Pages

Thursday, June 24, 2010

வரும்வரை காத்திரு...2 - தொடர்கதை

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க.. வரும்வரை காத்திரு..1.

பஸ்ஸை நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க.. என்றபடி பஸ்ஸின் பின்னால் ஒருவர் ஓடிவருவது தெரிந்தது. உடனே டிரைவரிடம் பஸ்ஸை நிறுத்தச் சொல்லி குரல்கொடுத்தேன். டிரைவரும் பஸ்ஸை ஸ்லோ பண்ணினார். ஓடிவருபவர் அருகில் வந்த‌தும் பார்த்தால் அட நம்ம பிரியா.. ஓ..பிரியா.. கைகொடுத்தேன். அவள் ஜம்ப் பண்ணி தொத்தினாள். நான் கைகொடுத்து தூக்கியதும் அவள் என்நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். "என்ன பிரியா ஒருவாரமாக ஆளேக்காணோம்.. என்னாச்சி.," என்றேன் அவளிடம்.

அவள் "என்னை பொண்ணுபார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாங்க.."என்று சொன்னதும் தூக்கிவாரிபோட்டது.

உடனே அருகில் இருந்த என் நண்பர்கள் மூர்த்தி, இஸ்மாயில், மாரிமுத்து, ஜேம்ஸ், சீனிவாசன் வருத்தத்துடன் என்னை பார்த்தனர். நான் என்னவளின் முகம் பார்த்தேன். காலேஜ் வந்ததும் அனைவரும் இறங்கி நடந்து வந்துகொண்டிருந்தோம்.

"டேய் என்னடா மாப்ள, இப்படி சொல்லிட்டுபோறா.. இப்ப என்ன செய்யப்போற?.." என்று மூர்த்தி கேட்டதும் "டேய் அவள்.. சும்மா சொல்றாடா; அவளோட கண்ணே காட்டிக்கொடுத்துவிட்டது. அவ என்னையத்தான் லவ் பண்றாடா.., அவளை முதல் தடவை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது. அவளும் லவ் பண்றான்னு.." என்று நான் சொன்னதும் "அடப்பாவி., இதெல்லாம் தெரிந்து வச்சிருக்கியா..பயங்கரமான ஆளுதான் நீ" என்ற ஜேம்ஸ் என்னை கட்டிபிடித்தான். ஐந்துபேரும் சேர்ந்து என்னை தூக்கி அவர்கள் என்னோட சந்தோசத்தில் பங்கெடுத்தனர்.

"டேய்.. இரண்டாவது பிரீயட் பிராக்டிகல் கிளாஸ் இருக்கு.. ஊர சுத்த போயிராதீங்க..பின்ன வாத்தி பெயிலாக்கி விடுவார்" என்றேன் அவர்களிடம். "டேய் கரெக்டா வந்திருவோம்; கவலைப்படாதே" என்றபடி கேண்டீனுக்குள் அவர்கள் சென்றதால் நான் உள்ளே சென்றேன்.

இதற்குள் எங்க கிளாஸ் பிள்ளைகளுக்கு என்னோட லவ் மேட்டர் தெரிஞ்சிருச்சிபோல.. பரட்ட மாதிரி பத்த வைச்சிட்டாளுக. எங்க கிளாஸ்க்கு உள்ளே நுழையும்போது அவர்கள் பேசிக்கிட்டிருந்தது என் காதில் விழுந்தது. "ஏண்டி மாலா.. நம்ம அருண் பார்த்தியா..ஜூனியர கரெக்ட் பண்ணிட்டான்.. அருணோட ஆள் செம கியூட்டுடி.. நாமளும் இவ்வளவு நாளும் ரூட் விட்டுக்கிட்டிருந்தோம். சிக்குனான இந்த பயல்.. இதுக்கெல்லாம் லக் வேணுன்டி" என்றாள் கார்த்திகா. "ஏய் என்னாங்கப்பா.. நாந்தான் உங்க பேச்சா இருக்கேன் போல.. பொறாமை பிடிச்சவளுகளா.. போங்கடி" என்றபடி வெளியே வந்த நான் திடுக்கிட்டேன். அங்கே பிரியா கோபமாக நின்று கொண்டிருந்தாள்.

எங்க கிளாஸ் அருகில் உள்ள சுவற்றில் பிரியா வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தாள். "என்ன நீங்க.., நான் லவ் பண்றதை ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சிக்கிட்டிருக்கீங்க சீனியர். இதெல்லாம் நல்லாஇல்லை ஆமா சொல்லிட்டேன்" என்று செல்லமாக சொன்னாள். "ஏய் பிரியா., நானா சொல்லல.. எல்லோரும் மோப்பம் பிடிச்சிட்டாளுக. அவர்கள் என்னோட பெஸ்ட் பிரண்ட்ஸ். அவர்கள் நாம் லவ் பண்ண ஆரம்பிச்சதும் ரொம்ப சப்போர்ட்டிவ்வா இருக்காங்க.. ரொம்ப ஆர்வமா இருக்காங்க.. எப்படி சொல்லாம இருக்கமுடியும்.. சொல்லு" என்றேன்.

"சரிசரி.. உங்கள்ட்ட கொஞ்சம் பேசணும்.. சாயங்காலம் கிளாஸ் முடிஞ்சதும் கேண்டீனுக்கு பின்னாடி உள்ள ஆலமரத்தடிக்கு வந்திருங்க.. ஐ லவ் யூ மை டியர் அருண்" என்றுசொல்லி முத்தம் ஒன்று கொடுத்தாள்.

"இது காணாது சாயங்காலம் வரைக்கும் போதாது., இன்னும் வேணும் பிரியா.. அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்..எனக்கு இரண்டாவது பிரீயட்டிலிருந்து சாயங்காலம்வரைக்கும் பிராக்டிகல் கிளாஸ் இருக்கு.,சாயங்காலம்தான் முடியும். கொஞ்சம் லேட்டாகும்; பரவாயில்லையா..சரியா மை டியர் டார்லிங்" என்றேன். "அதெல்லாம் எனக்கு தெரியாது..எனக்கு கிளாஸ் முடிஞ்சதும் போன் பண்ணுவேன்.. வந்திரணும் என்ன" என்றாள்.

"டார்லிங் 5மணிக்குதான் முடியும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோயேன் பிளீஸ்" என்றேன்.

"சரி சரி சீக்கிரம் வந்திருங்க மை டியர் சீனியர்" என்று புன்னகைத்தபடியே சென்ற அவள் எதிரில் அவளுடைய கிளாஸ் லெக்சரர் வந்திட்டார். "என்ன இங்க நடக்குது" என்று கேட்டார். உடனே அவள் பதில் சொல்லும்முன் நான் முந்திக்கொண்டு "ஒண்ணுமில்ல சார். அவளுக்கு ஒரு சின்ன டவுட் கேட்டாள் சொல்லிக்கொடுத்தேன். நீ போம்மா" என்றேன். ஆங்!..ஆங்!!.. தலையாட்டியபடியே சென்றார்.

நான் வேகவேகமாக சால்ட் கண்டுபிடிப்பதில் மும்முரமாக இருந்தேன். எல்லாத்தையும் எல்லோருக்கும் முன்னாடியே தயார் செய்து மைக்ரோஅவனில் 2 மணிநேரத்துக்கு வைத்துவிட்டு காத்திருந்தேன். "டேய் அவனுக்கு இன்னிக்கி கச்சேரி இருக்குபோல..எப்பவும் கொஞ்சம் லேட்டாதான் செய்வான். இன்னிக்கி பாரு படு ஸ்பீடா செய்றான்" என்று மூர்த்தி இஸ்மாயிலிடம் சொன்னான். "டேய்.. அவனபாருடா என்னவேகமா பிரிசிபிடேட் செய்றான். நீயும் வேகமாக செய்யுடா... நீ என்ஜாய் பண்ணு மாப்ள" என்றான் இஸ்மாயில்.

நாலுமணி ஆகி காலேஜ் விட்டாச்சி..எங்களுக்கு இன்னும் பிராக்டிகல் கிளாஸ் முடியல. அந்த சமயத்தில் எனக்கு பிரியாவிடமிருந்து போன்வந்தது. "ஆஹா வந்திருச்சிடா அவனுக்கு.." , "என்னது பிரிசிபிடேட்டா.," , "இல்லப்பா அவனுக்கு சிக்னல்" என்று என் அருகில் இருந்த மூர்த்தியும் இஸ்மாயிலும் பேசிக்கொண்டிருந்தனர். "டேய் வேகமாக செய்து காண்பிச்சிட்டு வெளிய வரப்பாருங்கடா.. சார் அங்கயிருந்துக்கிட்டு உர்ன்னு பார்த்திக்கிட்டு இருக்காரு. பேசமா சீக்கிரம் செய்யிற வழியப்பாருங்கடா.."என்று நான் அவர்களைப்பார்த்து புன்னகைத்தபடியே என்னுடைய பிரிசிபிடேட் காண்பிக்க சென்றேன்.

"என்ன அருண்.. இவ்வளவு நேரமாயிருச்சி.. நாலரையாயிருச்சே.." என்றாள். "சொல்லுவம்மா நல்லா சொல்லுவம்மா.. லேப்ல சால்ட் பிரிசிபிடேட் கொண்டு வர்றதுக்குள்ள எவ்வளவு நேரமாகும் தெரியுமா.. நீயும் தேர்ட் இயர்ல செய்யத்தானே போற.. அப்பதெரியும்" என்று நான் சொன்னதும் சரி டியர் என்றாள்.

"காலையில் கொடுத்தது பாக்கி இருக்கே.. அத தரக்கூடாதா" என்றபடி அவளை நெருங்கினேன். "ஏய் என்ன பக்கத்துல வாரே.. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான். சரி நம்ம குடும்ப விசயத்தபத்தி பேசுவோமா" என்றாள்.

உடனே நான், "என்பெயர் அருண். வயது 21 மாநிறம். 5 அடி 5 அங்குலம். அப்பா பெயர் ஆவுடையாப்பிள்ளை. அம்மா பெயர் பார்வதி. எனக்கு இரண்டு தம்பி ஒரு தங்கை. 2 தம்பிகளும் படிக்கிறாங்க. தங்கை படிக்கலை. அப்பா ஒரு அரிசி ஆலையில் வேலைப்பார்க்கிறார். வீட்டில் கொஞ்சம் கஷ்டம். அப்பா கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறார். நான் காலர்ஷிப்பில் படிக்கிறேன்" என்று நான் சொன்னதும் பிரியா கடகடவென சிரித்தாள்.

என்னப்பா சிரிக்கிற என்றதும் "இல்லீங்க ஸ்கூல்ல மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறமாதிரி நீங்க சொன்னதும் எனக்கு சிரிப்பு தாங்கலை" என்றபடி சிரிப்பை விட்டுவிட்டு நினைத்தபடி சிரித்துக் கொண்டிருந்தாள்.

அட போப்பா என்று நான் பொய்க்கோபம் ஆனதும் "சரி சரி டியர். என்னை பற்றி சொல்லணுமின்னா, வீட்டில் நானும் என்தம்பியும்தான். அப்பா பிசினஸ் கான்ட்ராக்டர். சொத்துபத்துன்னு தோட்டம்துரவுன்னு எக்கசக்கமா இருக்கு. அப்பா பெயர் மாணிக்கம்; அம்மா புஷ்பலதா" என்றாள்.

அப்படியே கொஞ்சம் பேசிக்கொண்டிருந்ததால் நேரம் போனதேதெரியவில்லை. அய்யயோ நேரமாயிருச்சே என்றபடி இருவரும் பஸ்ஏறி எங்கள் ஊருக்கு சென்றோம்.

இப்படியாக இரண்டுநாள்கள் கழிந்திருக்கும். ஒருநாள் நான் பிரியாவை பார்க்க சென்றேன். அவள் லேப்புக்கு சென்றிருந்ததும் அவளை தேடி அங்கு சென்றேன். பிரியா லேப்பில் பிராக்டிகல் செய்யாமல் சும்மா நின்றாள். என்ன என்றேன் அவளிடம். "அருண் நான் இன்னக்கி என்னோட கப்போர்ட் சாவி கொண்டுவரலை, மறந்துட்டேன். என்ன செய்யன்னு தெரியல.. சார் சத்தம்போட்டுட்டார்" என்று சொன்னாள். நான் உடனே என்னோட கப்போர்ட் சாவியை எடுத்துகொடுத்தேன்.

இதில் என்ன ஒற்றுமை என்றால், என்னோட டேபிளும் அவளோட டேபிளும் ஒண்ணுதான். அந்த டேபிளில் நாலு கப்போர்ட் இருக்கும். பர்ஸ்ட் இயர், செகண்ட் இயர், தேர்ட் இயர் மாணவர்களுக்கு ஆளுக்கொரு கப்போர்ட் கொடுத்திருப்பாங்க. அதில் நமக்கு கொடுத்த சாமான்கள் கண்ணாடிக்குடுவை, பியூரெட், பிப்பெட், அடுப்பு, பீங்கான் தட்டு, கோட் என்று வேதியியல் மாணவர்களுக்கு உண்டான சாமான்கள் இன்னும் நிறைய இருக்கும். எதாவது உடைந்துவிட்டாலோ அல்லது காணாமல் போனாலோ அவரவர் பொறுப்பு. ஆண்டு முடியும்போது எல்லாத்தையும் திருப்பிக்கொடுக்கணும். இல்லைன்னா ஃபைன் போட்டிருவாங்க.

அதனால் என்னோட சாவியை கொடுத்ததும் அவளுக்கு சந்தோசம் முகம் மலர்ந்தது.

நான் என்னோட வகுப்பறைக்கு வந்து பாடங்களை கவனிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரம் சென்றிருக்கும் லேப் அட்டெண்டர் எங்க வகுப்புக்கு வந்து பாடம் நடத்தி கொண்டிருந்த ஹச்ஓடி யிடம் வந்து காதில் குசுகுசுவென ஏதோ சொன்னதும் அவரோட முகம் கலவரமானது. உடனே ஹச்ஓடி அவசர அவசரமாக லேப்பை நோக்கி ஓடினார்.

நாங்கள் அனைவரும் சூழ்நிலையறிந்து அவருடைய பின்னால் ஓடினோம்.

அங்கே... அங்கே.. அப்போது என்னோட பிரியா மயக்கமுற்று கிடந்தாள். எல்லோரும் அவளை நினைவுக்கு கொண்டுவர போராடினோம். இதற்குள் அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டாங்க.

பிரியாவுக்கு மயக்கம் தெளிந்து கண்ணை திறக்க முயற்சித்தாள் அவளால் கண்திறக்க முடியவில்லை. வலியால் துடித்தாள்..

ஆம்புலன்ஸ் வந்து அவளை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தது. நானும் பின்னால் ஓடினேன்....

தொடரும்...

,

Post Comment

21 comments:

  1. கதை நன்றாக போகிறது.. பிரியா நல்ல கதா பத்திரம்

    ReplyDelete
  2. நான் ஆஜர்

    ReplyDelete
  3. கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க் அவுட் ஆகியிருக்கு :-))))

    ReplyDelete
  4. கெமிஸ்ட்ரி ஒர்க் ஆயிடுச்சுன்னு கேள்வி பட்டிருக்கேன். இங்கே கெமிஸ்ட்ரி லேப்புல வச்சு ஒர்க் ஆயிருக்கே.

    கதை நல்லா இருக்கு. தொடருங்க ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  5. ப்ரியாவுக்கு என்ன ஆச்சு? தொடருங்க.... தொடருங்க.... (it is going on like a movie love story....)

    ReplyDelete
  6. கதை காதல் களை கட்டுதேன்னு வாசித்தால்,சட்டென்று இப்படி ஒரு திருப்பம்.

    ReplyDelete
  7. கதையை அழகாக
    நகர்த்துகிறீர்கள்.தொடருங்கள்.

    ReplyDelete
  8. சீக்கிரம் அடுத்த பதிவை போட்டு விடுங்க முக்கியமான் இடத்தில் தொடரும் போட்டு விடீங்க....ஆவலுடன்..

    ReplyDelete
  9. //ஆம்புலன்ஸ் வந்து அவளை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தது. நானும் பின்னால் ஓடினேன்....//

    அடுத்து என்ன அடுத்து என்ன அடுத்து என்ன சீக்கிரம் சொல்லுங்கப்பு ரொம்ப காயப்போடாதீங்க

    ReplyDelete
  10. இப்போதான் 2 பகுதியும் படித்தேன்..அருமையாக எழுதுறீங்க...

    ReplyDelete
  11. அருமையான கதை.. இன்ரஸ்டிங்.. கன்டினியூ..

    ReplyDelete
  12. வாங்க செந்தில் @ பாராட்டுக்கு நன்றி
    வாங்க சுரேஷ் @ பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி
    வாங்க திரவியம் அய்யா @ பாராட்டுக்கு நன்றி
    வாங்க அமைதிச்சாரல் அக்கா @ பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  13. கதை சுவாரஸ்யமாக போய்க்கொண்டுள்ளது.முக்கியமான கட்டத்தில் தொடரும் போட்டு அசத்துகின்றீர்கள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  14. ஐயையோ என்ன ஆச்சு பிரியாவுக்கு.. ஸ்டார்ஜன் எனக்கு மட்டும் சீக்கிரம் மெயில் பண்ணுங்க.. தலை வெடிச்சுடும் போல இருக்கு..

    ReplyDelete
  15. கதை அழகான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது.
    தொடருங்கள் சேக்.

    ReplyDelete
  16. நண்பரே தொடர்ந்து படித்து வருகிறேன்,மெதுவாக அழகாக கொண்டு செல்கின்றிர்கள்.

    ReplyDelete
  17. அருமையான கதையை,, நல்ல சூப்பர் நடையில் ம்ம்ம் அசத்துங்க ஷேக்!

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்