கோவா படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறதாமே !!. எல்லோருமே இந்த படம் பார்த்து விட்டார்கள் . நான் நேற்றுத் தான் கோவா படத்தை பார்த்தேன் .பிறகு ஏண்டா இந்த படத்தை பார்த்தோம் என்றாகி விட்டது . நான் இந்த படத்தை ரொம்ப எதிர்பார்த்தேன் . நமக்கு எதிர்பாக்காதது நடக்கும் போது , நாம எதிர்பார்த்தது சர்வசாதாரணமாகி விடுகிறது . இது தான் வாழ்க்கையோட தத்துவமோ ...
கோவா படத்தில் ஜெய் , வைபவ் , பிரேம்ஜி அமரன் ஆகியோர் பஞ்சாயத்தில் நிற்பது போல ஆரம்பம் ஆகிறது . ஆரம்பமே அசத்தலா இருக்கே என்று நினைத்தது தப்பானது . அதிலிருந்து தப்பிக்கும் மூவரும் வீட்டில் உள்ள பணம் நகை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடுகின்றனர் . பின்னர் மதுரைக்கு வரும் அவர்கள் அவர்கள் ஊர் நண்பர் கல்யாணத்தில் கலந்துகொள்கின்றனர் . மணப்பெண் வெளிநாட்டுக்காரி . திகைத்து போகின்றனர் . லொப்பையான நண்பனான அவனுக்கே வெளிநாட்டுக்காரி கிடைக்கும் போது நமக்கு கிடைக்காதா என்ன என்று மூவரும் கோவாவிற்கு பயணப்படுகிறார்கள் .
அங்கே அவர்களுக்கு அரவிந்து நட்பு கிடைக்கிறது . அவர் ஒரு ஹோமோசெக்ஸ் எண்ணம் கொண்ட சம்பத்துக்கு ஜோடி . இவர்களும் சம்பத்திடம் மாட்டிக் கொள்ள முடிவு என்ன ஆனது , நண்பர்கள் ஊர் திரும்பினார்களா இல்லையா என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வந்திருக்கும் இந்த படத்தில் ஜெய் , வைபவ் , பிரேம்ஜி அமரன் , ஸ்னேகா , பியா மற்றும் பிரேம்ஜியின் வெளிநாட்டுக்காரி , சண்முக சுந்தரம் , விஜயகுமார் , சந்திரசேகர் என ஒரு பட்டாளமே நடித்து இருக்கிறார்கள் .
படம் ஆரம்பத்து காட்சிகள் ரொம்ப நல்லாருக்கு . பஞ்சாயத்து காட்சிகள் அரதபழசு என்றாலும் ரசிக்க வைக்கிறது . அதிலும் பிரேம்ஜி எப்படி சாமிப்பிள்ளையானார் என்பதற்கு பிளாஸ்பேக் காட்சிகள் ரொம்ப நல்லாருக்கு .
இன்னும் சண்முக சுந்தரம் பழைய நடிப்பை மறக்க வில்லை என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார் .
ஜெய் இன்னும் அப்பாவி பையன் போல இருக்கிறார் . அவருக்கும் பியாவுக்கும் ஆன காதல் காட்சிகள் மனதில் ஒட்டவில்லை .
அதேபோல வைபவ் , ஸ்னேகா காட்சிகள் ரொம்பவே கண்றாவியா இருக்கு .
அப்ப யாரு ஹீரோ அட நம்ம பிரேம்ஜி தான் . என்னக் கொடுமை சார் இது ? ...
தன் தம்பிக்குன்னு படம் எடுத்த அண்ணன் வெங்கட் பிரபு வாழ்க . அவர் இயக்கிய மற்ற 2 படங்களின் பாதிப்பு ரொம்பவே இருக்கு . சரோஜாவில் இதே கதை தான் . நண்பர்கள் கிரிக்கெட் நேரடியாக பார்க்க பெங்களூர் போகும் போது ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள் . அதே போல தான் இதிலும் ஜாலிக்காக கோவா செல்லும் இவர்கள் ஹோமோ செக்ஸ் எண்ணம் கொண்ட சம்பத்திடம் சிக்கிக் கொள்கிறார்கள் .
கோவா என்றாலே ஜாலி என்பது தான் நினைவுக்கு வரும் . திரைப்படம் கோவா என்றால் நமக்கு எரிச்சல் தான் நினைவுக்கு வருகிறது . எப்படி எடுத்திருக்க வேண்டிய கதைக்களம் . வெங்கட்பிரபுக்கு மிஸ்ஸாகி விட்டது .
இந்த படத்தில் சொல்லி இருக்கும் ஹோமோசெக்ஸ் அந்தளவுக்கு வரவேற்பை பெற வில்லை .
இன்னொரு முக்கியமான விஷயம் யுவன்சங்கர்ராஜா . இசையிலும் பிண்ணனி இசையிலும் எப்போதுமே கலக்கிக் கொண்டிருக்கும் யுவனுக்கு இந்த படம் கொஞ்சம் பின்னடைவு .
மொத்தத்தில் இந்த படத்தை ஒரு தடவை பார்க்கலாம் .
கோவாவுக்கு ஜாலியாக டூர் போகும் எண்ணம் கொண்டவர்கள் , போவதற்கு முன்னர் இந்த படத்தை பார்த்துறாதீங்க . அப்புறம் எண்ணமெல்லாம் மாறிடும் .
கோவா _ ரசிகனின் புலம்பல் = ஜாலியை தொலைத்தது திரும்ப கிடைக்குமா ?...
**********************************************
இன்று தல அஜித் நடித்து வெளியாகி இருக்கும் அசல் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துவோம் .
விரைவில் எதிர்பாருங்கள் உங்கள் தமிழ் படத்தை ...
நல்ல விமர்சனம் ஸ்டார்ஜன்.
ReplyDeleteசூப்பர் விமர்சனம் ஸ்டார்ஜன் .
ReplyDeleteஅருமை .
ரொம்ப போர் படம்.
ReplyDeleteவிமர்சனம் நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்.
ReplyDeleteவெங்கட் பிரபு அடுத்த படத்தில் இதை விட நல்ல செய்ய வேண்டும்.
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல விமர்சனம் .
ReplyDeleteநல்ல பார்வை
ReplyDeleteஅடுத்தவாரம் அசல் விமர்சனமா?
//கோவா என்றாலே ஜாலி என்பது தான் நினைவுக்கு வரும் . திரைப்படம் கோவா என்றால் நமக்கு எரிச்சல் தான் நினைவுக்கு வருகிறது . எப்படி எடுத்திருக்க வேண்டிய கதைக்களம் . வெங்கட்பிரபுக்கு மிஸ்ஸாகி விட்டது//
ReplyDeleteநன்றி ஸ்டார்ஜன் விமர்சனத்துக்கு
//நமக்கு எதிர்பாக்காதது நடக்கும் போது , நாம எதிர்பார்த்தது சர்வசாதாரணமாகி விடுகிறது . இது தான் வாழ்க்கையோட தத்துவமோ ...//
ReplyDeleteஸ்டார்ஜன்...தத்துவமா வருதா இந்தப் படம் பாத்து !
சூப்பர் விமர்சனம் ஸ்டார்ஜன் .....
ReplyDeleteஹேமா said...
ReplyDelete//நமக்கு எதிர்பாக்காதது நடக்கும் போது , நாம எதிர்பார்த்தது சர்வசாதாரணமாகி விடுகிறது . இது தான் வாழ்க்கையோட தத்துவமோ ...//
ஸ்டார்ஜன்...தத்துவமா வருதா இந்தப் படம் பாத்து //
அதானே..:) ஆனாலும் படம் நல்ல தத்துவத்த தான் தந்திருக்கு..:))
ஊருக்கு போயி பார்க்கலாம்னு இருந்தேன். வேனாம்னு சொல்லிட்டீங்க. சரி விடுங்க.
ReplyDelete//கோவாவுக்கு ஜாலியாக டூர் போகும் எண்ணம் கொண்டவர்கள் , போவதற்கு முன்னர் இந்த படத்தை பார்த்துறாதீங்க . அப்புறம் எண்ணமெல்லாம் மாறிடும்//
ReplyDeleteஅப்படியா, ரைட்... :))
கோவா,படத்தை அக்கு வேறா,ஆணிவேரா, பிரிச்சு மேஞ்சுட்டிங்க சேக்.
ReplyDeleteநல்ல விமர்சனம்.
தல படம் எப்படி.சொல்லுங்க. புருனையில் அதுதான் இப்பம் ஓடுகிறது.
உங்கள் விமர்சனம் படித்துவிட்டுதான் படம் பார்கபோகவேண்டும்.
//விரைவில் எதிர்பாருங்கள் உங்கள் தமிழ் படத்தை //
ReplyDeleteரைட்...
வாங்க
ReplyDeleteசெ.சரவணக்குமார் @ நன்றி
Raja @ நன்றி
gulf-tamilan @ சரியா சொன்னீங்க ..
அக்பர் @ நன்றி , பார்ப்போம் என்ன செய்கிறார் என்று ...
கட்டபொம்மன் @ நன்றி மன்னா
பிரியமுடன்...வசந்த் @ நன்றி வசந்த் @ விரைவில் எதிர்பாருங்கள் அசலை
thenammailakshmanan @ நன்றி தேனம்மை அக்கா
ஹேமா @ ஆமாம் ஹேமா
Sangkavi @ நன்றி
ஷங்கர்.. @ அதானே..:-))
S.A. நவாஸுதீன் @ நன்றி நவாஸ்
சைவகொத்துப்பரோட்டா @ முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அபுல் பசர் @ ரொம்ப நன்றி சார் , விரைவில் எதிர்பாருங்கள் அசலை
ஜெட்லி @ ரைட்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
எதிர் பார்த்த அளவுக்கு கோவா இல்லை என்பதே உண்மை..............வெங்கட் பிரபு முதல் முறையாக சறுக்கியிருக்கிறார்.....பாவம் சூப்பர் ஸ்டார் பொண்ணு
ReplyDeleteவாங்க
ReplyDeleteஅத்திரி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
சரிப்பா நான் பார்க்கலை :) நல்ல விமர்சனம்.
ReplyDeleteவாங்க
ReplyDeleteSUFFIX
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி