Pages

Sunday, February 7, 2010

வெற்றியா ... தோல்வியா ..


அன்பு மிக்க நண்பர்களே !! எல்லோரும் நலமா ...

நான் ஒரு புத்தகத்தில் அலெக்ஸாண்டர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை படித்தேன் . அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசையாக உள்ளது .

இதோ :

கிரேக்க நாட்டின் மன்னராக அலெக்ஸாண்டர் இருந்தார் . அவர் பல நாடுகளை வென்று தன் ஆளுகைக்கு உட்படுத்தினார் . அலெக்ஸாண்டர் வாழ்ந்து வந்த சமயத்தில் , கிரேக்க நாட்டில் டயஜீனஸ் என்றொரு தத்துவ ஞானி ( பெயர் சரியாத் தெரியவில்லை ) இருந்தார் . அவர் ஒருநாள் தன் நாயுடன் ஆற்றாங்கரை ஓரமாக அமைதியாக , நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார் .

அப்போது அந்த வழியாக மாமன்னர் அலெக்ஸாண்டர் வந்தார் . ஞானி அருகில் வந்து நலம் விசாரித்துக் கொண்டிருந்தார் மன்னர் . அப்போது மன்னர் இந்தியாவுக்கு படையெடுத்து செல்ல ஆயத்தமானது பற்றி பேசிக் கொண்டிருந்தார் .

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் :

மன்னா இப்போது எங்கு செல்ல ஆயத்தமாகி இருக்கிறீர்கள் _ இது ஞானி .

நான் இப்போது ஆசியாமைனருக்கு படையெடுத்து வெற்றி பெறச் செல்கிறேன் _ இது மன்னர் .

அப்படியா ரொம்ப சந்தோசம் . அடுத்து என்ன செய்வதா உத்தேசம் _ இது ஞானி .

அப்புறம் இந்தியா மீது படையெடுக்கலாம் என்று நினைக்கிறேன் . _ இது மன்னர் .

அடுத்து என்ன செய்யப் போகிறாய் மன்னா _ இது ஞானி .

அடுத்து நான் அகில உலகத்தை வென்று என் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்போகிறேன் .

பிறகு என்ன செய்வாய் மன்னா ...

அப்புறம் நிம்மதியா ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன் . என்றார் மன்னர் அலெக்ஸாண்டர் .

இதைக் கேட்டதும் டயஜீனஸ் ஞானி கடகடவென சிரித்தார் . ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டார் மன்னர் . உடனே ஞானி தன் பக்கத்தில் இருந்த நாயைப் பார்த்து " ஏய் பார்த்தாயா , இந்த பைத்தியக்காரனை !! உலகை வெல்லப்போகிறானாம் . இவன் உலகையே வென்ற பின்னர் தான் நிம்மதியாக ஓய்வு எடுக்கப் போறானாம் . நாம் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறோமே ! , உலகை வெல்லாமலே . இது எப்படி இருக்கு . ஓய்வெடுப்பதற்கும் மன நிம்மதிக்கும் உலகை வெல்வதற்கும் சம்பந்தமே இல்லையே ,என்று ஞானி கூறினார் .


இதைக் கேட்டதும் மன்னர் அலெக்ஸாண்டருக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது .


உடனே அலெக்ஸாண்டர் , ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை , அர்த்தமுள்ளது . ஆனா பாருங்க , நான் போருக்கு கிளம்பி விட்டேன் . இப்போது இந்தியாவை வெல்லப் போகிறேன் . என்னால் பயணத்தை பாதியிலே விடமுடியாது . நான் பின்வாங்க மாட்டேன் . நான் வருகிறேன் என்று கிளம்பினார் மன்னர் . அதற்கு ஞானி நீ திரும்புவாய் என்று சொன்னார் .


ஞானி சொன்னது போலவே மன்னர் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு சென்று திரும்பும் வழியிலே மரணமடைந்தார் . தன் கிரேக்க நாட்டிற்கு அவரால் திரும்ப முடிய வில்லை .

Post Comment

16 comments:

  1. குரு...கலக்கல்,
    ஏற்கனவே படிச்சதுதான், இருந்தாலும் பகிர்வுக்கு நன்றி,

    நம்ம கவிதை இன்னும் வரல... சொல்லிப்புட்டேன்...

    ReplyDelete
  2. இதே கான்சப்ட்டை 7அப் அல்லது ஸ்பிரிட் விளம்பரத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.

    நல்ல பகிர்வு சேக்.

    ReplyDelete
  3. ஆமாம், ஆமாம்

    நான்கூச எழுத்துப் பணிக்கு வந்திருப்பது இந்த தத்துவ அடிப்படையில்தான்..,

    ReplyDelete
  4. படித்து மறந்த வரலாற்றை நினைவுக்கு கொண்டுவந்தமைக்கு நன்றிகள்.
    நல்ல பகிர்வு.
    நன்றி.

    ReplyDelete
  5. //ஓய்வெடுப்பதற்கும் மன நிம்மதிக்கும் உலகை வெல்வதற்கும் சம்பந்தமே இல்லையே//

    மிக அருமையான பதிவு ஸ்டார்ஜன் உண்மையும் கூட

    ReplyDelete
  6. ஏற்கெனவே படித்தது என்றாலும், மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  7. மன்னர் என்றால் என்னைமாதிரி இருக்கணுமுன்னு சொல்றீங்க அப்படித்தானே !!

    //ஓய்வெடுப்பதற்கும் மன நிம்மதிக்கும் உலகை வெல்வதற்கும் சம்பந்தமே இல்லையே//

    கரெக்டா சொல்லிருக்கிறாரு ஞானி .. வாழ்க வளமுடன் !...

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு சேக்மைதீன்.

    ReplyDelete
  9. ஏற்கனவே படிச்சது தான் பாஸ் இருந்தாலும் அந்தந உள்ளர்த்தம் அருமை.

    ReplyDelete
  10. வாங்க

    பிரதாப் @ நன்றி

    அண்ணாமலையான் @ வருகைக்கு நன்றி

    அக்பர் @ நன்றி

    SUREஷ் (பழனியிலிருந்து)@ அப்படியா தல

    T.V.ராதாகிருஷ்ணன் @ நன்றி சார்

    அபுல் பசர் @ நன்றி சார்

    thenammailakshmanan @ சரியாச் சொன்னீங்க அக்கா

    சைவகொத்துப்பரோட்டா @ நன்றி சார்

    கட்டபொம்மன் @ நன்றி மன்னா

    செ.சரவணக்குமார் @ நன்றி தலைவரே

    ||| Romeo ||| @ நன்றி சார் .

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே

    ReplyDelete
  11. பெரிய விஷயத்தை சுருக்கமாகச் சொல்கிற கதை. சத்தியமாக இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டதில்லேண்ணே! மிகவும் ரசித்தேன்! இது போன்ற நல்ல செய்திகள் உள்ள கதைகளை தொடர்ந்து எழுதினால் என் போன்ற ஆசாமிகள் திருந்த வாய்ப்பிருக்கிறது. :-)))))

    ReplyDelete
  12. வாங்க சேட்டைக்காரன் ,

    வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றி. நேரம் கிடைத்தால் ‘Alexander' படம் பாருங்கள். 'Angelina julie' அலெக்சாண்டரின் தாயாக நடித்திருப்பார்கள். நீங்கள் சொன்ன ஞானியும் வருவார்.அருமையான படம்.

    ReplyDelete
  14. ஞானி நீ திரும்புவாய் என்று சொன்னார்//

    திரும்புவாய் ஆனால் உயிரோடு அல்ல ம்ம்ம்ம் ஞானிகள் ஞானிகள்தான்...!!!

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்