இன்று அமெரிக்காவில் இருக்கும் பதிவர் சித்ராக்காவுடன் மின்னஞ்சல் உரையாடலின்போது இருவரும் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சித்ராக்கா, "உங்க பேமிலி இந்தியாவுலயா இருக்காங்க?. அப்புறம் எனக்கு ரொம்ப நாளா கேட்கணும் என்ற கேள்வி இது.. ஏன் ஸ்டார்ஜன், ஏன் மிடில் ஈஸ்டேர்ன் நாடுகளில் வேலை பார்க்கும் நிறைய பேர்கள், தங்கள் குடும்பத்தை தங்களுடன் கூட்டி கொண்டு போவதில்லை? அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் போறவங்க கூட்டிட்டு போறாங்களே!! - அதான் கேட்டேன்...." என்று கேட்டார்.
எனக்கு உடனே இது குறித்து ஒரு இடுகை எழுதவேண்டும் என்று தோன்றியது. அதனால் உண்டான கருத்து பரிமாற்றம்தான் இந்த இடுகை. இதை எழுதவைத்த சித்ராவுக்கு என் நன்றிகள்.
இது சற்று சிந்திக்கவேண்டிய கேள்விதான். பொதுவா வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் மனைவி,மக்களை பிரிந்துதான் விமானத்தில் ஏறுகிறார்கள். உள்ளம் இந்தியாவில் பயணிக்க உடலோ போகவேண்டிய நாட்டுக்கு பயணிக்கிறது. பிரிவின் சோகத்துக்கு எந்த அளவுகோலும் கிடையாது. இந்த சோகம், ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒருவாரமோ அல்லது ஒருமாதமோ நீடிக்கும். அதிகபட்ச சோகம் அவரவர் மனநிலையை பொறுத்தது. இது மத்தியகிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் எல்லா வெளிநாடு வாழும் இந்தியர்களுக்கும் பொருந்தும்.
வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு உண்டான பிரச்சனைகளை பற்றி இந்த இடுகையில் எழுதியிருந்ததை அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
வெளிநாட்டு வாழ்க்கையே கஷ்டமான ஒன்று.
மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரிபவர்கள் தங்களோடு குடும்பத்தை அழைத்து செல்லாததுக்கு இதுதான் முக்கிய காரணங்களாக இருக்கமுடியும்.
1. பொருளாதார பிரச்சனை.
2. இங்குள்ள தட்பவெப்ப காலநிலை மற்றும் மருத்துவ வசதி
3. பிள்ளைகளுக்கு படிப்பு கெடும். தரமான கல்வி இல்லாதது.
பொருளாதார பிரச்சனைகள்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும்போதே குறைவான சம்பளத்துக்கு ஒப்புதல் பெற்றபின்தான் தேர்ந்தெடுத்துதான் அனுப்புகின்றனர். குறைவான சம்பளம் வாங்குபவர்களால் எப்படி குடும்பம் நடத்தமுடியும்?. இங்கே குடும்பங்களோடு இருப்பவர்கள் எல்லோரும் நல்ல கம்பெனியில் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கம்பெனியில் வீடுவசதி, இதர சலுகைகள் கிடைக்கின்றன. அதனால் அவர்களுக்கு தங்குதடையின்றி குடும்பங்களை கவனிக்கமுடிகிறது.
குறைவான சம்பளம் வாங்குபவர்கள்... அதிகவேலை, குறைவான சம்பளத்தால் குடும்பத்தை நடத்தமுடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
இப்போது எல்லோரும் குடும்பத்தை அழைத்துவரலாம் என்ற அறிவிப்பு சவூதி அரசாங்கத்தால் அறிவிக்கப்படிருக்கிறது. இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சிதான். காலையில் வேலைக்கு சென்றால் இரவு வீடு திரும்புபவர்களும் உள்ளனர். அவர்களால் எப்படி குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்க முடியும்?.
தட்பவெப்ப காலநிலை மற்றும் மருத்துவ வசதிகள்
மத்திய கிழக்கு நாடுகளை பொறுத்தவரை உங்களுக்கே தெரியும் பூமத்திய ரேகைக்கு அருகாமையில் இந்த நாடுகள் அமைந்துள்ளன. அதிக வெயில், அதிக குளிர், புயல்மணற் காற்று, இன்னபிற இன்னல்கள் உண்டு. இந்த தட்பவெப்ப நிலை இங்கு வேலை செய்பவர்களுக்கே ஒத்துக் கொள்ளவில்லை. இந்தியாவிலே வாழ்ந்து வந்தவர்கள் திடீரென வெளிநாட்டுக்கு செல்லும் குடும்ப அங்கத்தினருக்கு ஒத்துவரவேண்டுமே... பிள்ளைகள் நலன்தான் முக்கியம். அவர்கள் நோய்வாய்ப்பட்டால் மருத்துவ வசதிகள் அவ்வளவாக தரமானதாக இருப்பது கிடையாது.
நம்நாட்டில் உள்ள மருத்துவ வசதிகள் இல்லாதது பெரிய குறை. ஒரு தலைவலி காய்ச்சல் என்றால் நாம் பெனடால் என்ற மாத்திரையைத்தான் தேடிச் செல்கிறோம். மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. இங்குள்ள டாக்டர்கள் திறமைசாலிகள்தான். ஆனால் அவர்களுக்கு ஏற்ற மருத்துவ சாதனங்கள் கிடையாததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
பிள்ளைகளுக்கு தரமான கல்வி இல்லாதது
மத்தியகிழக்கு நாடுகளுக்கு வருபவர்களுக்கு இந்தியாவில் நம்பிள்ளைகளின் படிப்பை மூட்டைகட்டி விட்டுதான் விமானத்தில் ஏறவேண்டும். படிப்பு அதோ கதிதான். படிக்கவைக்க நல்ல கல்விச்சாலைகள் இல்லாததும் ஒரு காரணம்தான். நம்மூரை போல கல்விநிலையங்கள் இங்கு இல்லை. இருக்கும் பள்ளிகளில் எல்லா வெளிநாட்டினரின் குழந்தைகளும் படிக்கின்றனர். எல்லோருக்கும் கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால் பிள்ளைகளின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இதுபோன்ற காரணங்களினால் மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரிபவர்கள் தங்கள் குடும்பங்களை அழைத்துவர தயக்கம் காட்டுகின்றனர். அதுபோக அவரவர் மனநிலையை பொறுத்தது.
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,
நீஙகள் சொல்வது சரி தான் அனுபவித்தால் தான் தெரியும் அதன் கஷ்டமே
ReplyDeleteவிமானத்தில் செல்பவரா நீங்கள் ? எச்சரிக்கை வீடியோ
http://athiradenews.blogspot.com/
நீங்கள் சொல்லுவது உண்மைதான். நிற்க. நீங்கள் திருநெல்வேலி மாவட்டம் என்பதை உங்கள் வார்த்தைகளே நிருபித்துவிட்டது. "சித்திரா அக்கா" எனக்குறிப்பிட்டீர்களே! அதுதான்.ஜாதி,மத பேதமற்ற உறவு சொல்லி கூப்பிடும் நம் திருநெல்வேலி மாவட்ட மண்ணின் மகிமை. எனக்கு கண்ணீரே வந்துவிட்டது ஸ்டார்ஜன். என்றும் நாம் இப்படியே இருக்கவேண்டும் என்பதே என் ஆசை.
ReplyDeleteமுதலில் பொருளாதாரம் ...ஆம் அந்த ஆதாரத்தை நாடி தான் குடும்பம் பிரிகிறது. அப்படியே தன்னிறைவு பெற்றாலும் அடுத்து , அந்த தட்ப வெப்பநிலையில் நாம் வாழ முடியுமா...?அப்படி இருந்தாலும் நோய் தாக்கி , நம் பொருளாதாரத்தை மீண்டும் அசைத்து விடுமோ என்ற பயம். இவை இரண்டும் இருந்தாலும், முக்கியம் கல்வி, குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்குமா..அதற்கு மொழி தடையாக இருக்குமா...? இருப்பினும் அது வருமானத்தை பாதிக்காவண்ணம் இருக்குமா...என நாம் யோசித்து , குடும்பத்தை விட்டு பிரிகிறோம்...எல்லாம் பணம் படுத்தும் பாடு.
ReplyDeleteவாங்க பீர் முகம்மது @ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க திரவியம் அய்யா @ நீங்கள் என்மேல் வைத்திருக்கும் பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஆமாம் நான் திருநெல்வேலி நகரம்தான். உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க மதுரை சரவணன் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சரவணன்.
ReplyDeleteமுதல்ல பணத்தை யாரு கண்டுப்பிடிச்சது. மவனே அவன் மட்டும் என் கையில கிடைச்சான்...
ReplyDeleteசித்ரா கேட்டதற்கு ஸ்டார்ஜன் சொன்னமாதிரியும் இருக்கலாம்,அது தவிர சில கருத்துக்கள்.u.a.e பொருத்தவரை,கல்வி,மருத்துவம்,தங்குமிடம் அதிகம் செலவாகும்,ஆனால் தரம் பரவாயில்லை.லேபர் கேடரில் இருப்பவர்களால் தான் நிச்சயம் அழைத்து வர முடியாது.இங்கு அந்த மாதிரி வேலைக்கு வருகிறவர்கள் தான் அதிகம்.ஊரில் கடன் சுமை,குடும்பத்தில் உள்ள அனைவரையும் மேன்படுத்த என்று ஊருக்கே பணம் அனுப்ப வேண்டிய சூழலில் இருப்பவர்களால் இங்கு குடும்பத்தை அழைத்து வந்தால் அதிகம் செலவாகும் அங்கு பணம் அனுப்ப முடியாதே அதுவும் ஒரு காரணம்,அங்கு குடும்பத்தை விட்டு விட்டு சில பேர் பணம் சேர்த்து வீடு,சொத்து என்று குவிக்க நினைப்பவர்களும் இருக்கிறார்கள்,இப்படியாக ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் அவர்கள் வருமானம் ,குடும்ப நிலையை பொருத்தே சேர்ந்து வாழ ஏதுவாய் அமைகிறது அல்லது முடியாமல் போகிறது.
ReplyDelete//தட்பவெப்ப நிலை இங்கு வேலை செய்பவர்களுக்கே ஒத்துக் கொள்ளவில்லை. இந்தியாவிலே வாழ்ந்து வந்தவர்கள் திடீரென வெளிநாட்டுக்கு செல்லும் குடும்ப அங்கத்தினருக்கு ஒத்துவரவேண்டுமே... பிள்ளைகள் நலன்தான் முக்கியம். அவர்கள் நோய்வாய்ப்பட்டால் மருத்துவ வசதிகள் அவ்வளவாக தரமானதாக இருப்பது கிடையாது//
ReplyDeleteஉண்மைதான்.. யோசிக்க வேண்டிய ஒன்று.
சரியாகவே அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteபிறகென்ன.
முதலில் பொருளாதாரம்.
இருவரும் உழைத்தால் மட்டுமே ஓரளவு கஸ்டமில்லாமலிருக்கும்.
அடுத்து கல்வி...எல்லாமே நீங்கள் சொன்ன வரிசைப்படி சரியே .
மேற்கத்திய நாடுகளில் பெண்கள் வேலைக்குச்செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதனால் குடும்பத்தை அழைத்துக்கொண்டால் பெண்களும் வேலைக்கு சென்று செலவை சமாளிக்க முடிகிறது. ஆனால் எல்லா மத்தியக்கிழக்கு நாடுகளிலும் பெண்கள் வேலைக்குச்செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதுவும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது.
ReplyDeleteஅன்பின் ஸ்டார்ஜன்
ReplyDeleteஉண்மை நிலை இதுதான் - என்ன செய்வது - வெளிநாட்டில் வாழும் குடும்பங்களின் துயரமே இதுதான்.
ம்ம்ம்ம்ம் - ஒண்றும் சொல்வதற்கில்லை
நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்
நட்புடன் சீனா
நல்ல அலசல்
ReplyDeleteஎல்லாம் பணம் படுத்தும் பாடு வேறென்ன சொல்ல :(
ReplyDeleteஎந்த வகையில் பார்த்தாலும் வெளிநாட்டில் குடும்பத்தினரை பிரிந்து வாழும் வாழ்க்கை தியாகத்தின் உச்சகட்டம்.
ReplyDeleteஆண்களுக்கு தண்டனை.
பெண்களுக்கு நரகம்.
குழந்தைகளுக்கு அப்பாவின் கஷ்டங்களை புரிந்து பிழைத்துக்கொண்டால் புத்திசாலிகள்.
If you look at Middle East, most part of Indians are labors, so naturally their salary etc can not support to bring family (they also did not get family visa).
ReplyDeleteBut if you look at the same category of people on par with US or Europe, they are living with family in Middle East. So it is not true. Say a Engineer with good salary, he will be with family only in Middle east. Saudi Arabia is a different case.
நல்ல இடுகை ஸ்டார்ஜன், முதல் விஷயம் பொருளாதாரம் அதுதான் நிறைய பேர் குடும்பத்தை ஊரில் விட்டு வர காரணமாக இருக்கிறது. இங்குள்ள இந்திய பணியாளர்களின் சராசரி சம்பளமும், வீட்டு வாடகையும் ஓப்பிட்டு பார்த்தால் குடும்பத்தை பலர் இங்கு கூட்டி வராததன் காரணம் நன்கு விளங்கும்.
ReplyDeleteமருத்தவ வசதி -
//இங்குள்ள டாக்டர்கள் திறமைசாலிகள்தான். ஆனால் அவர்களுக்கு ஏற்ற மருத்துவ சாதனங்கள் கிடையாததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்//
நான் இதில் மாறுபடுகிறேன். இங்குள்ள மருத்துவ சாதனக்கள் எல்லாம் அதி நவீன வசதி வாய்ந்தவை. ஆனால் இங்குள்ள சீதோஷ்ண நிலையை மற்றும் உடல் நிலையை அறிந்த அனுபவம் டாக்டர்களும் இங்கு குறைவு. இங்கும் மற்ற நாடுகளில் டாக்டர்களுக்கான சராசரி சம்பளத்தோடு ஓப்பிட்டால் இங்கு அவர்களுக்கான சம்பளம் மிக குறைவு.
என்ன தல இது... என்னையையும் இவ்ளோ பெரிய பின்னூட்டத்தை எழுத வைச்சுட்டியே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஷேக், சவுதியை விட யூ ஏ இ யில் செலவு அதிகம் , என்னதான் குடும்பத்துடன் இருந்தாலும் அவர்களிடம் கேட்டாலும் அதையேதான் சொல்வார்கள் வருமானத்திறகு ஏற்ற செலவு இங்கு இருந்துக்கொண்டே இருக்கும். பாதி இட வாடகைக்கே சரியாக இருக்கும்...8ஆயிரம் 7வருசத்துக்கு முன்ன இருந்த சிங்கிள் பிளாட் இப்ப 25 ஆயிரம்
ReplyDeleteஅருமையான பதிவு..
ReplyDeleteஅவசியமான பதிவும் கூட..
சொல்லி இருக்கும் விஷயங்கள்... கரெக்ட் தான்.. நன்றி..
நான் கேட்ட கேள்விக்கு, இம்பூட்டு அருமையா - விளக்கமா - பதில் சொல்லி இருக்கீங்களே...... ஸ்டார்ஜன் , ரொம்ப ரொம்ப நன்றிங்க.....
ReplyDeleteஇப்போ புரியுது. :-)
சட்டம் நம்கையில் said...
ReplyDeleteநீங்கள் சொல்லுவது உண்மைதான். நிற்க. நீங்கள் திருநெல்வேலி மாவட்டம் என்பதை உங்கள் வார்த்தைகளே நிருபித்துவிட்டது. "சித்திரா அக்கா" எனக்குறிப்பிட்டீர்களே! அதுதான்.ஜாதி,மத பேதமற்ற உறவு சொல்லி கூப்பிடும் நம் திருநெல்வேலி மாவட்ட மண்ணின் மகிமை. எனக்கு கண்ணீரே வந்துவிட்டது ஸ்டார்ஜன். என்றும் நாம் இப்படியே இருக்கவேண்டும் என்பதே என் ஆசை.
....... அய்யா, உங்களை மாதிரி நல்ல மனசுக்காரவுக தருகிற ஆசிர்வாதம்.... :-)
நம்மை போன்றவர்களின் வெளிநாட்டுவாழ்க்கையை அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள்.
ReplyDeleteநான் பணி புரிகின்ற புருனை,நீங்கள் பணிபுரிகின்ற மத்திய கிழக்கைவிட நூறு மடங்கு கொடுமையானது. அலுவலகத்தில் பணிபுரிகின்ற என்னைப் போன்றவர்களின் நிலைமை பரவாஇல்லை. கடைகளில் வேலை செய்கின்ற ஊழியர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது. ஒரு நாளைக்கு அவர்கள் 15 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.
சம்பளமோ சொற்பம்தான். குடும்ப சூழ்நிலையை உணர்ந்து இந்த கொடுமையை அவர்கள் தாங்கி கொள்கிறார்கள். இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. பிறகொருநாளில் தனி பதிவாக எழுதுகிறேன்.
குரு நீங்க காரணங்கள் மிகச்சரி...
ReplyDeleteமருத்துவ சிகிச்சையில் தரமான சிகிச்சைகள் கிடைக்கிறது, ஆனால் அதிக செலவுஏற்படுகிறது. அதுதான் உண்மை.
நல்ல விளக்கம் ஸ்டார்ஜன்...
ReplyDeleteநண்பரே, பெரும்பாலும் உங்களது கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இருக்கின்றது. நிறைய யோசித்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
ReplyDeleteநீங்க ரொம்பக் குறைவான காரணங்களைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். அதிலும் ஒரு தயக்கம் தெரிகிறது.
ReplyDeleteஇந்தியாவில் தன்னை பளபளப்பாக காட்டிக் கொள்ளும் நண்பர்கள் துபாய் போன்ற நகரங்களில் படும் அவதியை நேரில் கண்டிருக்கின்றேன்.
Labour Camp, Kish Island அவலங்கள் பற்றியெல்லாம் தெரிந்தால் யாரும் தனது பந்தங்களை அங்கே அனுப்பவே மாட்டார்கள்.
உளவியில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல காரணங்களை சொல்லலாம். வலி மிகுந்த அந்த வாழ்க்ககையை பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம் என்றிருக்கின்றேன்.
அருமையான இடுகை ஸ்டார்ஜன். ஒவ்வொரு சூழ்நிலையையும் தெளிவா சொல்லிருக்கீங்க ஸ்டார்ஜன். மேலும் சிறப்பாக எழுதுங்கள்.
ReplyDeleteஅருமையான இடுகை தம்பி ஸ்டார்ஜன்.தெளிவான விளக்கத்தை அழகுற பகிர்ந்துள்ளீர்கள்.நன்றி.
ReplyDeleteவாங்க அக்பர் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஇப்போது துபாய் விசிட் லே கொண்டுவந்து 3 மாதம் குடும்பத்தோடு இருந்து கல்வியை காரணம் காட்டி அனுப்பிவிடும் நிலை அதிகமாக உள்ளது. அதையும் தவிர இங்கும் வாழும் செலவு அதிகம்..
ReplyDeleteஎனெக்கென்னவோ இப்படி தோனுது!!
ReplyDeleteமாமியாரை பிரியமுடியாத மருமகள் இருப்பார்களோ என்னவோ! அதனால் தான் அழைத்துவர முடியாமல் போகிறது.:-))
பல காரணிகள் மத்திய கிழக்கு நாடுகளில்,இப்ப பாருங்க என் மனைவியை இங்கு கூட்டி வந்துள்ளேன்,நான் வீட்டுக்கு போகும் வரை அவர்களுக்கு ஹவுஸ் அரெஸ்ட் தான்,தொலைக்காட்சி/கணினி இதை தவிர அவர்களால் எங்கும் போக முடியாது,வெய்யில் வேறு.கூப்பிட்டு வருவதற்கு முன்பே அவர்களை தயார்படுத்திவிட்டால் இம்மாதிரி ஹவுஸ் அரெஸ்டை தாங்கிக்கொள்வார்கள் இல்லாவிட்டால் நச்சரிப்பு தான்.சொந்தமாக கார் இல்லாவிட்டால் மத்திய கிழக்கில் பிரச்சனை தான்.
பள்ளிப்படிப்புக்கு போகும் வயதில் குழந்தை இல்லாததால் அந்த பிரச்சனை பற்றி அவ்வளவாக தெரியவில்லை
வாங்க ஆசியாக்கா @ உங்களின் ஆழமான விரிவான கருத்துக்கள் அருமை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க அமைதிச்சாரல் அக்கா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க ஹேமா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க சின்ன அம்மணி @ நன்றி விரிவான அலசலுக்கும் கருத்துக்கும்.
ReplyDeleteவாங்க சீனா அய்யா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா.
ReplyDeleteவாங்க எல்கே @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க கவிசிவா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க ஜோதிஜி @ வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க சுதார் @ வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க கண்ணா @ ஆஹா அருமையான கருத்துக்கள் கண்ணா.. கலக்கிட்டீங்க.., அருமையான தெளிவான விரிவான கருத்துக்கள். நன்றி கண்ணா வருகைக்கும் கருத்துக்கும்.
ReplyDeleteவாங்க ஜெய்லானி @ நன்றி வருகைக்கும் விரிவான கருத்துக்கும்.
ReplyDeleteவாங்க ஆனந்தி சுப்பையா @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க சித்ரா @ உங்களுக்கு மிக்க நன்றி., இந்த இடுகையை எழுத வைத்ததுக்கு. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
ReplyDeleteவாங்க அபுல்பசர் @ நன்றி அருமையான கருத்துக்கள். விரிவான தெளிவான கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி நன்றி.
ReplyDeleteவாங்க சிஷ்யா @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க ஸ்டீபன் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க சேட்டைக்காரன் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க செல்வகுமார் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க மின்மினி @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க ஸாதிகா அக்கா @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க சின்ஹாசிட்டி வலைத்தளம் @ நன்றி நன்றி.. தொடர்ந்து என்னுடைய பதிவுகளை டாப் 10 பதிவுகளில் தேர்ந்தெடுத்ததுக்கு மிக்க நன்றி நன்றி.
ReplyDeleteவாங்க அபுஅஃப்ஸர் @ வருகைக்கும் விரிவான தெளிவான கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க வடுவூர் குமார் சார் @ நன்றி நன்றி அருமையான கருத்துக்கள். வருகைக்கும் தெளிவான விளக்கத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteநல்ல பதிவு.. நானும் அபுதாபியிலதான்.. நானும் வெளிநாட்டு வாழ்கை பற்றிய "பாவம் அவர்கள்" என்ற சிரிய பதிவொன்று இட்டிருந்தேன்..
ReplyDeleteநேரம் கிடைத்தால் பாருங்க
riyasdreams.blogspot.com
பொருளாதாரம்தான் முக்கிய பிரச்னையே தவிர, மருத்துவமும், கல்வியும் அல்ல என்பது என் கருத்து; இன்னும் சொல்லப்போனால், இங்கு பள்ளிகளில் நம்ம ஊர் அளவு இறுக்கம் கிடையாது. குறைந்த பள்ளி நேரம், நல்ல கவனிப்பு, நட்பான ஆசிரியைகள், சுகாதாரமான பள்ளிச் சூழல்கள், என்று சிறப்பாகவே இருக்கிறது. அது போலத்தான் மருத்துவத்துறையும். ஆனால் இரண்டுமே இந்தியாவைவிட விலையுயர்ந்தவை.
ReplyDeleteதற்போது பல நிறுவனங்களும் மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் தர ஆரம்பித்திருப்பதால், ஓரளவு மருத்துவச்செலவைச் சமாளிக்க முடிகிறது; ஆனால் வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம், விலைவாசி, விமானக் கட்டணம் இதெல்லாம் சமாளிக்க முடிபவர்கள்தான் குடும்பத்தை அழைத்துவரமுடியும். அதற்காகத்தான் இங்குள்ள அரசாங்கமே குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்துள்ளது.
மேலும், வளைகுடா நாடுகளுக்கு வருபவர்கள் பெரும்பாலும் “blue-collar job" செய்பவர்களே; அதனால்தான் அழைத்துவர முடியவில்லை.
அதற்கு இங்கிருக்கும் “கம்பெனி ஸ்பான்ஸர்ஷிப்” முறையிலான விஸாவும் ஒரு காரணம்;
மேலும், அவசர நேரத்தில உதவ உறவினர்கள்/நண்பர்கள் அருகில் இல்லாமல் குடும்பத்தைக் கவனிப்பதும் சிரமம் என்பதால்தான் நீண்ட வேலை நேரம் உள்ளவர்களும், சிற்றூர்களில் வேலைசெய்பவர்களும் குடும்பம் ஊரில் இருப்பதையே விரும்புகிறார்கள்.
இங்கு வந்தபின் தனிமையைச் சமாளிக்க முடியாமல் திரும்பிச்சென்றவர்களையும் அறிவேன்.
//சின்ன அம்மிணி said...
ஆனால் எல்லா மத்தியக்கிழக்கு நாடுகளிலும் பெண்கள் வேலைக்குச்செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.//
எல்லா நாடுகளிலும் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள். (சவூதியில் மட்டும் சில கட்டுப்பாடுகள்). இன்னும் சொல்லப்போனால், வளைகுடா நாடுகளில், ஆண்களைவிட (கணவரின்/பெற்றோரின் ஸ்பான்ஸர்ஷிப்பில் உள்ள) பெண்களுக்கு நினைத்தபோது வேலை மாற்றிக் கொள்வது மிக மிக எளிது.
அன்பு ஸ்டார்ஜன்
ReplyDeleteஉங்களின் இந்த நீண்ட இடுகையின் நோக்கமே இங்கே நாம் படும் அவஸ்தையின் அவலம் தானா! நிறைய எழுதுங்கள். நாங்கள் இங்கிருந்து கொண்டே படித்துவிட்டு, கொஞ்சம் முகத்தை திருப்பிக்கொண்டு அழுதும் கொள்கிறோம்.
இங்கே தான் ஹசாவில் இருப்பதாக நண்பர் செ.சரவணக்குமார் சொன்னார். நீங்களும் இங்கே தம்மாமுக்கு வந்துட்டு போங்க சார். வாழ்த்துக்கள்!! நன்றி!