Pages

Thursday, February 25, 2010

பதின்ம வயது நினைவுகள் - தொடர்பதிவு

பதின்ம (டீன்ஏஜ்)கால நினைவுகள் . அண்ணன் கோவி.கண்ணன் அவர்கள் என்னை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளார். அது டீன்ஏஜ் பருவமான 13 முதல் 19 வயது வரையிலான பள்ளி கல்லூரி கால நினைவுகளை பற்றி எழுத வேண்டும்.

எனக்கு 13 வயது ஆகும்போது எட்டாம்வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எட்டாம்வகுப்பு பி பிரிவில் புதிதாக சாந்தா டீச்சர் எங்களுக்கு வகுப்பாசிரியராக வந்தார். அக்பர் எட்டாம்வகுப்பு அ பிரிவு. அவங்களுக்கு தலைமையாசிரியர் பெலிக்ஸ் சார் தான் வகுப்பாசிரியர். எங்கள் பள்ளியின் மாணவர் தலைவனாக என் வகுப்பை சேர்ந்த லட்சுமிசங்கர் இருந்தான் . அவன் ஒரு மாதத்தில் வேறு பள்ளிக்கு சென்று விட்டான். அதனால் பள்ளியின் புதிய மாணவர் தலைவன் தேர்ந்தெடுப்பது பற்றி விவாதம் நடைபெற்றது. நான் பெலிக்ஸ் சாரிடம் சார் நான் மாணவர் தலைவனாகிறேன் என்றேன். சரி என்று என்னை நியமித்தனர். எனக்கு அந்த பதவி ஒத்துவரவில்லை, அதனால் நான் விலகிக் கொண்டேன் . அந்த பதவிக்கு அக்பர் வந்தார்.

எட்டாம்வகுப்பு வந்ததும் என்னுடன் படிக்கும் சில மாணவிகளில் மாற்றங்களை கண்டேன். தாவணியெல்லாம் போட்டு வந்தனர். அவர்களில் ஒரு மாணவி என் நெருங்கிய தோழி. அவளை பார்த்ததும் என்ன அக்கா சவுக்கியமா என்றேன். எல சேக், அடிவாங்காதே ! என்ன அக்கா , பேரச்சொல்லி கூப்பிடு என்றாள் . எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஆண்டுவிழாவில் மாறுவேடப் போட்டியில் சின்ன வயதிலிருந்தே எனக்கு படிப்பில் ரொம்ப ஆர்வம் உண்டு. கருத்தாய் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றேன்.

நான் படித்த புனித அந்தோணியார் பள்ளி நினைவுகளில் இன்றும் மறக்க முடியாதது நான் ஆண்டுதோறும் ஆண்டுவிழாவில் பரிசு வாங்குவது.

நான்காம் வகுப்பில் படிப்புக்கான முதல் பரிசு .

ஐந்தாம் வகுப்பில் படிப்புக்கான முதல் பரிசு.

ஆறாம் வகுப்பில் மாறுவேடப்போட்டியில் முதல் பரிசு.

எட்டாம் வகுப்பில் மாறுவேடப்போட்டியில் முதல் பரிசும் படிப்புக்கான இரண்டாம் பரிசு.

நான் படித்த புனித அந்தோணியார் பள்ளி ஒரு நடுநிலை பள்ளி . அதனால் ஒன்பதாம் வகுப்பு படிக்க வேறு பள்ளிக்கு செல்ல வேண்டும்.

அதனால் எங்கப்பா என்னை எங்கள் ஊரில் ஆண்கள் மேல்நிலைபள்ளியான காமராஜர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் சேர்த்து விட்டார்கள். அந்த பள்ளிக்கு சேர்வதற்க்கு முன்னால் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்று அந்த பள்ளியில் சேர்ந்தேன்.

அந்த பள்ளியில் ஒன்பதாம்வகுப்பில் பி பிரிவில் என்னுடன் ஐந்துவரை படித்த என் நண்பன் நாகூர் மீரான் படித்தான். அவனைப் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி . சார் 9 சி ப்ரிவில் என்னை சேர்க்க பதிவிட போனார் . உடனே நான் சார் என்னை 9 பி சேர்த்துடுங்க என்றேன் .

முதல் நாள் சேர்ந்ததும் மதியஉணவு இடைவேளை முடிந்து முதல் பாட வகுப்பு ஆரம்பித்தது . எனக்கு தண்ணீர் தாகம் எடுத்ததால் கிளாஸ்லீடர் மகேஷ்ஷிடம் சொல்லிட்டு தண்ணீர் குடித்துவிட்டு திரும்புவதற்குள் சார் வந்திட்டார். பள்ளிரூல்ஸ் எனக்கு தெரியாதா , விறுவிறுவென உள்ளே போயிட்டேன். உடனே சார் எல உள்ளே வரும்போது சொல்லிட்டு வரணுன்னு தெரியல அறிவிருக்கா என்று என்னை அடிக்க கையை ஓங்கினார். உடனே மகேஷ் சார் சார் அவன் நியூஅட்மிஷன் என்று சொல்லி காப்பாத்தினான். ஓ அந்தமூதியா போய்த்தொல என்று திட்டி அனுப்பினார். அதுமுதல் நான் எங்கு சென்றாலும் உள்ளே வரலாமான்னு கேட்டுட்டுதான் உள்ளே போவேன்.


எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு ரோட்டுவழியாப் போனா நாலு கிலோமீட்டர். அதனால நானும் நாகூர் மீரானும் பள்ளிக்கு பொட்டக்குளம் வழியா நடந்தே பள்ளிக்கு செல்வோம்.

அந்த பள்ளியில் வளர்ந்தபையனெல்லாம் கலர் பேண்ட் போட்டு உள்ளே காக்கி டவுசர் போட்டுட்டு வருவாங்க. நான் டவுசர் மட்டும் தான் போட்டுட்டுபோவேன். ஏன்னா நான் கட்டையாத்தான் இருப்பேன். 11ம் வகுப்புக்குத் தான் பேண்ட் போட்டுவரணும்.

படிப்பில் கவனம் செலுத்தி படிக்க ஆரம்பித்தேன். பொதுவா மாநகராட்சி பள்ளிகளில் படிப்பு நல்லாச் சொல்லித் தரமாட்டாங்க. ஒப்பேத்துவாங்க, பசங்க ரவுடி பையன்களா ஆவாங்க‌ன்னு நிறைய கேள்விகள் உண்டு. ஆனால் இந்த காமராஜர் பள்ளி ஒரு விதிவிலக்கு . நல்ல கற்பித்து கண்டிப்பான ஆசிரியர்கள். கஷ்டப்படும் மாணவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் , உதவி செய்யும் ஆசிரியர்கள் என்று ஆசிரிய ‍_ மாணவ பந்தம் ரொம்ப அருமையாக இருந்தது.


************************************


நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கேன் என்றால் எங்கப்பாதான் என்று சொல்வதில் எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது.

அப்பா என்னை பள்ளியில் சேர்க்கப்போகிறாரா இல்லை குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு அனுப்பப்போகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் எங்கப்பா என்னை படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்ற எண்ணம் . நாம் தான் படிக்க வில்லை , தன் மகன் படிக்க வேண்டும் என்று கஷ்டமான சூழ்நிலையிலும் என்னை படிக்க வைத்தார் .

அப்பாவுடைய உழைப்பு , தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் என்னுடைய ஆர்வம் , படிப்பில் ஆர்வம் இதெல்லாம் சேர்ந்து என்னை கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற வைத்தது. அதுமட்டுமல்ல என்னை படிக்க வைத்தது போல என் தங்கை தம்பிகளையும் எங்கப்பா அம்மா படிக்க வைத்தனர். ஊரில் எங்கள் தெருவில் உள்ள சில பணக்காரர்கள் உதவி செய்தனர். அவர்களையும் இந்த நேரத்தில் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன்.

அப்பாவுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
அப்பா எப்போதும் என்னிடம் ஒரு நண்பனைப்போல நடந்து கொள்வார் . ஆனால் கண்டிக்கவேண்டிய நேரத்தில் மிகுந்த கண்டிப்பு உண்டு.

அப்பா இப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கின்றார். ஜின்னா மகனா அவன் நல்ல பையன்ன்னு பேர் வாங்கனும் . நாலுபேர் மதிக்க நாமும் வாழ்ந்து காட்டணும் . கெட்டவன்ன்னு ஒரு நிமிஷத்துல பேர் வாங்கிடலாம் ; ஆனால் நல்லவன்ன்னு பேர்வாங்க ரொம்ப நாளாகும் என்று சொல்வார். எந்த காரியத்தை செய்யும்முன் அப்பாவிடம் சொல்லி ஆலோசனை கேட்டுத்தான் செய்வேன்.


*********************************



இந்த தொடரை எழுத அழைத்த அண்ணன் கோவி.கண்ணனுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த தொடரை தொடர்ந்து இவர்கள் எழுதுவார்கள்.


1. நண்டு@நொரண்டு (எ) ராஜசேகர் சார்.

2. சேட்டைக்காரன்

3. சைவக்கொத்துப்பரோட்டா

4. அத்திரி

5. அபுல் பசர் - சின்ன சின்ன ஆசைகள் .



டிஸ்கி: மேலே உள்ள படத்தில் நான் இல்லை. ஏன்னா இது இணையத்தில் எடுத்தது.

Post Comment

47 comments:

  1. //நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கேன் என்றால் எங்கப்பாதான் என்று சொல்வதில் எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது.//

    கண்டிப்பா. ஒவ்வொருவருக்கும் அவரது அப்பாதான் ரோல் மாடல்.

    //நான் பெலிக்ஸ் சாரிடம் சார் நான் மாணவர் தலைவனாகிறேன் என்றேன். சரி என்று என்னை நியமித்தனர். எனக்கு அந்த பதவி ஒத்துவரவில்லை, அதனால் நான் விலகிக் கொண்டேன் . அந்த பதவிக்கு அக்பர் வந்தார்.//

    ஆமா பொல்லாத பதவி. மாச மாசம் சம்பளம் கொடுத்தாங்க பாரு.

    //டிஸ்கி: மேலே உள்ள படத்தில் நான் இல்லை. ஏன்னா இது இணையத்தில் எடுத்தது.//

    ஆமா யூனி பார்ம் இது இல்லையேன்னு அப்பவே நினைச்சேன்.

    நல்ல நினைவலைகள் சேக்.

    ReplyDelete
  2. நீங்கள் கல்வியில் சிறந்தவர் என்பது தெரிகிறது, வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.
    என்னையும் மாட்டி வுட்டுடீங்களே அய்யா.... அவ்......அவ்.......
    நான் பழைய ட்ரன்க் பொட்டிய, திறக்கணும், சிறிது அவகாசம் கொடுங்கள்.

    ReplyDelete
  3. //என்ன அக்கா சவுக்கியமா என்றேன். எல சேக், அடிவாங்காதே //

    பதின்ம் வயது என்றுமே பசுமையானது தான்,

    ReplyDelete
  4. மலரும் நினைவுகளா? நல்லா இருக்கு..ஸ்டார்ஜன்

    ReplyDelete
  5. அது ஒரு கனாக்காலம்ணே................

    என்னய மாட்டிவிட்டுட்டீங்களே..............

    ReplyDelete
  6. பகுத் அச்சாஹே. இதுக்குமேல சொல்ல எனக்கு ஹிந்தி தெரியாது :)

    ஆமா நீங்க படிச்சது எந்தூர்லண்ணே??

    ReplyDelete
  7. //டிஸ்கி: மேலே உள்ள படத்தில் நான் இல்லை. ஏன்னா இது இணையத்தில் எடுத்தது.//

    அப்படியா?? நானும் அந்த மஞ்ச சட்டைபோட்ட பையன் நீங்கன்னு நினைச்சேன்... :)

    ஏதோ ஸ்கூல் பாடத்தை மனப்பாம் பண்ணி சொன்னமாதிரி இருந்தது குரு...

    ReplyDelete
  8. உங்க வாழ்க்கை வெற்றிகளுக்கு, கடின முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. //நாலுபேர் மதிக்க நாமும் வாழ்ந்து காட்டணும் . கெட்டவன்ன்னு ஒரு நிமிஷத்துல பேர் வாங்கிடலாம் ; ஆனால் நல்லவன்ன்னு பேர்வாங்க ரொம்ப நாளாகும் என்று சொல்வார். எந்த காரியத்தை செய்யும்முன் அப்பாவிடம் சொல்லி ஆலோசனை கேட்டுத்தான் செய்வேன்.//

    தந்தை சொல் மந்திரமா வாழ்ந்திருக்கீங்க, தந்தை/மகன் உறவைப்பற்றி மோசமாக நிறைய சினிமாக்கள் வருவதும், தோழர்களிடையேயும் இந்த பழக்கம் இருந்தாலும் ஷேக் இதிலேர்ந்து விதிவிலக்கா இருப்பது பெருமையே

    பள்ளிகால வாழ்க்கையை நினைவுகூர்ந்த விதம் அருமை

    ReplyDelete
  10. பள்ளிக்கால நினைவுகள் ரொம்ப அருமை.

    ReplyDelete
  11. தங்களின் பள்ளிவருவத்தை பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி சேக்.
    அந்த பதின்ம பருவம் பசுமை மாறா நினைவுகளை உள்ளடக்கிய பருவம்.
    துள்ளி திரிந்த பள்ளிக்காலம்.மறக்க முடியாத நாட்கள்.
    நீங்கள் எனக்கு அழைப்பு விடுத்து என்னை இதில் மாட்டி விட்டு இருக்கிறீர்கள்.
    முயற்சிக்கிறேன்.முடியாதது எதுவும் இல்லை. நம்பிக்கையுடன்.

    ReplyDelete
  12. என்ன நீங்க படிப்ப்ஸ்ஆ??...
    லவ் கிவ்லாம் இல்லையா.....

    ReplyDelete
  13. உங்களூர் எது? பொட்டக்குளம் எங்கே இருக்கிறது?

    குட்டை என்ற் சொல்லை ‘கட்டை’ என்பது திருனெல்வேலி அல்லது தூத்துக்குடி மாவட்ட ஊர்களில் மட்டுமென நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. வாங்க அக்பர்

    எல்லாத்தையும் புட்டுபுட்டு வச்சிட்டீங்க.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  15. வாங்க சைவகொத்துப்பரோட்டா

    டிரன்ங்பொட்டிய தூசித் தட்டி திறங்க..

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  16. வாங்க டாக்டர் SUREஷ்

    அது ஒரு பசுமையான நினைவுகள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல.

    ReplyDelete
  17. வாங்க டிவிஆர் சார்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  18. வாங்க ஸ்டீபன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  19. வாங்க வித்யா ( Vidhoosh )

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. மீண்டும் பள்ளி பருவத்தை நினைவில் கொண்டுவந்தது உங்களின் இந்த பதிவு .

    மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்தது .பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  21. ஜின்னா மகனா...!!!

    அருமையானவர் சார் உங்க மகன் .!1

    ReplyDelete
  22. குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு மொத்தமாக பதிவு சிறப்பாக இருக்கிறது தம்பி.

    ReplyDelete
  23. வாங்க அத்திரி

    எழுதி கலக்குங்க

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  24. வாங்க அப்துல்லா

    ஹிந்தியில கலக்குறீங்களே , எனக்கு திருநெல்வேலி அண்ணே!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  25. வாங்க பிரதாப்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  26. வாங்க அண்ணாமலையான் சார்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  27. வாங்க அபு அஃப்ஸர்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  28. வருகைக்கு நன்றி கட்டபொம்மன்

    ReplyDelete
  29. வாங்க அபுல் பசர்

    அது ஒரு மறக்கமுடியாத பசுமை நினைவுகள், உங்க பசுமை நினைவுகளை எழுதி எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  30. வாங்க ஜெட்லி

    அது ஒரு கனாக்காலம், அறியாத வயசு .

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  31. வாங்க Jo Amalan Rayen Fernando

    எங்கள் ஊர் திருநெல்வேலி, நீங்கள் சொல்வது சரியே , எங்க மாவட்டத்து பேச்சு வழக்கு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  32. வாங்க ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫

    உங்கள் கருத்துக்களும் ஆதரவும் தான் என்னை எழுத வைக்கிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  33. வாங்க தேனம்மை அக்கா

    என்ன சொல்வதென்றே தெரியல , பாராட்டுக்கு நன்றி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  34. வாங்க கண்ணன் அண்ணே !

    உங்கள் தொடர் ஆதரவுக்கும் அழைப்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  35. ஸ்டார்ஜன்

    இடுகயப் படிச்சேன் = மறுமொழி எல்லாம் படிக்கல

    நலலாருக்கு - கொசு வத்தி - பரிசு மழை போல படிக்கையில - லீடரெலாம் வேணம் நமக்கு - அக்பர் பள்ளித் தோழனா - வாழ்க -

    பள்ளியில் நடந்ததெல்லாம் நல்லாவே நடந்திருக்கு ஆமா

    நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜென்

    ReplyDelete
  36. திருனெல்வேலி. Very good.

    தூத்துக்குடி மாவட்டத்திலும், குட்டை என்பதை கட்டை என்றுதான் பேச்சுவழக்கு. ஒரு காலத்தில் தூத்துக்குடியும் திருநெல்வேலி ஜில்லாதானே?

    ReplyDelete
  37. அருமையான நினைவுகள் ஸ்டார்ஜன்

    ReplyDelete
  38. அது ஒரு காலம்....அழகிய காலம்.நினைவுகள் யாவும் நெஞ்சினில் ஆடும்..

    ReplyDelete
  39. வாங்க சீனா அய்யா

    உங்கள் பாராட்டும் கருத்துக்களும் தொடர் ஆதரவும் என்னை எழுத தூண்டுகிறது.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  40. வாங்க ஜோ அமலன் ராயன் பெர்னாண்டோ சார்

    சரியாச் சொன்னீங்க, மறுவருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  41. வாங்க ராஜா

    வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  42. ///அது ஒரு காலம்....அழகிய காலம்.நினைவுகள் யாவும் நெஞ்சினில் ஆடும்..///

    வாங்க மயில்ராவணன் , அது ஒரு அருமையான காலம், சரியாச்சொன்னீங்க.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  43. பதின்ம வயது என்றதும் இனக்கவர்ச்சி குறித்தே அநேகரும் எழுதிக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் தந்தை குறித்தும், படிக்க ஊக்கமளித்த மற்றவர்களைக் குறித்தும் மறவாமல் கூறியது பண்பான செயல்.

    ReplyDelete
  44. வாங்க ஹூசைனம்மா

    தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி

    வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  45. மிக அருமையான
    பசுமையான நினைவலைகள் .
    அழைப்புக்கும் மிக்க நன்றி
    மகிழ்ச்சி .
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  46. வாங்க ராஜசேகர் சார்

    தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்