நான் , நேற்று எழுதிய பதிவில் என்னை சிறுவயதில் பாதித்த ஐந்து திரைப்படங்களில் 2 திரைப்படங்களை குறிப்பிட்டிருந்தேன் . அந்த பதிவினை பார்க்க இங்கே செல்லவும் .
மீதி உள்ள மூன்று திரைப்படங்களை இப்போது பார்க்கலாம் .
3. உன்னால் முடியும் தம்பி
உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் நம்ம உலக நாயகன் கமல்ஹாசன் , ஜெமினிகணேசன் , சீதா , ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர் . சூப்பர் ஹிட்டான படம் . பாலசந்தர் இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார் . பாடல்கள் சூப்பர்ஹிட் . கேட்டுக்கொண்டே இருக்கலாம் .
வழக்கமான பாலசந்தர் படங்களில் இருந்து மாறுபட்ட படம் இது . ஆச்சாரமான சங்கீத வித்வான இருக்கும் ஜெமினி கணேசன் தன் மகன் கமலும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் . ஆனால் எப்போதும் துருதுருவாக இருக்கும் கமல் இந்த ஆச்சாரமான வாழ்க்கையிலிருந்து விடுபட நினைக்கிறார் . இதனால் கண்டிப்புடன் இருக்கும் அப்பாவை சமாளித்து , தன் சமூக சீர்திருத்த கருத்துக்களால் அந்த கிராம மக்களை நல்வழிப்படுத்துகிறார் .
இந்த படத்தில் ஜெமினிகணேசன் ஒரு சங்கீத வித்வானாகவும் ஒரு கண்டிப்பான அப்பாவாகவும் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம் . நடிப்பு அருமை . கமலும் இந்த படத்தில் நல்லா நடித்திருக்கிறார் . மீசை அரும்பிய வயதில் துருதுருவென கமல் போடும் ஆட்டமும் வயது வந்த பின் அனுபவமும் சூப்பர் .
சீதா இந்த படத்தின் ஹீரோயின் . கமலுக்கு ஏத்த ஜோடியாக நடித்திருக்கிறார் . இன்னொருவரை பற்றி குறிப்பிடவேண்டும் , அவர் தான் ஜனகராஜ் .
ஜனகராஜின் காமெடி ரொம்ப சூப்பர் . அதிலும் குடித்துவிட்டு தன் வீட்டை கயிறு கட்டி இழுக்கும் காட்சி ரொம்ப சூப்பர் .
நான் ரசித்து பார்த்த படம் ; நீங்களும் ஒரு தடவை பாருங்களேன் .
4 . முந்தானை முடிச்சு
முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ் , ஊர்வசி , தீபா , தவக்களை மற்றும் பலர் நடித்திருப்பார்கள் . பாக்யராஜ்ஜின் டிரேடு மார்க் படம் . பாக்கியராஜ் இந்த படத்தில் வாத்யாராக நடித்திருப்பார் . அருமையான விசயங்களை படத்தில் சொல்லி இருப்பார் . நல்ல ரசனையாளர் பாக்யராஜ் . அருமையான காமெடியுடன் கூடிய நடிப்பு . முருங்கைக்காய் மேட்டரை மறக்க முடியுமா ... என்ன ....
படத்தில் காமெடி நடிகர்கள் இல்லாமலே பாக்யராஜும் , ஊர்வசி , பசங்க காமெடி ரொம்ப சூப்பர் .
ஊர்வசி இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் . துருதுருவென வெகுளித்தனமாக சிறு பசங்க கூட சுற்றித்திரியும் ஊர்வசி நல்லா நடித்திருப்பார் . அறிமுக காட்சியிலே அசத்தி இருப்பார் .
பாக்யராஜின் சக ஆசிரியராக வரும் தீபா ரொம்ப சூப்பர் . என்ன அருமை ! . அவர் பாடம் சொல்லிக்கொடுக்கும் போதும் வரும்போதும் , போகும்போதும் ஜொள்ளு விடும் கிழடுகட்டைகள் நல்ல தேர்வு .
இந்த படத்தை இப்போதும் சலிப்பு தட்டாமல் பார்க்கலாம் .
நான் மிகவும் ர்சித்த படம் ; நீங்களும் ஒரு தடவை பாருங்களேன் .
5 . கரகாட்டக்காரன்
கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜன் , கனகா , கவுண்டமணி , செந்தில் , காந்திமதி , சண்முகசுந்தரம் , சந்தானபாரதி மற்றும் பலர் நடித்திருப்பார்கள் .
கரகாட்டகலையை பத்தி சொன்ன இந்த படத்தை கங்கை அமரன் இயக்கி , இளையராஜா இசையமைத்திருப்பார் . பாட்டுக்கள் ரொம்ப அருமை . கேட்க கேடக அருமையான பாடல்கள் .
இந்த படத்தின் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும் . கவுண்டமணி செந்தில் காமெடி இன்னைக்கும் மக்களால் மறக்க முடியாதது .
நான் மிகவும் ரசித்து பார்த்த படம் ; நீங்களும் ஒரு தடவை பாருங்களேன் .
ஹலோ என்ன தூங்கறதில்லையா?! நடுச்சாமம் கழிஞ்சு இடுகையைப் போடுறீங்க!
ReplyDeleteஜனகராஜ் குடிப்பதற்குச் சொல்லும் காரணங்கள்...ஹிஹிஹி! அப்புறம் L K A Malam...., இதழில் கதை எழுதும் நேரமிது, எல்லாப் பாடல்களும்...
மூன்று படங்களும் நல்ல பொழுதுபோக்குப் படங்கள். ஆனால் உன்னால் முடியும் தம்பி ஓடவில்லை என நினைக்கிறேன்.
மூன்று படங்களுமே எனக்கு பிடிக்கும்.
ReplyDeleteநல்ல அனுபவ பகிர்வு.
ஷங்கி இப்ப இங்கு இரவு பதினோரு மணி.
எனக்கு இதில் உன்னால் முடியும் தம்பி மட்டுமே பிடிச்ச படம்.
ReplyDeleteமுந்தானை முடிச்சும் நகைச்சுவையாகப் பார்க்கலாம்.
மூன்றவது படத்தைப் பிடிக்கவே பிடிக்காது.
ஓ அப்பிடியா அக்பர், நேரம் காலம் தெரிய மாட்டேங்குது. ஹிஹி!திருத்தியமைக்கு நன்றி..
ReplyDeleteஅது யாரு கீழே, ஹேமான்னு , என் பக்கம் வந்துட்டு ஓடியே போய்ட்டாங்க!
இதில் உன்னால் முடியும் தம்பி ரொம்ப பிடிச்சப் படம். கரகாட்டகாரன் அதன் சிரிப்புக்காகவே பார்த்தப் படம். தில்லானா மோகனாம்பாள் உல்டா பண்ணி எடுக்கப் பட்ட படம் கரகாட்டகாரன் என என் எண்ணம்.
ReplyDeleteமுந்தானை முடிச்சு.. ஓகே
வாங்க ஷங்கி , வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்க அக்பர் , வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteவாங்க ஹேமா , வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteமறுவருகைக்கு மிக்க நன்றி ஷங்கி
ReplyDeleteவாங்க ராகவன் சார் , வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteமீதி 3 போட்டாச்சா. சரிதான்
ReplyDeleteஉன்னால் முடியும் தம்பி - புஞ்சையுண்டு நஞ்சையுண்டு பாட்டு தான் அந்த சமையத்தில் பள்ளிகளில் பாட்டுப்போட்டியில அதிகமானவர்கள் பாடிய பாட்டாக இருக்கும்
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கோணம்.நல்ல படங்கள். எல்லாமே(5) ராஜாதான் இசை.முந்தானை முடிச்சில்
ReplyDeleteவரும் “அந்தி வரும் நேரம்”.ஜானகி
ஆரம்பிக்கும் இடம் அருமை/இனிமை.
This comment has been removed by the author.
ReplyDeleteவாங்க நவாஸ்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கே.ரவிஷங்கர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல பகிர்வு ஸ்டார்ஜன்.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி சரவணக்குமார்
ReplyDeleteமூன்று படங்களுமே முத்தான படங்கள். சிறந்த பொழுதுபோக்கு சித்திரங்கள்.
ReplyDeleteவாங்க துபாய் ராஜா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஅருமையான தொகுப்பு
ReplyDeleteவாங்க அத்திரி வருகைக்கு நன்றி
ReplyDelete