Pages

Saturday, June 5, 2010

பதிவுலகம் செய்வது சரியா?.. தவறா?..

நேற்றுமுன்தினம் நான் எழுதிய "சத்தியமா நான்" என்ற கவிதை இடுகை வெளியிட்டிருந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த இடுகைக்கு மைனஸ் ஓட்டு விழுந்திருந்தது. பொதுவா நான் இந்த மைனஸ் ஓட்டுப்பற்றி கவலைகொள்வதில்லை. மைனஸ் ஓட்டுபோடுவது என்பது அவரவர் விருப்பம்தான். ஆனால் நண்பர் உடன்பிறப்பு தன்னோட பதிவில் ஜனரஞ்சக பதிவர் ஸ்டார்ஜன்னுக்கும் மைனஸ் ஓட்டு விழுந்திருக்கிறதே என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

நண்பர் உடன்பிறப்பின் இடுகை இதுதான்.

அதற்கு நொந்தக்குமாரன் என்பவர் கீழ்கண்டவாறு பின்னூட்டமிட்டிருந்தார். அதனை நீங்களே படியுங்கள்:


///நொந்தகுமாரன் said...

உடன்பிறப்பு,

நேற்று நர்சிம் பிரச்சனை குறித்து, பல பதிவுகளையும் படித்த பொழுது.. கலகம் அவர்களின் பின்னூட்டங்களில் ஓட்டளிக்க ஒரு வாய்ப்பு இருந்தது. பதிவின் கருத்தில் உடன்பட்டதால்...நான் வாக்களித்தேன். அதை வாக்களிக்கும் வாய்ப்பை கலகம் அவர்களே செய்திருக்கலாம். இதில் வினவின் டெக்னிக்கல் குழு தான் செய்தது என்பது உங்கள் கற்பனை.

பிறகு, நடுநிலை பதிவுக்கு மைனஸ் ஓட்டு என்கிறீர்களே... அந்த வாக்களித்தது நான் தான். அந்த "ஸ்டார்ஜன்" பதிவு ஊரில் சாதிய ஒடுக்குமுறை நடக்கும் பொழுது...இரு தரப்பினரும் அமைதியாக போக வேண்டும் என 'அமைதி விரும்பிகள்' வேண்டுகோள் விடுப்பார்கள் அல்லவா! அது மாதிரி இருந்தது அந்த பதிவு. அதனால் எதிர் வாக்களித்தேன்.

நர்சிம் என்ற பதிவரால் ஒரு பெண் பதிவர் கேவலமான முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறார். 'உடன்பிறப்பு'கள் எல்லாம் கமுக்கமாய் வேடிக்கைப் பார்க்கும் பொழுது... வினவு அதை தட்டிக்கேட்கிறது. அதையும் கூட ஆதரிக்கும் நேர்மை இல்லாமல், சித்து வேலைகள் என பதிவு போட முடிகிறது என்றால்.. இது எப்பேர்பட்ட கயவாளித்தனம்.

பின்குறிப்பு : இதை நீங்கள் வெளியிடவில்லை என்றால்.. உங்களுக்காக தனிப்பதிவு இட வேண்டியிருக்கும். வெளியிடுவீர்கள் தானே! உடன்பிறப்பு!

6:19 AM ///.


இதுதான் நான் எழுதிய கவிதை:

சத்தியமா நான்...

சத்தியம் இது சத்தியம்
முதல்நாள் வார்த்தை
மறுநாள் காணாமல்
போயிருந்தது குடிக்கப்
போகும்போது...

எதற்கு குடிக்கிறாய் என்று
கேட்டாலும் உன்னிடம்
ஆயிரம் காரணங்கள் உண்டு.
காலைமுதல் மாலைவரை
உழைக்கும்போது தெரியாத
மயக்கம் இரவு ஆனதும்
மயக்கம் வாந்தியுடன்..

நீவருவாய் உணவருந்த
என்று காத்திருக்கும்
குடும்ப அங்கத்தினரின்
பசிப் புலம்பல்கள் உனக்கு
கேட்க வாய்ப்பில்லை.

கடையேழு வள்ளல்களைப் போல‌
மயக்கம் தெளியும்முன்
வாரிவாரி வழங்கினாய்
தெளிந்தபின் அதனை
தேடுவது அந்தோ பரிதாபம்.

இருக்கும்போதே அனுபவிடா
ராஜா என்ற உன் எண்ணம்
தெரியாமல் நீ இல்லாமல்
போனதும் ஆற்ற முடியா
துயரத்தில் உன் மனைவியோ
விதவைக் கோலத்தில்..

இதில் எந்த இடத்தில் நான் நடுநிலைக் கருத்தை சொல்லிருக்கேன்?. இந்த கவிதைக்கும் அந்த பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?.

பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க சார்?...

,

Post Comment

40 comments:

  1. பி.ப. ஸ்டார்ஜன் வாழ்க...

    ReplyDelete
  2. கவிதை அருமை. கவிதை தள்ளாடவில்லை. புரியும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. :)))

    பிரபலமாயிட்டீங்க ஷேக்...

    ReplyDelete
  4. அண்ணன் ஸ்டார்ஜன் வாழ்க..

    (எதுக்கும் இப்பவே துண்டு போட்டு வச்சுக்கிறேன்.. அண்ணே உங்க வலைப்பூவின் தீவிர இரசிகன் நான். பல பின்னூட்டம் போட்டு இருக்கேன். தமிழ் மணத்தில் எப்போதும் + ஓட்டுதான் போடுவேன். தமிழிஷிலும் நிறைய போட்டு இருக்கேன். நம்மள ஞாபகமும் இருக்கட்டுமண்ணே..)

    ReplyDelete
  5. //இந்த கவிதைக்கும் அந்த பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?.//

    அதை அவர்தான் சொல்லனும் , ஒரு மைனஸ் ஓட்டுக்கு ஒரு பதிவா ....???நடத்துங்க....நடத்துங்க.....நல்லா இருங்க..

    ReplyDelete
  6. சத்தமாவே கேழுங்க ஸ்டார்ஜன் !

    ReplyDelete
  7. சார் விடுங்க.. இவங்களுக்கு வேற வேல இல்ல.

    ReplyDelete
  8. அனேகமா உங்களை பிரபலமாக்கி போட்டு தள்ள உள்நாட்டு சதி நடப்பதா..செஉதி கசிகிறது சார்..

    ( போங்க சார்.. மைனஸ் போட்டா என்ன ஆயிடும்.. உங்களுக்கு தோணினதை எழுதுங்க.. இன்னொரு மைனஸ் வந்தா பிளஸ் ஆயிடும்..)

    மைனஸ்..மைனஸ் சேர்ந்தா ப்ளஸ் நு படிச்ச ஞாபகம்..ஹி..ஹி

    ReplyDelete
  9. பதிவரே,

    அந்த இடுகையின் நோக்கத்தை நன்கு படிக்கவும். உங்கள் இடுகை - ஓட்டுக்கான ஒரு உதாரணமே அதாவது மைனஸ் ஓட்டுக்கள் தமிழ் மனத்தில் விழும் என்கிற ரீதியான உதாரணமே தவிர டெக்னிக்கலாக நீங்கள் போட்டீர்கள் என்று சொல்லவில்லை சொல்லவும் தேவையில்லை என நினைக்கிறேன்.

    இதற்கு ஒரு பதிவா? அதை அவரின் பதிவிலேயே கேட்டிருக்கலாமே? மேலும் தலைப்பை எப்படி பதிவுலகத்தின் மீது கேட்பதாக வைக்கமுடியும்? தனி நபர் கேள்விதானே? இதற்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள் .

    மீறி கேள்விகள் இருந்தால் நீங்கள் எப்படி ஷேக்காக இருந்து கொண்டு பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி : பதிவுக்கு ஓட்டுப் போடுகிறேகளோ அத்தகைய சுதந்திரம் என்று நினைத்துக்கொண்டு செல்வது தான் ஆரோக்கியமான அணுகுமுறை.

    ReplyDelete
  10. இருக்கும்போதே அனுபவிடா
    ராஜா என்ற உன் எண்ணம்
    தெரியாமல் நீ இல்லாமல்
    //

    இது ஸ்பெக்ட்ரம் பிரச்சனை என நினைத்து இந்த பதிவுக்கு மைனஸ் குத்தப்போறேன்..ஹி..ஹி..( நிசமாவே சார்.. கோவிச்சுக்காதீங்க..)

    ReplyDelete
  11. மறுமொழியை வெளியிடுவீர்கள் என நினைகிறேன்.

    ReplyDelete
  12. பிரப்ல பதிவர் ஸ்டார்ஜன்.......வாழ்க

    ReplyDelete
  13. வருத்தமாக இருக்கிறது ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  14. \நாஞ்சில் பிரதாப் said...
    பி.ப. ஸ்டார்ஜன் வாழ்க...\

    repeatu!

    ReplyDelete
  15. விடுங்க சார் பரவாயில்ல . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அடங்கொன்னியா... அவர் என்னை மாதிரி குடிகார ஆளுங்களுக்கு புத்தி சொல்லிருக்காரு, உங்களுக்கு புரியலேன்ன என்கிட்டே கேளுங்க ( என்ன கொஞ்சம் செலவாகும்)

    அப்புறம் நாஞ்சில் பிரதாப் சூப்பர்..

    ReplyDelete
  17. அண்ணே, தென்னை மரத்துலே தேளு கொட்டுனா, பனை மரத்துலே நெறி கட்டுமுண்ணு பழமொழி சொல்லுவாங்க தானே? அது தான் இது! வுடுங்கண்ணே! நாங்கல்லாம் இருக்கோமில்லே? :-)

    ReplyDelete
  18. பிரபல பதிவர் ஸ்டார்ஜன் வாழ்க :-))))

    ReplyDelete
  19. //
    மேலும் தலைப்பை எப்படி பதிவுலகத்தின் மீது கேட்பதாக வைக்கமுடியும்? //

    ஏன்னா , அவரும் பதிவுலகில் இருப்பதால்..

    @ஸ்டார்ஜன்

    சார்.. நீங்க லூஸ்ல விட்டுட்டு..அடுத்த பதிவ, ஸ்மார்ட்டா எழுதுங்க..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. //சார்.. நீங்க லூஸ்ல விட்டுட்டு..அடுத்த பதிவ, ஸ்மார்ட்டா எழுதுங்க..வாழ்த்துக்கள்.. //

    அதேதான் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  21. என்னத்த சொல்ல? பொதுவா நேரம் சரியில்லை.

    ( அதுக்காக ஏன் நீ வாட்சை பார்க்கிறே )

    ReplyDelete
  22. //சார்.. நீங்க லூஸ்ல விட்டுட்டு..அடுத்த பதிவ, ஸ்மார்ட்டா எழுதுங்க..வாழ்த்துக்கள்..//

    பட்டாபட்டி சொன்னதுபோல் மேலும் சிறப்பாய் அமைய வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  23. என்ன சார் நீங்க சின்ன கொழந்தை மாதிரி . நான் எழுத வந்ததே ஜூன் மாதம் . ஆயிரத்தில் ஒருவன் திரைபடதை ஆதரித்து எழுதினதுக்கு மைனஸ் வோட் விழுந்தது . 2 /3 ஆனா சத்தியமா அப்போ அந்த ஒரு வோட் மைனஸ் வோட் என்று தெரியாது .அப்புறம் இன்னொரு பதிவுக்கு 5 மைனஸ் வோட் . அரசியலில் இதெல்லாம் சகஜம் , சும்மா தட்டி விட்டுட்டு போயிட்டே இருங்க .

    ReplyDelete
  24. பிரதாப் @ வாழ்த்துகளுக்கு நன்றி பிரதாப்

    மதுரை சரவணன் @ வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் நன்றி மதுரை சரவணன்.

    வசந்த் @ வாழ்த்துகளுக்கு நன்றி

    ராகவன் அண்ணே @ அண்ணே நானும் உங்க[பதிவுக்கு ரசிகன். நம்மளையும் ஞாபகம் வச்சிக்கோங்க.. :))

    ReplyDelete
  25. ஜெய்லானி @ நன்றி ஜெய்லானி வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துகளுக்கும்

    ஹேமா @ நன்றி ஹேமா..

    எல்கே @ நன்றி எல்கே

    பட்டாபட்டி @ இந்த கருத்து காமெடிக்காகதானே.. எனக்கு தெரியும். நன்றி வருகைக்கும் கருத்துகளுக்கும்

    ReplyDelete
  26. ஸ்மார்ட் @ வாங்க ஸ்மார்ட்.. இந்த தலைப்பை வைப்பதற்கு பதிவுலகில் நிறைய பேர்கள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் நீங்களும் நானும் இருக்கிறோம். உங்களைமாதிரி ஆட்கள் பதில் சொல்லட்டும்தான் தலைப்பு அப்படி வைத்தேன். நொந்தகுமாரன் கமெண்ட்டுக்கு நீங்க பதில் சொல்றீங்க பார்த்தீங்களா..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  27. பேநாமூடி @ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    அத்திரி @ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    சரவணக்குமார் @ நன்றி நண்பா.

    நாஸியா @ வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete
  28. சசிக்குமார் @ நன்றி சகோதரா.

    செந்தில் @ நன்றி ஆதரவுக்கு.

    சேட்டைக்காரன் @ நன்றி ஆதரவுக்கு

    அமைதிச்சாரல் அக்கா @ வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  29. பட்டாபட்டி @ நன்றி ஆதரவுக்கும் வருகைக்கும்

    ஸாதிகா அக்கா @ நன்றி ஆதரவுக்கு

    சரவணக்குமார் @ நன்றி ஆதரவுக்கு

    மின்மினி @ நன்றி ஆத‌ரவுக்கும் வாழ்த்துக்கும்

    ReplyDelete
  30. அக்பர் @ ரொம்ப நன்றி

    மதார் @ மதார், நான் மைனஸ் ஓட்டுவிழுந்ததுக்காக பதிவுபோடவில்லை. அவர் சொன்ன காரணத்துக்காகதான் இந்த பதிவு வெளியிட்டேன். மற்றபடி வேறொன்றுமில்லை மதார்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  31. //சார்.. நீங்க லூஸ்ல விட்டுட்டு..அடுத்த பதிவ, ஸ்மார்ட்டா எழுதுங்க..வாழ்த்துக்கள்..//

    ம்ம்ம்

    ReplyDelete
  32. என்ன பிரச்சனைன்னு தெரியல,ஏன் சமப்ந்த படுகிறாஙக்ன்னும் தெரியல//

    நீங்க பாட்டு எழுதுங்க, பின்னூட்டத்த போட்டாச்சுல

    அடுத்து

    ஒரு பயங்கரமான பேய் கத எழுதனுமாக்கும் ஆமா

    ReplyDelete
  33. சரியோ தப்போ நீங்களும் பிரபல பதிவரா ஆயிட்டீங்க.

    ReplyDelete
  34. ப்ரின்ஸ் @ நன்றி வாழ்த்துக்கும் வருகைக்கும்

    ஜலீலா @ ரொம்ப நன்றி ஜலீலா.. உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி.. உங்களைபோன்றோர்களின் வாழ்த்து என்னை மேலும் சிறப்பாக்குகிறது.

    ஷாகுல் @ நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  35. விட்டுத்தள்ளுங்க பாஸ், ஏற்கனவே பலர் அவர்களை சுட்டுத்தள்ளிவிட்டார்கள்

    ReplyDelete
  36. அடடா எல்லாரும் சொல்லியாசி நானும் அதே ரிபீட்டூஊஊஊஊஊஊஊ

    ReplyDelete
  37. வாங்க அண்ணே @ நன்றி ஆதரவுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  38. வாங்க மலிக்கா @ ரொம்ப நன்றி அன்புக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்