Pages

Saturday, May 22, 2010

விமான விபத்து - வருத்தத்துடன்


இன்று பொழுது ஏன் விடிந்தது என்று வருத்தமாக உள்ளது. அப்படியே இரவு தொடர்ந்திருக்ககூடாதா என்று மனம் ஏங்குகிறது. ஆம் காலையில் விமானம் விபத்துக்குள்ளானது பற்றி டிவியில் செய்திகளை கேட்டதும் மனம் ஒரே நிலையில் இல்லாமல் தவிக்கிறது. சொல்லொண்ணாத் துயரம். இதை நினைக்க நினைக்க மனம் தவியாய் தவிக்கிறது.

வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் மனநிலையில் இருந்து சிந்தித்துப்பார்த்தால் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் மனதுக்குள் விடைத் தெரியாமல் தவிக்கிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்து இரண்டு ஆண்டோ அல்லது அதற்கு மேல் ஆண்டுகளோ கழித்து மனைவி மக்களை சந்திக்க நாட்டுக்கு திரும்பும் அத்தனைபேரும் என்ன குற்றம் செய்தார்கள்?. இதோ விமானம் தரை இறங்கப்போகிறது; நம்மை பார்க்க நம் சொந்தங்கள், பெற்றோர், மனைவி, பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறதே, அதை விவரிக்க வார்த்தைகளை எந்த தமிழ் அகராதியில் தேடினாலும் கிடைக்க வாய்ப்பில்லை.

விமானம் தரையிறங்க இன்னும் இத்தனை நிமிடங்களை இருக்கிறது என்று அறிவிப்பு வந்தவுடன் மனம் குதூகலிக்க ஆரம்பிக்கிறது. விமானப் பணிப்பெண் சொல்லும் (கட்டளைக்கு) சீட்பெல்ட் கவன எச்சரிக்கைகளை சந்தோச மனநிலையில் அவர்கள் கடிந்து கொண்டாலும், மனம் அதை பொருட்டாக நினைக்காது. அதேநேரம் விமானம் தரையிறங்கும் நேரம் தடதடவென கேட்கும் சத்தம், சொந்தபந்தங்களை பார்க்கப்போகிறோம் என்ற சந்தோசத்தில் காணாமல் போய்விடுகிறது.

விமானம் தரையிறங்கியதும், இமிக்ரேசன் முடிந்து தனது சாமான்களை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்போது நமக்குள் ஒரு கம்பீர நடை. சொந்தபந்தங்களை கண்டதும் ஆரத்தழுவி சந்தோசமாய் தத்தம் ஊர்களுக்கு செல்லும்போது என்னே ஒரு ஆனந்தம்.

தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பவனுக்கு கரையை கண்டதும் சந்தோசத்தை அனுபவிக்க முடியாமல் தண்ணீரில் முழ்குவதுபோல இந்த சம்பவம் வருந்தத்தக்கது. இவ்விபத்துக்கு யார்மேல குற்றம் சாட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை. பலியானவர்களின் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஈடுகட்டமுடியாத இழப்புக்கு நம்மால் ஈடுகட்டமுடியுமா?..

ஒரு விமான சேவை நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தாக வேண்டும். அதிலும் ஏர் இந்தியா விமான சேவை மற்ற நிறுவனங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது குறைவாகவே தோன்றுகிறது. விமானத்தில் விபத்துக்குள் ஏற்படாவண்ணம் பாதுகாப்புகள் அவசியம். ஒவ்வொரு விமான பணிப்பெண்ணும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவைகளை தருதல் நலம்பயக்கும்.

விமானத்தில் கொடுக்கப்படும் லைஃப்ஜாக்கெட் தீயினால் பாதிப்பு ஏற்படாத பாதுகாப்பு ஆடைகளை கொடுத்தால் இந்தமாதிரி தீவிபத்துகளில் இருந்து மக்களை பாதுகாக்கலாம்.

அதேபோல தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம். நல்ல ஓடுதளம், விமானம் தரையிறங்கும் நேரத்தில் எந்த இடையூறும் இருக்ககூடாது. விமான நிலையத்தை சுற்றிலும் ஒரு நல்ல தரையாக இருக்கவேண்டும். நான் சொல்லவருவது விமான நிலையத்தை சுற்றிலும் ஆபத்தான பள்ளத்தாக்கோ அல்லது ஆபத்தான இடங்களோ இருக்ககூடாது. எளிதில் தீப்பிடிக்காத புதுரக விமான‌ங்களை தயாரித்து மக்களுக்கு தரமான சேவையை வழங்கலாம்.

இப்போது ஏற்பட்ட இழப்பை யாராலும் திரும்ப பெற இயலுமா?.. இந்த விபத்து நடந்த இடத்தில் சில அசம்பாவித எண்ணங்களை கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் பலியானவர்களிடமிருந்து நகைகளையும் திருடிச் செல்கின்றனர் என்பதை நினைக்கும்போது வருத்தமாகவே உள்ளது. எப்படி இந்த கோரவிபத்தை கண்டதும் திருடுவதற்கு மனம் ஒத்துழைக்கிறதோ தெரியவில்லை?..

இனிமேல் இதுபோன்ற விபத்து நடக்காதவண்ணம் அரசு நடவடிக்கை எடுக்குமா?..

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்யவேண்டும். இந்த இழப்பு ஈடுகட்டமுடியாது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன்.

கண்களில் கண்ணீருடன் கதறும் குடும்பங்களை காணும்போது துயரம் மேலும் வாட்டுது. அவர்களின் துயரங்களில் பங்கெடுக்கும் உங்கள் ஸ்டார்ஜன்.

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு இறைவன் நல்லதொரு ஆத்மா சாந்தி நிலையை கொடுப்பானாக.. ஆமீன். அனைவரும் பிராத்திப்போமாக...

,

Post Comment

27 comments:

  1. :(
    ஆறுதல் சொல்வதை தவிர நம்மால் வேறு ஒன்றும் செய்ய இயலாது ச்டர்ஜன். இதற்க்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன.

    ReplyDelete
  2. //வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் மனநிலையில் இருந்து சிந்தித்துப்பார்த்தால் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் மனதுக்குள் விடைத் தெரியாமல் தவிக்கிறது.//

    ஆமாம் சார், தந்தையை பார்க்க பிள்ளையும், கணவனைப் பார்க்க மனைவியும், பிள்ளையைப் பார்க்க பெற்றோரும் காத்திருக்கையில் இப்படி ஒரு நிகழ்வு.

    இந்த மாதிரி விபத்தை நினைத்து வெட்கமும் வேதனையும் சேர்ந்து வருகிறது.

    தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த இந்த காலத்தில், இது மாதிரியான விபத்துக்கள், நிச்சயமாக தவிர்க்கப் படவேண்டும்.

    ReplyDelete
  3. வேதனையில் ஆழ்த்திய விபத்து! ஆழ்ந்த அனுதாபங்கள்!!

    ReplyDelete
  4. ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்

    ReplyDelete
  5. கண்களில் தாரை தாரையாக வழியும் கண்ணீருடன் உங்கள் வரிகளை படித்து முடித்தேன்,ஸ்டார்ஜன்,டிவி அதிகம் பார்க்காத நான் இந்த விபத்து கேள்விபட்டவுடன் மணிக்கணக்காய் நியுஸ் முன்பு உட்கார்ந்திருந்தேன்,ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதை தவிர நம்மால் செய்ய முடியும்.இது போன்ற துயர சம்பவம் இனி நடக்காமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனே அருள் புரிய வேண்டும்.

    ReplyDelete
  6. May their souls rest in peace. We pray for the peace, comfort and strength for the grieving family members.

    ReplyDelete
  7. ஆன்ம சாந்திக்கு அஞ்சலிகள்.

    ReplyDelete
  8. அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  9. தாங்கவே முடியாத துயரம் இது நண்பா. எனது கண்ணீர் அஞ்சலிகள்.

    ReplyDelete
  10. இனி ஒருமுறைகூட இந்த மாதிரி விபத்து நடக்ககூடாது என்று ஆண்டவனை வேண்டுவோம். அனைவரின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன்

    ReplyDelete
  11. என் ஆழ்ந்த இரங்கல்கள்.

    // நம்மை பார்க்க நம் சொந்தங்கள், பெற்றோர், மனைவி, பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறதே, அதை விவரிக்க வார்த்தைகளை எந்த தமிழ் அகராதியில் தேடினாலும் கிடைக்க வாய்ப்பில்லை.//

    மறைந்தவர்களின் மனநிலையும் இப்படித்தானே இருந்திருக்கும்:(!

    ReplyDelete
  12. நினைத்து பார்க்க‌முடியாத‌ துய‌ர‌ ச‌ம்ப‌வ‌ம்.. ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ள்..

    ReplyDelete
  13. வருந்துகின்றேன்.

    போனமாசம்தான் மங்களுரு போனபோது புதுவிமானநிலையம் கட்டி முடிவடையும் நிலையில் இருந்ததை தூரத்தில் இருந்து பார்த்தேன்.

    இப்படி ஒரு சம்பவம் அங்கே நடக்கப்போகுதுன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை.

    எத்தனை நினைவுகளோடு தாய்மண்ணை மிதிக்க ஆசையோடு வந்துருப்பாங்க.....ப்ச்

    கண்ணீர் அஞ்சலிகள்:(

    ReplyDelete
  14. வருந்ததக்க நிகழ்வு.. சொல்ல வார்த்தை வரவில்லை.

    ReplyDelete
  15. வருந்ததக்க நிகழ்வு.. சொல்ல வார்த்தை வரவில்லை.

    ReplyDelete
  16. மிகவும் வருத்தமான சம்பவம், இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க ஏர் இந்தியா நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

    ReplyDelete
  17. உண்மையில் இது யாராலும் மறக்க முடியாதது வெளிநாட்டில் இருந்து தனது சொந்தம்களுடன் சேர போகிறோம் என்ற எண்ணம களுடன் போகும் ஒவ்வொருவருக்கும் இதனை மறக்க முடியாது அந்த சந்தோசம் அனுபவிக்கும் பொது தான் தெரியும் அப்படி போனவர்களுக்கு ஏற்ப்பட்ட இந்த கோர சம்பவம் என்றென்றும் மறக்க முடியாதது

    ReplyDelete
  18. "விமானம் தரையிறங்கியதும், இமிக்ரேசன் முடிந்து தனது சாமான்களை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்போது நமக்குள் ஒரு கம்பீர நடை"
    100% CORRECT,

    ReplyDelete
  19. அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  20. சொல்லொண்ணாத்துயரம்; நினைக்கும்போது ரொம்ப மனசு கஷ்டமாயிருக்கு..

    ReplyDelete
  21. நினைக்கும் பொழுது கஷ்ட்டமாக உள்ளது.இறைவனிடம் இதுபோல் நிகழ்வுகள் இனி நிகழாமல் இருக்க துஆ செய்து கொள்வோம்.

    ReplyDelete
  22. நினைக்க நினைக்க வருந்தும் சம்பவம்; இறந்தவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தை தருவான். அவர்களின் குடும்பங்களின் இன்னல்களை அல்லாஹ் போக்கிஅருள்வான்.. ஆமீன். எல்லோரும் பிராத்திப்போம்..

    என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் கண்ணீர் அஞ்சலிகள்.

    ReplyDelete
  23. துயர சம்பவம் திரு.ஸ்டார்ஜான், யார் யார் என்னனென்ன கனவுகளோடு வந்தார்களோ.....எதற்காக "Table Top Runway" களை அமைத்து "risk" எடுக்கவேண்டும்?

    யானைக்கும் அடிசறுக்கும் என்பார்கள்....என்னதான் அனுபவம் வாய்ந்த பைலட்டாக இருந்தாலும்..கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல நிகழ்ந்துள்ளது இந்த விபத்து....

    அரசாங்கமும் ஏர் இந்தியா நிறுவனமும் உயிரிழந்த குடும்பத்திற்கு கண்டிப்பாக உதவ வேண்டும்...

    இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்...

    ReplyDelete
  24. எத்தனை இடுகைகள் எளுதினாலும், இந்த விபத்திற்கு ஈடு இணை ஆகாது. அவர்கள் ஆண்மா சாந்தி அடைய நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக எல்லாம் வல்ல இறைவனிடத்தில்,.....

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்