அலையே சிற்றலையே
என்ன வேகம் எங்கே போற !!
நாங்கள் உலா வருவது
பிடிக்கலியா உனக்கு ?
நான் அம்மாவிடம் பாப்கார்ன்
கேட்டபோது அம்மாவை காணோமே !
எங்கேன்னு கேட்க தெரியாது எனக்கு
பதில் வந்ததோ உன்னிடம் வந்தார்களென !
எனக்கு பசிக்கிறது ! சோறூட்ட யாருண்டு ?
ஐஸ்கிரீம் வாங்கித் தர யாருண்டு ?
என்னில் அன்பு செலுத்த யாருண்டு ?
பள்ளி அனுப்ப யாருண்டு ?
என்னைத் தாலாட்ட யாருண்டு ?
நீ எடுத்துக் கொண்டால் எனக்கென யாரு ?
உனக்கு அம்மா வேணுமின்னா
எங்கம்மாவை எடுத்துக்கிட்ட !!!
சொல்லு அலையே சிற்றலையே !!
உன் கோபத்துக்கு நாங்களா ...
நான் அம்மாவைத் தேடி
தினமும் வருவது தெரியலியா
நீ அனாதையென்றால்
நானும் ஆகணுமா அனாதை ?
திருப்பிக் கொடு அலையே
எங்கம்மாவை எனக்கு ....
*****************************************
இந்த பதிவு 2004 ல் டிசம்பர் 26 ல் சுனாமியால் இறந்தவங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் .
இறந்தவங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திப்போமா ....
வருத்தத்திற்குரிய சம்பவம்.
ReplyDeleteநானும் எனது அஞ்சலிகளை செலுத்துகிறேன்.
சிறுகுழந்தையின் வார்த்தைகளில் அருமையான அஞ்சலி கவிதை.
ReplyDeleteவித்தியாசம் ஸ்டார்...
:-((
ReplyDeleteபோம்
ReplyDeleteஇப்ப நினைத்தாலும் மனம் ஒருதரம் நின்றே இயங்கத்தொடங்குகிறது.என் அஞ்சலியும் அவர்களுக்கு
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பர்களே
ReplyDeleteஅக்பர்
டிவிஆர் சார்
துபாய் ராஜா
பிரதாப்
டாக்டர்
ஹேமா
என் அஞ்சலிகளும்.
ReplyDeleteஇப்படி ஏங்கிப் போய் எத்தனை உள்ளங்கள் :( ?
வருந்ததக்க நிகழ்வு
ReplyDeleteஎனது அஞ்சலிகள்
மனதை வருந்த வைக்கும் ஒரு நிகழ்வு !
ReplyDeleteஎல்லாத்தையும் இறைவன் காத்தருள பிராத்திக்கிறேன் !
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
மனதை வருந்த வைக்கும் ஒரு நிகழ்வு !
ReplyDeleteஎனது ஆழ்ந்த அனுதாபங்கள்
வருத்தம் தந்த நிகழ்வு சுனாமி அதை ஒரு குழந்தையின் குரலில் கேட்கும் போது பரிதவிப்பு அதிகமாகிறது ஸ்டார்ஜன்
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்
நானும் எனது அஞ்சலிகளை செலுத்துகிறேன்.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி நண்பர்களே !
ReplyDeleteராமலக்ஷ்மி மேடம்
அபுஅஃப்ஸர்
கட்டபொம்மன்
Raja
தேனம்மை அக்கா
S.A. நவாஸுதீன்
இயற்கை அனர்த்தம்!
ReplyDeleteபாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் என் பிரார்த்தனைகள்.