விழுப்புரம் அருகே விக்கிரவாண்டிக்கும், பேரணி ரயில் நிலையத்துக்கும் இடையே சித்தணி என்ற இடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை ரயில் தண்டவாளம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.இதில் தண்டவாளம் துண்டிக்கப்பட்டது.
சேலம் எக்ஸ்பிரஸ் அப்பாதையை கடந்த சில நிமிடங்களில் குண்டு வெடித்தது. சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு சத்தம் கேட்டு என்ன என்று பார்த்தபோது குண்டுவெடிப்பைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பேரணி ரயில் நிலையத்தை உஷார்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் உஷார்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் மலைக்கோட்டை ரயில் சடர்ன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.
நல்லவேளை எந்தவிதமான அசம்பாவித சம்பவம் நடக்கவில்லை.
**************
ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நினைக்கும்போது சிறுவயதில் படித்த கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
மலையூர் ஒரு அழகான சிற்றூர். அழகிய வயல்வெளிகளும் தோட்டங்களும் பசுமை நிறைந்த ஊர். பக்க்த்து ஊரில் உள்ள பள்ளியில் கண்ணன் ஐந்தாம் வகுப்பில் படித்து வந்தான். தினமும் 6 கிலோமீட்டர் நடந்து சென்று படித்துவந்தான். அவனது குடும்பம் ஏழ்மையானது. பள்ளிச்சீருடை வாங்கமுடியாததால் கலர்ச் சட்டைதான் அணிந்துவருவான். மற்ற பிள்ளைகள் கேலி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது படிப்பில் கவனம்செலுத்தி முதல்மாணவனாக இருந்தான்.
ஒருநாள், தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்ததால் பள்ளிக்கு மதியத்துக்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கண்ணன் வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தான். அப்போது வழியில் ரயில் இருப்புபாதை குறுக்கிட்டது. வேடிக்கை பார்த்தபடியே வந்த கண்ணன், மழையினால் ரயில்பாதை அரிப்பு ஏற்பட்டு துண்டாக உடைந்திருந்ததை பார்த்ததும் மனம் திகைத்து போய்விட்டான். தூரத்தில் ரயில்வரும் சப்தம் கேட்டது.
கண்ணனுக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. ரயிலை உடனடியாக நிறுத்தவேண்டும். யாரும் வருவார்களா என்று அங்குமிங்கும் ஓடினான். கண்ணுக்கு எட்டியதூரம் யாரையும் காணவில்லை. ரயில் அருகில் வந்துகொண்டிருந்தது. உடனடியாக அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
அவன் போட்டிருந்த சட்டை சிவப்புக் கலரில் இருந்ததை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்தியவாறே ரயிலை நிறுத்த முயற்சி செய்தான்.
ரயில்வரும் திசையில் சட்டையை கொடிபோல அசைத்துக்கொண்டே வேகமாக ஓடினான். இதை கவனித்த ரயிலின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். நடந்த சம்பவத்தை கண்ணன் எல்லோரிடமும் கூறினான். அனைவரும் திகைத்தனர்; பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய கண்ணனை அனைவரும் பாராட்டினர்
*************
தீவிரவாதத்தை ஏன் கைவிட மறுக்கின்றார்கள் என்றே தெரியவில்லை????..
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,
//////தீவிரவாதத்தை ஏன் கைவிட மறுக்கின்றார்கள் என்றே தெரியவில்லை????..
ReplyDelete///////////
தீவிரவாதம் என்பது விடை தெரிந்த புதிர் நண்பரே . தெரிந்தே செய்கிறார்கள் .
அன்பின் ஸ்டார்ஜன்
ReplyDeleteஎப்பொழுதோ படித்த் சிறுவர்க்கான கதை. நன்று நன்று - தீவிர வாதம் என்று ஒழியுமோ தெரியவில்லை
நல்வாழ்த்துகள் ஸ்டார்ஜன்
நட்புடன் சீனா
குண்டு வைத்த மேட்டரில் ஏகப்பட்ட உள்குத்து இருப்பதாக வதந்தி
ReplyDeleteநடந்த சம்பவத்துக்கு நேர்மாறான கதை. கடைசி கேள்விக்கான விடையைத்தான் எல்லோரும் தேடியபடி.
ReplyDeleteகதை நல்லா இருக்கு ஸ்டார்ஜன்...
ReplyDelete//தீவிரவாதத்தை ஏன் கைவிட மறுக்கின்றார்கள் என்றே தெரியவில்லை????..//
ReplyDeleteலட்ச ரூபாய்க்கான கேள்வி இது.. ..!! இதில நிறை குறை இரண்டு பக்கமும் இருக்கே!!
இதனால் தான் இஸ்லாம் எப்பவும் பாதிக்கப்பட்டவன் மனநிலையில் இருந்து தீர்ப்பு வழங்குகிறது... அதனால் குற்றங்கள் , பழிவாங்கல் எதுவும் அதிகம் நடைப்பெறுவதில்லை..
இந்த சம்பவம் :-(
நல்லவேளை எந்தவிதமான அசம்பாவித சம்பவம் நடக்கவில்லை.
ReplyDelete..... Thats good!
இந்த சம்பவத்தில் முன்னெச்சரிக்கை செய்த கார்டும், சம்யோசிதமாக வண்டியை நிறுத்திய ஓட்டுனரும் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள்
ReplyDeleteநல்ல பகிர்வு
ஸ்டார்ஜன்
//பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய கண்ணனை அனைவரும் பாராட்டினர்
ReplyDelete//
கண்ணன் என்றாலே கண்டிப்பா நல்ல பையனாத்தான் இருப்பான் பாஸு :)
நண்பரே இது கதையில் மட்டுமல்ல உண்மையாகவும் இது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ReplyDeleteஸ்டார்ஜன்... இந்த கதையை நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன்..
ReplyDeleteஅந்த புத்தகமும் அந்த கலர்படங்களும் என் கண் முன் வந்து சென்று விட்டன...அவன் பெயர் கந்தன்.. கண்ணன் அல்ல...
வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விசயம்.
ReplyDeleteஅந்த நேரத்தில் திறமையாக செயல்பட்டு விபத்தை தவிர்த்த இரயில்வே ஊழியர்களுக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.
கண்ணனைப் போன்ற ரயில்வே கார்ட் இருந்ததால்தான் அன்றைய தினம் பேராபத்து தவிர்க்கப்பட்டு அத்தனை மனித உயிர்களும் காப்பாற்றப்பற்றுள்ளது.
ReplyDeleteநல்லார் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.
ரயில் பாதையில் குண்டு வைத்த சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.
ReplyDeleteஅதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
//////தீவிரவாதத்தை ஏன் கைவிட மறுக்கின்றார்கள் என்றே தெரியவில்லை????..
ReplyDelete//இதேதான் எனது கேள்வியும்.
இந்த சம்பவத்தில் நிறைய அரசியல் சூசகம் பூந்து விளையாடுவதா பலவிட கண்ணோட்டங்களின் மூலம் தெரியவருது.
ReplyDeleteஇது மாதிரி சம்பவங்கள் மனிதாபிமானத்தை கருத்தில் கொண்டு தவிர்க்கப்படவேண்டும்.
அருமையா சொல்லிருக்கீங்க ஸ்டார்ஜன். ///தீவிரவாதத்தை ஏன் கைவிட மறுக்கிறார்கள் என்றே தெரியவில்லை????...// அதானே...
ReplyDeleteவாங்க பனித்துளி சங்கர் @ சரியா சொன்னீங்க.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க சீனா அய்யா @ சரியா சொன்னீங்க.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க அத்திரி @ அட அப்படியா.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவருத்ததிற்குரிய நிகழ்வு
ReplyDelete:(
வாங்க ராமலக்ஷ்மி மேடம் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
ReplyDeleteவாங்க ஸ்டீபன் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
ReplyDeleteவாங்க ஜெய்லானி @ அருமையான கருத்துக்கள். தீவிரவாதம் பெருகிவிட்ட இந்தகாலத்தில் அதை எப்படி வேரோடு அழிப்பது? என்ற விடை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தீவிரவாதத்துக்கு துணைபோகுபவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இதுதான் இன்றைய சூழலுக்கு பொருத்தமாக இருக்கும்.
ReplyDeleteவருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க சித்ரா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteஅருமையா சொல்லிருக்கீங்க ஸ்டார்ஜன்
ReplyDeleteவாங்க கண்ணா @ சரியா சொன்னீங்க..
ReplyDelete///கண்ணன் என்றாலே கண்டிப்பா நல்ல பையனாத்தான் இருப்பான் பாஸு :) //
அப்படியா சொல்லவே இல்லை..:))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க சசிக்குமார் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க ஜாக்கி @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.. அப்படியா., அவன் பெயர் கந்தனா..
ReplyDeleteவாங்க அக்பர் @ சரியா சொன்னீங்க... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க அபுல்பசர் @ சரியா சொன்னீங்க... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க சரவணகுமார் @ சரியா சொன்னீங்க... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க ஸாதிகா அக்கா @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க அபுஅஃப்ஸர் @ ஆமா.. ஒருவேளை அப்படி இருக்கலாமோ..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க மின்மினி @ நன்றி கருத்துக்கு..
ReplyDeleteவாங்க ஆறுமுகம் முருகேசன் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteரொமப் கொடுமையா இருக்கு இது போல் விஷியங்கள் படிக்கவே ரொமப் பயமா இருக்கு, அடிப்படு கிடப்பதை பார்க்க தைரியம் இல்ல.
ReplyDeleteகதை நல்ல இருக்கு.
ReplyDeleteவாங்க நேசமித்ரன் சார் @ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
ReplyDeleteவாங்க ஜலீலா @ ஆமாம் நீங்க சொல்வது சரிதான். என்ன செய்ய?.. வருகைக்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஅனைவருக்கும் நன்றிகள்.
ReplyDelete