Pages

Thursday, February 11, 2010

அசல் - அசத்தல் ...


தமிழ் படத்தை பத்தி எல்லோரும் பாராட்டி எழுதி அதுவே படத்தின் வெற்றியானது . தமிழ்படம் சக்கபோடு போடுது . எனவே அந்த படத்தை பத்தி விமர்சனம் எழுதல . அசல் படம் நேத்துதான் பார்த்தேன் . அசல் அஜித்துக்கு உண்டான படம் .

அப்பா அஜித் ஒரு பெரிய மல்டிமில்லினியர் . இன்டர்நேஷனல் பிஸினஸ் பண்ணுகிறார் . அவருக்கு சம்பத் , சின்ன அஜித் , ராஜீவ்கிருஷ்ணா . இதில் இரண்டாம் தாரத்து மனைவி மகன் சின்ன அஜித் . சின்ன அஜித் அப்பாவைப்போல இருப்பதாலோ என்னவோ ரொம்ப பிடித்து போயிருச்சு ( வயசான கெட்டப்பிலா தல என்று கேட்பது புரிகிறது ) . சகுனி மாமாவால் மற்ற மகன்கள் அஜித்தை வெறுக்கிறார்கள் . ஆனால் , அப்பா அஜித் தன் சொத்துக்களை மகன் அஜித்துக்கு எழுதி வைத்து விடுகிறார் .

அப்பா இறந்த பிறகு தவறான வழியில் பணம் சேர்க்க நினைக்கும் சகோதரர்கள் அஜித்தை பழிவாங்க நினைக்கிறார்கள் . இதற்கிடையில் ராஜீவ்கிருஷ்ணாவை கெல்லி டோர்ஜி கடத்தி விடுகிறார் . தனி ஆளாக சென்று வில்லனிடம் இருந்து காப்பாற்றுகிறார் . நன்றி மறந்த சம்பத் , ராஜீவ் கிருஷ்ணா அஜித்தை சுட்டு விடுகிறார்கள் .

அதிலிருந்து தப்பி பிரபுவிடம் வந்து சேருகிறார் . இதற்கிடையில் பிரபுவின் நண்பர் மகளான பாவனா அஜித்தை விரும்பிகிறார் . சமீரா ரெட்டி அஜித்தின் வக்கீலாக வருகிறார் . இவர்கள் மூலம் தன் அண்ணன்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்கிறார் . அஜித் , தன் அண்ணன்களை பழிவாங்கினாரா , சகுனி மாமா பிரதீப் ராவத்தை பழிவாங்கினாரா என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .

இந்த படத்தை சரண் ரொம்ப நாளைக்கு பிறகு இயக்கி இருக்கிறார் .
அஜித் அல்டிமேட் ஸ்டாராக இல்லையாம் . டைட்டிலில் பேர் போடவில்லை .
ஆனால் இணை இயக்கம் அஜித்குமார் என்று வருகிறது . இணை இயக்குனர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் தல . கலக்குங்க தல , தொடரட்டும் தங்கள் கலைப்பணி ...

ஆனால் படம் தேர்வு செய்வது மிக கவனம் . இல்லைன்னா தமிழக மக்கள் மறந்துருவாங்க . இன்னும் பழைய கதைகளில் நடிக்காதீங்க . படத்தில் கொஞ்சமாவது சிரிங்க . முகத்தை உம்முன்னு வைச்சிக்கிட்டு வாராதீங்க . தாடியோடு நடிக்க வேண்டிய அவசியமென்ன .. பிரான்ஸ் நாட்டுல நடக்கிற கதை , அப்பா அஜித்துக்கும் உங்களுக்கும் ஒரே வயசா ? வித்யாசமே இல்லைன்னு தெரியுது .

சம்பத்தை பாருங்க . வில்லனா நடிக்கிறவரே , ஆள் தாடி , மீசையெல்லாம் எடுத்து ஜம்முன்னு இருக்கிறாரு . ராஜீவ் கிருஷ்ணாவை பத்தி கேட்கவே வேணாம் . உங்களுக்கு என்ன . ஆனா ஒரே ஆறுதல் பாடல்காட்சிகளில் சும்மா அசத்துறீங்க . முதல்ல இதெல்லாம் கவனிங்க. படம் தானா ஹிட்டாயிரும் . மக்கள் மனசுல நீங்க நீங்காத இடத்தை பிடிச்சி வச்சிருக்கிங்க . பார்த்து ...



நீங்க சிகா புடிக்கும் ஸ்டைலே தனி தான் . அதே மாதிரி தலப்போல வருமா . எந்த ஒரு பிரச்சனையையும் தனி ஆளாக சமாளிக்கக் கூடியவர் . இந்த படத்தில் அடிக்கடி தலை தல என்று சொல்றாங்களே ஏன் ..? . தலை தலை தான் . இப்படி சொல்லிக்கிட்டே இருந்தா தலை தன் வேலையை செய்ய வேண்டாமா ... என்ன ...



அதேமாதிரி உங்களுக்கு கால் வலிக்கலியா . பில்லா படத்தில் வந்தமாதிரி கேட்வாக் தேவையா . வயசான ஹீரோக்களே இன்னும் எப்படி வயசைக் குறைக்கலாம்முன்னு தீவிரமா யோசிக்கிட்டு இருக்காங்க . மீண்டும் நாங்க இளமையான அஜித்தை எப்போ காணலாம் ? ...

கதை யூகிசேது .. கொஞ்சம் புதிய கதையை யூகிங்க சார் . வில்லன் படத்துல டாப்கியர்ல போன நீங்க , இந்த படத்துல லாஸ்ட் கியர்ல இருக்கீங்களே . நீங்க படத்துல வர்ற காட்சிகள் கொஞ்சம் நல்லாருக்கு .

சகுனி மாமாவா வரும் பிரதீப் ராவத் சும்மா வந்து போகிறார் . ஆனா கதைல இவராலதான் சம்பத்தும் ராஜீவ்கிருணாவும் சொத்தை அடைய நினைக்கிறார்கள் என்பதை மறைமுகமா சொல்லியிருக்காங்க .

சுரேஷ் ( பழனி டாக்டர் சுரேஷ் இல்லியே ) நதியாவோடு அந்த காலத்துல ஹீரோவா வந்த நம்ம சுரேஷ் இதில் வில்லன் குரூப்போட வந்து காமெடி கலந்த வில்லனா வருவது நமக்கு கொஞ்சம் ஆறுதல் . ஆனா கடைசில இவர் திருந்துவது எத்தன படத்துல பாத்துருக்கோம் என்ன .


ஹீரோயின்கள் சமீரா ரெட்டி , பாவனா . 2 பேர்ல பாவனா தான் டாப்பு . சமீரா வயசான அரபிய‌க்குதிரை . பாடல்காட்சிகளில் இளமையான அஜித்தோட போட்டி போடமுடியல அவரால .

பாவனா கொஞ்சம் காட்சிகள் வந்தாலும் நம்ம மனதில் ஒட்டிக்கொள்கிறார் . கொள்ளை அழகு பாவனா . பாவனாவை கடைசியில் அஜித்தோட சேர்த்து வைப்பது படத்துக்கு ஒரு பிளஸ் .



பாவனாவை பத்தி என்ன சொல்ல .. என்ன அழகு .. குறைவான காட்சிகளில் வந்தாலும் படம் முழுக்க வரும் சமீராவையே ஓரங்கட்டி அஜித் மனதில் இடம் பிடிக்கிற காட்சிகள் ரொம்பவே நல்லாருக்கு .. மேன்மேலும் முன்னேற வாழ்த்துக்கள் பாவனா ..

பிரபு இந்த படத்தோட தயாரிப்பாளர் என்ற முறையில் வந்து போகிறார் .

இசை பரத்வாஜ் . சுமார் . துஷ்யந்தா , டொட்டடோயிங் பாடல்கள் அருமை . அதிலேயும் துஷ்யந்தா பாடல் , ஜப் வீ மேட் என்ற இந்திபடத்தில் உள்ள ஹீரோயின் பாடும் ஒரு பாடலில் அதே மெட்டு , அதே ராகம் , வரிகள் தான் வேறு .

ஒளிப்பதிவாளர் பிரசாந்த் டி மிசேல் . பிரான்ஸ் காட்சிகள் மிக அருமை . நல்லா எடுத்து இருக்கிறார் .

மொத்ததில் விறுவிறுப்பான திரைக்கதையில் சிறுசிறு தொய்வு .

தல அஜித் படம் சிறுசிறு ஓட்டைகள் இருந்தாலும் படத்தோடு தன் நடிப்பில் ஒன்றவைத்துவிடுகிறார் அஜித் .

அசல் _ அஜித் .

Post Comment

20 comments:

  1. //சமீரா பாடல்காட்சிகளில் இளமையான அஜித்தோட போட்டி போடமுடியல அவரால //

    இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை.

    கலக்கலான விமர்சனம். நல்ல ஜாலியா எழுதியிருக்கே.

    படிக்க நல்ல சுவையா இருந்தது.

    ReplyDelete
  2. //அதேமாதிரி உங்களுக்கு கால் வலிக்கலியா . பில்லா படத்தில் வந்தமாதிரி கேட்வாக் தேவையா .//

    (((((((((((

    ReplyDelete
  3. நேர்மையான விமர்சனம் - நன்றி

    @ அத்திரி..

    யாருடா அசல் விமர்சனம் எழுதுறான்னு பார்த்துக்கிட்டே இருக்க வேண்டியது.. அங்க வந்து அழுவுற மாதிரி சீன போட்டுட்டு உள்ளுக்குள்ள சிரிக்க வேண்டியது.. என்ன பழக்கம் இது.. ஹ்ம்ம்ம்?

    ReplyDelete
  4. ஒரு படம் விடறதில்ல போல..:))

    ReplyDelete
  5. பாவனாவைப்பத்தி புகழ்ந்து எழுதுனதுக்கு நன்றி தல... இது போதும் விமர்சனம் சூப்பர்.....

    ReplyDelete
  6. படம் விமர்சனம் அருமை ஸ்டார்ஜன் ஆனா பாவனா பக்கம் ரொம்ப சப்போர்ட் பண்ணுற மாதிரி இருக்கு

    ReplyDelete
  7. அண்ணே! பாவனா படிச்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க! வளர நன்னாயிட்டுண்டு சாரே!

    ReplyDelete
  8. ஹலோ பாஸ்...விட்டா பாவனாக்கு ரசிகர் மன்றம்
    தலைவர் ஆயிடிவிங்க போல.....

    ReplyDelete
  9. அருமையான விமர்சனம் ,

    ஆமா அதென்ன பாவனா கொடி பறக்குது போல ..

    ReplyDelete
  10. //சமீரா வயசான அரபிய‌க்குதிரை //

    பிடிச்சிருக்கா இல்லையா?

    ReplyDelete
  11. விமர்சனத்தில் உங்க நேர்மை பிடிச்சிருக்கு.கலக்குங்க பாஸ்.

    ReplyDelete
  12. விமர்சனம் அருமை. பாவனா படங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்

    நண்பா தங்களை பல ப்ளாகுகளில் பார்த்துள்ளேன்; ஏன் நம்ம ப்ளாக் பக்கம் வர்றதில்லை? வருக என உரிமையுடன் அழைக்கிறேன்..

    ReplyDelete
  13. ரைட்டு, அப்ப பாத்துர வேண்டியதுதான்.

    ReplyDelete
  14. இந்தப்படத்துக்கு விமர்சனம் தேவையா சார்? உங்க டைமை வேஸ்ட் பண்ணிட்டீங்க

    ReplyDelete
  15. சில இடங்கள்'ல உங்க குறும்புத்தனமான வார்த்தையை ரசித்தேன்

    ReplyDelete
  16. வாங்க

    அக்பர் @ நன்றி நன்றி

    அத்திரி @ நன்றி நன்றி

    கார்த்திகைப் பாண்டியன் @ நன்றி நண்பரே

    T.V.ராதாகிருஷ்ணன் @ நன்றி சார்

    ஷங்கர்.. @ நன்றி நன்றி

    நாஞ்சில் பிரதாப் @ நன்றி நன்றி

    தேனம்மை அக்கா @ நன்றி அக்கா

    சேட்டைக்காரன் @ நன்றி நன்றி

    ஜெட்லி @ நன்றி நன்றி

    ராஜா @ நன்றி நன்றி

    SUREஷ் (பழனியிலிருந்து) @ நன்றி டாக்டர்

    மயில்ராவணன் @ நன்றி நன்றி

    மோகன் குமார் @ நன்றி நன்றி , வந்துருவோம்

    சைவகொத்துப்பரோட்டா @ நன்றி நன்றி

    கவிதை காதலன் @ நன்றி நன்றி .

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே .

    ReplyDelete
  17. விட்டா பாவனாவுக்கு ஒரு ரசிகர்மன்றம் ஆரம்பிச்சிடுவீங்களே, ஒரே பாவனா புரானம்

    லேட்டா வந்தாலும் நல்ல விமர்சனம்

    ReplyDelete
  18. ஆஹா அசத்தல் அசத்தலாகத்தான் உள்ளது .

    ReplyDelete
  19. வாங்க

    அபுஅஃப்ஸர்
    வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே .

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்