Pages

Wednesday, December 30, 2009

யாருண்டு ? ...



அலையே சிற்றலையே

என்ன வேகம் எங்கே போற !!

நாங்கள் உலா வருவது

பிடிக்கலியா உனக்கு ?

நான் அம்மாவிடம் பாப்கார்ன்

கேட்டபோது அம்மாவை காணோமே !

எங்கேன்னு கேட்க தெரியாது எனக்கு

பதில் வந்ததோ உன்னிடம் வந்தார்களென !

எனக்கு பசிக்கிறது ! சோறூட்ட யாருண்டு ?

ஐஸ்கிரீம் வாங்கித் தர யாருண்டு ?

என்னில் அன்பு செலுத்த யாருண்டு ?

பள்ளி அனுப்ப யாருண்டு ?

என்னைத் தாலாட்ட யாருண்டு ?

நீ எடுத்துக் கொண்டால் எனக்கென யாரு ?

உனக்கு அம்மா வேணுமின்னா

எங்கம்மாவை எடுத்துக்கிட்ட !!!

சொல்லு அலையே சிற்றலையே !!

உன் கோபத்துக்கு நாங்களா ...

நான் அம்மாவைத் தேடி

தினமும் வருவது தெரியலியா

நீ அனாதையென்றால்

நானும் ஆகணுமா அனாதை ?

திருப்பிக் கொடு அலையே

எங்கம்மாவை எனக்கு ....
*****************************************
இந்த பதிவு 2004 ல் டிசம்பர் 26 ல் சுனாமியால் இறந்தவங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் .

இறந்தவங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திப்போமா ....



Post Comment

14 comments:

  1. வருத்தத்திற்குரிய சம்பவம்.

    நானும் எனது அஞ்சலிகளை செலுத்துகிறேன்.

    ReplyDelete
  2. சிறுகுழந்தையின் வார்த்தைகளில் அருமையான அஞ்சலி கவிதை.

    வித்தியாசம் ஸ்டார்...

    ReplyDelete
  3. இப்ப நினைத்தாலும் மனம் ஒருதரம் நின்றே இயங்கத்தொடங்குகிறது.என் அஞ்சலியும் அவர்களுக்கு

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி நண்பர்களே

    அக்பர்

    டிவிஆர் சார்

    துபாய் ராஜா

    பிரதாப்

    டாக்டர்

    ஹேமா

    ReplyDelete
  5. என் அஞ்சலிகளும்.

    இப்படி ஏங்கிப் போய் எத்தனை உள்ளங்கள் :( ?

    ReplyDelete
  6. வருந்ததக்க நிகழ்வு

    எனது அஞ்சலிகள்

    ReplyDelete
  7. மனதை வருந்த வைக்கும் ஒரு நிகழ்வு !

    எல்லாத்தையும் இறைவன் காத்தருள பிராத்திக்கிறேன் !

    எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  8. மனதை வருந்த வைக்கும் ஒரு நிகழ்வு !
    எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  9. வருத்தம் தந்த நிகழ்வு சுனாமி அதை ஒரு குழந்தையின் குரலில் கேட்கும் போது பரிதவிப்பு அதிகமாகிறது ஸ்டார்ஜன்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நானும் எனது அஞ்சலிகளை செலுத்துகிறேன்.

    ReplyDelete
  11. வருகைக்கு மிக்க நன்றி நண்பர்களே !

    ராமலக்ஷ்மி மேடம்

    அபுஅஃப்ஸர்

    கட்டபொம்மன்

    Raja

    தேனம்மை அக்கா

    S.A. நவாஸுதீன்

    ReplyDelete
  12. இயற்கை அனர்த்தம்!

    பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்