நான் எழுதிய சிறுகதை இதோ :
என்ன அம்மாவக் காணோம் , வயிறு பசிக்குதே அம்மாவ போயி பாத்துட்டு வருவமா . என்று கிளம்பினேன் . என்னுடய பிஞ்சு கால்களுக்கு வேகமா நடக்கத் தெரியலியே .
டேய் மணி எங்கடா போற என்று பக்கத்து வீட்டு மாலதி பெரியம்மா கூப்பிட்டாங்கன்னு திரும்பினேன். நா எங்கம்மாவ பாக்க போறேன் பெரிம்மா என்றேன் நான் . உங்கம்மா அடுத்த தெருவுல சண்முகம் தாத்தா வீட்டுல இருப்பா , போய்ப்பாரு , கீழ விழுந்திராமப் போ மெல்ல போகனும் என்ன என்றாள் மாலதி .சரி பெரிம்மா என்று தலையை ஆட்டியப்படியே சென்றேன் .
நம்ம வசந்தியோட 5 வயசு பையன் என்னமா பேசுறான் . இவன் அப்பனப் பாரு ! என்ன மனுசன் ! ஆக மோசம் , உருப்படாதவன் , இவங்களுக்கு நல்ல அழகான் பையன் . ஆண்டவன் தான் வசந்தி குடும்பத்த காப்பாத்தனும் என்று மாலதி அங்கலாய்த்தாள் .
நான் சண்முகம் தாத்தா வீட்டுக்கு போகும் போது , அங்கே ஒரே கூட்டமா இருந்தது . எனக்கு ஒன்னுமே புரியல . கூட்டத்த தள்ளி விட்டு உள்ளே நுழைந்தேன் .
அய்யோ ! இந்த பிஞ்சை வச்சிட்டு தனியா போக எப்படிம்மா மனசு வந்தது . இங்கப்பாருடா உங்கம்மாவ , உன்ன விட்டுட்டு போயிட்டாளே . எல்லோரும் அழுதுகிட்டு இருக்காங்க .
அம்மா எந்திரும்மா ஏன் தூங்குற எனக்கு வயிறு பசிக்குதும்மா எனக்கு சாப்பாடு தாம்மா என்று அழுதேன் பசியில் . ஏன் எல்லோரும் அழுவுறாங்க எல்லாத்துக்கும் பசிக்குதோ தெரியலியே . பின்னர் எங்கம்மாவை தூக்கிக்கொண்டு வந்து எங்க வீட்டுல படுக்க வைத்தாங்க . அப்பவும் எங்கம்மா தூங்கிக் கொண்டுதான் இருந்தாங்க. எழுந்திருக்கவே இல்லை .
அப்போது எங்கப்பா குடிச்சிட்டு வந்தாரு . அவர்க்கிட்ட நான் பேச மாட்டேன் . அவர்க்கூட நான் டூ . முட்டாய் வாங்கித் தர மாட்டாரு . கடக்கி கூட்டிட்டு போமாட்டாரு . அம்மா தான் எனக்கு எல்லாம் வாங்கித் தருவாங்க . அப்பா ,அம்மாவ போட்டு நல்லா அடிப்பாரு . அம்மா அழும்போது நானும் அழுவேன் . அம்மா பாவம் .
அப்பா வீட்டுக்கு வந்ததும் எல்லோரும் டேய் நாசமாப் போறவனே , குடும்பத்தை காப்பாத்தாத நீயெல்லாம் ஒரு மனுசனா , தூ ஏன் இப்ப வந்தே ! இப்பவும் அந்த கூத்தியா வீட்டுல இருந்து தான வர்ற , அங்கே இருந்து தொலைய வேண்டியது தானே .
பாவி இங்கப்பாருடா இந்த பிஞ்சை ! . இது என்ன பாவம் பண்ணிச்சி . அருமையான பொண்டாட்டிய இப்படி சாகடிச்சிட்டீயே .
டேய் மாரிமுத்து நீயெல்லாம் ஒருமனுசனா! என் தங்கச்சிய சாகடிச்சிட்டீயே அநியாயமா ! என்று எங்க மாமா ராஜா கதறி அழுவுறாங்க .
நாங்க உனக்கு என்ன பாவம் பண்ணுனோம் . எங்க செல்ல மகளை கட்டிக் கொடுத்து , நீ கேட்டதெல்லாம் கொடுத்தோமே அது இதுக்கு தானா சொல்லுடா இப்படி பாடையில ஏத்திட்டீயே படுபாவி என்று தாத்தாவும் பாட்டியும் அழுவுறாங்க .
எனக்கும் அழுகையா வந்திச்சி . அம்மா எந்திரும்மா முடியல பசிக்குதுமா என்று அம்மாவ உலுக்கினேன் .
உடனே பாட்டி , ஏ ராசா அம்மாவ தொந்தரவு செய்யாதப்பா அம்மா சாமிக்கிட்ட போயிட்டாங்கப்பா என்ன சரியா .நான் உனக்கு சோறு தருவேன் சாப்பிடுவியாம் .
பாட்டி ஊட்டிவிட்டவுடன் நான் விளையாடச் சென்றேன் என் நண்பர்களிடம் . டேய் என்னடா பாக்கிற , எங்கம்மா அப்ப இருந்து தூங்கிகிட்டு இருக்காங்க யாருமே எழுப்பமாட்டேங்கிறாங்க . உனக்கு தெரியுமாடா என்று கேட்டேன் . சோப்பு டப்பா, கார் , கிலுகிலுப்பை ,பொம்மை பார்த்தவண்ணம் இருந்தன . டேய் உங்களுக்கு ஒருத்தனுக்கும் தெரியல . யாருமே சொல்லமாட்டேங்கிறாங்க , கேட்டா அம்மா சாமிக்கிட்ட போயிட்டதா சொல்றாங்க . சே ! டேய் உனக்கு தெரிந்தா சொல்லேன்டா , டேய் கிலுக்கு சொல்லுடா என்றேன் .
ஆமாண்டா உங்கம்மா சாமிக்கிட்டதான் போயிட்டாங்க என்று கிலுகிலுப்பை மெதுவா பேச ஆரம்பித்தது சோகத்தோடு ...
சின்னாளப்பட்டி ஊரே ஒரே அமர்க்களமா இருந்தது .
அந்த ஊர்ல மாணிக்க செட்டியார் நல்ல மரியாதை உண்டு .செல்வாக்கானவர் . நிலப்புலன் தோப்புத்துரவு என்று நிறைய சொத்துக்கு சொந்தக்காரர் . அவருடைய மகன் தான் உங்கப்பா மாரிமுத்து . பக்கத்து ஊரான சிலுக்குப்பட்டில உள்ள மாயாண்டித் தேவர் ரொம்ப வசதியானவர் . அவருடைய மகள் தான் உங்கம்மா வசந்தி . இரண்டு பேருக்கும் 5 வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்திச்சு . ரெண்டு பேரும் பணக்காரங்க , அவங்க பிள்ளைங்க கல்யாணத்தை சும்மா ஜாம்ஜாம்ன்னு தடபுடலா நடத்தினாங்க .
வசந்தியும் மாரிமுத்துவும் கல்யாணம் ஆனவுடன் நல்லா ஒற்றுமையா அன்னியொனியமா இருந்தனர் . ஒருத்தரொருத்தர் புரிந்து கொண்டு குடும்பம் நடத்தினர் . மாரிமுத்துவுக்கு எப்போதாவது தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்தது . வசந்தி இதைக் கண்டு கொள்ளவில்லை . போகப்போக திருத்திடலாம் என்றிருந்தாள் . ஆனா அவன் தண்ணியடிப்பது நாளுக்கு நாள் அதிகரிச்சுக் கொண்டே போனது . கொஞ்ச நாள்ல அவன் , ரெக்கார்டு டான்ஸ் , தண்ணி , சீட்டு என்று பணத்தை தண்ணி மாதிரி செலவு செய்தான் . வசந்தியும் குழந்தை பெறுவதற்கு அவங்க ஊருக்கு சென்றாள் .
ஒரு நாள் மாரிமுத்துவோட நண்பன் மூக்காண்டி மாரிமுத்துவைத் தேடி வந்தான் . டேய் மாப்புள , உனக்கு விசயம் தெரியுமா , நம்ம மேலத் தெருவுல அம்சவல்லின்னு ஐட்டம் புதுசா வந்திருக்கா . எல்லாரும் போயிட்டு வந்திருக்காங்க . நல்ல அழகா இருக்காளாம் . நீயும் ஒரு தடவை போயி பாருடா என்ன என்று சொல்லி விட்டு சென்றான் .
மூக்காண்டி சொன்னா சரியாத்தாம் இருக்கும் , நாமும் போய் பாத்திடுவோம் என்று மாரிமுத்து அம்சவல்லி வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தான் . குழந்தை மணியை பெற்று வந்த வசந்திக்கு இது பேரிடியாக தலையில் விழுந்தது . அவளும் பொறுத்து பொறுத்து பார்த்து அவனை திருத்த முடியாமல் சண்டையிட்டாள் . மாரிமுத்து தன்னுடைய தோப்பு துரவு சொத்தை வித்து அம்சவல்லிக்கு கொடுத்தான் . இந்தக் கவலையில் அவனுடய அப்பாவும் இறந்து போனார் . தினமும் குடித்து விட்டு வந்து வசந்திய அடிப்பதும் சூடுவைப்பதுவுமாக சித்தரவதை செய்தான் . இருந்த எல்லா சொத்தும் கரைய ஆரம்பித்தது .
நாளடைவில் அம்சவல்லியே கதி என்று ஆனான் மாரிமுத்து . வசந்தியை ரொம்ப கொடுமைப்படுத்தினான் . வசந்தி சாப்பாட்டுக்கு வழியில்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டாள் . மணிக்கு ஒருவேளை சாப்பாடு கூட கொடுக்க முடியவில்லை அவளால் . அக்கம்பக்கத்து வீடுகளில் வேலை செய்து வயிற்றைக் கழுவினாள் . இதனால் அவளுக்கு உடம்புக்கு முடியாமல் போனது .
ஒரு நாள் சண்முகம் தாத்தா வீட்டுல வேலை செய்யும் போது மயங்கி விழுந்தவள் தான் , உங்கம்மா அப்புறம் எழுந்திருக்கவே இல்லை . தூங்கிக்கிட்டே சாமிக்கிட்ட போயிட்டாங்க உங்கம்மா என்று அழுதபடியே கிலுகிலுப்பை சொன்னது .....
மணியும் விளையாடிக்கொண்டே இருந்தான் ......
பெத்தவளின் மனமோ பாடையிலே
இறைவனை நோக்கி ......
பிள்ளையின் மனமோ விளையாட்டினிலே
யாரை நோக்கி .............
Kathai narrating style nalla irukku.. yen color color font use panni irukkeenga?
ReplyDeleteகதை நல்லா இருக்கு நண்பரே...
ReplyDeletevazhththukkal
ReplyDeleteரொம்பவே உருக்கமான கதை.
ReplyDeleteஎன்றைக்குமே பெண்களுக்கு தான் கஷ்டம் அதிகம்.
வாழ்த்துக்கள்.
ரொம்ப சோகமாக இருக்கு, குழந்தைகளுக்கு 8 வயதுவரை மரணம் பற்றி முழுமையாக உணரும் பக்குவம் வராது.
ReplyDeleteஹூம் சோகம் சோகம் !
வாங்க மணி
ReplyDeleteகலரா இருந்தா நல்லா இருக்கும்
வருகைக்கு நன்றி
வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்
ReplyDeleteவாங்க ஜாக்கிசேகர்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
வாங்க டி வி ஆர் சார்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
வாங்க அக்பர்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
வாங்க கோவி . கண்ணன்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
சோகத்திலும் சுகம் உண்டு
வாங்க வசந்த்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
வெற்றி பெற வாழ்த்துகள் ஸ்டார்ஜன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாங்க உயிரோடை
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவெற்றிபெற வாழ்த்துக்கள்
கதைய படிச்சிட்டு ரொம்ப வே கலக்கமா இருக்கு.
ReplyDeleteபிஞ்சு குழந்தைகள் அறியாதவயதில் தாயை பிரிவதை விட கொடுமை வேறூ ஏதும் இல்லை
ஓட்டு போட்டாச்சு...கலக்கல்...!!!
ReplyDeleteமுதலில் போடும் டெஸ்ட் கமெண்ட்டை பின்னூட்ட கயமை என்ற பெயரிலும் அழைக்கலாம்...
ReplyDeleteவாங்க முரளி
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
வாங்க ஜலீலா
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாங்க ரவி
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி