சத்தியம் இது சத்தியம்
முதல்நாள் வார்த்தை
மறுநாள் காணாமல்
போயிருந்தது குடிக்கப்
போகும்போது...
எதற்கு குடிக்கிறாய் என்று
கேட்டாலும் உன்னிடம்
ஆயிரம் காரணங்கள் உண்டு.
காலைமுதல் மாலைவரை
உழைக்கும்போது தெரியாத
மயக்கம் இரவு ஆனதும்
மயக்கம் வாந்தியுடன்..
நீவருவாய் உணவருந்த
என்று காத்திருக்கும்
குடும்ப அங்கத்தினரின்
பசிப் புலம்பல்கள் உனக்கு
கேட்க வாய்ப்பில்லை.
கடையேழு வள்ளல்களைப் போல
மயக்கம் தெளியும்முன்
வாரிவாரி வழங்கினாய்
தெளிந்தபின் அதனை
தேடுவது அந்தோ பரிதாபம்.
இருக்கும்போதே அனுபவிடா
ராஜா என்ற உன் எண்ணம்
தெரியாமல் நீ இல்லாமல்
போனதும் ஆற்ற முடியா
துயரத்தில் உன் மனைவியோ
விதவைக் கோலத்தில்..
,
//இருக்கும்போதே அனுபவிடா
ReplyDeleteராஜா என்ற உன் எண்ணம்
தெரியாமல் நீ இல்லாமல்
போனதும் ஆற்ற முடியா
துயரத்தில் உன் மனைவியோ
விதவைக் கோலத்தில்..//
:((((
நல்லாயிருக்கு கவிதை,,,,
ReplyDeleteகவிதை சூப்பர்னா, படம் சூப்பரோ சூப்பர்! ஹும்! :-)
ReplyDelete//நீவருவாய் உணவருந்த
ReplyDeleteஎன்று காத்திருக்கும்
குடும்ப அங்கத்தினரின்
பசிப் புலம்பல்கள் உனக்கு
கேட்க வாய்ப்பில்லை.//
நல்ல சிந்திக்கத் தூண்டும் வரிகள்.
நன்றி.
"குடி" "குடியை" கெடுக்கும்
ReplyDelete"குடி" "பழக்கம்" வீட்டை கெடுக்கும்.
நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்.
பொறுப்புள்ளக் கவிதைங்க.
ReplyDeleteபாராட்டுக்கள்.
கவிஞர் ஸ்டார்ஜன்....... வாழ்க
ReplyDeleteநல்ல கவிதை வரிகள் பாஸ்!!
ReplyDelete//இருக்கும்போதே அனுபவிடா
ReplyDeleteராஜா என்ற உன் எண்ணம்
தெரியாமல் நீ இல்லாமல்
போனதும் ஆற்ற முடியா
துயரத்தில் உன் மனைவியோ
விதவைக் கோலத்தில்..//
ஆஹா சரக்குக்குள்ள ஒரு சரக்கு நல்ல இருக்கு நண்பரே . பகிர்வுக்கு நன்றி
//
ReplyDeleteஇருக்கும்போதே அனுபவிடா
ராஜா என்ற உன் எண்ணம்
தெரியாமல் நீ இல்லாமல்
போனதும் ஆற்ற முடியா
துயரத்தில் உன் மனைவியோ
விதவைக் கோலத்தில்..
//கவிதை அருமை ஸ்டார்ஜன்.கடைசி பாரா அதை விட அருமை.
அண்ணே இதுக்கு பின்னோட்டம் போட முடியாது...
ReplyDeleteநான் குடிப்பவன் ..
ம்ம்ம்...மயக்கமாயிருக்கு மணக்குது.
ReplyDeleteவித்தியாசமான கவிதை.. ஏன்னா இப்போவெல்லாம் 'எல்லாரும் குடிங்க.. ரொம்ப சூப்பரா இருக்கும்னு' சொல்றது தான் பேஷன் :)
ReplyDeleteகுடி குடும்பத்தை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை அழகாக கவிதையில் சொல்லிருக்கீங்க ஸ்டார்ஜன். வாழ்த்துகள்.
ReplyDelete"சத்தியமா நல்லாயிருக்கு கவிதை,,,
ReplyDeleteஅருமை.கவிதை,கதைன்னு அசத்துறீங்க.
ReplyDeleteநல்ல கரு
ReplyDeleteஇன்னும் நல்லா எழுதிருக்கலாம்
வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கார்த்திக்
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரியாஸ்.
ReplyDeleteசேட்டைக்காரன் @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும். உங்கள் பாராட்டுக்கள் இயங்கவைக்கும் பலகாலங்கள்.
ReplyDeleteஅமைதி அப்பா @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும் கருத்துக்கும். நன்றி நன்றி பாராட்டுக்கள் பலகாலங்கள் தொடரட்டும்.
ReplyDeleteஅக்பர் @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும் கருத்துக்கும். நன்றி நன்றி பாராட்டுக்கள் பலகாலங்கள் தொடரட்டும்.
ReplyDeleteகருணாகரசு சார் @ நன்றி கருத்துக்கும் பாராட்டுக்கும்
ReplyDeleteஅத்திரி @ வாழ்த்துகளுக்கு நன்றி நன்றி
ReplyDeleteஅழகாக சொல்லி இருக்கிறீர்கள்.கவிதையைவிட படம் பல விசயங்களை தெளிவு படுத்துகிறது.
ReplyDeleteநல்ல வரிகள் சார் . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDelete