அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே !! நண்பிகளே !! வாக்காளப் பெருங்குடி மக்களே !! பெரியோர்களே !! தாய்மார்களே !! ... உங்கள் பொன்னான வாக்குகளை ...
என்னடா இது ! ஸ்டார்ஜன் !! ஓட்டுக் கேட்கிறாரே !! எப்போ தேர்தல்ல நின்னாரு ! என்னாச்சு இவருக்கு !! அப்படின்னு நீங்க நினைக்கிறது தெரிகிறது .
இப்படித் தானே எல்லா அரசியல்வாதியும் ஓட்டு கேட்டு வந்தாங்க . வந்தாங்க , வென்றாங்க , சென்றாங்கன்னு ஆகிப்போச்சில்ல . ஓட்டு வாங்கி ஜெயித்த பிறகு நம்ம பக்கம் வராம இருக்கிறது அவங்க பாலிசி . ஓட்டு போடுறது நம்ம பாலிசி .
இப்போ அந்த அரசியல்வாதிகளோட மறுபக்கத்தை புரட்டுவோமா ...
ஒரு தேர்தல்ல ஜெயித்து மக்களவைக்கு செல்லும் ஒரு உறுப்பினரின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா ...
மக்களவை உறுப்பினர் ( M . P )
அடிப்படை மாத சம்பளம் ரூ 12, 000/
அரசாங்க அரசியல் செலவுக்கு ரூ 10, 000/
அலுவலக செலவு ரூ 14, 000/
பயணப்படி ( கி.மீக்கு 8 ரூ ) ரூ 48, 000/
தினப்படி /பயணப்படி ஒரு நாளைக்கு ரூ 500/
ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் இலவசம் ( இந்தியா முழுவதும் )
வான ஊர்தியில் முதல் வகுப்பு டிக்கெட் இலவசம் ( மனைவி , அல்லது உதவியாளர் உடன் செல்லலாம் ) இது மாதிரி 40 தடவை செல்லலாம் .
டில்லியில் தங்கும் வீடு இலவசம் .
50,000 யூனிட் மின்சாரம் செலவு செய்யலாம் .
1,70,000 போன்கால்கள் இலவசம் .
ஒரு மக்களவை உறுப்பினருக்கு ஒரு வருடத்திற்கு 32 இலட்ச ரூபாய் செலவு செய்யப்படுகிறது .
ஒரு மாதத்திற்கு 2.66 இலட்ச ரூபாய் செலவு செய்யப்படுகிறது .
5 வருடத்திற்கு ஒரு கோடியே 60 இலட்ச ரூபாய் செலவாகிறது .
இதே மாதிரி இந்தியா முழுவதும் உள்ள் 534 மக்களவை தொகுதி உறுப்பினர்களுக்கும் மொத்தமாக 855 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது .
அடேங்கப்பா ... என்று நீங்கள் பெருமூச்சு விடுவது நியாயமில்லை .
ஆகவே , அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே !! உங்கள் பொன்னான வாக்குகளை .....
ஆமா ஸ்டார்ஜன் ஓட்டு போட்டா காசு தர்றாங்களாமே அப்டியா நான் போட்டுட்டேன் எங்க காசு?
ReplyDelete:))))
ஓ.கே. இதுவும் திறந்துவிட்டது
ReplyDeleteஇதெல்லாம் அபீஸியலா நண்பரே... அப்புறம் இருக்கு மகாக்கொள்ளை...
ReplyDeleteபிரபாகர்.
இப்படி எல்லாம் இருக்கிறதோ? நடக்கிறதோ?
ReplyDelete//சந்ரு said...
ReplyDeleteஇப்படி எல்லாம் இருக்கிறதோ? நடக்கிறதோ?//
அண்ணனுக்கு ஒரு பிளைட் டிக்கெட் போடுங்கப்பா
//இதே மாதிரி இந்தியா முழுவதும் உள்ள் 534 மக்களவை தொகுதி உறுப்பினர்களுக்கும் மொத்தமாக 855 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது . //
ReplyDeleteஎன்னங்க நீங்க, ஒரு ஆயிரம் கோடி கூட பெறாத மேட்டருக்கெல்லாம் கவலைப்பட்டுக்கிட்டு,
நம்மாளுங்களோட பாக்கெட் மணி செலவு இது. வரவு கணக்கு போட்டா தாங்காது ஸ்டார்ஜண் தாங்காது
ReplyDelete5 வருடத்திற்கு செலவாகும் தொகை = 855 கோடி
ReplyDeleteமொத்த வாக்காளர் எண்ணிக்கை = 38,74,53,223 (ஆதாரத்தின் படி)
ஒரு வாக்காளரின் வரிப்பணம் ஒரு வருடத்திற்கு = 4 ரூ 50 பைசா செலவு.
அதனால இது கஷ்டமில்லை.
ஆனால்
CBI இன் முதல் தகவல் அறிக்கை படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் 22 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பணத்தை கொண்டு 25 ஐந்தாண்டுகள் (125 ஆண்டுகள்) செலவு செய்யலாம்.
இது சாம்பிள் தான். இது மாதிரி தினமும் நடக்கும் ஊழல்களில் புரளும் பணம் எத்தனை கோடியோ யாருக்கு தெரியும்.
யார் சொன்ன இந்தியா ஏழை நாடுன்னு.
pesama oru arasiyalvathi ayidalamnu ninaikren neenga ena ninaikrenga?
ReplyDeleteநல்ல கணக்கெடுப்பு. அருமையான பதிவு.
ReplyDelete//ஆகவே , அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே !! உங்கள் பொன்னான வாக்குகளை ..... // யாரு பிரியாணியும் குவார்ட்டரும் தருகிறார்களே அவருக்கே போடுங்கள் என்ற கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஇப்படிக்கு ஒட்டுப்போட்டு குவார்ட்ர் அடித்த கோவிந்தன்
வெளிச்சத்திற்கு தெரியாதது 10 மடங்கு அதிகம் தல
ReplyDeleteதேவையான இடுக்கை
ஹலோ பாஸ்... இதுகே வாயை பொளந்தா எப்புடி? மெயின் பிக்ச்சரே ஆரம்பிக்கல ராசா...
ReplyDeleteவிசயகாந்து மாதிரி புள்ளிவெவரம் நல்லா இருக்கு
ReplyDelete/// பிரியமுடன்...வசந்த் said...
ReplyDeleteஆமா ஸ்டார்ஜன் ஓட்டு போட்டா காசு தர்றாங்களாமே அப்டியா நான் போட்டுட்டேன் எங்க காசு?
:)))) ///
கலக்சன் பண்ணிக்கிட்டு இருக்கேன் ; வந்ததும் கொடுத்திடுவோம் .
வருகைக்கு நன்றி தல
ReplyDeleteபிரபாகர் said...
ReplyDeleteஇதெல்லாம் அபீஸியலா நண்பரே... அப்புறம் இருக்கு மகாக்கொள்ளை...
பிரபாகர். ///
சரியா சொன்னீங்க .
வாங்க சந்ரு , ஆமாம் சந்ரு !!
ReplyDeleteசங்கர் said...
ReplyDelete//சந்ரு said...
இப்படி எல்லாம் இருக்கிறதோ? நடக்கிறதோ?//
அண்ணனுக்கு ஒரு பிளைட் டிக்கெட் போடுங்கப்பா ///
நன்றி சங்கர்
//// சங்கர் said...
ReplyDelete//இதே மாதிரி இந்தியா முழுவதும் உள்ள் 534 மக்களவை தொகுதி உறுப்பினர்களுக்கும் மொத்தமாக 855 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது . //
என்னங்க நீங்க, ஒரு ஆயிரம் கோடி கூட பெறாத மேட்டருக்கெல்லாம் கவலைப்பட்டுக்கிட்டு, ////
ஆயிரம் கோடின்னா சும்மாவா , வருகைக்கு நன்றி சங்கர் .
வருகைக்கு நன்றி நவாஸ்
ReplyDeleteவருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி ஏஞ்சல்
ReplyDeleteநல்ல யோசனை , ஆகட்டும் ...
வருகைக்கு நன்றி கடையம் ஆனந்த்
ReplyDelete/// நாஞ்சில் பிரதாப் said...
ReplyDelete//ஆகவே , அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே !! உங்கள் பொன்னான வாக்குகளை ..... // யாரு பிரியாணியும் குவார்ட்டரும் தருகிறார்களே அவருக்கே போடுங்கள் என்ற கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு ஒட்டுப்போட்டு குவார்ட்ர் அடித்த கோவிந்தன் ///
வருகைக்கு நன்றி பிரதாப் ; கிக் ஏறிச்சா ...
வருகைக்கு நன்றி அபு அஃப்ஸர்
ReplyDeleteநல்ல பகிர்வு நண்பரே
ReplyDeleteஅப்புறம் ஒரு எம்.பி க்கு ஐந்து வருடம் 1.50 கோடி செலவாகுதுன்னே வச்சுகிடுவோம்.
ReplyDelete5 கோடி செலவு செய்த எம்.பி க்கு இது எப்படி கட்டுபடியாகும்.
வாங்க கலையரசன் வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க அத்திரி வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க சரவணக்குமார் வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க அக்பர் , இந்த கமெண்ட் அங்க கேட்க வேண்டியது
ReplyDeleteமறு வருகைக்கு நன்றி