Pages

Wednesday, February 17, 2010

இறால் சாப்ஸ்

அன்புமிக்க நண்பர்களே ! எல்லோரும் நலமா ...

எனக்கு ரொம்ப நாளா சமையல் பற்றிய பதிவு இடுகை போட ஆசை . அது இப்போதான் நிறைவேறி இருக்கு .



இன்று மதியம் நான் செய்த இறால் சாப்ஸ் பற்றி இப்போது காணலாம் .

தமிழ் _ இறால்
மலையாளம் _ செம்மீன் .
ஆங்கிலம் _ ப்ரௌன்
கன்னடம் _ சின்கடி , எட்டி
ஹிந்தி _ ஜிங்கா
தெலுங்கு _ ரொய்யலு .


கடையில் இறால் வாங்கும் போது சில பேர் கிளீன் பண்ணி தருவாங்க . மேல் உள்ள தோடு மட்டும்தான் கிளீன் பண்ணுவாங்க . இறாலின் நடுப் பகுதியில் உள்ள , ஒரு நூல் போல குடலை கத்தியால் கீறி நீக்கவிட வேண்டும் .

தேவையான பொருட்கள்


இறால் _ 1/2 கிலோ
வெங்காயம் பல்லாரி _ 2
தக்காளி _ 2
இஞ்சி , பூடு சிறிதளவு
மிளகாய் 4
சிறிதளவு வெந்தயம் தாளிக்க
கொத்தமல்லி இலை
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன் , வத்தல் பொடி 1 1/2 ஸ்பூன் .



முதலில் இறாலை அரைத்த இஞ்சி பூடு விழுதுடன் உப்பு , மஞ்சள் வத்தல் பொடியுடன் விரவி 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .

சிறிது வெந்தயம் , வெங்காயம் கொண்டு தாளிக்க வேண்டும் . பின்னர் மிளகாய் தக்காளியை வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் . பேஸ்ட் போல ஆனதும் ஊற வைத்த இறாலை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . கொத்தமல்லி இலை சேர்த்து 20 நிமிடம் தம்மில் வைக்க வேண்டும் .



இறால் சாப்ஸ் ரெடி . நீங்களும் இதுபோல செய்து சாப்பிட்டு மகிழுங்கள் .



நான் செய்த இறாலை சாப்பிட்டு பார்த்து நல்லாருக்கு என்று பாராட்டிய அக்பருக்கும் கன்னட நண்பருக்கும் என் நன்றிகள் .


சாப்பிட்ட அனைவரும் மொய் வைத்துவிட்டு போக வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

*****

இதை ஜலீலாவின் பேச்சிலர் சமையல் போட்டிக்காக அனுப்பியுள்ளேன்.

,

Post Comment

37 comments:

  1. ஆஹா .. நல்ல ருசி .

    /// சாப்பிட்ட அனைவரும் மொய் வைத்துவிட்டு போக வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . ///

    இல்லாத பழக்கத்தையெல்லாம் சொன்னா எப்படி ?...

    ReplyDelete
  2. நாக்குல எச்சி ஊருது பாஸ்.

    ReplyDelete
  3. //நாக்குல எச்சி ஊருது பாஸ்.//

    படிக்கிற உங்களுக்கே இப்படின்னா சாப்பிட்ட எங்களுக்கு எப்படி இருந்திருக்கும். :)

    சமையலை பதிவுல கலக்கியிருக்கீங்க ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  4. கதை, கவிதை,இவைகளில் இதுவரை கலக்கிவந்த தாங்கள் சமையலிலும் கலக்கி இருக்கிறீர்கள்.

    விருந்து சாப்பிட்ட அக்பர் சொல்வது உண்மைதானா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்லா கெளப்பறீங்க பசியை...

    படத்துல பார்க்கவே கலக்கலா இருக்கே... ருசி பார்த்த நண்பர்கள் (மொய்) கொடுத்து வைத்தவர்கள். :))

    ReplyDelete
  6. அண்ணே! படத்தைப் பார்த்ததிலேருந்து வாயிலே குத்தால அருவி கொட்டிக்கிட்டிருக்குண்ணே! சூப்பர்!!

    // சாப்பிட்ட அனைவரும் மொய் வைத்துவிட்டு போக வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . ///

    சாப்பிடாமல் பார்த்துவிட்டே ஓட்டும் போட்டு, கருத்தும் போட்டாச்சு! :-)))

    ReplyDelete
  7. வாங்க கட்டபொம்மன்

    /// இல்லாத பழக்கத்தையெல்லாம் சொன்னா எப்படி ?... //

    இப்படி சொன்னா எப்படி ?...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. வாங்க ஜெரி ஈசானந்தா சார்

    வீட்டுல செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  9. வாங்க அக்பர்

    சாப்பிட்டு நல்லாருக்குன்னு சொன்னதுக்கு மிக்க நன்றி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  10. வாங்க அபுல் பசர் சார்

    அக்பர் சொன்னாரா ..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  11. ஆஹா..ஸ்டார்ஜன் சார்.இறால் சாப்ஸ் பதிவு போட்டு உடனே அதே போல் செய்துவிட வேண்டும் என்ற ஆவலை வரவழைத்துவிட்டீர்கள்.அழகாக சமைத்து,படமும் எடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.ஆண் பதிவர்களும் சமையலில் ஈடுபாடு காட்டி,பதிவிடுவது வரவேற்கதக்கது.

    ReplyDelete
  12. வாங்க ராஜா

    சீக்கிரம் செய்து சாப்பிடுங்க .

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  13. வாங்க சேட்டைக்காரன்

    சீக்கிரம் செய்து சாப்பிடுங்க .

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  14. வாங்க ஸாதிகா மேடம்

    சீக்கிரம் செய்து சாப்பிடுங்க .

    வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  15. என்ன தல சொல்லாம கொள்ளாம செய்து சாப்பிட்டீங்க...இதுக்கு தண்டனை அக்பருக்கு..என்னோட மொய்யை அவர் வைப்பார்..இது எப்படி இருக்கு.

    ReplyDelete
  16. வாங்க ஸ்டீபன்

    சே தப்பிச்சிட்டீங்களே ..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. ரொம்ப சூப்பர் ஸ்டார்ஜன்.. கூட இருக்குறவங்க கொடுத்து வச்சவங்க ..இறால் கடையை நோக்கி போக வச்சிட்டீங்க...
    சாப்பிடுறதுக்கே ஒரு ப்ளைட் பிடிச்சு வந்துரலாம் போல இருக்கு ...

    ReplyDelete
  18. ஆகா... எங்களை வெறுப்பேத்றதுக்குன்னே இந்தமாதிரி போட்டோவுல்லாம் போடுறாயங்களே....
    குரு போட்டோ பார்த்துட்டு உண்மையிலேயே பசி எடுக்குது... எத்தனை நாளாச்சு...ம்ஹும்...

    வயிற்றெரிச்சலை கொட்டியாச்சு... இப்ப திருப்திதான....

    ReplyDelete
  19. வாங்க டிவிஆர் சார்

    நீங்க செய்து சாப்பிட்டீங்களா ..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. வாங்க தேனம்மை அக்கா

    வாங்க வாங்க .. வரவேற்க காத்திருக்கிறேன் .

    தங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  21. வாங்க சிஷ்யா பிரதாப்

    தங்கள் அன்புக்கு மிக்க நன்றி

    நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்க.

    ReplyDelete
  22. உங்களின் சமையல் பக்குவம் சூப்பர்..

    ReplyDelete
  23. ரொம்ப சூப்பர், இறால் கிரேவி ரொம்ப நல்ல இருக்கு.

    ReplyDelete
  24. ஆகா ஸ்டார்ஜன் அசத்துறீங்களே..

    ReplyDelete
  25. உங்க ஏரியா பக்கம் வந்தப்ப இதெல்லாம் நீங்க சொல்லவே இல்லையே. எனக்கு வெறும் டீ மட்டும் போட்டுக்கொடுத்து ஏமாத்தீட்டீங்களே சேக்.

    ReplyDelete
  26. வாங்க சிநேகிதி

    வருகைக்கும் பர்ராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  27. வாங்க ஜலீலா

    வருகைக்கும் பர்ராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  28. வாங்க சரவணக்குமார்

    வாங்க வாங்க வரவேற்க காத்திருக்கிறேன் .

    கண்டிப்பா ஒரு நாள் வாங்க , பண்ணித் தாரேன் .

    வருகைக்கும் பர்ராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  29. ம்ம் ம்ம்!! பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு! சமையல்ல பெரிய ஆளு போல?! சூப்பர்!. பன்முகப் பதிவர் ஸ்டார்ஜன்!!!

    ReplyDelete
  30. பரவாயில்லையே நல்லா சமைப்பிங்களா, படத்தை பார்த்தாலே தெரியுது அதன் சுவை. கலக்குங்க ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  31. /// ஷங்கி said...

    ம்ம் ம்ம்!! பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு! சமையல்ல பெரிய ஆளு போல?! சூப்பர்!. பன்முகப் பதிவர் ஸ்டார்ஜன்!!! ///

    வாங்க ஷங்கி , சாப்பிட்டாச்சா ..

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஷங்கி .

    ReplyDelete
  32. /// SUFFIX said...

    பரவாயில்லையே நல்லா சமைப்பிங்களா, படத்தை பார்த்தாலே தெரியுது அதன் சுவை. கலக்குங்க ஸ்டார்ஜன். ///

    வாங்க ஷபிக்ஸ் , செய்து சாப்பிடுங்க ..

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஷபிக்ஸ் .

    ReplyDelete
  33. நான் வெஜ் !!!!!!!!!!

    :)

    நான் சாப்பிட முடியாதே !

    சிங்கையில் சைவ இறா கிடைக்கும்.
    சோயா மாவில் செய்திருப்பாங்க

    ReplyDelete
  34. வாங்க வாங்க கோவி அண்ணே

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  35. இந்த குறீப்பை இணைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி

    கீழே கொஞ்சம் சிரமம் பார்க்காமல் என் ஈவண்டுக்கு அனுப்பிகிறேன் என்றூ போடு விட்டுஙக்ள்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்