மீண்டும் இதுபோன்றதொரு நட்சத்திர வாரம் அமையப் பெற்றால் இந்த வாரம்போல சிறப்பாக்குவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரது வாழ்த்துக்களின் மூலம் உங்கள் அனைவரின் சார்பாகவும் மீண்டும் ஒரு நட்சத்திர வாய்ப்பை தமிழ்மண நிர்வாகத்தினரிடம் கோருகின்றேன்.
மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
**********
தமிழ்மண நிர்வாகி அவர்களுக்கு,
தமிழ்மண நிர்வாகத்தினருக்கு என்னுடைய சின்ன வேண்டுகோள். உங்களுடைய சேவையை யாராலும் மறக்கஇயலாது. எங்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து பதிவுலகில் பிரகாசிக்க வைத்திருப்பதற்கு எத்தனை தடவைகள் நன்றிகள் சொன்னாலும் அதற்கு ஈடுஇணையாகாது. எல்லோரும் உங்களிடம் தங்களுடைய பதிவுகளின் மூலம் கோரிக்கை வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அது வாசகர் பரிந்துரையை நீக்குவது பற்றிய கோரிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களது சேவை எப்போதும் போல தொடரட்டும். வாசகர் பரிந்துரை நீக்கவேண்டாம். புதிதாக எழுதும் பதிவர்களை பற்றிய புதிய பகுதி கொண்டு வந்தீர்களானால் எல்லோருக்கும் மிக பயனுள்ளதாக அமையும்.
எதற்காக வாசகர் பரிந்துரை நீக்கவேண்டாம் என்று சொல்கிறேன் என்றால் வாசகர் பரிந்துரை என்பது வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பகுதி. இதற்கும் தமிழ்மணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
வாசகர் பரிந்துரையில் வாசகர்கள் படித்து தேர்ந்தெடுப்பதுதான் தேர்வாகும். ஒரு சிலரே அதிக வாசகர்கள் பரிந்துரைக்கும் இடுகையில் வரமுடியும். இதுதான் உண்மைநிலையும்கூட. உங்களுக்கு அந்த இடுகைகள் பிடித்திருந்தால் அதற்கு ஓட்டுபோட்டு மேலும் முன்னணியில் வரச் செய்யுங்கள். அதற்காக வாசகர் பரிந்துரைக்கும் பகுதியை வேண்டாமென்று சொல்வது எந்தவிதத்தில் நியாயமாகும். ஓட்டுபோடுவது என்பது நமது உரிமை. அதை விட்டுக்கொடுக்கலாமா.. சொல்லுங்கள்.
வாசகர் பரிந்துரையில் மாற்றம் தேவை இல்லை. இப்படியே இருப்பதுதான் நல்லதென்று நினைக்கிறேன்.
******************
தயக்கம்
என்னுடைய கடந்த வாழ்வில் முன்னேற ஆசை.. இடுகையில் ஒரு காரணியை சொல்ல மறந்துவிட்டேன். வாழ்க்கையில் முன்னேற தயக்கம் இருக்கக்கூடாது. எந்த காரியத்துக்கும் தயக்கமில்லாமல் துணிச்சலுடன் முன்னேறவேண்டும்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஆண்டுவிழாவில் பாட்டுப்போட்டி நடைபெற்றபோது நானும் கலந்து கொள்ள ஆசைப்பட்டேன். அதற்காக என்னபாட்டு பாடலாம் என்று யோசனை செய்தேன். பாடுவதற்கு "எல்லாப் புகழும் இறைவனுக்கு" என்ற பாடலை பாட முடிவு செய்தேன். எனக்கு அந்த பாடலின் வரிகள் தெரியாததால் ஒவ்வொருவரிடமும் கேட்டேன். ஒரு கல்லூரி விரிவுரையாளர் அந்த பாடலை எனக்கு எழுதித் தந்தார். எப்படி பாடவேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார்.
பாட்டுப்போட்டி அன்று நிறையபேர் கலந்து கொண்டனர். வைத்திருந்த பெட்டியிலிருந்து ஆளுக்கொரு சீட்டு எடுத்தோம். நான் எடுத்த சீட்டை பார்த்தால் நம்பர் ஒண்ணு. மனசு திக்திக்கானது. எப்படி பாடப்போகிறோம்?.. ரொம்ப தயக்கமாகவே இருந்தது. வேறசீட்டை எடுத்திடலாமா என்று ஒரு யோசனை. என்ன ஆனாலும் சரி.. நடப்பது நடக்கட்டும்.
சார், ஒண்ணாம் நம்பர் எடுத்த மாணவர் மேடைக்கு வருமாறு அழைத்ததவுடன் நான் போய் நின்றதும் எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இவன் எப்படி பாடப்போகிறான் என்று பொண்ணுங்க பையன்கள் எல்லோரும் திகைத்தனர். ஒரே கூச்சல்.
நான் பாட ஆரம்பித்ததும் இருந்த கூச்சல் அடங்கி ஆர்வமுடன் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கோ முதல்தடவை மேடையில் பாடுவதால் கைகளெல்லாம் கிடுகிடுவென நடுங்கியபடி நடுக்கத்துடன் பாடினேன். பாடிமுடித்ததும் எல்லோருக்கும் ஒரே சந்தோசம். கைத்தட்டுகளால் அரங்கத்தையே அதிரவைத்தனர்.
பரிசு கிடைக்கவில்லையென்றாலும் பலரிடமிருந்து பாராட்டுக்கள். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.
ஆகவே எந்த ஒரு விசயத்திலும் தயக்கம் என்பது வேண்டாம். தயக்கம்தான் முன்னேறுவதற்கு தடையாக இருக்கும் ஒன்று. தயக்கத்தை விட்டொழியுங்கள்.
என்னை தமிழ்மண நட்சத்திரமாக தேர்வு செய்த தமிழ்மண நிர்வாகி அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய எல்லா படைப்புகளையும் படித்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் நன்றிகள்.
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.
,
வாசகர் பரிந்துரை அவசியும் வேண்டும்.. சிலர் கள்ளப் பெயர்களில் இடுகைகளுக்கு முன்னுரிமை தருகிறார்கள் என்பதற்காக அனைவரையும் அப்படி பார்க்க முடியாது..
ReplyDeleteநான் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ..
வாசகர் பரிந்துரை - அதிகம் சூடு பிடிக்குது ....
ReplyDeleteபேசாமல் தமிழ்மணம் எல்லோர் கருத்தையும் கேட்கலாம்.
இதற்கு ஒரு தேர்தல் வைத்து முடிவு செய்யலாம்.
என்ன சொல்லறீங்க ....?
எனக்கு ரொம்ப தெரியவில்லை. அதனால் அதிகம் கருத்து இல்லை.
வாழ்த்துக்கள் ஷேக்.!! வாசகர் பரிந்துரை கண்டிப்பாக வேண்டும்..அதுதான் நல்லதும் கூட..ஒரு வகையில
ReplyDeleteநட்சத்திர பதிவராய் ஜொலித்ததர்க்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷேக்.
ReplyDeleteநான் உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
நீங்கள் நட்சத்திர பதிவராய் இருந்த ஒரு வாரமும் , வேகமாக ஓடி விட்டது.
ReplyDeleteமிகுந்த நன்றிகள் தங்களின் சிறப்பான பதிவுகளுக்கு\
நட்சத்திர பதிவராக ஜொலித்ததற்கு வாழ்த்துகள் சேக்.
ReplyDeleteஒரு வாரம் போனதே தெரியவில்லை. நல்ல பல கருத்துக்களுடன் இந்த வாரத்தை முடித்தது மனதுக்கு மகிழ்ச்சி.
அத்தனை பதிவுகளையுமே
ReplyDeleteதொடர்ந்து படித்தேன் ஸ்டார்ஜன்.
வாழ்த்துகள்.இன்னும் உங்கள் பதிவுகளோடு தொடரலாம்.
நீங்களே பார்த்தால் தெரியும் ஒரு சிலர் பதிவுகள் மட்டும்தான் அந்த பகுதியில் வருகிறது. அப்படிஎன்றால் மற்றவர்களெல்லாம் சிறப்பாக எழுதுவதில்லையா?
ReplyDeleteகுழுவா சேர்ந்துக் கொண்டு ஓட்டுப் போட்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
அப்படிப் பட்ட குழுவில் இருப்பவர்கள் அந்த பரிந்துரைப் பகுதியை நீக்க வேண்டாம் என்று கூறுவதில் அதிசயமில்லை
ஒருவார நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துகள் எல்லாம் அருமையா இருந்துச்சு தமிழ்மணத்தின் அங்கிகாரம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை அதனால் இதை பற்றி என்ன கருத்து சொல்ல என்று தெரியவில்லை......
ReplyDeleteநட்சத்திரப் பதிவராக தாங்கள் எழுதிய அனைத்துப் பதிவுகளும் அருமை! குறிப்பாக செய்யது அப்பா மனதை நெகிழ வைத்தது. எங்க ஊர்ல கூட ஒரு செய்யது அப்பா இருந்தாங்க. அதுதான் நினைவுக்கு வந்தது.
ReplyDeleteஅப்புறம் உங்க ஊர் பேட்டைன்னு குறிப்பிட்டுருந்தீங்க பேட்டையில நானும் 6 வருடங்கள் இருந்திருக்கிறேன்.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
"வாசகர் பரிந்துரை" தலைப்பு தான் தவறு,
ReplyDeleteஎன்னைக் கேட்டால், 'தமிழ் ஓவியா, மாதவராஜ் மற்றும் பலர்' னு தலைப்பு வைக்கலாம்.
:)
அன்பின் ஸ்டார்ஜன்
ReplyDeleteஅழகாக ஒரு வாரத்தினை முடித்ததற்கு பாராட்டுகள் - அனைத்துமே அருமையாக இருந்தன. நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
//புதிதாக எழுதும் பதிவர்களை பற்றிய புதிய பகுதி கொண்டு வந்தீர்களானால் எல்லோருக்கும் மிக பயனுள்ளதாக அமையும்.//
ReplyDeleteபுதியதை எழுதும் பதிவர்களுக்கு புதிய பகுதி கொண்டு வந்தால் எல்லோருக்கும் மிக பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் நண்பா .
வாழ்த்துக்கள் அக்பர்.... உங்களின் பயணம் தொடரட்டும்..
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான பகிர்வு.
நட்சத்திர வாரம் போனதே தெரியவில்லை..
ReplyDeleteகடைசியில் வாசகர் பரிந்துரை குறித்த கோரிக்கை வச்சீங்க பாருங்க. அருமை...
ஆனால் என்வரையில் பரிந்துரை தேவையில்லை என நினைக்கிறேன்....காரணம் பதிவுகள் ஓட்டுக்களுக்காக எழுதப்படும் சூழல் அதிகரித்து விடும்
வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன். நட்சத்திர வார இடுகைகள் சிறப்பாய் இருந்தது.
ReplyDeletepaaraattugal starjan
ReplyDeleteவாசகர் பரிந்துரை நல்ல விஷயம் தான் ஆனால் ஒரு சிலர் இதை தவறாக உபயோகிக்கிறார்கள்
ReplyDeleteவாசகர் பரிந்துரை நல்ல விஷயம் தான் ஆனால் ஒரு சிலர் இதை தவறாக உபயோகிக்கிறார்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் - நாளைய ராஜாவே!
ReplyDeleteஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.
ReplyDeleteஅடுத்த ஸ்பைடர் மேன் ஆகா அட்வான்ஸ் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.வாசகர் பரிந்துரை அவசியம் வேண்டும் என்பதே எனது கருத்தும்.
ReplyDelete