Pages

Sunday, June 27, 2010

வரும்வரை காத்திரு.. 3 - தொடர்கதை

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க.. வரும்வரை காத்திரு..1 , வரும்வரை காத்திரு..2.

நாங்கள் அனைவரும் சூழ்நிலையறிந்து அவருடைய பின்னால் ஓடினோம்.

அங்கே... அங்கே.. அப்போது என்னோட பிரியா மயக்கமுற்று கிடந்தாள். எல்லோரும் அவளை நினைவுக்கு கொண்டுவர போராடினோம். இதற்குள் அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டாங்க.

பிரியாவுக்கு மயக்கம் தெளிந்து கண்ணை திறக்க முயற்சித்தாள் அவளால் கண்திறக்க முடியவில்லை. வலியால் துடித்தாள்..

இதற்குள் காலேஜ் பூராவும் நியூஸ்பரவி பிரின்ஸ்பால் லேப்பில் இன்சார்ஜ்ஜில் இருந்த சாரிடம் "என்னாச்சி சார் எப்படி இது நடந்தது?.." கேட்டார். அப்போது அவர், "சார் அந்தபொண்ணு டெஸ்ட்டியூப்பில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் ஊற்றும்போது ஆசிட் பொங்கி கண்ணில் தெறித்துவிட்டது. உடனே நாங்கள் அவளை காப்பாற்ற முயற்சித்தோம். அவளால் கண்திறக்க முடியவில்லை" என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார். "அடடா.. மாணிக்கம் பொண்ணா!! இதுவெளிய தெரிஞ்சிதுன்னா காலேஜ் இமேஜ் கெட்டுரும். எப்படியாவது அவளை காப்பாற்றியாகணும்" என்று பிரின்ஸ்பாலும் அக்கறை எடுத்துக்கொண்டார்.

ப்ரியாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். நானும் என்நண்பனும் பைக்கில் ஆம்புலன்ஸ்க்கு பின்னால் சென்றோம்.

இந்த தகவல் அவளது பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் என்புள்ளைக்கு என்னாச்சி என்னாச்சி என்று கதறியபடி வந்தது மனதை உருக்கும்படியாக இருந்தது. என்நண்பர்களும் மற்றும் பர்ஸ்ட் இயர், செகண்ட் இயர் மாணவர்களும் ஆஸ்பத்திரியில் குழுமினோம். எல்லோரும் கவலையுடன் இறைவா ப்ரியாவை காப்பாற்று என்று வேண்டினோம்.

டாக்டர், "சார் ப்ரியா குணமாயிட்டாள். இந்த பொண்ணுக்கு ஆசிட் கண்ணுக்கு மிக அருகாமையில் பட்டிருந்ததால் கண்பார்வைக்கு எந்த பாதிப்புமில்லை. கண்ணில் விழுந்திருந்தால் கண்பார்வையை இழந்திருக்க வேண்டிருக்கும். இப்போது கண்ணை ரொம்ப அழுத்தக்கூடாது; கண்விரித்து பார்க்கக்கூடாது; ஒருமாத புல்ரெஸ்ட்டில் இருக்கவேண்டும். கொஞ்சகாலத்துக்கு கருப்பு கண்ணாடி அணியவேண்டும். இரண்டு நாள் கழித்து டிஸ்சார்ஜ் பண்ணிக்கிருங்க.." என்று டாக்டர் சொன்னதும்தான் அனைவருடைய முகத்தில் சந்தோசம் எட்டிப்பார்த்தது.

சிறிதுநேரம் கழித்து ப்ரியா கண்விழித்தாள். அவளுடைய அப்பாவும் அம்மாவும் தம்பியும் உள்ளே சென்றதும் நாங்களும் உள்ளே நுழைந்தோம். அவளுடைய பார்வை பக்கத்திலிருந்த அப்பா அம்மாவை பார்த்துட்டு முன்னால் நின்றிருந்த என்பக்கம் திரும்பியது. அவளுடைய கண்களிலிருந்து நீர் எட்டிப்பார்த்தது. நான் பார்வையாலே அவளுக்கு கவலைபடாதே என்று சொன்னேன். எங்களுடைய இருவிழிகளும் வார்த்தைகளை பரிமாறிக்கொண்டிருந்தோம்.

அவள் ஆஸ்பத்திரியில் இருந்த இரண்டு நாளும் காலையில் கல்லூரி செல்லும்முன் அவளை பார்த்துவிட்டுதான் செல்வேன். அவள் மனதளவில் பாதிக்கப்படிருந்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி தலையை தடவிவிட்டேன். அப்போது என்னை பற்றி அவங்கம்மா கேட்டதுக்கு என்னுடைய சீனியர் என்று அறிமுகம் செய்துவைத்தாள்.

பின்னர் ஒருமாதம் கழித்து முழுவதுமாக குணமாகி வந்தாள். எங்கள் காதல் ரொம்பவே நெருக்கமாகிருந்தது. ஒருவேளை எங்ககாதல் அவள் வீட்டுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு அதிகமாகவே இருந்தது.

எங்கவீட்டுக்கும் என்னுடைய காதல் தெரிந்து அப்பா ரொம்ப சத்தம்போட்டார். "டேய் நாமளே ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டுருக்கோம். இதுல வேற காதல் பண்றானாம் காதல். அவங்கல்லாம் பணக்காரங்கடா; நமக்கெல்லாம் ஒத்துவராதுடா.. நான் எத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் உன்னை படிக்கவச்சிருக்கேன். உன்னைய நம்பித்தான் நாங்க எல்லோரும் நம்பிருக்கோம். உனக்கெதுஆனாலும் எங்களால் தாங்கிக்க முடியாது. தயவு செய்து இந்த காதலை மறந்திடுடா.. உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றோம். இதுக்குமேல உன்னோட இஷ்டம்" என்று அப்பா சொன்னதுக்கு, "அப்பா எங்ககாதல் உறுதியானது.. என்ன ஆனாலும் சரி என்காதலிலிருந்து பின்வாங்கமாட்டேன். அதனால கவலைப்படாதீங்கப்பா" என்று உறுதியோடு சொன்னேன். அம்மாவும் "டேய் இந்தகாதல் கத்திரிக்காயெல்லாம் வேணான்டா" என்று வருத்தப்பட்டு சொன்னார். எதனைபற்றி கவலைப்படாமல் எங்கள்காதலில் உறுதியாக இருந்தோம்.

என்ன ஆனாலும் நடப்பது நடக்கட்டும் என்று அவள்வீட்டுக்கு சென்று அவளுடைய அப்பாவை பார்த்து பேசலாம் என்று கிளம்பினேன்.

ஆனால் அங்கே நடந்தது வேற..


தொடரும்....

,

Post Comment

15 comments:

 1. //
  என்ன ஆனாலும் நடப்பது நடக்கட்டும் என்று அவள்வீட்டுக்கு சென்று அவளுடைய அப்பாவை பார்த்து பேசலாம் என்று கிளம்பினேன்.

  ஆனால் அங்கே நடந்தது வேற..
  //சீக்கிரம்..பிரியா வீட்டில் நடந்தது என்ன?

  ReplyDelete
 2. கதை.. நல்லாருக்கு சார்

  ReplyDelete
 3. கதை பெயரே வரும் வரை காத்திரு,காத்திருக்கோம் அடுத்த இடுகைக்கு.

  ReplyDelete
 4. நானும் காத்திருக்கேன். அடுத்த பதிவு எப்ப வரும் சார்வாள்..?
  :-))

  ReplyDelete
 5. தொடருங்கள்:) நல்லாப் போகுது

  ReplyDelete
 6. ப்ரியாவோட அப்பா என்ன சொன்னாங்க??...

  ReplyDelete
 7. வருவம் வரை காத்திரு : காத்திருக்கோம் அடுத்த பாகம் எப்பவரும்? :)

  ReplyDelete
 8. ஆஹா..... டூயட் சாங், சோக சாங், எல்லாம் இருக்கும் போல. :-)

  ReplyDelete
 9. //அவங்கல்லாம் பணக்காரங்கடா; //

  நல்லது

  ReplyDelete
 10. //அவளுக்கு ஆறுதல் சொல்லி தலையை தடவிவிட்டேன்//

  டச்

  ReplyDelete
 11. அழகாக கதையை கொண்டு செல்கிறீர்கள்.
  தொடருங்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. ஸ்டார்ஜ‌ன் க‌தை ந‌ல்லா போகுது... தொட‌ருங்க‌ள்..

  ReplyDelete
 13. அடுத்த episode படிக்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 14. ஹா.. தொடரும்னு உள்ள வார்த்தைய கண்டுபிடித்தது யாருங்க,, உதைக்கணும்,, சரி சரி, அடுத்த கட்டம் என்னனு என்கிட்டே மட்டும் ரகசியமா சொல்லுங்க சார், நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேங்க. சீக்கிரம்!!

  ReplyDelete
 15. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே!!.. என்னுடைய இந்த தொடர்கதையை ஆர்வமுடன் படித்து என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் என் நன்றிகள்.

  ஸாதிகாக்கா @ நன்றி
  ரியாஸ் @ நன்றி
  ஆசியாக்கா @ நன்றி
  ஜெய்லானி @ நன்றி
  வானம்பாடிகள் பாலா சார் @ நன்றி
  அமைதிச்சாரல் அக்கா @ நன்றி
  அக்பர் @ நன்றி
  சித்ரா நன்றி
  தல சுரேஷ் @ நன்றி
  அபுல்பசர் @ நன்றி
  ஸ்டீபன் @ நன்றி
  இளம்தூயவன் @ நன்றி
  அப்துல்காதர் பாய் @ நன்றி

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்