Pages

Monday, July 19, 2010

காங்கிரசும் உட்கட்சி பூசலும்

சென்னையில் நடைபெற இருந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸில் மாற்றம் கொண்டு வரும் நோக்கில் மாவட்ட, மாநில, பஞ்சாயத்து நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டன. இது தொடர்பான தேர்தல் ஆயத்த பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்தது.

இந்நிலையில் இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த தேர்தல் 20 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கும் என தொண்டர்கள் பலர் தயாராக இருந்தனர். இந்நிலையில் இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி ரவி மல்லு தெரிவித்துள்ளார்.

தமிழக காங்., தலைவர் தங்கபாலு கால அவகாசம் கேட்டதற்கிணங்க இந்த தேர்தல் ஒத்திவைக்ப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.


நன்றி: தினமலர் செய்திகள்.


************************


ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்து வருவது பற்றி செய்திகளில் படிக்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு. விடுதலைக்கு பாடுபட்ட பழமைவாய்ந்த கட்சியான காங்கிரஸ் கட்சியில் இப்போது குறிப்பாக தமிழ்நாட்டில் உட்கட்சி பூசல்மோதல்கள் உருவாகி பல கோஷ்டிகளாக உருவெடுத்து ஒரு நிலைப்பாடு இல்லாமல் தவித்து வருவது வேதனையளிக்கிறது. ஒரு பெரிய அரசியல் கட்சியில் ஒற்றுமை இல்லாதது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலவீனம்தான். இது தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கும்.

இது ஆண்டாண்டுகாலமாக நடைபெற்று வருகிறது.

அந்தகாலத்தில் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் முக்கியபங்கு ஆற்றிய காங்கிரஸ் கட்சியை பற்றி ஒரு பார்வை:


1885 ம் ஆண்டு உமேஸ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன் ஆக்டவியன் குமே (Allan Octavian Hume), வில்லியம் வெட்டர்பர்ன் (William Wedderburn,), தாதாபாய் நௌரோஜி, தின்சா வாச்சா (Dinshaw Wacha) ஆகியோரால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டு, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907ல் காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஸ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது, இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.

இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த காங்கிரஸ் பால கங்காதர திலகர், கோபால கிருஸ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற பல சிறந்த தலைவர்களை உருவாக்கியது.

1915ல் தென் ஆப்ரிக்காவிலிருந்து படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்த காந்திஜி காங்கிரஸ்ஸின் கொள்கைகளால் கவரப்பட்டு காங்கிரஸுடன் இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். 1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார் சத்தியாகிரக வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.

அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் பெரியார் 1925 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திராவிட இயக்கத்தை உருவாக்கினார்.

ஜவஹர்லால் நேருவின் திறமையினால் காங்கிரஸ் கட்சி பிளவுபடாமல் சிறப்புற்று விளங்கியது. ஆனாலும் அவருடைய அரசு நிறைய பிரச்சனைகளையும் மற்றும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது. உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப் போன நேரு ராஜினாமா செய்ய நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார். 1957 இல் மகள் இந்திராகாந்தி காங்கிரஸ் தலைவரானது அதிக விமர்சனங்கள் எழுந்தன.

லால்பக்தூர் சாஸ்திரியின் மறைவுக்கு பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். இந்திராகாந்தி தன்னுடைய திறமையினால் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்தி மீண்டும் ஒரு சக்திவாய்ந்த கட்சியாக உருவெடுக்க காரணமாக இருந்தார்.

1977 பொதுதேர்தலில் தோல்வியை சந்தித்த காங்கிரஸில் 1978ல் மீண்டும் பிளவு ஏற்பட்டு சுவரண் சிங் தலைமையிலான குழுவாகவும் இந்திராகாந்தி தலைமையிலான இ.காங்கிரஸ் குழுவாகவும் பிரிந்தனர்.

பின்னர் இந்திராகாந்தியின் மறைவுக்கு பின்னர் ராஜீவ்காந்தியினால் மீண்டும் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றது. ஆனால் 1991ல் பொதுதேர்தலின்போது குண்டு வெடிப்பில் பலியான ராஜீவ்காந்திக்கு பின்னர் சரியான தலைவர்கள் இல்லாமல் காங்கிரஸ் கட்சி தள்ளாடிவந்தது. சிரிக்காத பிரதமர் நரசிம்மராவின் ஆட்சியில் முன்னேற்றம் இல்லாமல் மூப்பனார், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்ததினால் கட்சியில் பல்வேறு பூசல்கள் இருந்துவந்தது.

ராஜீவ்காந்தியின் மனைவி சோனியாகாந்தி தலைமையேற்றபின் இன்று ஒரு நிலையை எட்ட காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.

தமிழக காங்கிரஸில் காமராஜருக்கு பின் எந்த ஒரு தலைவராலும் ஆட்சிஅமைக்க முடியவில்லை. இன்றுவரை திராவிடகட்சியின் கூட்டணியுடன்தான் ஆட்சியில் பங்குபெற்று வருகின்றனர். கட்சியில் உள்ளவர்கள் தங்களின் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட ஏன்தான் தயங்குகிறார்கள் என்றே தெரியவில்லை.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றாலும் ஒரு பெரிய கட்சி பிளவுபடுவதை காணும்போது வருத்தமே மிஞ்சுகிறது.

அந்தகாலத்தில் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியை தங்கள் வாழ்க்கையோடு இணைந்தே செயல்பட்டனர். பல போராட்டங்களை காங்கிரஸுடன் சேர்ந்து விடுதலைக்காக பாடுபட்டனர்.

ஆனால் இன்றைய மக்கள் காங்கிரஸ்ஸா அப்படின்னா என்ன என்ற அர்த்தத்துடனே காங்கிரஸை தூரத்தில்வைத்து பார்க்கின்றனர்..

இந்தநிலை மாறுமா?.. என்பதற்கு விடையை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

14 comments:

  1. அன்புள்ள நண்பர்களே!! தமிழிஷ்ல் இணைக்கமுடியவில்லை.. தமிழிஷ் ஒர்க் ஆகவில்லை.. ஒர்க் ஆச்சுன்னா யாராவது தயவுசெய்து இணைத்துவிடுங்கள்.

    ReplyDelete
  2. நேரு குடும்பத்திற்கு இணையாக எந்த மக்கள் தலைவன் காங்கிரஸ்-இல் உருவானாலும் அதை நேரு குடும்பம் பொறுத்துக்கொள்ளாது.அவர்களுக்கு வேண்டியது அடிமைகள் தானே ஒழிய தோழர்கள் அல்ல.காங்கிரஸ் வளரவிட்டாலும் பரவாயில்லை மக்கள் தலைவர்கள் உருவாகக்கூடாது,உதாரணம் தமிழ்நாட்டில் காமராஜ்,மராட்டியத்தில் சராத் பவார், கேரளத்தில் A .K .அந்தோணி,வங்கத்தில் மம்த்தா பானர்ஜி.இந்த மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் இரண்டாம் இடத்தில் கூட இல்லை,காரணம் நேரு குடும்பத்தின் காம்ப்ளெக்ஸ் தான்.

    ReplyDelete
  3. ஆஹா... ஸ்டார்ஜ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சிட்டாரு... ஸ்டார்ஜ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சிட்டாரு... ஓ.. இல்லையா... க‌ட்சியை ப‌ற்றி ப‌திவு எழுதியிருக்காரா..அப்ப‌ ச‌ரி.

    ReplyDelete
  4. தமிழ்நாடு காங்கிரசு டில்லியின் கொத்தடிமையாக வேண்டும் என்பது தான் டில்லியின் விருப்பம்.அதிலே தான் போட்டி.
    தமிழ் மக்களுக்காகக் காங்கிரசு செய்தது காமராசருடன் முடிந்து விட்டது.
    இனி ராகுலுக்கு யார் அடிமை என்பதில் போராட்டம் தொடங்கும்.

    ReplyDelete
  5. //இன்றைய மக்கள் காங்கிரஸ்ஸா அப்படின்னா என்ன என்ற அர்த்தத்துடனே காங்கிரஸை தூரத்தில்வைத்து பார்க்கின்றனர்..
    //

    unmai...

    namma pakkam alaiyey kanom...

    http://www.vayalaan.blogspot.com

    ReplyDelete
  6. //விடுதலைக்கு பாடுபட்ட பழமைவாய்ந்த கட்சியான காங்கிரஸ் கட்சியில்//

    இதைச் சொல்லி தான் காங்க் பொழப்பை ஓட்டுது. மற்றபடி விடுதலைக்கு பாடுபட்டவர்களுக்கு பிட்சையாக பென்சன் போடுவதுடன் சரி

    ReplyDelete
  7. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    அன்புள்ள நண்பர்களே!! தமிழிஷ்ல் இணைக்கமுடியவில்லை.. தமிழிஷ் ஒர்க் ஆகவில்லை.. ஒர்க் ஆச்சுன்னா யாராவது த//

    இன்டலியில் கணக்கு துவங்கி இணைக்கவும். தமிழிஷ் (கணக்கு) காலாவதியாகிவிட்டது

    ReplyDelete
  8. வாங்க விஜயன் @ ரொம்ப நன்றி கருத்துக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. காங்கிரஸ் கட்சி நாசமாகப் போகட்டும்.. அப்போதுதான் இந்த தேசம் உருப்படும்...

    ReplyDelete
  10. அரசியலைப்பற்றிய
    தங்களின் பார்வை
    அசத்தல்.
    வாழ்த்துக்கள் சேக்.

    ReplyDelete
  11. நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதோ இல்லையோ. கட்சிகளை பொருத்தவரை மன்னராட்சிதான். இதில் காங்கிரஸ் விதிவிலக்கு அல்ல. காங்கிரஸின் தலைமை டெல்லியில் உறுதியாகவே உள்ளது. நமது மாநில கட்சிகள் மாவட்ட செயலாளர்களை மாற்றுவது போல அவர்கள் மாநில தலைமைகளை மாற்றுகிறார்கள்.

    நிலமை இப்படி இருக்கும் போது. எப்படி மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்?

    ReplyDelete
  12. //உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.//

    மேலிட‌த்துல‌ கேட்டுட்டு க‌ருத்து சொல்கிறேன்

    ReplyDelete
  13. வருகைதந்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்