வருகிற 12ம் தேதி துபாயில் , திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடைபெற இருப்பதாக இணைய நாளிதழில் படித்தேன் . இந்த செய்தி என்னுள் ரொம்ப மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
=======================================
திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினரின் சந்திப்பு நிகழ்ச்சி துபாயில், 12.02.2010 வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அல் சபா பூங்காவில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
துபாய் தேரா லூலூ சென்டர் அருகில் இருந்து பேருந்து வசதி காலை 9.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
=======================================
நானும் அந்த கல்லூரியில் படித்தேன் என்பதை நினைக்கும்போது எவ்வளவு பெருமையாக உள்ளது . இப்போது கல்லூரியை பற்றி நினைக்கும்போது ஆயிரமாயிரம் நினைவுகள் என்னைத் தாலாட்டுகின்றதே !!
முதல்நாள் நுழைகையிலே
என்னென்ன கனவுகள் என்னுள்ளே
ஏய் வாடா என்று அழைத்து
உன்னுள் ஐக்கியமாக்கினாயே !!
அன்பை பொழியும் எதற்கும்
என்னை விட்டுக் கொடுக்காத
நண்பர்களை உன்னில்
கண்டேனே _ மலைத்தேன் !.
இரண்டு சேக் மைதீன்கள்
இருக்க வைத்து எங்களை
ஒரே பெஞ்சிலே அருகருகே
அமர வைத்தாயே _ உயிர்த்
தோழனாக்கி வைத்தாயே
என்னவென்று சொல்வேன் !!! .
என்மேல் பாசமும் நேசமும்
கொண்ட ஆசான்களை தந்தாயே
போட்டிகளில் பங்கெடுக்க வைத்து
ஊக்கமும் ஆக்கமும் தந்து
நான் சிறந்து விளங்க
பல முன்மாதிரிகளை தந்தாயே
என்னவென்று சொல்வேன் !!!
என்னுள் நிறைய
மாற்றங்கள்
வந்ததே உன்னாலே
ஒவ்வொரு நாளும்
நினைவிலே நீயே !! .
இப்படி ஓவ்வொரு அசைவிலும் என்னை சதக்கதுல்லாஹ் அப்பா கல்லுரி செதுக்கியது .
அதையெல்லாம் இப்போது நினைத்து பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது . அந்த கல்லூரியில் படித்தது பெருமையாக உள்ளது .
துபாயில் , கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது . அமீரகத்தை சேர்ந்த நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள் . அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .
நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !!! .
கல்லூரி நினைவுகள் அருமை சேக்.
ReplyDeleteஅப்புறம் காலேஜில் நடந்த சேர்மன் தேர்தலை பற்றி எழுதக்காணோம்.
படித்த கல்லூரியைப் பற்றி நெகிழவைக்கும் பகிர்வு ஸ்டார்ஜன் நல்லா இருக்கு ..உங்களுக்கும் கல்லூரிக்குமான உணர்வுபூர்வமான உறவு
ReplyDeleteசந்திப்பு இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்!
ReplyDeleteசெதுக்கிய கல்லூரியைப் பற்றி நினைவுகூர்ந்திருக்கும் விதம் அருமை.
உங்கள் கல்லூரியில் நடைபெற்ற கவியரங்கம் ஒன்றிற்கு எங்கள் கல்லூரி சார்பில் கலந்து கொண்டு கவி பாடியிருக்கிறேனாக்கும்:)!
வாழ்த்துக்கள்
ReplyDeleteம்.ம்...நல்ல மலரும் நினைவுகள், வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆமா..எல்லாம் கரெக்ட் தான்..காலேஜ் இருப்பது திருநெல்வேலி. ஆனா நீங்க கூடுவது துபாயா?..என்ன கொடுமை ஸ்டார்ஜன்.
ReplyDeleteஆகா மனம் பின்னோக்கி போய் கவிதையை கொட்டுதே.
ReplyDeleteவாழ்த்துக்கள் பழைய நினைவுகளை புத்தம் புதிதாய் புதுபிக்க அருமையான சந்தர்ப்பம்..
கல்லூரி நினைவுகள் அருமை....
ReplyDeleteஎன்ன அருமையான நினைவுகள் ,
ReplyDeleteம்ம் ... தொடரட்டும் ...
எல்லோருக்குமே மலரும் நினைவுகளுக்கு (கல்லூரி வாழ்ககை) போகும் போது அது இனிப்பான காலமாக இருக்கும். சுதந்திரமாய் திரிந்த காலம் இல்லையா?
ReplyDeleteகல்லூரி நினைவுகள் கவிதையுடன் சூப்பர்
hi. i m also studied in sadak.
ReplyDeletepls post photos in orkut sadakathulla college community.
i m residing in muscat. i couldnt join with u all.
my cordial wishes to all my senior/ juniors.
கல்லூரி நினைவுகள் அருமை ஸ்டார்ஜன்.
ReplyDeleteநீங்களும் அந்தக் காலேஜா? சந்தோஷம். (நானில்லை).
ReplyDeleteஎனக்கு வந்த மெயில்ல இந்தத் தகவல்களும் இருந்துது:
மாணவர்கள் தங்களது வருகையினை சிராஜுத்தீன் சாகுல் (050 2090512) மற்றும் ரியாஸ் (050 8895783) ஆகிய எண்களுடன் தொடர்பு உறுதிப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: S390302@emirates.com, info@sadakalumni.com
இணையதளம்: www.sadakalumni.com
+2 முடித்ததும் நுழைவுத்தேர்வு எழுதியது இங்கேதான் . அங்கயும் என் பெயர் காமெடி ஆனது ,அங்க உள்ள தூங்குமூஞ்சி மரம் மறக்க முடியாது . Enjoy ur Get together .
ReplyDeleteவாழ்த்துக்கள்.நீண்டகாலம் சென்று நண்பர்களை சந்திக்கும் போதுள்ள மகிழ்வு மறக்க இயலாது.கலந்து கொண்ட பிறகு அனுபவங்களை படங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteவாங்க
ReplyDeleteஅக்பர்
thenammailakshmanan
SUREஷ் (பழனியிலிருந்து)
ராமலக்ஷ்மி
T.V.ராதாகிருஷ்ணன்
சைவகொத்துப்பரோட்டா
நாடோடி
அன்புடன் மலிக்கா
Sangkavi
கட்டபொம்மன்
Jaleela
diman
செ.சரவணக்குமார்
ஹுஸைனம்மா
மதார்
ஸாதிகா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
ஆஹா தல இத படிக்கும்போது நமக்கு கொசுவத்தி தானா சுத்துது
ReplyDeleteஞாபகம் வருதே ஞாபகம் வருதே!
அரும, நா அந்த காலேஜ் இல்லே, நல்லதொரு சந்திப்பு ஏற்பாடு, தொடரட்டும் இதேமாதிரி
வாங்க நாடோடி
ReplyDeleteதல .. துபாயில் வேலைபார்க்கும் சதக் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு தான் இது ..
இதுக்காக திருநெல்வேலியிலிருந்து பிளைட் புடிச்சி துபாய்ல வந்து யாராவது சந்திப்பாங்களா என்ன .. போங்க தல .
//நானும் அந்த கல்லூரியில் படித்தேன்//
ReplyDeleteகுரு... கல்லுரிக்கு போய்ட்டு வந்தேன்னு சொல்லுங்க படிச்சேன்னு ஏன் பொய் சொல்றீங்க...
அட நம்ம துபாய்லதான் நடக்குது. நடக்கட்டும்... நடக்கட்டும்... ஒரு டிக்கெட்டைப்போட்டு வாங்கதல அப்படியே நானும் உங்கைளப்பார்த்த மாதிரி இருக்கும்... நீங்களும் அந்த விழாவுல கலந்துகிட்டது மாதிரி இருக்கும்....
உங்கள் நண்பர்களை சந்தித்து மகிழ வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாங்க
ReplyDeleteஅபு அஃப்ஸர் @ கொசுவத்தி சுத்துதா சுத்தட்டும் , நன்றி
பிரதாப் @ வந்துட்டா போச்சு , நன்றி
அண்ணாமலையான் @ வாழ்த்துகளுக்கு நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க துபாய் ராஜா
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி
சந்திப்பு இனிதே அமய வாழ்த்துக்கள்
ReplyDeleteஅப்பா காலேஜ்ல நான் படிக்கலைன்னாலும் அடிக்கடி அங்கே போயிருக்கேன். என் வாழ்வில் மறக்க முடியாத முக்கிய நிகழ்வுகள் நடந்த இடம். ஏன்னா..... :))
ReplyDeleteசந்திப்பு இனியதாக அமைய வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க
ReplyDeleteபேநாமூடி
துபாய்ராஜா @ அப்படியா ராஜா ,அது என்னன்னு சொல்லப்படாதா
ராதாக்கிருஷ்ணன் சார்
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி