மணி பனிரெண்டு ஆயிருச்சி; நாலுதெரு நடந்து போகணுமே என்று எரிச்சலோடு வீட்டைவிட்டு கிளம்பினேன். அய்யயோ தெருவிளக்கெல்லாம் அணைந்திருக்கே., இந்த முனிஸிபாலிட்டியில விளக்கை சரிபண்ணுறேன்னு இப்ப அப்போன்னு இழுத்துக்கிட்டே இருக்காங்க. ஆஹா இன்னக்கி ரொம்ப இருட்டாஇருக்கே.. அமாவாசையா இருக்குமோ.. என்று நினைத்தபடியே நடந்துவந்துகொண்டிருந்தேன்.
ஆ இந்ததெருவ கடந்துபோகணுமே.. போன ரெண்டுவாரத்துக்கு முன்னாடி செத்துபோன மாரியம்மா ஆவியா நடமாடுதான்னு ஒரு கேள்வி. கல்யாணமான இரெண்டாவது நாளே புருசனை பிடிக்காம ஒரே சண்டையாம். சண்டை முத்திப்போயி ஒருநாள் மண்னெண்ணைய ஊத்திக்கிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாளாம். நிறைவேறாத ஆசையோட செத்துப்போனா ஆவியா அலைவாங்களாமே.. அப்படியாங்க..
மனசுல லேசான ஒருபயம்.,இருந்தாலும் வெளிக்காட்டலாமா; நாங்கல்லாம் யாரு புறாவுக்கே பெல்லடிச்சவங்களாச்சே.. நானெல்லாம்.. இப்படியே சொல்லிக்கிட்டே போகலாம். இப்ப இதுபோதும். தைரியத்துடன் நடக்க ஆரம்பித்தேன். பையன் அழுதுக்கிட்டு இருப்பானே., சீக்கிரமா பால்பவுடர் வாங்கிட்டுபோகணும் என்றபடி வேகமாக நடக்க ஆரம்பித்தேன். நாலுதெருவும் கடந்து மெயின்ரோட்டுக்கு வந்தாச்சி. கடையில் செரிலாக் 2 டப்பா வாங்கினேன். மறுபடியும் வேறொரு நாள் தூக்கத்துல செல்வி அலையவிட்டிரக்கூடாது பாருங்க அதான் 2 டப்பா.
என்னாச்சி இந்த மனுசனை இன்னும் காணலை. கடையில பால்பவுடர் வாங்கப்போனாரா இல்ல கடையையே விலைக்கு வாங்கப்போனாரா.. அருண்வேற அழுதுக்கிட்டே இருக்கானே என்னாச்சின்னு தெரியலியே.. நீ அழாதடா என்செல்லம். அப்பா இப்போ வந்திருவாரு.. ஆரோரோ ஆரிராரோ என்செல்லம் கண்ணுறங்கு..
அருண் அழுதுக்கிட்டு இருப்பானே.. நடையில் வேகம் கூட்டினேன். ஆஹா 4வது தெருவ கடந்து மூணாவது தெருவுல வந்துகொண்டிருந்தேன். அடுத்த தெரு மாரியம்மா தெரு. இப்போது மனதுல உள்ள பயபூதம் முழுச்சிகிருச்சி. அடடா இன்னக்கி நான்வீட்டுக்கு போனாமாதிரிதான். ஊவ்வ் ஊவ்வ்வ்... தூரத்தில் நாயோ நரியோ ஊளையிடுத சத்தம். மெல்ல ஒரு சிலிர்ப்பு. சில்லுன்னு காற்று வீசியது. மாரியம்மா தெருவுக்கு வந்தாச்சி.. மெதுவா வீசின காத்து இப்போ வேகமாக வீசியது. மரங்கள் வேகமாக ஆடின. கிளைகள் ஒடிந்து என்மேல் விழுவதுபோல அருகில் வந்து பயமுறுத்தியது. மனதில் திக்திக். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ தெரியலியே..
அருகில் இருந்த வீட்டுகளின் ஜன்னலெல்லாம் டப்..டப்.. டபடப.. டபடப.. வேகமாக அடித்தது. அதேசத்தம் என் மனதிலும்.. மறுபடியும் வேகவேகமா ஜன்னல்களின் சத்தம். இப்போது பயத்தில் நடையில் வேகம். தூரத்தில் வெள்ளை வெளெறென ஒரு உருவம் தோன்றி மறைந்தது. அது மாரியம்மாவாத்தான் இருக்கும். நாய் மறுபடியும் ஊளை ஊவ்வ்வ்.. ஊவ்வ்வ்.. ரோட்டில் கிடந்த குப்பையெல்லாம் என்முகத்தில்.. தட்டிவிட்டுக்கொண்டே நடந்தேன். பின்னால் திரும்பினால் மறுபடியும் அதே உருவம் தோன்றி மறையுது. ஆஹா துரத்த ஆரம்பிச்சிருச்சே.. வேகமாக ஓடினேன். மாரியம்மா தெருவை கடந்து எங்கத்தெரு.. பின்னால் யாரோ துரத்துவது போல இருந்தது. பின்னால் திரும்பிபார்க்காமல் ஓடினேன். தடதட சத்தம். என்னை பிடித்துவிடுவது போல இருந்தது. முதுகில் யாரோ அடிப்பதுபோல டமடம.. டமடம.. சத்தம்.
ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருந்தேன். தூரத்தில் என்மனைவி வீட்டுவாசலில்.. அடடா அடடா.. செல்வி பேய்வருவது தெரியாமல் வீட்டுவாசலில் நிற்கிறாளே.. செல்வி.. வீட்டுக்குள்ள ஓடிவிடு ஓடிவிடு பேய்வருது பேய்வருது.. என்று கத்த ஆரம்பித்தேன். என்னஇது.. நான் கத்தியும் உள்ளே போகாமல் நிற்கிறாளே.. மறுபடியும் கத்த ஆரம்பிக்க.. வெறும் காத்துதான் வருது.. ஆஹா.. தொண்டை வறண்டுவிட்டதுபோல.. நாக்கு பே..பே..பே...
என்னங்க.. என்னங்க.. சீக்கிரம்வாங்க.. மழை தூத்துகிறதுகூட தெரியாம மெய்மறந்து வாரீங்களே.. என்ற செல்வி என்னை அணைத்தபடி வீட்டிற்குள் அழைத்து சென்றாள்.
,
அரண்டவன் கண்ணுக்கு.... :))!
ReplyDeleteநல்லாயிருக்கு கதை.
நல்ல கதை... நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்...
ReplyDeleteநல்ல முயற்ச்சி
ReplyDelete:)) நல்லாருக்கு ஸ்டார்ஜன்.
ReplyDeleteச்சே.. அதுக்காக இப்பிடியா எங்களை பயங்காட்டுவது.. பயத்தோடவே படிச்சேன்...
ReplyDelete:-))
பேய்க்கதை நல்லாருக்கு ஸ்டார்ஜன்.
ReplyDeleteமுயற்சி செய்திருக்கீங்க.
நல்ல பே. பே...பேய் கதை சொல்லுறீங்க ஸ்டார்ஜன்..
ReplyDelete:))))))
ReplyDeleteநானும் கடைசில கனவு என்று கதை முடியுமோ என்று பார்த்தால் நிஜபயம்.கதை திரில்லிங்காக இருந்தது.
ReplyDeleteஅட!! திகில் கதை!! கொண்டு சென்ற விதம் அருமை ஸ்டார்ஜன்.
ReplyDeleteஅடப்பாவி இதுக்குத்தான் நேத்து நைட்டு பூரா மாரியம்மா மாரியம்மான்னு சொல்லிக்கிட்டு இருந்தியா. நானும் ஏதோ கூட படிச்ச புள்ளை பேருன்னு நினைச்சேன்.
ReplyDeleteநல்லாயிருக்கு.
பேய் கத நாலே உள்ளே வரமாட்டேன்.
ReplyDeleteஹி ஹி நல்ல தான் இருந்தது, கனவோ என்று தான் நினைத்தேன். ஓ மழை வந்து விட்டதா?
இதிலேயே ஒரு டிஸ்கி போட்டு இருக்கலாம், சொன்னது பால் பவுடர் பற்றி, இது போல் குழந்தை உள்ள வீட்டில் ஸ்டாக் வைத்து கொள்ளுங்கள் நடு ராத்திரி கனவு காண்டு கொண்டிருக்கும் ரங்க்ஸ் களை தொந்தரவு படுத்தாதீர்கள் என்று ஹிஹி
நானும் மாரியம்மா என்ற து திக்கு திக்குன்னு படித்தேன்,பாதியில் படிக்காம போகவும் முடியாது. அப்பரம் தூக்கம் வராது. ஒரு வழியா படிச்சாச்சு. ஹிஹி
ReplyDelete//அடப்பாவி இதுக்குத்தான் நேத்து நைட்டு பூரா மாரியம்மா மாரியம்மான்னு சொல்லிக்கிட்டு இருந்தியா. நானும் ஏதோ கூட படிச்ச புள்ளை பேருன்னு நினைச்சேன்.
ReplyDelete///
இதா விஷியமா அக்பர் போட்டு உடைச்சிட்டாரு, அக்பர் உடனே நீங்க எழுந்து பாடலையே?
மாரியாம்மா காளியம்மான்னு....
ஆ!! படிக்கவே ரொம்ப பயமா இருக்கு.. கதை ரொம்ப சுவாரசியமா இருக்கு..
ReplyDeleteபயமாத்தான் இருக்கு..
ReplyDeleteசுவாரஸ்யமா இருந்தது பேய் கதை.
ReplyDeleteஅல்ல, அல்ல,
சுவாரஸ்யமா இருந்தது உங்க கதை, ஸ்டார்ஜன்.
எங்கே கனவுன்னு சொல்லி முடிச்சிடுவீங்களோன்னு நெனச்சேன். கதை நல்லாருக்கு. சொந்த அனுபவமோ :-)))))
ReplyDeleteநல்லாயிருக்கு ஸ்டார்ஜன். புனைவுகள் எழுத ஆரம்பித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteயம்மாடியோவ் நல்லா தான் பீதிய கெளப்புறீங்க.. நான் ரொம்ப பச்ச புள்ளங்க:)))
ReplyDeleteவாங்க ராமலட்சுமி மேடம் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க இர்ஷாத் @ ரொம்ப நனறி இர்ஷாத்.
வாங்க எல்கே @ ரொம்ப நன்றி எல்கே
வாங்க வானம்பாடிகள் பாலா சார் @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க ஜெய்லானி @ என்னஇதுகெல்லாம் பயப்படாதீங்க.. ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
ReplyDeleteவாங்க ஹேமா @ பாராட்டுக்கு மிக்க நன்றி
வாங்க ஸ்டீபன் @ உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஸ்டீபன்
வாங்க அத்திரி @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க ஆசியாக்கா @ சே சே கனவெல்லாம் சொல்லி உங்களை பயமுறுத்தமாட்டேன்.
வாங்க சைவகொத்துப்பரோட்டா @ பாராட்டுக்கு மிக்க நன்றி
வாங்க அக்பர் @ அடப்பாவி அக்பர்., போட்டுக்கொடுத்திட்டீயே.. :)))
ReplyDeleteவாங்க ஜலீலா @ ஆமா வீட்டுல ஸ்டாக் வச்சிருந்தா மாரியம்மாவ பாத்திருக்கவேண்டாமில்லையா.. இதுகெல்லாம் பயப்படக்கூடாது. சே சே அக்பர் எழுந்திருக்கவே இல்லை. அன்புக்கு மிக்க நன்றி ஜலீலா.
ReplyDeleteவாங்க ஜெரி சார் @ பாராட்டுக்கு மிக்க நன்றி
ReplyDeleteவாங்க மின்மினி @ பாராட்டுக்கு மிக்க நன்றி
வாங்க நிஜாம் @ பாராட்டுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி
வாங்க அமைதிசாரல் அக்கா @ சே சே கனவுன்னு சொல்லமாட்டேன். ஐய்யோ என்னோட அனுபவம் இல்லீங்க. தங்கள் அன்புக்கு நன்றி
ReplyDeleteவாங்க சரவணகுமார் @ நன்றி பாராட்டுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி
ReplyDeleteவாங்க அப்துல்காதர் @ பாராட்டுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஅடடா .............இந்த செரிலாக் காலத்திலும் பேய் வெள்ளைச்சேலை தான் கட்டுகின்றதே?
ReplyDelete