Pages

Thursday, May 13, 2010

துப்பறியும் சாம்பு

ஒரு ஊரில் பெரிய பணக்காரன் இருந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள். அந்த ஊரில் நல்லசெல்வாக்குடன் வாழ்ந்து வந்தான். திடிரென்று அந்த பணக்காரனை காணவில்லை. மகன்கள் இருவரும் எல்லாப்பக்கமும் தேடுகிறார்கள்.

மகன்கள் துப்பறியும் சாம்புவிடம் உதவி கேட்கின்றனர். சாம்புவும் பணக்காரனின் நண்பர்கள் உறவினர்கள் என்று எல்லோரிடமும் விசாரிக்கிறார். பணக்காரனின் அறையையும் சோதனை செய்கிறார். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. பாத்ரூமில் தண்ணீர் சொட்டு சொட்டாக விழும் சத்தத்தை அப்போதுதான் கவனிக்கிறார்.

உடனே பாத்ரூமின் கதவை திறக்க முயற்சிக்கும்போது கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருக்கிறது. கதவை உடைத்து பார்த்தால் அந்த பணக்காரன் இறந்து கிடக்கிறான். பாத்ரூமிலிருந்து மியாவ் என்றபடி ஒரு பூனை வெளியே வருகிறது.

பணக்காரன் இறந்துபோன காரணத்தை துப்பறியும் சாம்புவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நண்பர்களே!! நீங்கள் கண்டுபிடித்து சாம்புவுக்கு உதவி செய்யுங்களேன்.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


,

Post Comment

22 comments:

 1. இதற்குப் பெயர்தான் மாபிய சாரி போபிய கொலை.
  அவர் பாத்ரூமில் நுழைந்தவுடன் தாழ்ப்பாளிட்டு பூனை கண்டிருப்பார் Felinophobia, Ailurophobia, Elurophobia, Galeophobia, Gatophobia எனப்படும் பூனை பயத்தால் அப்படியே மயங்கி விழுந்திருப்பார். விழுந்த இடம் வழுக்கி இடது காலில் சுளுக்கு விழுந்திருக்கலாம், Electrophobia எனப்படும் மின்சார பயத்தால் காலில் விழுந்த சுளுக்கை மின்சாரம் தாக்கியதாக நினைத்துக் கொண்டே அப்படியே கிடந்திருக்கலாம். அசுத்தமான பாத்ரூமில் Rupophobia எனப்படும் அசுத்தப் பயத்தால் சற்று நேரம் கழித்து எழுந்திருக்கையில் மீண்டும் பூனையைக் கண்டு விழுந்திருக்கலாம் அப்போது வலது காலிலும் சுளுக்கு வந்து Agliophobia எனப்படும் பயத்தால் வரும் பயத்தாலே எழுந்திரிக்க முடியாதவாறு விழுகையில் தலையில் அடிபட்டு ரத்தப் போக்கயிருக்கலாம். அந்த ரத்தத்தை உண்டு பூனை சற்று காலம் உயிர் வாழ்ந்திருக்கும். மீண்டும் சுயநினைவு திரும்புகையில் ரத்தத்தைக் கண்டு Hemophobia or Hemaphobia or Hematophobia எனப்படும் ரத்தபயத்தில் இருந்தவாரே ரத்த கரையுடன் பூனையைக் கண்டதால், பூனை நம்மை தின்கிறது என மனத்தால் நினைத்து Thanatophobia or Thantophobia எனப்படும் மரண பயத்திலே மாரடைப்பு வந்து Cardiophobia எனப்படும் பயத்தாலே இறந்திருக்கலாம்.

  Athazagoraphobia எனப்படும் மறதி பயம் இல்லாவிட்டால் சாம்புவிடம் சொல்லிருங்க

  ReplyDelete
 2. அவர் பணக்காரர் ன்னா கண்டிப்பா இருதய நோய் இருந்திருக்கும்.
  பூனையைக் கண்டு பயந்து அதிர்ச்சிலதான் இறந்திட்டார்,

  ReplyDelete
 3. த்ரில்லாக இருக்கிறது. எப்படி இறந்திருக்க கூடும்?

  ReplyDelete
 4. அதையும் நீங்களே சொல்லிருங்க....

  ReplyDelete
 5. மகன்களில் ஒருவன் போட்டுடானோ..? சீக்கிரம் சொல்லுங்க சஸ்பென்சா இருக்கு :)

  @நீச்சல்காரன்,
  அப்போ அந்த பணக்காரன் பெரு தெனாலி? :)

  ReplyDelete
 6. அவருக்கு "ஹார்ட் அட்டாக்" வந்திருக்கும்.

  ReplyDelete
 7. அண்ணே, சட்டுப்புட்டுன்னு கண்டுபிடிக்கலாமுன்னா, குவிஞ்சு கிடக்கிற ஆணி பயமுறுத்துதண்ணே! அப்பாலிக்கா வாறேன்!

  ReplyDelete
 8. ப்ளீஸ் யாராவது பூனைக்கிட்ட விசாரிச்சி சொல்லுங்கப்பா...

  ReplyDelete
 9. என‌க்கு தெரிய‌லை... ஸ்டார்ஜ‌ன்.. நீங்க‌ளே சொல்லிருங்க‌..

  ReplyDelete
 10. அவர் பூனையை பார்த்த அதிர்ச்சியில செத்துருப்பாரோ?..

  ReplyDelete
 11. வருகைதந்து புதிருக்கு விடையை சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

  ஹேமா சொன்னமாதிரி அவருக்கு இருதய நோய் இருந்திருக்கும், அங்கே திடீரென பூனையை பார்த்த அதிர்ச்சியில் இறந்துபோனார்.

  அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 12. அட அப்படியா ஸ்டார்ஜன்.. நான் ரொம்ப குழப்பிக்கிட்டு வந்தேன்..ஐஸ் கட் அது இதுன்னுகிட்டு

  ReplyDelete
 13. மியாவ்....மியாவ்... என்ன பாக்குறீங்க. அதான் உண்மைய பூனை சொல்லிருச்சே!!!

  ReplyDelete
 14. மாயா மச்சிந்திரா.., மச்சம் பார்க்க வந்தீரா, பாட்டு மாதிரி ஏதாவது இருக்கலாமோ!

  ReplyDelete
 15. எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் னு கேட்டா இதுல ஏதோ உள்குத்து இருக்கும் போலன்னுட்டு ஏழுன்ன கதையா இருக்கு.

  ReplyDelete
 16. நண்பரே நான் என்னெனவோ கற்பனை பண்ணினேன் , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. நானும் தமிழ்வாணன் ரேஞ்சுக்கு த்ரில்லை கற்பனை செய்தேன்,சுவாரசியமாக இருந்தது.

  ReplyDelete
 18. அந்தக் கருப்பு கோட்டு, வெள்ளை வேட்டி,
  மொட்டைத் தலை, நீட்டு மூக்கு
  என்று (சாம்பு) ஞாபகம் வந்திட்டுது.

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்