Pages

Wednesday, July 7, 2010

ப்ளாக்கரான புளிமூட்டை புண்ணியகோடி

“டும்..டும்டும்... டுன்டும் டும்..” என்று சத்தம் கேட்டவுடன் கோடகநல்லூர் சனமெல்லாம் என்னஏதோன்னு டீக்கடை பெஞ்சில் வெட்டிப்பேச்சி பேசிக்கிட்டிருந்த பெருசிலேருந்து சிறிசுவரைக்கும் கொட்டுஅடிப்பவனை சுற்றி கூடிட்டாங்க. சின்னசிறிசுகளுக்கு கொட்டுஅடிப்பவனை கண்டதும் சந்தோசம் தாங்கவில்லை. ஏய்ய்..ஹெஹெ.. ஏய் என்று ஒரேசத்தம். அடுப்படியில மண் அடுப்புல ஈரவிறகையும் எரியவைத்து சோறாக்கிக்கிட்டிருந்த பொம்பளைங்களும் அப்படி அப்படியே போட்டு ஆலமரத்தடிக்கு வந்துட்டாங்க..

“ஏலேய் அய்யா..என்ன சேதி கொண்டுவந்திருக்கலே..” என்று ஒரு பெருசின் குரல் டும்டும்..டுன்டும்..டும் என்ற சத்தத்தில் காணாமல் போனது. “இதனால சுத்துப்பட்டி சாதிசனத்துக்கு தெரிவிக்கிறது என்னன்னா.. நம்ம கோனூர் பண்ணையார் புளிமூட்டை புண்ணியகோடி வேலைக்கி ஆளெடுக்கிறவ.. இங்க காடுமேட்டெல்லாம் சுத்தி அப்பன் ஆத்தாட்ட திட்டுவாங்கிக்கிட்டு இருக்கிற பயலுக.. வயசுபுள்ளைங்கள சுத்திசுத்தி வந்து வாங்கிகட்டிகிட்டு இருக்கிற பயலுகளும் அங்க வந்துசேருங்கல.. அப்பன் ஆத்தாக்களே!!.. அடம்புடிக்கிற பயலுகளை பொடதியில தட்டி அனுப்பிவைங்க ஆத்தாமார்களே.. அவங்கனுக பொஞ்சாதிகளே.. அனுப்பி வைங்கோ.. குப்பன்னாபுரத்து பண்ணையாரோட பங்களாவுக்கு வந்திருங்க சாமியோவ்..டும் டும்.. டும்டும்..”

“எலேய் நல்லசெய்தி சொல்லிருக்கலே.. காடுமேடெல்லாம் திரிஞ்சிகிட்டு இருக்கிற பயலுக புத்திவந்து பொழைக்க நல்ல விசயமுல்ல.. அப்படி என்னவேலைல்ல நம்ம அய்யா கொடுக்கிறாவ..” என்று மணியக்காரர் கேட்க..
“அய்யா.. நல்லா கேட்டுக்கோங்க.. பண்ணையார் கம்பூட்டர்ன்னு எதோ இருக்காம்ல.. அத சொல்லிக்கொடுத்து வேலையும் கொடுக்கிறதா சொல்லிருக்காவ...டும்டும்.. நா இன்னும் நாலுஊருக்கு போவனும் வர்றேன் சாமியோ..” என்று சொல்லிக்கொண்டே போனான்.

************

கோனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு கடந்த 10 வருசமா தலைவரா இருக்கிற பண்ணையார் புளிமூட்டை புண்ணியக்கோடிக்கு சொத்துபத்துன்னு தோட்டம்துரவுன்னு ஏகப்பட்டது நிறைய கணக்குவழக்கில்லாம இருக்கு. அவருக்கு ஒரு ஆசை மனசுக்குள்ள இருந்துகிட்டு அரிச்சிக்கிட்டு இருக்கு.. பேரன்பேத்தி எடுத்த பொறவும் அவரோட ஆசை மாறவேஇல்லை. நாமளும் இந்த உலகத்துல பேமஸ்ஸாகனும்கிற ஆசை அவர் யோசித்து யோசித்து இருக்கிற மண்டமசிரெல்லாம் காணாம போயிருச்சி..

“அய்யா என்ன இதுக்கெல்லாம் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கீக..பாருங்க தலையில ஒரு மசிரையும் காணல..” என்றான் அவரிடம் வேலைபார்க்கும் கணக்காப்பிள்ளை முத்து. “எலேய்.. என்ன எகத்தாளமா போடுற.. இருஇரு உன்ன அப்புறமா கவனிக்கிறேன்..” என்றார் பண்ணையார். “அய்யா.. கோவிக்கிறாதீக.. நா உண்மையத்தான் சொன்னேன். இந்த சுத்துப்பட்டியில உங்கள அடிக்கிறதுக்கு ஆளே இல்லைன்னு பேசிக்கிறாக.. நீங்க பெருசா கவலப்பட்டுக்கிட்டு இருக்கீக” என்றான் முத்து. “எல.. இந்த சுத்துப்பட்டிக்கெல்லாம் என்னைய தெரியலாம். ஆனா உலகம்பூராவும் என்பேரு தெரிஞ்சி நா பேமஸ்ஸாகனும்.. அதுக்கு எதாவது வழியிருந்தா சொல்லுலே..” என்றார் புண்ணியக்கோடி.

“அட இதான் விசயமுங்களா.. நானும் என்னவோஏதோன்னு பதறில்ல போயிட்டேன். நல்லா சொன்னீக அய்யா.. இப்போ பதிவுலகம்னு ஒண்ணு இருக்கு.. அங்க நீங்க ப்ளாக் ஆரம்பிச்சி எழுத ஆரம்பிச்சிகன்னா போதும். ஹிட்டு தானா ஆயிரும். நீங்களும் உலகம்பூராவும் பேமஸ்ஸாகிருவீங்க பாருங்க” என்றான் முத்து. “அட அப்படியால்ல முத்து.. நல்லவாக்கு சொன்னேல.. ஆமா அதன்ன பிளேக்கு பிளேக் நோயால்ல அது..” என்ற பண்ணையாருக்கு “அய்யா என்னஇது ரொம்ப வெள்ளந்தியா இருக்கீக.. அதுபேரு பிளேக் இல்ல ப்ளாக். அதுல தினமும் பதிவபோட்டீங்கன்னா போதும்.. ஒருநா கத கட்டுர, கவித, சமையல்குறிப்புகள், அழகுகுறிப்புகள், சமுதாயத்துல நடக்கிற பிரச்சனைகள், அரசியல் சம்பவங்கள், நக்கலா நகைச்சுவை இப்படின்னு எழுத ஆரம்பிச்சீங்கன்னா நீங்க உலகாளவுல பேமஸ்ஸாகிருவீக.. என்ன அய்யா நா
சொல்றது விளங்கிச்சா..” என்று அவன் சொல்லசொல்ல ஆன்னு வாய்மூடாம பண்ணையார் கேட்டுக்கொண்டிருந்தார்.

“எலே இதுல எதுவும் எகத்தாளமில்லையே..ஆமா நா கைநாட்டாச்சே எப்படில்ல நீ சொன்னமாதிரியெல்லாம் எழுவுறது.. ஒண்ணும் புரியலியே..” என்றார் அப்பாவியாக. “அய்யா ஒண்ணும் கவலப்படாதீக.. நீங்க எழுதவேணா., ஆளவச்சி எழுத வச்சிட்டாப்போச்சி.. பட்டணத்துலருந்து நாலெழுத்து படிச்ச கம்பூட்டர் தெரிஞ்ச ஆளுகளவச்சி எழுதிட்டீங்கன்னா போதும். அவுக எழுதிருவாக.. என்ன சரியா” என்றான் முத்து. “எலேய்.. படிச்ச ஆளுகலெல்லாம் வேணாமுல்ல.. நம்ம சுத்துப்பட்டில உள்ள பயலுவல கூட்டியாந்து எழுத வச்சா.,நம்ம சுத்துப்பட்டி சனங்கல்லாம் என்னைய பெருசா பேசுவாங்க.. அப்படியே அவங்களுக்கும் வேலை கொடுத்தமாதிரியும் இருக்கும் பேரும் கிடைச்சமாதிரியும் இருக்குமுல்ல என்ன நா சொல்றது” என்றார் பண்ணையார்.

“அய்யா நீங்க சொல்றது வாஸ்தவந்தான். ஆனா நம்ம பயலுவ நாலெழுத்து படிச்சவங்களா.. எல்லாம் உங்களமாதிரி கைநாட்டு பயலுவ.. அவனுவளப்போயி எழுத சொல்றீங்களே இதெல்லாம் சரியாவராதய்யா.. அவனுவளுக்கு கம்பூட்டர பத்தி ஒரு எலவும் தெரியாதே.. எப்படி எழுதுவானுக.. நல்லா நாலுக்குமூணு தடவ யோசிச்சிக்கிருங்க” என்றான் முத்து.

“சரியா வரும்லே.. நம்ம பயலுக காட்டுலேயும் மேட்டுலேயும் திரியிறானுக.. அவனுகள படிக்கவச்சா அவனுகளுக்கும் பொரோசனமாஇருக்கும்; நமக்கும் பொரோசனமா இருக்கும்ல... என்ன ஆனாலும் சரி அவனுக படிக்கவச்சி அதன்ன சொன்னே பிளேக்கோ ப்ளாக்கோ அத எழுத வைக்கப்போறோன்ல..சரியா..” என்றார். “சரி அய்யா.. உங்க இஷ்டம்போல செய்யுங்க.. ஆமா பயலுவலுக்கு கம்பூட்டர் சொல்லிக்கொடுக்கணுமே அதுக்கு..” என்று முத்து சொல்லிமுடிக்குமுன் பண்ணையார் “எலேய் பட்டணத்துலருந்து நாலெழுத்து படிச்ச கம்பூட்டரு சொல்லிக்கொடுக்குற‌ ஆளுகள கூட்டியாந்துரு.. சுத்துப்பட்டிக்கெல்லாம் தண்டோரா போட்டு சொல்ல சொல்லிருலே.. என்ன நா சொல்ரது காதுல விழுதா” என்று சொன்னபடி செழியநல்லூருக்கு பஞ்சாயத்து பண்ண கிளம்பினார். ஹூம் ஹூம் இதெல்லாம் எங்கப்போயி முடியப்போவுதோ என்றபடி முத்து சென்றான்.

*********

எல்லா ஊர்லருந்தும் பயலுக பண்ணையார் கொடுக்கிற வேலைக்கு ஆர்வத்துடன் கிளம்பினாங்க. சுத்துப்பட்டி பதினெட்டுபட்டி சனமெல்லாம் வாய்நிறைய பண்ணையார் நல்லாருக்கன்னு வாழ்த்தினாங்க..

அப்பன்பாட்டன் சொத்தை உக்கார்ந்து தின்னு கரைச்சி., ஏழபாழைங்க வயித்துல அடிச்சி சொத்த அபகரிச்சி., எப்பப்பார்த்தாலும் வெட்டுகுத்து, வெட்டிபேச்சி, சினிமா கூத்துன்னு பண்ணையாருங்க திரிஞ்ச காலமெல்லாம் போயி மக்களுக்கு நல்லது செய்யனுன்னு நினைக்கிற நம்ம பண்ணையார மாதிரி ஊர்உலகத்துல இப்பூடி ஒரு மனுசாளு இருந்தா நாங்கெல்லாம் முன்னேறி நாடும் முன்னேறிருமே என்று வாயிலிருந்து மட்டுமல்லாமல் மனதார உள்ளக்கிடப்பிலிருந்து வரும் இவர்களின் வார்த்தைகளுக்கு அபார சக்தி உண்டு.

“பண்ணையார் வேலைக்கு ஆளெடுத்தாலும் எடுத்தாரு.. இந்த பயலுக காட்டுற அலம்பலுக்கு மட்டும் குறச்சலில்லே.. எலேய்.. என்ன தெனவெடுத்துப்போயி அலையாதீகலே.. என்னமோ திருநெல்வேலி ஜில்லா கலக்கிடரு வேலைக்கி போறமாதிரிதான்.. போலே..போ கீழ மண்ணப்பாத்துபோலே.. என்னமோ ஆகாசத்துல பறக்குறமாதிரிதான்” என்று பெருசுகள் அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர். “ஏய் பெருசுகளா.. ஆமா நாங்கஅப்படித்தான்.. இப்ப என்னா செய்யனுங்கிறீக.. பொறாமைபிடிச்சவங்க” என்று பயலுக சிலிப்பிக்கொண்டு திரிந்தாங்க..


தொடரும்...

**********

Post Comment

12 comments:

  1. ஹய்.. நம்ம புண்ணியகோடி ஐயா.. தயவுல.. ப்ளாக் உலகுல புதுமையா..??

    சூப்பருங்கோ... நல்ல இருக்கு.. தொடர வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  2. சிரிச்சு மாளல.. என்னா குசும்பு ...

    ReplyDelete
  3. எப்ப‌டியும் ஒரு முடிவோட‌ தான் இருக்காரு ந‌ம்ம‌ புண்ணிய‌ கோடி‌... தொட‌ர‌ட்டும்..

    ReplyDelete
  4. கோடகநல்லூர், மானூர், கல்லூர் வேலாயுதம் , சேரன்மாதேவி எல்லாம் ஞாபகம் வந்தன.

    ReplyDelete
  5. //ஹூம் ஹூம் இதெல்லாம் எங்கப்போயி முடியப்போவுதோ//

    ஹாஹாஹாஹா...சுவையா எழுதி இருக்கீங்க வாழ்த்துகள் தொடரட்டும்...

    ReplyDelete
  6. என்னாஆ வில்லத்தனம்..ஹா..ஹா..

    கொறஞ்சது 20 தொடராவது வரனும் ஷேக் ..விட்டுடாதிங்க...!!

    ReplyDelete
  7. பதிவுலக புதுவரவான புண்ணியகோடிக்கு வாழ்த்துக்களும் வரவேற்பும் :-)))

    சூப்பரா எழுதுறீங்க.. தொடருங்கள்.

    ReplyDelete
  8. அன்பின் ஸ்டார்ஜன்

    கதை அருமையகச் செல்கிறது - வாழ்க

    //மனதார உள்ளக்கிடப்பிலிருந்து வரும் இவர்களின் வார்த்தைகளுக்கு அபார சக்தி உண்டு.// உண்மை உண்மை

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  9. பிய்ந்த பொட்டி பீதாம்பரத்தை விட புளிமூட்டை புண்ணியகோடி அலம்பல் கன ஜோரா இருக்கும் போலிருக்கே..அசத்துங்க ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  10. ஏலேய் வாங்களே புண்ணியகோடிகிட்ட வேலைக்கு சேர்ந்தா லேப்டாப் கொடுக்குறாராம். :)

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்