Pages

Thursday, July 15, 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?..

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

Starjan ( ஸ்டார்ஜன் )

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. இது ரொம்ப நாளாக எல்லோரும் என்னிடம் கேட்ட கேள்வி. அதற்கான பதிலை சொல்ல இப்போதுதான் வாய்ப்பு அமைந்தது. கல்லூரியில் படிக்கும்போது இரண்டு ஷேக் மைதீன்கள் உண்டு. எங்களுக்குள் வித்யாச‍ப்படுத்திக் கொள்ள பெயரில் மட்டும் அவருக்கு தில் ஷேக் என்றும் எனக்கு ஸ்டார் ஷேக் என்றும் வைத்துக் கொண்டோம். பெயரில்தான் வித்யாசமேதவிர எப்போதும் ஒன்றாவே இருப்போம். ஸ்டார் ஷேக் என்ற பெயரில்தான் பதிவு ஆரம்பிக்க நினைத்தேன். பின்னர் எனது மனைவி பெயரில் உள்ள முதலெழுத்தும் என்பெயரில் உள்ள கடைசி எழுத்தையும் சேர்த்து ஸ்டார்+ஜன்= ஸ்டார்ஜன் என்று பெயர் வைத்து எழுத ஆரம்பித்தேன்.

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...

எழுத்து என்பது நமது எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. மனதில் உள்ள எண்ணங்களை எழுத்தின்மூலம் பதியவைப்பதற்காக..

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் ஆரம்பத்தில் தமிழ்மணம், தமிழிஷ்ல் மட்டுமே இணைத்திருக்கிறேன். தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் இதர திரட்டிகளுக்கும் என் நன்றிகள். எனது எழுத்துக்களை எல்லோரிடமும் கொண்டு சேர்த்த பெருமை திரட்டிகளுக்கே போய் சேரவேண்டும்.

பின்னர் என் எழுத்துக்களை படித்து பாராட்டிவரும் வாசகர்கள் அவர்களாக எல்லா திரட்டிகளிலும் இணைத்த அவர்களுக்கு என்றென்றும் என் நன்றிகள்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என்னுடைய அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டுள்ளேன். அனுபவங்களை பற்றி எழுதும்போது நமக்கும் படிப்பவர்களுக்கும் ஒரு உறவுப்பாலம் தோன்றும். அதில் ஒரு சந்தோசம். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதை போக்காமல் நாளைய பொழுது போக என்னசெய்யலாம் என்று யோசித்து எழுதுகிறேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

டெம்ப்ளேட் டெஸ்ட் செய்ய ஒரு வலைப்பூ. நான் எழுத ஆரம்பித்த புதிதில் உள்ள நாளைய ராஜா என்ற வலைப்பூ, இப்போது எழுதிவரும் நிலா அதுவான‌த்துமேல சேர்த்து மொத்தம் மூன்று.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

நான் ஒவ்வொரு இடுகை எழுதும்போதும் முதல் இடுகையாக நினைத்து எழுதுகிறேன். எல்லோரையும் போல நானும் எழுத வேண்டும் என்ற ஆர்வம்தான் இன்றுவரை உள்ளது. மாறாக எனக்கு யார்மீதும் கோபமோ பொறாமையோ ஏற்பட்டதில்லை. எல்லோரும் என் நண்பர்களே...

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

என் நண்பர் அக்பர். பண்பாளர்; பாசமிக்கவர்; என் நலனில் அக்கறை கொண்டவர். நாங்கள் இருவரும் நிறைய விசயங்களை பற்றி விவாதிப்போம். ஆனால் கருத்துவேறுபாடு ஏற்பட்டதில்லை.

பின்னர் எழுத ஆரம்பித்தவுடன் என்னை பாராட்டிய என் நண்பர் முரளிக்கண்ணன், அண்ணன் கோவி.கண்ணன், பழனி டாக்டர் திரு சுரேஷ் அவர்களையும் மறக்க இயலாது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

எல்லோருக்கும் தெரிந்த விசயந்தான். நான் புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை. கேள்வியில் கேட்டதினால்..., உங்கள் கற்பனைகளுக்கு தீனி போடுங்கள். உங்கள் எழுத்துக்கள் பிறரால் போற்றப்படவேண்டும். எழுத்திற்கு ஒரு கண்ணியம்கொடுங்கள். பிறர் மனம் வருந்தும் அளவுக்கு உங்கள் எழுத்துக்கள் ஆகிடக்கூடாது.


பா.ரா அண்ணன் அவர்களையும் நண்பர் ஜெய்லானி அவர்களையும் நண்பர் சரவண‌க்குமார் அவர்களையும் இந்த தொடரை தொடர அன்போடு அழைக்கிறேன்.


என்றும் அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

49 comments:

  1. //என் நண்பர் அக்பர். பண்பாளர்; பாசமிக்கவர்; என் நலனில் அக்கறை கொண்டவர். நாங்கள் இருவரும் நிறைய விசயங்களை பற்றி விவாதிப்போம். ஆனால் கருத்துவேறுபாடு ஏற்பட்டதில்லை.//

    அக்பர்ஜி நீங்க சொல்லிக்கொடுத்தமாதிரித்னே சொல்லிருக்காரு...இல்ல எதாச்சும் மாத்தி சொலிட்டாரா நம்ம குரு...

    சூப்பர் குரு.... டெஸ்ட் பண்றதுக்காகவே ஒரு வலைப்புதிவா.... பாருங்கப்பா இலவசமா கொடுத்தா என்னல்லாம் பண்றாங்கன்னு :))

    ReplyDelete
  2. //அக்பர்ஜி நீங்க சொல்லிக்கொடுத்தமாதிரித்னே சொல்லிருக்காரு...இல்ல எதாச்சும் மாத்தி சொலிட்டாரா நம்ம குரு...//

    இனி வர்றவ‌ங்களுக்கு நீங்களே பாயிண்டை எடுத்துக்கொடுப்பீங்க போல இருக்கே தல. இதுக்கே எம்பூட்டு செலவு ஆயிடுச்சு தெரியுமா :)

    நல்ல கருத்துகள் ஸ்டார்ஜன். உன் புனைப்பேர் காரணத்தை ரொம்ப நாளா எங்கிட்ட கூட சொல்லலை. இதுதான் காரணமா.

    ReplyDelete
  3. உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பதாலும் உங்கள் பெயர் மீது ஒரு ஈர்ப்பு இருந்தாதுளும்
    இந்த பதிவு ரசிக்க வைத்தது.

    ஸ்டார் .... சூப்பர் ஸ்டார் ரசிகரா சார் நீங்கள் ? சித்ரா அக்கா மாதிரி.

    ReplyDelete
  4. உங்களை பற்றி அறிய முடிந்தது.

    ReplyDelete
  5. கேள்விகளும், உங்கள் பதிகளும் அருமை.

    ReplyDelete
  6. unga name patthiya ragasiyam inniku terinthathu

    ReplyDelete
  7. //அக்பர்ஜி நீங்க சொல்லிக்கொடுத்தமாதிரித்னே சொல்லிருக்காரு...இல்ல எதாச்சும் மாத்தி சொலிட்டாரா நம்ம குரு...//

    எப்பிடித்தான் கண்டுபிடிக்கிறாரோ இந்தப் பிரதாப்பு..

    சி.பி.ஐ டைரிக்குறிப்புல ரொம்ப ஒன்றிட்டாருன்னு நெனைக்கிறேன்.

    ரைட்டு..

    வாழ்த்துகள் ஸ்டார்ஜன். (பெயர்க்காரணம் நல்லாயிருக்கு)

    ReplyDelete
  8. //பொழுதை போக்காமல் நாளைய பொழுது போக என்னசெய்யலாம் என்று யோசித்து எழுதுகிறேன்.//


    சிறப்பான தங்கள் எண்ணங்களை அருமையா சொல்லிடீங்க...வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. வாழ்த்துக்க‌ள் ஸ்டார்ஜ‌ன்..... உங்க‌ளின் ப‌தில்க‌ள் ந‌ல்லா இருந்த‌து.

    ReplyDelete
  10. கேள்வியும் பதிலும் அருமை.

    ReplyDelete
  11. வாழ்த்துக்க‌ள் ஸ்டார்ஜ‌ன்..... உங்க‌ளின் ப‌தில்க‌ள் ந‌ல்லா இருந்த‌து.

    ReplyDelete
  12. எளிமை, இனிமை நேர்மையான பதில்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு ஸ்டார் ஷேக்! :-) கலக்கிருவோம். நன்றி மக்கா!

    ReplyDelete
  14. //"பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்?.."//

    ஸ்டார்தான்


    தொடர் பதிவா ஓக்கே..ஓக்கே..எதுவும் விதிகள் இருக்கா..?பாஸ் இப்பவே சொல்லிடுங்க..ஹி..ஹி..!!

    ReplyDelete
  15. பதில்களில் உங்கள் உண்மையான மனம் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  16. ம்ம்ம்ம் தொடருங்கள்...

    ReplyDelete
  17. வாங்க டிவிஆர் சார் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  18. வாங்க சிஷ்யா பிரதாப் @ அதெப்படி கரக்டா கண்டுபிடிச்சீங்க சிஷ்யா.... :))) எல்லாமே இலவசம்தானே.. :)))

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  19. வாங்க மோகன் குமார் @ நன்றி பாராட்டுக்கு.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  20. வாங்க அக்பர் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  21. வாங்க கார்த்திக் சிதம்பரம் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்..

    ஸ்டார்.. சூப்பர் ஸ்டார் ரசிகர் என்றில்லை. சூப்பர் ஸ்டாரையும் பிடிக்கும். ஸ்டார் எனக்கு பிடித்தமானது.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  22. வாங்க தமிழுதயம் @ நன்றி பாராட்டுக்கு.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  23. வாங்க அம்பிகா மேடம் @ நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

    ReplyDelete
  24. வாங்க கார்த்திக் எல்கே @ நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  25. வாங்க சீமான்கனி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்..

    ReplyDelete
  26. வாங்க சரவணன் @ ஆமால்ல.. பிரதாப்பு எப்படித்தான் கண்டுபிடிக்கிறாரோ..:)))

    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  27. வாங்க ஸ்டீபன் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    ReplyDelete
  28. வாங்க கட்டபொம்மன் @ நன்றி

    ReplyDelete
  29. வாங்க குமார் @ ரொம்ப நன்றி

    ReplyDelete
  30. வாங்க பாலா சார் @ ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.. உங்களிடமிருந்து பாராட்டுக்கள் பெறுவது மகிழ்ச்சி.. பாராட்டுக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  31. வாங்க பா.ரா அண்ணே @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  32. வாங்க ஜெய்லானி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. விதிகள்ன்னு எதுவும் கிடையாது.. உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  33. வாங்க ஹேமா @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  34. வாங்க ஷேக் முக்தார் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

    ReplyDelete
  35. வாங்க ரியாஸ் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு

    ReplyDelete
  36. வாங்க இளம்தூயவன் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்

    ReplyDelete
  37. அருமையான பதில்கள் ஸ்டார்ஜன். உங்கள் பெயர் காரணத்திலிருந்து உங்கள் மனைவியின்மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. உங்க மனைவி கொடுத்துவைத்தவர். வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  38. யதார்த்தமான எழுத்து.. வாழ்த்துக்கள் அண்ணா :)

    ReplyDelete
  39. இது தான் ஸ்டார்ஐன்..விசயமா?

    ReplyDelete
  40. இது தான் ஸ்டார்ஐன்..விசயமா?

    ReplyDelete
  41. வாழ்த்துக்க‌ள் ம‌க்கா

    ReplyDelete
  42. பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
    மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

    http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

    ReplyDelete
  43. அடடா.. ரொம்ப லேட்டா வந்துருக்கேன்... வழக்கம் போல.. :)

    எல்லா பதில்களும் அருமை..

    எளிமையான நடையில், அழகா சொல்லியிருக்கீங்க ..
    உங்க பெயர் பத்தின விவரம் சொன்னது , சூப்பர் ... ரொம்ப நல்லா இருக்குங்க..!

    நீங்க பதிவுலகில் தொடர்ந்து கலக்குவதற்கு , என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...! :-)))

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்