கொக்கரக்கோ கொக்கரக்கோ என
கூவி சூரியனை அழைக்கிறாய்
அதனால்தான் பொழுதும் விடியுதோ
மமதை எல்லாம் நினைப்புதான் போல..
ஒய்யார நடையும் சிலுப்பிய தலை
தெரு பெட்டைகள் மயங்க
சுற்றி சுற்றி வந்தால்
காதல் டூயட்டுன்னு நினைப்போ..
ஆசையோடு இரை வைத்தால்
கையை பதமா பார்க்கிறாய்?
அருமையான வாசம் வருதே
அடடா சட்டியில் நீயா..
,
அழகா தொடங்கி...ஐயோன்ன்னு முடிச்சிட்டீங்க ஸ்டார்ஜன்.
ReplyDeleteஅநியாயமா இல்ல உங்களுக்கு !
:))
ReplyDeleteகடைசில வறுவல் போட்டுட்டீங்களே அப்பு :))
ReplyDeleteஅன்பு starjan!
ReplyDelete'ராஜ கிரீடம்' தலைப்பு கவிதைக்கு அரசியல் அர்த்தங்களையும் தந்து புன்னகையை அளித்தது ...
சேவலை செய்தது போன்று அவர்களையும் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் ...
நன்றி!
அழகான கவிதை வாசிக்கும் பொழுதே முக்கை துளைக்குதே மணம்.
ReplyDeleteசூப்பர் ஸ்டராஜன் சார் . கவிதை அருமை உங்கள் புகழ் மேநேம்ளும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteமீ த பர்ஸ்ட் !
ReplyDelete//அருமையான வாசம் வருதே
ReplyDeleteஅடடா சட்டியில் நீயா..//
ஹா ஹா ஹா....
இன்னிக்கு கோழிக் கொழம்பா? ஸ்டார்ஜன்.
//அருமையான வாசம் வருதே
ReplyDeleteஅடடா சட்டியில் நீயா..//
வரி அருமை.. நல்லாயிருக்கு..
//அருமையான வாசம் வருதே
ReplyDeleteஅடடா சட்டியில் நீயா..//
அதானே என்னடா ரொம்ப நேரமா கோழிக்கூவுதேன்னு பார்த்தேன்....ஆமா...சவுதியில கோழி (கறி அல்ல) கெடைக்குதுங்களா??
கவிதை செம வாசனை....
அண்ணே, இன்னிக்கு அடுப்புலே எது? நாட்டுக்கோழியா, வொயிட் லகானா? :-)
ReplyDeleteகடைசி ஒத்தை வரியில கதையையே மாத்திட்டீங்களே!! சூப்பர் . நான் வாசனைய சொன்னேன்.
ReplyDelete:))))
ReplyDeleteகிளைமாக்சில் கார் மலையில் இருந்து தடம் புரண்டு கிழே விழுந்த மாதிரி, குழம்பு வச்சுட்டு சோக கவிதையா. நல்லா தான் யோசிக்கிறாங்கய்யா!!!
ReplyDeleteபடம்பார்த்து கதை சொல்லி கடசிலே சிந்திக்கவும் வெச்சுட்டீர்
ReplyDeleteஅடடா எங்க வீட்டுல வைத்த கோழிக்குழம்பின் வாசத்தை காணோமென்று பார்த்தா, அட இங்கேதான் இருக்கா... சரியாப்போச்சி.. நல்ல வாசனை.
ReplyDeleteசேவலை பார்த்து எவ்வளவு நாளாச்சு. இங்கு எல்லாமே உறித்த கோழியாகத்தான் கிடைக்கிறது. நல்ல நகைச்சுவையான கவிதை சேக்.
ReplyDeleteகுழம்பு வைக்குமுன் கோழியைப்
ReplyDeleteபடம் எடுத்துவிட்டு, இதிலே
கவிதை வேறயா???
உங்களுக்கு ரொம்ப குழம்புதான்,
மன்னிக்கவும், குறும்புதான்...
வருகைதந்து கருத்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.
ReplyDeleteஹேமா
SUREஷ் (பழனியிலிருந்து)
சைவகொத்துப்பரோட்டா
நியோ
asiya omar
சசிகுமார்
கோவி.கண்ணன்
செ.சரவணக்குமார்
அஹமது இர்ஷாத்
க.பாலாசி
சேட்டைக்காரன்
ஜெய்லானி
T.V.ராதாகிருஷ்ணன்
எம் அப்துல் காதர்
அபுஅஃப்ஸர்
மின்மினி
அக்பர்
NIZAMUDEEN
அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.