Pages

Wednesday, February 24, 2010

சச்சின் - வாழ்த்துக்களை பகிர்வோம்

வாழ்த்துக்களை பகிர்வோம் - சச்சின்

இன்று குவாலியரில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சச்சின் அவுட் ஆகாமல் ஆட்டத்தின் ஆரம்பம் முதல் நிறைவு வரை நின்று 147 பந்துகளில் 200* ரன்கள் எடுத்து உலக சாதனை புரிந்துள்ளார்.

நாம் அனைவரும் அவருக்கு இந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.

நான் இன்று சச்சினின் ஆட்டத்தை கண்டு ஆனந்த களிப்புற்றேன். இதற்காக சமையல்கூட செய்யவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நானும் அக்பரும் இன்று மதியம் ஓட்டலில் சாப்பிட்டோம். சச்சினை சும்மா சொல்லக்கூடாது என்னே ஒரு அதிரடி ஆட்டம். ஒவ்வொரு ஷாட்டும் ரொம்ப கிளாசிக்.

ஒவ்வொருவரும் சச்சினை ஏன் ரோல்மாடலாக விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்?. அவருடைய தன்னம்பிக்கை , உழைப்பு , தோல்வியைக் கண்டு மனம்துவளாமை இதெல்லாம் அவருடைய வெற்றிக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது. அது போல அவருக்கு எதிரான விமர்சனங்களை கண்டு மனம் துவளமாட்டார். பேட்டால் தான் பதில் சொல்வார்.

சச்சின் ஒரு சகாப்தம். பாகிஸ்தான் வீரர் சையத் அன்வர் 1997 ல் இந்தியாவுக்கு எதிராக எடுத்திருந்த 194 ரன்கள் தான் சாதனையாக முறியடிக்கப்படாமல் இருந்தது. இன்று இந்த சாதனையை சச்சின் முறியடித்து சாதனை புரிந்தார். சச்சின் 200 ரன்கள் எடுத்திருந்தபோது டிவியில் ஏ ஆர் ரகுமானின் ஜெயஹோ பாடல் பின்னணியில் ஒலித்தது ரொம்ப பெருமையாக இருந்தது.


வாங்க நண்பர்களே ! சச்சினுக்கு நம்முடைய வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வோம்.

Post Comment

26 comments:

  1. சச்சினுக்கு வாழ்த்துக்கள், ஸ்டார்ஜன், நீங்க சமைப்பதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது :))

    ReplyDelete
  2. அண்ணே சயீத் அன்வரின் சாதனையை ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் போன வருடம் சமன் செய்தார்.............

    சச்சினுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கிரிக்கெட் குறித்த அறிவு அதிகமில்லாதபோதிலும், ஒரு இந்தியன் உலக சாதனை ஏற்படுத்திய பெருமிதத்தில் நானும் பங்கேற்கிறேன். வாழ்க சச்சின் டெண்டுல்கர்!

    ReplyDelete
  4. சச்சினுக்கு என்னுடைய வாழ்த்துகளும்.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்....சச்சின்.

    நானும் பார்த்தேன்,,, சிலிர்த்தேன்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் உங்களுக்கும் சேர்த்து.

    ReplyDelete
  7. வாழ்த்துகள் சச்சினுக்கு

    ReplyDelete
  8. வாழ்த்துகள் சச்சினுக்கு

    ReplyDelete
  9. 49.2 வது பந்து நான்காக ஆகியிருந்தால் எப்படி இருக்கும்?

    ReplyDelete
  10. சச்சினுக்கு என்னுடைய வாழ்த்துகளும்.

    ReplyDelete
  11. http://sshathiesh.blogspot.com/

    சச்சினுக்கு வாழ்த்துக்கள். இதையும் கொஞ்சம் படிக்கலாமே.

    ReplyDelete
  12. சச்சின் ஒரு சகாப்தம்.

    ReplyDelete
  13. சச்சினுக்கு வாழ்த்துகள்


    //SUREஷ் (பழனியிலிருந்து) said...
    49.2 வது பந்து நான்காக ஆகியிருந்தால் எப்படி இருக்கும்?//

    உம்ம வாயில ஈயத்தக் காச்சி ஊத்த.. :)

    ReplyDelete
  14. சரித்திர நாயகன் சச்சின்...என்னுடைய வாழ்த்துக்களும்

    ReplyDelete
  15. நண்பரே சச்சினுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  16. ManA ©
    சைவகொத்துப்பரோட்டா
    அத்திரி
    சேட்டைக்காரன்
    அக்பர்
    சி. கருணாகரசு
    கட்டபொம்மன்
    Raja
    SUREஷ் (பழனியிலிருந்து)
    நினைவுகளுடன் -நிகே-
    SShathiesh
    அஹோரி
    மதி சூடி
    முகிலன்
    நாடோடி
    Tech Shankar
    தேவன் மாயம்

    வருகை தந்து சச்சினுக்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  17. சாதனை நாயகனுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. "சாதனை சிங்கம்" சச்சினுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. சச்சினுக்கு வாழ்த்துக்கள் சொன்ன

    அபு அஃப்ஸர்

    துபாய்ராஜா

    நண்பர்களுக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  20. வாங்க தேனம்மை அக்கா

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  21. வாங்க‌ Bogy.in

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்