Pages

Wednesday, March 31, 2010

கேள்விக்கு உங்கள் பதில் 5

அன்புமிக்க நண்பர்களே!!

வாரம்தோறும் இந்த பகுதியில் வெளியாகும் கேள்விக்கு உங்கள் பதில் இடுகைகளில் நிறையபேர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள ஏதுவாக உள்ளது. உங்களின் ஒவ்வொருவரின் வித்யாசமான கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளும்போது புதிய கருத்துப் பரிமாணம் கிடைக்கிறது. இதற்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்றவார இடுகைகளின் தொகுப்பை இங்கே தந்துள்ளேன். அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே..

கேள்விக்கு உங்கள் பதில் கேள்விக்கு என் பதில்
கேள்விக்கு உங்கள் பதில் 2 கேள்விக்கு என் பதில் 2
கேள்விக்கு உங்கள் பதில் 3 கேள்விக்கு என் பதில் 3
கேள்விக்கு உங்கள் பதில் 4 கேள்விக்கு என் பதில் 4


சரி இந்த வார கேள்விக்கு உங்கள் பதில் 5 க்கு செல்வோமா..

கேள்வி 5 :

குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தடுப்பது யார்கையில் இருக்கிறது?.. அரசாங்கமா இல்லை சமூகமா...


சென்ற வாரம் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது போல இந்த கேள்விக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

25 comments:

  1. நிச்சயம் அரசாங்கத்தில் கையில் இல்லை. அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும்.. அதிக பட்சம் சட்டங்கள் இயற்ற முடியும்.

    சமுதாயம் திருந்த வேண்டும். மக்கள் திருந்த வேண்டும். நம்மாதிரி இருப்பவர்கள் திருந்த வேண்டும்.

    ReplyDelete
  2. மக்கள் கையில் தான் இருக்கு ஸ்டார்ஜன் ....ராகவன் சொல்வதை வழிமொழிகிறேன்

    ReplyDelete
  3. //இராகவன் நைஜிரியா said...
    நிச்சயம் அரசாங்கத்தில் கையில் இல்லை. அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும்.. அதிக பட்சம் சட்டங்கள் இயற்ற முடியும்.

    சமுதாயம் திருந்த வேண்டும். மக்கள் திருந்த வேண்டும். நம்மாதிரி இருப்பவர்கள் திருந்த வேண்டும்.//

    சவுண்டா ஒரு ரிப்பீட்டே...

    ReplyDelete
  4. சமூகம்தான் தலைவரே எல்லத்துக்கும் காரணம்.

    ReplyDelete
  5. இருவர் கையிலும் இல்லை. ஏன் குழந்தைகள் (பாதிக்கப்படுபவர்) ​கையிலேயே​இல்லை!
    இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் கையில்​பொறுப்பு உள்ளது.
    குழந்தைத் தொழிலாளர் என்ற பிரச்சினையை நீங்கள் எந்த அளவுகோலில் அல்லது நிலஅமைப்பில் காண்கிறீர்கள் (தமிழகம் /​தென்னிந்தியா / இந்தியா / ஆசியா / உலகம்) என்பதைப் பொறுத்து.
    IPC 498a வந்தபின் வரதட்சிணை ​கொடுமை குறைந்திருக்கிறது. அட்லீஸ்ட், குற்றப்பதிவுகள் எண்ணிக்கை கூடியிருக்கிறது (http://stats.498a.org/) மனைவிகள் ​செயல்பட ஆரம்பித்து விட்டார்கள் (புருஷன்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்).

    வலுவான சட்டமியற்றுதல் மட்டும் ​போதாது. அதை நடைமுறைப்படுத்தத் ​தேவையான திட்ட அமுலாக்கமும் ​தேவை.

    இதில் கல்வித்துறையின் பங்கும் முக்கியம். தமிழ்நாட்டில் அதை பலவகைகளில் (இலவச உணவு, உடை, தேர்வுகளில் எளிமை) செயலாக்கியும் உள்ளவார்கள்.
    பாடங்களின் வறட்சியால் நிறைய குழந்தைகள்​வேலைக்குப் போகிறார்கள்.

    இருந்தும் குழந்தைகள்​வேலைக்குச் ​செல்வதின் அரசியல் ​தெளிவின்மையே. இது சம்பந்தமான ஆவணங்கள், ஆய்வறிக்கைகள் மற்றம் களப்பணி விவரங்கள் இதைப் புரிந்து​கொள்ள ஏதுவாக இருக்கும்.
    Googleல் முயன்று ​கொண்டிருக்கிறேன்.
    *
    The government has made efforts to prohibit child labor by enacting Child labor laws in India including the 1986 Child Labor (Prohibition and Regulation) Act that stated that children under fourteen years of age could not be employed in hazardous occupations.

    என்பதே தற்போதைய சட்டம்.
    இதை உங்கள் இடுகையில் (தமிழ்படுத்தி) இணைப்பதன் மூலம் விழிப்புணர்வை பரவலாக்க முடியும்.

    பொறுப்பு நம் கையில்தான் உள்ளது என்ற நினைப்பு ஆரோக்கியமானது. அந்த ​பொறுப்பு என்னென்ன என்று ​தொடர்ந்து ஆராய்ந்து அறிதல் முக்கியம். ​செயல்படுத்தலும் கூட.

    ReplyDelete
  6. குழந்தை தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதைத் தடுப்பது என்பது மிகப் பெரிய வேலை.

    அதற்கு ஒரே வழி. குழந்தை தொழிலாளர்களுக்கு கிடைக்கும் கூலிபோல பல மடங்கு அதிக கூலி அவர்கள் வளர்ந்த பின் கிடைக்கும் வகையில் குழந்தைதொழிலாளர் பருவத்தில் பயிற்சி அல்லது கல்வி கிடைக்க வேண்டும்.

    குழந்தை தொழிலாளர் பருவத்தில் படிக்க அனுப்பி விட்டு பின்னர் வேலைக்கு போகும்போது பயிற்சி இன்மைகாரணமாக குறைந்த கூலி, அல்லது ஒரே மாதிரியான கூலி கிடைக்கும்போது குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பாமல் இருந்த பெற்றொருக்கு தாங்கள் தவறு செய்து விட்டோமோ என்ற மனநிலையும், இளவயதிலேயே வேலைக்கு அனுப்பி இருந்தால் இன்று பயிற்சியும் நல்ல சம்பளமும் பெற்று இருப்பானே என்ற குற்ற உணர்ச்சியும் ஏற்பட்டு விடும்.


    எனவே குழந்தை தொழிலாளர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது என்பது கையில் கிடைக்கும் கூலியைப் பொறுத்தே அமைகிறது.

    ReplyDelete
  7. தேடிய வரையில்,
    http://www.cry.org/index.html
    http://www.childrightsandyou.blogspot.com/
    போன்ற குழந்தை தொழிலாளர் ​தொடர்பான வலைத்தளங்கள் கிடைத்தன.

    படித்துப் பாருங்கள்.

    இவைகளை உணர்ந்து வாசிப்பதும், அது பற்றி விவாதிப்பதும், ​​செயலாக்கத் திட்டமிடலும் என ஒரு ஆக்கபூர்வமான வெளிப்பாட்டை (outcome) இங்கு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. நிச்சயம் நம்மிடம்தான் (சமுதாயம்)

    ReplyDelete
  9. ந‌ம்மிட‌ம் தான் உள்ள‌து என்ப‌து என்னுடைய‌ க‌ருத்து..

    ReplyDelete
  10. //குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தடுப்பது யார்கையில் இருக்கிறது?.. அரசாங்கமா இல்லை சமூகமா...//
    ஒரு கை தட்டினால் ஓசை வராது . இருவரும் இணைந்து செயல்படவேண்டும்.

    ReplyDelete
  11. ஸ்டார்ஜன், அருமையான விவாதிக்கும் கருத்துகொண்ட ஒரு நல்ல‌கேள்வி. இங்கே ஒரு நல்ல விவாதத்தை எதிர்பார்க்கலாம்.

    வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  12. நிச்சயம் சமூகம் தான்.விரிவான பதில் அப்புறமாக..

    ReplyDelete
  13. மக்கள்தான் திருந்தவேண்டும் குழந்தை தொழிலாலர்களை உருவாக்குவது அவர்கள்தானே..

    ராகவன்சாசொல்வதைபோல்..

    ReplyDelete
  14. மக்கள்தான் திருந்தவேண்டும் குழந்தை தொழிலாலர்களை உருவாக்குவது அவர்கள்தானே..

    ராகவன்சாசொல்வதைபோல்..

    ReplyDelete
  15. மக்கள்தான் திருந்தவேண்டும் குழந்தை தொழிலாலர்களை உருவாக்குவது அவர்கள்தானே..

    ராகவன்சாசொல்வதைபோல்..

    ReplyDelete
  16. ரொம்ப பிஸி. அப்புறம் வாரேன். :)

    ReplyDelete
  17. குழந்தைகள் தெய்வங்கள்--என்னுடையவை மட்டும்
    என்ற உணர்வு நம் மக்களிடம்- குறிப்பாக ஒவ்வொரு பெண்ணை விட்டும் நீங்கும்போது மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.
    காணும் குழந்தை மீது எல்லாம் அன்பினை சொரிந்தால் நிச்சயம் நாளைய சமூகம் --குழந்தை தொழிலார் அன்றி.
    பணம் இல்லாததால் அல்ல- பிரச்சனை- மனம் இல்லாததே.

    கோயிலில் நம் தாய்மார்கள் கொண்டு செலுத்தும் காணிக்கையை குழந்தைகளுக்கு ஏன் வழங்க மறுக்கின்றனர்?
    தன் பிள்ளை இல்லை என்பதாலா?

    ReplyDelete
  18. குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தடுக்கக்கூடிய கடமை சமூகத்துக்குதான் உண்டு. ஏனென்றால் அரசு என்னதான் சட்டங்கள் கொண்டுவந்தாலும் வேலைக்கு போறவங்களோட எண்ணிக்கை அதிகமாகிட்டுதான் வருகிறது. கஷ்டப்படுகிற குடும்பங்களில் எந்த வகையிலாவது வருமானம் வராதா அதனைக் கொண்டு நம் வறுமை நீங்காதாதான் எல்லா பெற்றோரும் நினைக்கிறார்கள். அதாவது ஒருவன் சின்ன வயசிலே வேலைக்கு போய் சம்பாதிச்சாதான் நீ கல்யாணவயசுல நல்லா இருக்க முடியும்ன்னு ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கும்போது அவனால் எப்படி வேலைக்கு செல்லாமல் இருக்கமுடியும். எனவே ஒவ்வொரு பெற்றோரும் இதில் சிந்திக்கவேண்டியது நிறைய இருக்கு.

    ReplyDelete
  19. வறுமைதான் இதற்கு முக்கிய காரணம். மற்ற பிள்ளைகளைப் போல் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பாத பெற்றோர்கள் உலகத்தில் உண்டா. அரசும் தன்னாலான முயற்சிகளை செய்து வந்தாலும் இது போதாது. படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்க வேண்டும்.

    ReplyDelete
  20. குழந்தைகளை வேலைக்கு அனுப்பினால்தான் வீட்டில் அடுப்பெரியும் நிலையில் உள்ள குடும்பங்களின் வறுமையை போக்குவதோடு, குழந்தைகளுக்கும் பள்ளியில் இலவசப் பாடப் புத்தகங்களோடு, மதிய உணவு முதலானவை தந்தால் இந்தப் பிரச்னை களையப் படலாம். இந்த நிலை வருவதற்கு கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிராமம் கிராமமாக சென்று - குறிப்பாக சிவகாசி போன்ற ஊர்கள் பக்கம் - விழிப்புணர்வைத் தூண்டலாம், இலவச வகுப்புகளும் எடுக்கலாம்.

    ReplyDelete
  21. தங்களுக்கு நான் கொடுத்து இருக்கும் கிரீடத்தை பெற்றுக்கொள்ளவும்.

    http://shadiqah.blogspot.com/2010/04/blog-post.html

    ReplyDelete
  22. வருகைதந்து கருத்துக்களை பரிமாறிக் கொண்ட அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  23. வாங்க ஸாதிகா..

    ராஜா கிரீடம் விருதுகொடுத்து என்னை கவுரவித்ததுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  24. சமூகத்தின் கையில்தான் இருக்கிறது. அதே சம்யம், குழந்தைத் தொழிலாளர் என்பது எத்தனை வயது வரை என்பதும் முக்கியம்; 12 வயதிற்குமேல், படிப்புடன் ஏதேனும் ஒரு கைத்தொழிலும் கற்றுக்கொள்வதும் அவசியம் என்பேன் நான். வேலை பார்த்துக் கொண்டே வைராக்கியத்துடன் படிக்கும் இளைஞர்களையும் பெருமையுடன் பார்க்கிறோமே நாம். அவர்களுக்கே பொறுப்பும், சமூக சிந்தனையும் அதிகம் இருக்கும்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்