இது ஒரு சிறிய கற்பனை. நான் ஒரு அடர்ந்த காட்டுக்குள் தனியாக சென்று மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்?.
நான் ஒரு ஊருக்கு பஸ்ஸில் சென்றுகொண்டிருக்கிறேன். ஒரு ஊருக்கு அருகில் வரும்போது பாலம் உடைந்து பஸ் செல்லமுடியாதநிலை. ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது பஸ்ஸில் இருந்த ஒருவர் நீங்க வந்தவழியே பின்னாடியே சென்றால் ஒரு ஒத்தயடி பாதை வரும். அதுவழியாக சென்றால் நாம் செல்லும் ஊருக்கு சென்றுவிடலாம் என்று யோசனை சொன்னார். அதை நம்பி ஓட்டுனரும் அந்த வழியாக பஸ்ஸை செலுத்தினார். பஸ்ஸில் இருந்த எல்லோருக்கும் இனி என்ன நடக்குமோன்னு கெதக் கெதக்ன்னு மனசு திக்திக் என்று இருந்தது. நான் இனி என்ன நடக்கப்போகுதோ பயத்திலே பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.
ஒரு இடத்தில் வரும்போது ரோட்டில் கல் கிடந்ததால் பஸ்ஸின் இருடயரும் மேல்தூக்கியபடி சரிந்து சென்றது. ஆஹா என்னஇது.. சோதனை.. இனி எப்படி ஊருக்கு செல்ல ரொம்ப கவலையானது. ஒரு கடினமான திருப்பத்தில் வரும்போது மிகவும் கஷ்டப்பட்டு டிரைவர் திருப்பும்போது எங்கே கவிழ்ந்துடுமோ என்ற பயம்.
திடிரென ஒரு இடத்தில் பஸ்ஸை திருப்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டையும் மீறி பஸ் பள்ளத்துக்கு சென்று கொண்டிருந்தது. ஆண்டவா எங்களை காப்பாற்று.. பஸ்ஸில் உள்ள குரல்கள் ஒலித்துகொண்டிருந்தது. அனைவரும் பஸ்ஸை விட்டு இறங்க முயற்சித்தார்கள். ஜன்னல்வழியாகவும் வாசல் வழியாகவும் குதிக்கிறார்கள். இதற்கிடையில் பஸ் பள்ளத்தை நோக்கி பாயந்து கொண்டிருந்தது. டிரைவரும் கண்டக்டரும் முதல்லேயே குதித்து தப்பிவிட்டார்கள். நான் குதிக்க தயாரானபோது வாசலுக்கு அருகில் ஒரு மரத்தின் கிளை தொங்கிக்கொண்டிருந்தது. உடனே நான் அதை பிடித்து தொங்கினேன். எல்லோரும் குதித்து பஸ் காலியாக பள்ளத்தில் குதித்துக்கொண்டிருந்தது.
நான் தொங்கிக்கொண்டிருந்த மரக்கிளை சர்சடர் சர்சடர்ன்னு ஒலி எழுப்புவதை பார்த்தால் எப்போது ஒடிந்து விழப்போகுதோ அபாயத்தில் இறைவா என்னை காப்பாற்று.. என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்த வேளையில் சடார்ன்னு மரக்கிளை ஒடிந்து பள்ளத்தில் குடுகுடுன்னு நான் உருண்டு கொண்டிருந்தேன்.
உருண்டு கொண்டிருக்கும்போது தரையில் உள்ள கற்கள் செடிகொடிகள் என்மேல் குத்தி காயமாகி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தண்ணீர் தாகம் வாட்டி மயக்கமான நிலையில் நான். உருண்டு வந்தவேகத்தில் காட்டுக்குள் எங்கு சென்றுக்கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. ஆனதுஆகட்டும்.. என்று மனதில் ஒரு தைரியம் மட்டுமே என்னை வழிநடத்திக்கொண்டிருந்தது.
நல்லவேளை!! நான் உருண்டு கொண்டிருக்கும்போது ஒரு கல் தடுத்து நிறுத்தியது. ஆனால் காலில் பயங்கரமான அடி. என்னால் எழுந்திருக்கமுடியாதநிலை. மெல்ல மெல்ல ஊர்ந்து அந்த கல்லை பிடித்துக்கொண்டு எழுந்தேன். எழுந்துபார்த்தால் எங்கும் ஒரே கும்மிருட்டு. ஒரு கம்பை ஊன்றிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தேன். எங்கும் மனித நடமாட்டமே இல்லை., நடந்து நடந்து கால்கள் வலித்தது.. வந்து கொண்டிருந்தபோது எதோ ஒன்று காலில் நெழுநெழுன்னு ஊறியது. சிரமப்பட்டு குனிந்துப்பார்த்தால் ஒரு நாகம் என்காலை சுற்றிருந்தது. அய்யய்யோ.. இந்த பாம்பு கடிக்காமல் விடாதே.. காப்பாற்று இறைவா என்று சொல்லிக்கொண்டு என்னிடம் இருந்த கம்பினால் அதன் தலையில் குத்தி தட்டிவிட்டேன். அது கொஞ்சதூரத்தில் தொப்பென விழுந்ததும் நான் ஓடமுடியாமல் தத்தித்தத்தி ஓடினேன். பசி வேறு வயிற்றைக்கிள்ளியது; அடக்கமுடியாத தண்ணீர் தாகம். எங்காவது தண்ணீர் எதாவது கிடைக்குமா என்று தேடி அலைந்தேன்.
தூரத்தில் எதோ ஒளி தெரிந்ததும் அங்கு என்கால்கள் நடந்தது. அருகில் சென்று பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அது சுடுகாடு. ஆஹா அப்போ அருகில் கண்டிப்பாக ஒரு ஊர் இருக்கும் என்னும்போது முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. கொஞ்சதூரம் போனதும் ஒரு தடாகத்தை பார்த்தவுடனே தண்ணீரை அள்ளிஅள்ளி ஆசைதீர குடித்ததும் என் களைப்பு நீங்கியது ரொம்ப சந்தோசமாக இருந்தது.
ஆனந்தத்தில் தண்ணீரில் திளைத்திருக்கும்போது முதுகில் பலமான அடி விழுந்ததும் திரும்பிப் பார்த்தால் அங்கே....
தொடரும்..
,
ஏன் இந்த அளவு எதிர்மறை கற்பனை. வாழ்வு அவ்வளவு குரூரம் அல்ல.
ReplyDeleteகற்பனை உலகம் விரியட்டும் ஸ்டார்ஜன்..
ReplyDeleteஎன்னா கற்பனை.அதிகம் தமிழ் சினிமா பார்த்ததன் விளைவோ?கற்பனை வந்ததுதான் வந்தது.ஸ்டார்ஜன் வானில் பறப்பது போல்,சுவர்க்கத்தினுள் நுழைவது போல்,ஒரு பெரிய தங்க கடையில் உள்ளே நுழைந்து வேண்டிய மட்டும் ஃப்ரீயாக அள்ளிக்கொளுங்கள் எனும் பொழுது வரும் ஸ்டார்ஜனின் அனுபவம்..இப்படி எவ்வளவோ உள்ளது.அதைப்போட்டு இருக்கலாமே?அடுத்து எதிர் பார்க்கலாமா?
ReplyDeleteதிரும்பிப் பார்த்தால் அங்கே....//
ReplyDeleteஆஹா.. எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் கதையை நிறுத்தி விட்டீர்கள். இது ஒரு மர்மக் கதையாக இருக்குமோ? வாழ்த்துக்கள். தொடருங்கோ.
தல இதான் சொல்றதுத ஓவரா அம்புலிமாமா புக்கெல்லாம் படிக்காதீங்கன்னு கேட்டாத்தானே...
ReplyDeleteவாங்க ராம்ஜி அண்ணே @ இது ஒரு கற்பனை. சும்மாதான். தங்கள் அன்புக்கு மிக்க நன்றி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க ஸ்டீபன் @ கற்பனை நல்லாவிரியட்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க ஸாதிகா அக்கா @ தங்கள் அன்புக்கு மிக்க நன்றி. சரி நீங்க சொல்லிட்டீங்கல்ல அப்படியே எழுதிடுறேன். நீங்க சொன்ன அனுபவக்குறிப்பைக் கொண்டு தொடர் பதிவா எழுதிடுறேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க தமிழ் மதுரம் @ தங்கள் அன்புக்கு மிக்க நன்றி.. விரைவிலே மீதியை வெளியிட்டுவிடுவேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நட்சத்திர வாழ்த்துக்கள்
ReplyDeleteகற்பனை சூப்பரா இருக்கு.. தொடருங்கள்.
ReplyDeleteவாங்க சிஷ்யா @ இது அம்புலிமாமா இல்ல.. ஜங்கிள்புக்.. :)) அன்புக்கு மிக்க நன்றி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அத்திரி @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
ReplyDeleteவாங்க கட்டபொம்மன் @ ரொம்ப நன்றி
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா அழகு கற்பனை கலக்கலா இருக்கு..தலைப்பை காட்டுக்குள்ளே டார்சன்...அப்டின்னு வச்சா பொருத்தமா இருக்குமோ???
ReplyDelete/////இது ஒரு சிறிய கற்பனை. நான் ஒரு அடர்ந்த காட்டுக்குள் தனியாக சென்று மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்?.///////
ReplyDeleteபோங்க நண்பரே உங்களுக்கு ரொம்பதான் குறும்பு அதிகம் . இப்ப எந்த காட்டை நம்ம ஆளுங்க விட்டு வச்சுருக்காங்க நீங்க தனியாக சென்று மாட்டிகொள்வதற்கு !
கற்பனை உலகம் ரொம்ப சுவாரஸ்யமா போகுது. அடுத்த பகுதி எப்போ?
ReplyDeleteவாங்க மயில்ராவணன் @ வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க சீமான்கனி @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.. :)) ஹைய்யா அப்ப நானு டார்சனா.. அப்படின்னா நல்லாத்தான் இருக்கும். உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி.
ReplyDeleteவாங்க பனித்துளி சங்கர் @ இத யாரு இப்போ யோசிகிறாங்க.. நல்ல சிந்தனை. நன்றி வருகைக்கும் கருத்துக்கும் உங்களுடைய அன்புக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க அக்பர் @ ரொம்ப நன்றி.. அடுத்த பகுதிய நாளை காலையில வெளியிட்டுருவேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஎன்னமா கற்பனையில ஒரு பில்ட் அப்பு ....... நடத்துங்க......
ReplyDeleteவாங்க சித்ரா @ பில்டப்பு நல்லாருக்கா.. சும்மா ஒரு கற்பனைதான்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஎன்ன சார் இப்படி பண்ணிட்டிங்க, அப்படியே மாத்தி போடுங்க , வானத்தில் இருந்து ஒரு தேவதை வந்து உங்களை கடத்துவது போல்,ஏன் அப்படி என்றாள் ,உங்கள் பெயர் அந்த மாதிரி உள்ளது. நண்பரே தொடருங்கள்....
ReplyDeleteகற்பனையில் ஒரு உலகமும் அங்கு அகப்பட்டுத் தவிக்கும் ஸ்டார்ஜனும்.
ReplyDeleteதொடருட்டும் !
கதை எழுதுறவங்களே இப்படித்தான்... சுவராசியமான இடத்தில ”தொடரும்” போட்டு விடுவார்கள்
ReplyDeleteதொடருங்கள் ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
Super Start. Interesting :-)
ReplyDeleteKarthick
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/
கற்பனை கலக்கலா இருக்கு...
ReplyDeleteஅந்த காடு எங்கிருக்குன்னு சொல்லுங்களேன்...
ReplyDeleteகாட்டுக்குள்ளேயா:)? கற்பனை எப்படி முடிகிறது எனப் பார்க்க வருகிறேன் அடுத்த பதிவுக்கு.
ReplyDeleteவாங்க இளம்தூயவன் @ ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு.. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.. தேவதை வந்தால் நல்லாத்தான் இருக்கும்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க ஹேமா @ ரொம்ப நன்றி.. உங்கள் ஆறுதலுக்கு மிக்க நன்றி. ஸ்டார்ஜன் இந்த இக்கட்டிலிருந்து சீக்கிரமே ரிலீஸ் ஆகிருவாரு. பாருங்க அடுத்த பகுதியை.
ReplyDeleteவாங்க விசரன் @ ரொம்ப நன்றி.. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க ராஜசேகர் @ ரொம்ப நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்
ReplyDeleteவாங்க கார்த்திக் சிதம்பரம் @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..
ReplyDeleteவாங்க குமார் @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க தமிழ்வெங்கட் @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும். அந்த காடு தமிழ்நாட்டுலதான் இருக்கு. :))
ReplyDeleteவாங்க ராமலக்ஷ்மி மேடம் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்.
ReplyDeleteவாங்க சீக்கிரம் அடுத்த பகுதிக்கு.. வெளியிட்டுருக்கேன். படித்து கருத்து சொல்லுங்க.
கதை ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.. இரண்டு பகுதியும் அருமையாக உள்ளது.
ReplyDeleteஅன்பின் ஸ்டார்ஜன்
ReplyDeleteநடசத்திரமாகச் சொலிப்பதற்கு நல்வாழ்த்துகள் - மிக்க மகிழ்ச்சி
காட்டுக்குள் செல்வது பற்றிய கற்பனை அருமை - ஆனால் அத்தனையும் ராம்ஜி சொன்னது போல எதிர்மறைச் சிந்தனையாய் இருக்கிறதே ! நடசத்திரங்கள் வானில் இருந்து வழி காட்டும் ஸ்டார்ஜன். அடுத்த பகுதியினிஅப் படித்து விட்டு வருகிறேன்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அடடா அடுத்து என்ன ஆச்சு ஸ்டார்ஜன்..?
ReplyDelete