Pages

Saturday, May 1, 2010

மே தின வாழ்த்துகள்


கால்கடுக்க காத்திருந்தேன்
காய்த்துப்போன கைகளுடன்
இன்றைய கூலியான
100 ரூபாயை எண்ணி எண்ணி..

செலவின முகங்கள் வந்து போயின
சிலேட்டு, புத்தகம் கேட்ட
மகனின் முகமே முதலாய்..
அதற்கு முதலாளியின்
முகம் பார்க்க காத்திருக்கிறேன்
மனதில் ஆயிரம் புலம்பல்களுடன்..

அதோ வருவது யாரோ?.
வந்தவர் சொன்னார்
மேதின வாழ்த்துக்கள்.
படம் பிடித்தார் டிவியில் காட்ட...

,

Post Comment

23 comments:

  1. உழைப்பாளிகள் தினத்தன்று உருக்கமான கவிதை!

    ReplyDelete
  2. மே தின வாழ்த்துகள் ஸ்டார்ஜன். அந்தப் புகைப்படம் மனதில் பாறாங்கல்லை ஏற்றி வைக்கிறது.

    ReplyDelete
  3. க‌விதை ந‌ல்லா இருக்கு ஸ்டார்ஜ‌ன்...

    ReplyDelete
  4. மே தின வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  5. உருக்கமான கவிதை.

    உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு அரிசி மிஞ்சாது என்பார்கள். அது போல கஷ்டப்பட்டு உடலை வருத்தி உழைப்பவர்களுக்கு நாம் முதலாளிகள் கொடுக்கும் கூலி குடும்பத்தின் கால் வயிற்றுக் கஞ்சிக்கு காணாது.

    ReplyDelete
  6. உழைப்பாளிகள் தினத்தன்று உருக்கமான கவிதை!

    ReplyDelete
  7. உங்கள் படம் ஆயிரம் கதைகள் சொல்கின்றன. கவிதை வலி சொல்கிறது. உங்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. டச்சிங்கா இருக்கு ஸ்டார்ஜன், உங்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. சுருக்கமான வரிகளில் ஆழமான கருத்தை சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  10. அருமையான எளிய வரிகளில் உழைப்பின் வலிகள் தெரிகின்றன.. ரொம்ப நல்லாருக்கு.. வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  11. வருகைதந்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  12. உருக்கமான நல்ல கவிதை!!

    ReplyDelete
  13. சிந்திக்க வைத்த கவிதை.இனி சாந்து சட்டி சுமக்கிற பெண்களை பார்த்தாலும்,உழைப்பாளிகளை பார்த்தாலும் உங்கள் கவிதை நினைவு வரும்.

    ReplyDelete
  14. வாங்க மேனகா

    நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  15. வாங்க ஆசியா

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது; உங்க கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete
  16. மிகவும் அருமை . நல்லா சொல்லி இருக்கிறீர்கள் !

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்