Pages

Monday, August 16, 2010

பொய்க்கால் குதிரை

"எலேய் அய்யா.. எங்கலே போற.. இம்புட்டு விரசா.." என்ற பெரியாத்தா பாட்டியின் குரல் என்னை நிறுத்தியது. "பாட்டி நம்மூர்ல கோவிலு கொடல்ல.. அதான்.. சீக்கிரமா போனாத்தானே எல்லாத்தையும் பாக்கமுடியும்.. சப்பரம் வர்றதுக்குள்ள போகணும்பாட்டி.." என்றேன்.

"அது சரில.. ஆனா நம்மளல்லாம் சாமிய‌ பக்கத்துல பாக்கவிட மாட்டாவுலெ.. சத்த தள்ளி நின்னுதான் பாக்கணும்.. இப்படித்தான் உங்கதாத்தா அந்தகாலத்துல சின்னப்புள்ளயா இருக்கும்போது சாமி பக்க‌த்துல பாக்கபோயி அவுகள பஞ்சாயத்துல நிக்க வச்சிப்புட்டாகலே.. காணாக்குறைக்கு சவுக்கடி கொடுத்துருக்காவ.. எதோ தீட்டாமா.. நீயும் பாத்து சூதனமா இருந்துக்கலே.." என்றார் பாட்டி.

"போ பாட்டி.. அதெல்லாம் அந்தகாலம்.. இப்பெல்லாம் அப்படி கிடையாது.. நம்ம நாடு சொதந்திரம் அடஞ்சி 64 வருசம் ஆகிப்போச்சி.. இன்னுமா நம்ம சாதிசனத்துக்கு கட்டுப்பாடு வச்சிருக்காவ.. நீ வேணா பாரேன்.. நா சாமி பக்கத்துல போயி கும்புடுறேன்.."என்றேன் பாட்டியிடம்.

"போலே கூறுகெட்ட குப்பா.. இந்த வியாக்கியானத்துக்கு மட்டும் குறச்சலில்ல.. நீதாம்ல நினைச்சிக்கிரணும்.. காலாகாலம் மாறிக்கிட்டே இருக்குது.. ஆனா இந்த பாவிப்பயலுக மனசு மாறக்காணோம்.. சரிலே பாத்து சூதனமா இரு.. சரியா.. தாத்தாவுக்கு தப்பாமத்தான் இருக்க.. என்ற பாட்டிக்கு சரிப்பாட்டி நா போயிட்டு வாரேன்.." என்று சொல்லியபடி திருவிழா பாக்க கிளம்பினேன்.

இன்னும் செத்த நேரத்துல சாமி பல்லாக்கு சப்பரத்துல ஏறிரும்.. ஏறுனபுறப்பாடு சாமிய பாக்கமுடியாது. போகுற வழில்லாம் ஒரே வானவெடி.. லைட்டு வெளிச்சம் கண்ணக்கூசியது. அம்புட்டு அலங்காரம். அம்மா தந்த காசுக்கு கடலைஉருண்டையும் அப்பளபொறியும் வாங்கிக்கிட்டேன். ராட்டினம், விளாட்டுச்சாமான் கடைகள், ஐஸ்வண்டிக்காரன் பூல்..பூல்.. பாம்பாம் சத்தம் போட்டபடி எல்லாப் புள்ளைகளையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். பார்க்க ரொம்ப மனதுக்கு சந்தோசமாக இருந்தது.

சுத்துராட்டினத்துக்கு 1 ரூபா..ராட்டினத்தில் ஏறியதும் பயமா இருந்திச்சி.. பக்கத்தூட்டு மாரி பக்கத்துல இருந்ததினால அவன பிடிச்சிக்கிட்டேன். நல்ல ஜாலியா இருந்திச்சி..

மைக்கில் "எல்லோரும் சாமிய பாக்கிறதுன்னா பாத்துக்கோங்க" என்ற அறிவிப்பை கேட்டு ஓடினேன். பக்கத்துல போனதும் குறுக்கே கயித்த கட்டிருந்தாக.. அதுக்கு அங்கிட்டு போகமுடியல.. சுத்தும்பத்தும் பார்த்தேன். அங்க ஒரு வழி இருந்திச்சி.. குடுகுடுன்னு ஓடி அந்த வழியா போனேன்.

முதுகில் ஒரு பலமா அடிவிழுந்ததும் அம்மாவ் அம்மாவ்.. என்றபடி திரும்பினேன். "எலேய் செத்தமூதி.. எங்கலே வாரே.. அதான் அங்க கயிறு கட்டிருக்காவல்ல.. அங்க நிக்கமாட்டிகளோ துரை.. பக்கத்துல போயிதான் சாமி கும்புடணுமோ.. வந்துட்டான்.. போல போல.. அடிபட்டு சாவதெ.." என்றார் குடுமிக்காரர் கோபமாக..

யப்பா.. என்னா வலிவலிக்குது.. சே.. பாட்டி சொன்னா சரியாத்தான் இருக்கும்.. மூணு தலமுறை கண்டவள்னா சும்மாவா.. என்று நினைத்தபடி வந்தேன்..

ஓடி விளையாடு பாப்பா.......

சாதிகள் இல்லையடி பாப்பா..
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

என்ற பாட்டு ரேடியோவுல ஒலித்துக்கொண்டிருந்தது.

,

Post Comment

31 comments:

  1. அப்படியே நம்ம ஊர் பேச்சு வழக்கை கண் முன் கொண்டுவந்துள்ளீர்கள். உண்மை சம்பவத்தை அழகாக,எதார்த்தமாக சொல்லி இருக்கிறீர்கள்.
    நம்ம நெல்லை சீமையில் அடிக்கடி நடக்ககூடிய சம்பவமே இது.
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்லா வந்திருக்கு ஸ்டார்ஜன்..

    //"எலேய் அய்யா.. எங்கலே போற.. இம்புட்டு விரசா.." // இந்த பேச்சு நடை என்னை மிகவும் கவர்ந்தது..

    ReplyDelete
  3. இந்த சாமியே நமக்கு வேணாம் சாமிகளா ..?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. //பாட்டி சொன்னா சரியாத்தான் இருக்கும்.. மூணு தலமுறை கண்டவள்னா சும்மாவா..//

    மூணு தலைமுறை தாண்டியும் இன்னும் மாறவில்லை என்று சொன்ன பாட்டியின் யதார்த்தம்...நிதர்சனம்...மாறவேண்டும் என்றால் இன்னும் எத்தனை தலைமுறை தாண்ட வேண்டுமோ...??? பதில் 'அதுக்கு வாய்ப்பே இல்லை' என்று தான் சொல்ல தோன்றுகிறது.

    நாடு விட்டு நாடு தாண்டியும் உங்களின் நெல்லை தமிழ் மறக்கவில்லை...அருமை...

    ReplyDelete
  6. நெல்லை தமிழ் நல்லா வந்திருக்கு

    ReplyDelete
  7. எழுத்தில் கிராம‌த்து ந‌டை ந‌ல்லா இருக்கு ஸ்டார்ஜ‌ன்.

    ReplyDelete
  8. //Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...

    நெல்லை தமிழ் நல்லா வந்திருக்கு//

    அவுக நெல்லைகாரவுக :)

    ReplyDelete
  9. முதுகில் ஒரு பலமா அடிவிழுந்ததும் அம்மாவ் அம்மாவ்.. என்றபடி திரும்பினேன். "எலேய் செத்தமூதி.. எங்கலே வாரே.. அதான் அங்க கயிறு கட்டிருக்காவல்ல.. அங்க நிக்கமாட்டிகளோ துரை.. பக்கத்துல போயிதான் சாமி கும்புடணுமோ.. வந்துட்டான்.. போல போல.. அடிபட்டு சாவதெ.." என்றார் குடுமிக்காரர் கோபமாக..


    ...... எத்தனை நாள் ஆச்சு...... நம்ம ஊரு தமிழ் கேட்டு.... ஆஹா.... ஆஹா..... ஆஹா..... நன்றி மக்கா, நன்றி.

    ReplyDelete
  10. நெல்லைத்தமிழ் மணக்கும் அழகான கதை.

    ReplyDelete
  11. நல்ல எழுத்து நடை கதையோட்டம் அருமை

    ReplyDelete
  12. கிராமத்து மக்களிடம் உள்ள அந்த பேச்சு நடையை ,அழகாக சுட்டிகாட்டியுள்ளிர்கள் , நன்றாக உள்ளது.

    ReplyDelete
  13. ஆஹா.. ஸ்டார்ஜன்.. நம்மூரு பாஷையில் கதை ரொம்ப நல்லாருக்கு.. படிக்கவே சுவாரசியமா இருந்தது.. இன்னும் படித்துக்கொண்டே இருக்கலாம் என்றிருக்கிறது..

    வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  14. வாங்க அபுல்பசர் @ ரொம்ப நன்றி

    வாங்க ரியாஸ் @ ரொம்ப நன்றி..

    வாங்க செந்தில் @ ரொம்ப நன்றி..

    வாங்க கௌசல்யா @ நீங்க சொல்வது சரிதான்.. ரொம்ப நன்றி..

    ReplyDelete
  15. வாங்க டிவிஆர் சார் @ ரொம்ப நன்றி..

    வாங்க ஸ்டீபன் @ ரொம்ப நன்றி..

    வாங்க கோவி அண்ணே @ ரொம்ப நன்றி..

    வாங்க சித்ரா @ ரொம்ப நன்றி..

    ReplyDelete
  16. வாங்க அமைதிக்கா @ ரொம்ப நன்றி..

    வாங்க அப்துல்மாலிக் @ ரொம்ப நன்றி..

    வாங்க இளம்தூயவன் @ ரொம்ப நன்றி..

    ReplyDelete
  17. வாங்க மேனகா @ ரொம்ப நன்றி

    வாங்க மின்மினி.. @ ரொம்ப நன்றி..

    ReplyDelete
  18. ஸ்டார்ஜன் நெசமாவே எதார்த்தமான பதிவு ஊவட்டார பேச்சு அப்படியே... இன்னமும் மாறாத சனங்க மனச படபிடிசுடீங்க..வாழ்த்துகள்

    ReplyDelete
  19. //இந்த சாமியே நமக்கு வேணாம் சாமிகளா ..? //

    மண்ணின் மனம் ..

    /இந்த சாமியே நமக்கு வேணாம் சாமிகளா ..? ///

    செந்தில் அண்ணன் , மனுஷன் பண்ற தப்புக்கு, சாமி என்ன பண்ணும் ??

    ReplyDelete
  20. வெரசா வந்து கமெண்ட் போடத்தான் நினச்சேன்...

    நெல்லைத் தமிழ்-ல படிக்கவே அழகா இருக்கு.. :-)

    திருவிழா நினைப்பு வந்துருச்சுங்க... வண்டிக்காரன் விக்குற
    "ஜவ்வு மிட்டாய்" வாட்ச் போல கட்டி விடுவானே ஞாபகம் இருக்கா??

    ReplyDelete
  21. இயல்பான நடை.. அருமையான கதை ஸ்டார்ஜன்..நீதியும் கூட்

    ReplyDelete
  22. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. அருமை ஸ்டார்ஜ‌ன்...

    ReplyDelete
  24. எலே நீ பச்ச தமிழன்னு நிருபிச்சிட்டியலே...

    தாமிரபரணி காராவுகளுக்கு தமிழு தண்ணி பட்ட பாடுன்னு எல்லாத்துக்கும் பதில் சொல்லுடே.

    கதை நல்லாயிருக்குவே.

    ReplyDelete
  25. //தாமிரபரணி காராவுகளுக்கு தமிழு தண்ணி பட்ட பாடுன்னு நிருபிச்சிட்டியலே//

    ஆமா நானும் அதையே சொல்லிக்கிறேன் மக்கா..

    ReplyDelete
  26. அஸ்ஸலாமு அழைக்கும்.
    உங்கள் பதிவை படித்தேன்.
    நம்ம ஊர் தமிழில் அழகாக
    எழுதி உள்ளீர்கள்
    உங்கள் பதிவு அருமை .
    நானும் புதிதாக வலைபூ தொடங்கி உள்ளேன் . என் வலைபூ முகவரி
    iniyavasantham.blogspot.com

    ReplyDelete
  27. பேச்சு வழக்கு கதையை அப்படியே கண் முன்னர் கொண்டுவந்து நிறுத்திவிட்டது.

    ReplyDelete
  28. வட்டார மொழில பதிவு ரொம்ப அழகா இருந்துதுங்க...

    ஆமாண்ணே எனக்கு ஒரு சந்தேகம்.

    அந்த பையன் முதுகுல அடி விழுகிற வரைக்கும்
    மத்த மனுஷ பயலுக பார்த்துக்கிட்டு இருந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
    ஆனா அந்த சாமியுமா பார்த்துக்கிட்டு இருந்தது....

    ReplyDelete
  29. இன்னுமா இப்படி... கஷ்டம் தாங்க... நல்ல பதிவு

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்