Pages

Tuesday, May 4, 2010

வெஜ். பிரியாணி

சகோதரி ஆசியாஉமர் அவர்கள் வெஜ்.பிரியாணியை செய்துபார்த்து இடுகை வெளியிட்டிருந்தார். அதனை பார்த்து நானும் அக்பரும் இதேபோல பிரியாணி செய்ய திட்டமிட்டிருந்தோம். அதன்படி இன்று மதியம் நானும் அக்பரும் கன்னட நண்பன் ரைய்கானும் செய்து பார்த்தோம். ரொம்ப அருமையாக இருந்தது.


தேவையான பொருட்கள்:



முட்டை 4
உருளைகிழங்கு 1
பச்சை பட்டாணி சிறிதளவு
பீன்ஸ் 100 கிராம்
கேரட் 2
பட்டர் ஒரு பாக்கெட்
வெங்காயம் 4
மிளகாய் 4
தக்காளி 3
இஞ்சிபூண்டு பேஸ்ட் சிறிதளவு
புதினா சிறிதளவு
மல்லிக்கீரை சிறிதளவு
தயிர் 2 பாக்கெட்
பிரியாணி மசாலா 1 பாக்கெட்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு


முதலில் பாத்திரத்தில் எண்ணெய்யும் பட்டரும் சேர்த்து வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பின்னர் வெங்காயம் பொன்னிறமானதும் கரம் மசாலா, இஞ்சிபூண்டு பேஸ்ட், மிளகாய், தக்காளி, மல்லிப்புதினா சேர்த்து வதக்க வேண்டும்.


எல்லாம் நன்றாக பேஸ்ட்போல வதக்கியதும் பிரியாணிமசாலா சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். எண்ணெய் மேலே கிளம்பியதும் நறுக்கிவைத்த காய்கறிகளை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்க வேண்டும்.

காய்கறிகள் நன்றாக கொதித்தவுடன் தயிரை கொட்டி நன்றாக கிளறிவிட வேண்டும். சிறிது நேரம் லேசான தீயில் நன்றாக கொதிக்க வேண்டும்.

எல்லாம் சேர்ந்து கூட்டுபோல ஆனதும் நாம் ஏற்கனவே வடித்துவைத்த சோற்றை காய்கறி மசாலாவில் கொட்டி மசாலா மேலெம்பும்வரை கிளறி எல்லாத்தையும் கலவையாக்க வேண்டும்.

பின்னர் 15 நிமிடம் தம்மில் வைத்து மூடிவிட வேண்டும்.

அருமையான வெஜ்.பிரியாணி தயார்.


இதற்கு சைடிஸ்டாக முட்டையை அவித்து வெங்காய பச்சடி செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

நீங்களும் செய்துபாருங்களேன் நண்பர்களே!!..

நன்றி ஆசியா.


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.


**********

இதை ஜலீலாவின் பேச்சிலர் சமையல் போட்டிக்காக அனுப்பியுள்ளேன்.

Post Comment

38 comments:

  1. நண்பா முட்டை சைவமா??

    ReplyDelete
  2. ஆஹா.... பிரியாணி ஆசையை தூண்டி விட்டீர்க‌ள் ஸ்டார்ஜ‌ன்..

    ReplyDelete
  3. பிரியாணி நல்லா வந்திருக்கு.

    ReplyDelete
  4. பிரியாணி நல்லா வந்திருக்கு.

    ReplyDelete
  5. அடுத்த தடவை செய்யும்போது கூப்பிடுங்க சாப்பிட வர்றோம்..

    ReplyDelete
  6. ஆஹா..வெஜ் பிரியாணி..அதிலும் நம்ம ஆசியாவின் ரெசிப்பி.காய்கள் வெட்டி இருப்பதிலேயே ஒரு நேர்த்தி தெரிகின்றதே..கண்டிப்பாக சுவையாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  7. நைட்டுக்கும் இருக்கு. சாப்பிட வர்றவங்களை வருக வருக என வரவேற்கிறோம்.

    ReplyDelete
  8. அண்ணே முட்டைய போட்டுட்டு கோழியை விட்டுட்டு வெஜ்ன்னு சொல்லிட்டீங்களே!! ஒரே அழுவாச்சியா வருது.

    ஆனா பாக்கும் போதே ஜொள்ள்ள்ள்ள் வடியுது.

    ReplyDelete
  9. //அக்பர் said...

    நைட்டுக்கும் இருக்கு. சாப்பிட வர்றவங்களை வருக வருக என வரவேற்கிறோம். ///

    வருக வருக என வரவேற்கிறோம்.

    ReplyDelete
  10. ஆஹா.... பிரியாணி ஆசையை தூண்டி விட்டீர்க‌ள் ஸ்டார்ஜ‌ன்..


    அடுத்த தடவை செய்யும்போது கூப்பிடுங்க சாப்பிட வர்றோம்..

    ReplyDelete
  11. ஆஹா.... பிரியாணி ஆசையை தூண்டி விட்டீர்க‌ள் ஸ்டார்ஜ‌ன்..


    அடுத்த தடவை செய்யும்போது கூப்பிடுங்க சாப்பிட வர்றோம்..

    ReplyDelete
  12. வருகைதந்த அனைவருக்கும் நன்றி. எல்லோரும் கேட்ட முட்டை சைவமா அசைவமா என்ற ஈஸியான கேள்விக்கு என்னால பதில் தெரியல நண்பர்களே..

    முட்டை சைடிஸ்டாக டெக்ரேசனுக்காக பிரியாணிமேல வைத்தோம். அவ்வளவுதான்.

    ReplyDelete
  13. ஆஹா.. வெஜ்.பிரியாணி.. நீங்க செய்திருப்பதை பார்த்தா ரொம்ப அருமையா இருக்கும்போல..

    ReplyDelete
  14. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்குது.

    ReplyDelete
  15. நான் செய்த பிரியாணியை விட அருமையாக இருக்கே,சூப்பர்.பாராட்ட வார்த்தைகளே இல்லை. வெஜ் பிரியாணியை முட்டையுடன் பரிமாறிய விதம் அருமை.தம்பி ஸ்டார்ஜன்,அக்பருக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

    ReplyDelete
  16. அடுத்த தரம் வீட்டுக்குப் போகிறவரைக்கும் பிரியாணின்னு எழுதி வச்சுக்கிட்டு இப்பிடிப் பதிவில வாற படங்களைப் பார்த்துக்கிட்டே இருக்கவேண்டியதுதான் !

    ReplyDelete
  17. பாத்ததே சாப்பிட்டது போல இருந்தது ஸ்டார்ஜன்... அருமை

    ReplyDelete
  18. மதுரைக்கே பிரியாணி மணம் வந்துருச்சே..

    ReplyDelete
  19. பார்க்கும் போதே சுவைக்கத் தூண்டுதே.

    அருமை:)!

    ReplyDelete
  20. எல்லோரும் சமயல் குறிப்பு எழுத ஆரம்பிச்சிட்டீங்கப்பா...... பிரியாணி அருமை.

    ReplyDelete
  21. வெஜ் பிரியாணி சொல்லிட்டு முட்டைய போட்டு இருக்கீங்க. ஓ இது "முட்டை வெஜ் பிரியாணியோ" நல்ல பதிவு ஸ்டராஜன். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. ஆகா வசம் அசத்தலா வருதே போட்டோகள் சூப்பர். பேச்சிலர் சமையல் சூப்பரோ சூப்பர் அசத்திட்டீங்க ஷேக்

    பின்னே அரபி ஷேக் அல்லவா

    ReplyDelete
  23. செம சூப்பரா வந்திருக்கு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  24. ஆஹா அருமை எப்பொழுதும் வெள்ளிக்கிழமை பிரியாணிதான் இந்த வெள்ளிக் கிழமை நீங்க சொன்னதைப்போலவே பண்ண சொல்லிட வேண்டியதுதான் . அருமையான செய்முறை விளக்கம் . பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  25. பிரியாணி படத்தோட சாப்பிடலாம் போல இருக்கே..

    ReplyDelete
  26. எனக்கும் ஒரு ப்ளேட் வேணும். அருமையா இருக்கு. உங்கள் இடுகைகளை அப்பப்ப வந்து படித்து வருவேன். ஆனால் ஒட்டு போட்டதில்லை. நான்கூட நினைப்பதுண்டு நாளைய முதல்வர் என்று சொல்லிக்கொண்டு, ஒரே மாதிரி போடோவையே போட்டுக்கொண்டு வருகிறீர்களே என்று. இப்ப மாற்றிவிட்டீர்கள் சூப்பர்

    ReplyDelete
  27. பிரியாணியை பார்க்கும்போதே சாப்பிடத்தோனுது,முடிந்தால் அடுத்த்முறை செய்யும் போது பார்சல் அனுப்புங்க சகோ..

    ReplyDelete
  28. இந்த பகுதியையும் விட்டுவைக்கவில்லையா?

    ReplyDelete
  29. veggies ellaam supera cut pannirukkingale.. masha ALlah..

    naanum eppaththaan urupadiyaa oru biriyaani seiyaporeno

    ReplyDelete
  30. ஆஹா..சூப்பராக இருக்கின்றதே பிரியாணி....நாங்களும் வருகிறோம்..பிரியாணி இருக்கு இல்ல....

    ReplyDelete
  31. வெஜ் பிரியாணின்னு ஓடி வந்தால் முட்டையைப் போட்டுட்டிங்களே.

    ReplyDelete
  32. ஆஹா அருமையான கட்டிங்க்ஸ்,

    வெளி நாடுகளில் ஆண்கள் சமைக்க ஆரம்பித்து, இப்ப பெண்கலை விட அவர்கள் 25 பேருக்கு என்றாலும் சூப்பரா சமைக்கிறாரக்ள்.

    பார்க்கவே நல்ல இருக்கு,

    அந்த சட்டியோடு இங்கு அனுப்புங்க கொஞ்ச்ம டேஸ்ட் பார்க்கீறோம்.

    அடுத்து நான் ஒரு சுலப பிரியாண் போடு கிறேன் அதை செய்து பாருங்கள்.

    ReplyDelete
  33. http://allinalljaleela.blogspot.com/2009/12/stuffed-chicken-parattaa.html

    இதிலும் பாருங்கள்

    ReplyDelete
  34. http://allinalljaleela.blogspot.com/2010/01/blog-post_07.html

    இந்த லிங்கில் ஸ்டெப் பை ஸ்டெப் போட்டோ இருக்கு,

    செய்ம்மூறை இப்ப கொடுக்கிறேன்

    ReplyDelete
  35. மட்டன் கீமா மற்றும் பீஃப் கீமாவில் செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்

    http://www.tamilkudumbam.com/-mainmenu-187/--mainmenu-214/--mainmenu-221/5753-free-recipes-from-malaysia-and-singapore.html

    ReplyDelete
  36. http://www.tamilkudumbam.com/-mainmenu-187/--mainmenu-214/--mainmenu-218/5754.html?task=view

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்