பெண்ணே என்னை நீ
பார்க்கும் பார்வைகள்
அர்த்தமுள்ளதா
நீயே சொல்லு ..
முதல் பார்வையில்
நான் உன்னில்
அறிமுகமானேனே
நம் திறமைகள் வெளிப்பட
நானோ முந்திக் கொள்ள
உன் பார்வையோ
நான் ( நீ ) முந்த
மாட்டோமா என்று ...
நம் பார்வைகள் தொடர
நண்பர்களும் விரும்பினரே
இரண்டாம் பார்வையில்
நான் உன் அருகே வர
உனக்கு நெருக்கமான என்
நண்பனைக் கொண்டு
உன் இல்லம் தேடி
வந்தேன் உன் பார்வையின்
அர்த்தம் தெரிந்து கொள்ள ..
அப்போது உன் பார்வையோ
மிகுந்த சந்தோசமாய்
கண்டேனே ...
மூன்றாம் பார்வையில்
நான் வேறாக நீ வேறாக
பிரிந்தோமே ...
அப்போது உனக்கு என்
தரிசனத்தை தர
உன் இல்லத்தை
சுற்றி சுற்றி
வந்தேனே அடுத்த
பார்வையின் அர்த்தம்
தெரிந்து கொள்ள ..
நான்காம் பார்வையில்
நானும் நீயும் சந்தித்தோமே
பஸ் ஸ்டாப்பில் வெகு
காலத்துக்கு பின்...
அப்போது என்னிடம்
பேச விழைந்தாயே
ஏன்டி என்னப்பேச்சு
என்ற வார்த்தைகள்
உன் அம்மாவிடம் ..
உன் பார்வையின்
அர்த்தத்தை தெரிந்துகொள்ள
நீ செல்லும்
பஸ்ஸில் நானும் வர
எத்தனிக்கயில்
தாமதமாக்கினானே
என் தம்பி அவன் வரவை...
ஐந்தாம் பார்வையில்
உன்னைக் கண்டேனே
கையிலும் இடுப்பிலும்
குழந்தைகளாய் உன்னிடம் ..
நானோ அதிர்ச்சியாய் !!
அப்போது உன்
பார்வையின்
அர்த்தத்தை தெரிந்து
கொள்ள நான் வந்தேனே
ஆட்டோகிராப் சேரன்
போல சைக்கிளில் ...
இப்போது உன் பார்வையின்
அர்த்தத்தை தெரிந்து
கொண்டேனே உன்னில்
ஒரு வித ஏக்கமாய் ....
ஒரு காதல் கதை . ஒரு பெண் தன் மனதில் நினைத்ததை சொல்ல முடியாமல் தவிக்கும் கதை . அவள் சொல்ல வரும் நேரமெல்லாம் சூழ்நிலை கைதியாகிறாள் .
ReplyDeleteஅனைவருக்கும் என் இனிய காதலர்தின வாழ்த்துக்கள் .
சில காதல்கள் சொல்லமுடியாமல் போய் விடுவது சோகம்.
ReplyDeleteசொல்லிய காதலை விட சொல்லாத காதல் என்றென்றும் மறக்காது.
அருமை ஸ்டார்ஜன். ஒரு பெண்ணின் ஏக்கத்தை அருமையாக வெளிப்படுத்திருக்கிறீர்கள்.
நல்ல அழகான பதிவு...
ReplyDeleteஎப்படி இதெல்லாம் ... முடியல ... ஸ்ப்பா .
ReplyDeleteகாதல் கவிதைக்கு இவ்வளவு டெரரா ஒரு படமா?
ReplyDeleteஓவர் ஃபீலிங்ல இருக்குறீங்கன்னு நெனைக்கிறேன் சேக்.
//ஒரு காதல் கதை . ஒரு பெண் தன் மனதில் நினைத்ததை சொல்ல முடியாமல் தவிக்கும் கதை . அவள் சொல்ல வரும் நேரமெல்லாம் சூழ்நிலை கைதியாகிறாள் . ///
ReplyDeleteஇத தான் தல எதிர்பார்த்தேன்...சூப்பர்..கலக்கிட்டீங்க..
///காதல் கதை///
ReplyDeleteஆனால் அமலா சாகுற போட்டோ..
கவிதை ரொம்ப நல்லா இருக்கு தொடருங்கள்...
பார்வையில் கவிதை கதையா, நல்லா இருக்கு.
ReplyDelete//ஐந்தாம் பார்வையில்
ReplyDeleteஉன்னைக் கண்டேனே
கையிலும் இடுப்பிலும்
குழந்தைகளாய் உன்னிடம் ..
நானோ அதிர்ச்சியாய் !!
//
பார்வைக்க்கு இடைவெளி ரொம்ப அதிகம் ஆயிடுச்சோ..,
நல்லாவே பீல் பண்ணியிருக்கீங்க
ReplyDeleteஅருமை ஸ்டார்ஜன்
ReplyDeleteஎல்லா வரிகளும் அருமையாக சொல்லியிருக்கிங்க//அவள் சொல்ல வரும் நேரமெல்லாம் சூழ்நிலை கைதியாகிறாள் //பெண் என்றால் அப்படிதானே..ஸ்டார்ஜன்
ReplyDeleteஅருமை காதலியின் காதலை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கீங்க ஸ்டார்ஜன் . மிக அருமை . வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன் .
ReplyDeleteஅதுக்குதான் அப்போவே சொன்னே பார்த்தால்மட்டும் போதாது பேசிடுங்க்னு, இப்போ பாருங்க ஒரு பதிவு எழுதறளவிற்கு போய்டுச்சி
ReplyDeleteபார்வை ஒன்றே போதும் நு இருந்திட்டீங்களோ?
நல்லாயிருக்கு
பல்லாயிரம் சொல் வேண்டுமா?
ReplyDeleteகலக்கல் தல!
அருமயான வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDelete!
வாங்க
ReplyDeleteஅக்பர்
அண்ணாமலையான்
கட்டபொம்மன்
தியாவின் பேனா
செ.சரவணக்குமார்
நாடோடி
கமலேஷ்
சைவகொத்துப்பரோட்டா
SUREஷ் (பழனியிலிருந்து)
அத்திரி
T.V.ராதாகிருஷ்ணன்
சிநேகிதி
Raja
அபுஅஃப்ஸர்
ஜெகநாதன்
வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!!
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே
இதுக்குத்தான் பார்வை மட்டும் பத்தாது ,சட்டு புட்டுன்னு கேட்டோமா க்ளாரிஃபை பண்ணினோமான்னு இருக்கணும்...
ReplyDeleteபார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா ...
ReplyDeleteஸ்டார்ஜன் .,சுரேஷ் பழனியிலிருந்து கேட்டபடி இடைவெளி அதிக மாயிருச்சோ..!!
வாங்க கோமா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க தேனம்மை அக்கா
ReplyDeleteஆமாக்கா கொஞ்சம் வருசமாச்சு ...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
சொல்லாத காதல் ஒரு சுகமான உணர்வு.., காமம் கலக்காத்து.., என்றும் மற்க்காதது..,
ReplyDeleteவாங்க பேநா மூடி
ReplyDeleteசரியா சொன்னீங்க பேநாமூடி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ரொம்பக் காதல் வழியுது ஸ்டார்ஜன்.
ReplyDeleteவாங்க ஷங்கி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி