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் பெண்களும் நல்லாவே வாழ்ந்ததா சரித்திரம் இல்லையெனலாம்.//

    ரெண்டு பக்கத்தையும் நல்லாவே அலசியிருக்கீங்க..
    சொந்த அனுபவமோ...?

    ReplyDelete
  13. புரிந்துணர்வோடு நல்லதொரு பதிவு ஸ்டார்ஜன்.

    உண்மையில் உங்கள் குடும்பம் அன்போடு சந்தோஷமாயிருக்கும்.

    ReplyDelete
  14. ஸ்டார் ராஜன்... .அனுபவ பூர்வமான ஒரு அற்புதமான பதிவு...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. நல்லதொரு அலசல்.

    நல்ல சிந்தித்து எழுதியுள்ளீர்கள்.

    திருமணம் என்பது ஒருவருடைய வாழ்க்கையின் அடுத்த கட்டம். சில பிரச்சனைகளை சமாளிக்க தெரிந்து விட்டால் போதும் இல்லறம் இனிமையாகும்.

    விட்டுக்கொடுத்தல் இதுதான் தலையாய மந்திரம்.

    ReplyDelete
  16. நல்ல அனுபவப்பூர்வமான இடுகை. விட்டுக்கொடுத்தலே இல்லறத்தின் திறவுகோல். வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  17. வாங்க செந்தில்

    முத்தான முதல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  18. வாங்க டாக்டர் ரோகிணிசிவா

    நல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  19. வாங்க சைவகொத்துப்பரோட்டா

    நல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  20. //ஒவ்வொரு ஆணோட வெற்றிக்கு பின்னால் ஒவ்வொரு பெண்தான்//

    அதேபோல், வெற்றியடையும் பெண்ணின் பின்னும் ஒரு ஆண்தான் இருக்கிறான்!! அன்பான கணவனாகவோ அல்லது கொடுமைக்காரனாகவோ!!

    ReplyDelete
  21. வாங்க ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி

    அட அப்படியா..

    நல்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  22. வாங்க ஜெய்லானி

    அப்படியா.. நான் எதோ ஒரு புளோவுல எழுதினது.. பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  23. வாங்க ஸ்டீபன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  24. வாங்க சேட்டை

    அப்படியாகவும் இருக்கலாம்.. நல்லவேளை நினைச்சிங்க. சினேகா கல்யாணபோட்டோவை சினேகாவிடம்தான் கேக்கணும்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  25. வாங்க இர்ஷாத்

    அப்படியா.. அஸ்குபுஸ்கு.. :))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  26. வாங்க ஸ்ரீராம்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  27. வாங்க அபுஅஃப்ஸர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  28. வாங்க சரவணகுமார்

    அட அப்படியா.. அஸ்குபுஸ்கு :))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  29. வாங்க தமிழ் வெங்கட்

    ரொம்ப நன்றி.. பாராட்டுகளுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  30. வாங்க டிவிஆர் சார்

    நன்றி பாராட்டுக்கு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  31. வாங்க ஹேமா

    ரொம்ப ரொம்ப நன்றி.. பாராட்டுக்கு.. அல்ஹம்துலில்லாஹ்..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  32. வாங்க தேவா

    நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும்.

    ReplyDelete
  33. வாங்க அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  34. வாங்க மின்மினி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  35. வாங்க ஹூசைனம்மா

    ஆமா உண்மைதான். பெண்ணோட வெற்றிக்குபின்னாலும் ஒரு ஆண் இருக்கிறான்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  36. //அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தன் பெற்றோர் பேச்சை கேட்கும் பெண்கள் ஏன் தன்கணவன் மாமியார், மாமனாருக்கு மரியாதை கொடுப்பதில்லை என்பது இன்றுவரை விடை தெரியாமலே உள்ளது. //


    பெண் மனசு ஆழமின்னு ஆம்பளைக்குத் தெரியும், அது பொம்பளைக்கும் தெரியும்

    ReplyDelete
  37. தங்கள் மனம் திறந்து கொட்டிய கருத்துக்கள் அருமை.சூழ்நிலைக்கு தகுந்தபடி நிலையான சந்தோஷம் தருவது எது என்று புத்திசாலியாக முடிவெடுப்பது நன்று.

    ReplyDelete
  38. முற்பாதியில் மனைவிக்கு மரியாதை..... பிற்பாதியில் மரியாதை கொடுக்காத மனைவி பத்தி கலவையா குடும்பவியல் பதிவு ஒன்னு போட்டுருக்கீங்க.... நமக்கது அது வரும்போது பாத்துக்கலாம்..... இப்போதைக்கு மனைவி அமையப்பெற்ற அனைவருக்கும் சுகமான வாழ்கை அமைய வாழ்த்துக்கள் சொல்லி கிளம்பிக்குறேன்... :-)

    ReplyDelete
  39. வாங்க தல‌

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  40. வாங்க ஆசியாஉமர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  41. வாங்க அன்புத்தோழன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  42. எங்க வீட்ல எல்லாம் முடிவும் நான் தான் எடுப்பேன், மனைவி ஒரே ஒரு முடிவு மட்டும் எடுப்பாங்க

    (நான் என்ன முடிவு எடுக்கனும்ங்கிற முடிவு மட்டும் :P)

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்