Pages

Thursday, April 1, 2010

உழைக்கும் கைகளே.. கேள்விக்கு என் பதில் 5


அன்புமிக்க நண்பர்களே!!

நேற்று நான் ஒரு கேள்வியை வெளியிட்டேன். அதற்கு நான் எதிர்பார்த்ததுபோலவே நீங்கள் பலதரப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி 5 :

குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தடுப்பது யார்கையில் இருக்கிறது?.. அரசாங்கமா இல்லை சமூகமா...



இந்த கேள்விக்கு கருத்துசொல்வது என்பது மிக சிக்கலான விஷயம். அப்படி இருந்தும் நேற்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் குறிப்பாக மாப்ள ஜெகநாதன் எனக்கு நிறைய பாயிண்ட்ஸ் எடுத்துக் கொடுத்தார். இணையத்தில் நிறைய தகவல்கள்தேடித் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவருக்கு என் நன்றிக‌ளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் இந்த பிரச்சனைக்கு அடிப்படைகாரணம் குடும்பங்கள்தான். அரசு என்னதான் சட்டம் போட்டாலும் வேலைக்கு செல்வதை யாராலும் தடுக்கமுடியாது. முதலில் ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போம்.

ஒருவன் படித்தால் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போம்.ஒரு அப்பா தான் என்னதான் கஷ்டப்பட்டாலும் தன்பிள்ளை படித்து வேலைக்கு சென்று தன்குடும்பத்தை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் அவனை படிக்க வைக்கிறார். அவனும் படித்துமுடித்து வேலைக்காக காத்திருக்கிறான் காத்திருக்கிறான் காத்துக்கொண்டே இருக்கிறான்.

ஏன்னா நம்நாட்டுல வேலை இல்லாத திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறதே.. அதை எப்படி யார்தீர்ப்பது.. விடையில்லா கேள்வியா இருக்கே. இன்றைய அரசியல்வாதிகளை கேளுங்க. வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிக்க என்ன செய்கிறீர்கள் என்று. அவர்களால் பதில் சொல்ல இயலாது. அவர்கள் அப்படியே வேலை கொடுத்தாலும் பணம் உள்ளவன் முந்திக்கிறான் . போட்டிகள் நிறைந்த உலகம் இது. இதுதான் காலம்கால்மாக நடந்து கொண்டிருக்கிறது. ஏன்னா நம்நாட்டில் மக்கள்தொகை பெருக்கம் அதிகம். இப்படியே ஒன்றுதொட்டு ஒன்று தொடர்ந்துகொண்டே செல்கிறது.... இது ஒரு சங்கிலித் தொடர் போல... முடிவே இல்லாமல்..

இப்போது அடுத்த கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போம். இப்ப அவன் படிக்காம வேலைக்கு போறான்னு வைத்துக் கொள்வோம். அவன் சின்னவயசிலே வேலைக்கு போவதால் அவனிடம் பணப்புழக்கம் உண்டாகிறது. அவனுடைய தேவையை யாருடைய தயவுமில்லாமல் அவனே பூர்த்தி செய்துகொள்கிறான். இதற்கு என்னகாரணம் குடும்பங்களில் நிலவும் வறுமைதான்.

கஷ்டப்படுகிற குடும்பங்களில் எந்த வகையிலாவது வருமானம் வராதா அதனைக் கொண்டு நம் வறுமை நீங்காதாதான் எல்லா பெற்றோரும் நினைக்கிறார்கள். அதாவது ஒருவன் சின்ன வயசிலே வேலைக்கு போய் சம்பாதிச்சாதான் நீ கல்யாணவயசுல நல்லா இருக்க முடியும்ன்னு ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கும்போது அவனால் எப்படி வேலைக்கு செல்லாமல் இருக்கமுடியும்.

ஏன்னென்றால் குடும்பத்தில் நிலவும் வறுமை. அவன் ஒரு 21 வயது அடையும்போது அவனிடம் பணப்புழக்கம் இருப்பதினால் அவனுக்கு பெண்கொடுக்க நான்நீன்னு போட்டிப்போடுகிறார்கள். ஒரு 25 வயது கழிந்தவுடன் ஓரளவுக்கு வாழ்க்கையில் செட்டிலாகிவிடுகிறான். அவனால் எந்தஒரு பிரச்சனைக்கும் ஈஸியா தீர்வுகண்டுவிடுவான். அதே படித்தஒருவன் முடிவு எடுக்கமுடியாமல் தடுமாறுவதை பார்க்கத்தான் செய்கிறோம்.

இப்போது அடுத்த கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போம். அதாவது வேலைக்கு செல்லும் சிறார்களின் பார்வையில் செல்வோம். குழந்தை தொழிலாளர்கள் எனபவர் யார்? எனபதை முதலில் பார்த்தோமானால் தன் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக சிறுவயதிலே வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் உள்ளவர்கள். இந்த குழந்தைகள் வேலைக்கு செல்வதற்கு முதலில் அடிப்படை காரணம் என்ன? என்பதை பார்த்தோமானால் வறுமை.

இந்த மாதிரி கஷ்டப்பட்ட குடும்பங்களில் ஒன்று அப்பா சரியில்லாம இருக்கணும் இல்லை அப்பா இல்லாமல் குடும்பபொறுப்பை தானே ஏற்கவேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்படும் சிறார்கள். இவர்களுக்கும் மற்ற பிள்ளைகளை போல தாமும் படிக்க வேண்டும் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவை சிறுவயதிலே புதைத்து ஏக்கமாய் பார்க்கும் பார்வைக்கு அழுத்தம் ஜாஸ்தி. சில குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கிறனர். அவர்கள் சில சமயங்களில் தப்பான முடிவுக்கு ஆளாகிவிடுகின்றனர். இல்லையென்றால் ஒரு ரவுடியாகவோ இல்லை முரடனாகவோ, இல்லை வேறுமாதிரியாகவோ ஆகிவிடுகின்றனர்

இன்று எத்தனை ஊர்களில் சிறுவயதிலே வேலைக்கு சென்று க‌ஷ்டபடும் குழந்தைகளை நினைக்கும்போது கண்களில் நீர்கோர்க்கிறது. உண்டா இல்லையா சொல்லுங்க...

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் கஷ்டத்துக்கு ஆளாகும் குழந்தைகள் நிலையை நாம் எப்படிமாற்றுவது?..

குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தடுக்க நாம் இதுவரை என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அரசு திட்டங்கள் எத்தனைதான் கொண்டுவந்தாலும் அதை செயல்படுத்தும்போது பணமுதலைகளின் வாயினுள் அல்லவா சென்றுவிடுகிறது.

இதற்கு பிற்காலத்தில் எதாவது ஒரு மாற்றம் வராமலா போய்விடும். கண்டிப்பாக மாற்றம் வரும் என்று நம்புவோமாக..

மீண்டும் அடுத்தவாரம் வேறொரு கேள்வியுடன் உங்களை சந்திக்கின்றேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

20 comments:

  1. நல்ல பார்வை ஸ்டார்ஜன்.

    டாக்டர் எஞினியர் தவிர மற்ற படிப்புகள் எல்லாமே நம்மை குமாஸ்தாவாகத்தான் ஆக்குகின்றன.

    ReplyDelete
  2. அட!!! மூன்று விதமாக
    அணுகி இருக்கிறீர்களே!!

    ReplyDelete
  3. கருத்தான் கண்ணோட்டம்.ஸ்டார்ஜன் நன்கு அலசி ஆராய்கின்றீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. //டாக்டர் எஞினியர் தவிர மற்ற படிப்புகள் எல்லாமே நம்மை குமாஸ்தாவாகத்தான் ஆக்குகின்றன.//

    ????

    ReplyDelete
  5. பார்வை ந‌ல்ல‌ வித‌மாக‌வே இருக்கிற‌து..

    ReplyDelete
  6. நல்ல அலசல் ஸ்டார்ஜன்..

    அருமையான கண்ணோட்டங்கள். கருத்துக்கள் அருமை.. தொடரவும்

    ReplyDelete
  7. தேவையான இடுகை.நிறைய யோசிக்க வைக்கிறது

    ReplyDelete
  8. வாங்க அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. வாங்க சைவகொத்துப்பரோட்டா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  10. வாங்க ஸாதிகா

    பாராட்டுக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  11. வாங்க டாக்டர் தல

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  12. வாங்க ஸ்டீபன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  13. வாங்க மின்மினி @ நன்றி கருத்துகளுக்கு

    வாங்க அம்பிகா @ நன்றி பாராட்டுகளுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  14. டெம்ப்ளேட் எல்லாம் மாத்தி கலக்குறீங்க நண்பா.

    ReplyDelete
  15. வாங்க குமார் @ தொடர்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    வாங்க சரவணன் @ சரவணன் எப்படி இருக்கீங்க நலமா.. ஆமா இது நல்லாருக்கா.. பாராட்டுக்கு நன்றி சரவணன்

    ReplyDelete
  16. அருமையான கருத்துக்கள் ஷேக்.

    ReplyDelete
  17. தெளிவான, விரிவான கருத்துக்கள்!

    கிரீடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள், ஸ்டார்ஜன்!

    ReplyDelete
  18. வாங்க ராஜா @ பாராட்டுக்கும் தொடர்வருகைக்கும் மிக்க நன்றி ராஜா

    வாங்க நிஜாமுதீன் @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்