Pages

Saturday, July 17, 2010

அறியா பருவம்

பத்துமாசம் சுமந்து
பெற்றதால் என்னவோ
அம்மாவுக்கு எவ்வளவு
சந்தோசம் முகத்தினிலே!!
எத்தனை எத்தனை
கோயில்களுக்கு சென்றிருப்பாளோ
என் வரவுக்காக..

தவழும்போதும் குப்புற
விழுந்து நான் அழும்போதும்
என் அழுகையை ரசித்து
பாலூட்டி தாலாட்டி
உறங்கவைத்தாள் என் அன்னை.

நடைபயில கற்றுக்
கொடுத்து நான்
நடக்கமுயற்சித்தாலும்
நடக்க விடுவதில்லை..
இடுப்பை விட்டு இறக்காமல்
எப்போதும் தூக்கிக்கொண்டு
கண்ணுக்கு கண்ணாக
காத்தாள் என் அன்னை.

நான் தனியாக சென்றால்
பதபதைப்புடன் உடனே
தேடி வந்து அள்ளிச்
செல்வாள் அன்னை.

குறும்பு சேட்டைகள்
செய்யும்போது கண்டிக்க‌
மனம் வருவதில்லை..
பாசம் நேசம்
எல்லாம் கண்டேன்
என் அன்னையிடம்..

நர்சரிக்கு செல்லும்
வயதில் சென்றேன்
அவளைவிட்டு பிரிந்து..
செல்லும்போதே மனம்
வலித்தது இருவருக்கும்

திரும்பி வந்தேன்
சலன‌மற்று..
அன்னையின் முகம்
காணமுடியாமல் நான்
கரிக்கட்டையாய்..


( 2004 ஜூலை 16 கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பலியான பிஞ்சுகளுக்கு அஞ்சலிகளுடன் இந்த இடுகையை சமர்பணம் செய்கிறேன். )

,

Post Comment

15 comments:

  1. நெஞ்சுரையும்...கனத்த கவிதை...அஞ்சலி...

    ReplyDelete
  2. இது வருந்தத்தக்க சம்பவம்.., மனதை கசக்கும் கவிதை. எனது அஞ்சலிகள்.

    ReplyDelete
  3. எம் செல்வங்களுக்கு அஞ்சலி..

    ReplyDelete
  4. ரெம்ப‌ கொடுமையான‌ நிக‌ழ்வு... அவ‌ர்க‌ளுக்கு என் அஞ்ச‌லிக‌ள்..

    ReplyDelete
  5. கவிதை நன்றாக உள்ளது. அந்த பிச்சுகளின் இறப்பு மறக்க முடியாத ஓன்று.

    ReplyDelete
  6. எனது கண்ணீரின் அஞ்சலிகளும்..
    நண்பரே!

    ReplyDelete
  7. பிஞ்சுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

    ReplyDelete
  8. மனதைவிட்டு அகல மறுக்கும் வரிகள்.பாரமான கவிதை ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  9. கவிதை மனதை கனக்க வைத்தது.என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்