Pages

Monday, December 28, 2009

வ(லை)ழியிலே எலி ...


ஏற்ற வைத்தாய் நீயே

அதில் மாட்டியதும் நீயே

இருப்பது பொறி என்று

அறியாமலே அழகான வடையை

நோக்கி நீ சென்றபோது

வாசம் வீசியதாலோ என்னவோ

நடப்பது தெரியாமல்

ஆட்டம் போட்டாய் !!

எங்கள் வீட்டினிலே

உன்னாலே தொல்லைகள்

அடைந்தேன் பலபல !!

உன் மிச்சத்தை நீ

தொட்டால் ஒண்ணுமில்லை !

எனக்குரியதை தொடும்போதுதான்

பொறுக்கலை.

நீ பேசுவது புரியல எனக்கு

உன் குரலோ கீச்சு கீச்சு

உன் பேச்சால் ஆகப்போவது

ஒன்றுமில்லை !!!

உன் மறு வருகையை எதிர்பார்த்து ....

Post Comment

24 comments:

  1. என்ன கவிதை திடீர்னு.

    யாரந்த எலி.

    ReplyDelete
  2. வாங்க அக்பர்

    பார்த்தாலே தெரியல மூஞ்செலின்னு ....

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. வாங்க வசந்த் ,

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. இப்பத்தான் நசரேயன் பக்கம்
    ஒரு எலி.இங்கயுமா !

    உண்மையாவே எலியா இல்லாட்டி எலிமாதிரிப் பெருச்சாளியா !

    ReplyDelete
  5. இந்த வாரம் எலி வாரமா ?

    ReplyDelete
  6. வாங்க ஹேமா ,

    ஒரு எலி தானா வந்து மாட்டிக்கிச்சு , என்ன செய்ய !

    ReplyDelete
  7. அருமையான கவிதை

    ReplyDelete
  8. எலி மாட்டிக்கிச்சா எலிகிட்ட நீங்க மாட்டிகிட்டிங்களா ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  9. வாங்க நசரேயன் ,

    ஒரே எலியா ...

    ReplyDelete
  10. வாங்க தியாவின் பேனா

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. உள்குத்து கவிதை மாதிரி தெரிகிறது. தப்பியது பெருச்சாளியா ? சுண்டெலியா ?

    :)

    ReplyDelete
  12. வாங்க நவாஸ் , எலியை தேடிக்கிட்டுருக்கேன் ...

    ReplyDelete
  13. வாங்க கோவி அண்ணே ! நலமா ...

    எலி தப்பிச்சிருச்சி

    ReplyDelete
  14. ஒண்ணும் புரியலை. ஏதாவது உள்குத்து இருக்குதோ?!

    ReplyDelete
  15. எலி மேல ரொம்ப கடுப்புல இருதீன்களோ...
    புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. வருகைக்கு நன்றி துபாய் ராஜா

    ReplyDelete
  17. வருகைக்கு நன்றி T.V.Radhakrishnan

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்