Pages

Friday, June 18, 2010

மீனு வாங்கலியோ மீனு...

மீனு வாங்கலியோ மீன்னு மீனே.. யம்மோய் மீன் வாங்கிலியோ.. பாய்வீட்டம்மா, நல்ல நல்ல மீனெலாம் இருக்கு.. உனக்குன்னு பந்துசா கொண்டுவந்திருகேன்லா..

ஏலா சாச்சி, இந்தா முதல்ல.. இந்த நீசுத்தண்ணியக்குடி.. அப்புறம் மீனு விக்கலாம். என்ன மீனெலாம் வச்சிருக்கே??..

நெத்திலி, ஆரா, கெண்டை, கெழுத்தி, இப்படி நிறைய இருக்குமோய்..

விலையெல்லாம் ஆனை வில குதிர வில சொல்லுவியேலா..

என்ன சாச்சி.. இப்பூடி கேட்டுட்டே..விலய பத்தி உனக்கென்ன கவல?.. அதான் உன்வீட்டுக்காரவுக வெளிநாட்டுல்ல இருக்காவ.. நல்லா ஆக்கிபொங்கி சாப்பிடுலா.. கஞ்சத்தனமா இருக்காதலா..

ஆமா நீபாட்டுக்கு சொல்லிருவ..அவுகபடுத கஷ்டம் உனக்கெங்க தெரியப்போவுது?..

ஆமா ஒன்மாமியாரக்காணோம் எங்கப்போனாக சாச்சி..

அவுகளும் மாமாவும் சொந்தக்கார வீட்டுக் கலியாணத்துக்கு போயிருக்காவ..

அப்டியா.. ஆமா ஒன்மாமனார் மாமியார்கூடவா கூட்டுகுடித்தனமிருக்கே.. தனிக்குடித்தனம் போவலியா..

எலா சாச்சி.. என்ன இப்படி குண்டத்தூக்கிப் போடுற.. மீன்னு விக்க வந்தோமா..போனோமான்னு இல்லாம என்ன பேச்சி இது செத்த பேச்சி.. அத நான் பார்த்துக்கிறேன். சரி சரி அந்த கெழுத்தில ஒரு கிலோ சட்டுபுட்டுன்னு போடுட்டு கிளம்பு.. பேச்சப்பாரு பேச்ச..

நான் என்ன சொல்லிப்புட்டேன்ன்னு இப்படி தய்யதக்கான்னு குதிக்கிற.. ஊருல உலகத்துல நடக்காததையா சொல்லிப்புட்டேன்.. புதுசா கல்யாணமாயிருக்கே., எதோ சொல்லணுமின்னு தோணிச்சி.. வாரேன் ஆத்தா..

ரொம்பத்தான் சலிச்சிக்கிற.. போ..போ.. மீன்னு விக்கிற வழியப்பாரு..

மீனு வாங்கலியோ மீன்னு மீனு..

,

Post Comment

46 comments:

  1. ரொம்ப சின்ன கதையா இருக்கே குரு... ஆனா நல்லாருக்கு...

    ReplyDelete
  2. இப்படித்தான் குடும்பத்தில் குழப்பம் வருதா?

    ReplyDelete
  3. நான் சுத்த சைவம்!

    ReplyDelete
  4. க‌தை ந‌ல்லா இருக்கு ஸ்டார்ஜ‌ன்..

    ReplyDelete
  5. வந்தா வந்த வேலையை மட்டும் பாத்திட்டுப் போகணும்.ஆமா....!

    ReplyDelete
  6. இது என்ன நண்பரே வாசித்துக்கொண்டே இருக்கும்போது சண்டை . நல்ல இருந்தது . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. மீனோட சேத்து வம்பும் விலைக்கு வருதா :-)))

    ReplyDelete
  8. உரைநடை,மொழிவழக்கு அற்புதம்.
    குடும்பத்தில் குழப்பமே இவர்களால்தான் வருகிறது.
    அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வட்டார வழக்கில் பின்னிபெடலெடுத்திருக்கிறீர்கள் ஸ்டார்ஜன்.

    கெழுத்தி மீன் டேஸ்ட் நல்லாயிருக்கும் ஹூம்... அதெல்லாம் ஊருல.

    மிக அருமையான கதை.

    ReplyDelete
  10. வட்டார வழக்கு மிக அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள் நண்பா.

    ReplyDelete
  11. ஆஹா.. விலங்கம் இப்பிடிதான் வருமோ ?..!!

    ReplyDelete
  12. அண்ணாச்சி கதை நல்லாயிருக்கு

    ReplyDelete
  13. நமக்கு வந்தவ ஒழுங்கா இருந்தாலும், வர போற இது போல ஆளுங்களால தான் குடும்பத்தில குழப்பமே வருது நண்பரே

    ReplyDelete
  14. நல்லாயிருக்குங்க கதை.. விக்கிறவங்களும் வாங்குறவங்களுக்கும் சின்ன உறவு இருக்கணும்.. அதுதான் நல்லது..

    ReplyDelete
  15. கதை நச்சுன்னு இருக்கு.

    ReplyDelete
  16. சகோ.ஸ்டார்ஜன் நானும் மீன் காரரை வைத்து ஒரு கதை எழுதி இருக்கிறேன்,எண்ண ஓட்டம் ஒரு போல் இருக்கிறது.

    ReplyDelete
  17. மீன் விக்க வந்தவ "நல்ல புத்தி" சொல்லிட்டு போய்ட்டாளோ?....

    ஸ்டார்ஜன் சார், அருமை!

    ReplyDelete
  18. நல்ல கதையா இருக்கே?

    ஏனுங்க எந்த வட்டார வழக்குத்தமிழ் இது?

    ReplyDelete
  19. சிறிய கதையாக இருந்தாலும்,சொல்ல வந்ததை பிறர் அறியும் வண்ணம் கூறியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. ஆகா மீன் கொழம்பு வாசம் தூக்குதே.
    கதையச்சொன்னேன்..

    ReplyDelete
  21. நல்லவேலை மருமக சுதாரிச்சுகிட்டா!!

    ReplyDelete
  22. வாங்க சிஷ்யா @ நன்றி பாராட்டுக்கு.. கதை சின்னதுதான். அடுத்து தொடர்கதை.

    ReplyDelete
  23. வாங்க தமிழ்வெங்கட் @ ஆமா அப்படித்தான்னு நினைக்கிறேன், நன்றி பாராட்டுக்கு..

    ReplyDelete
  24. வாங்க திரவியம் அய்யா @ நீங்க சைவமா.. அப்ப நல்லதுதான். நன்றி பாராட்டுக்கு..

    ReplyDelete
  25. வாங்க டாக்டர் தல சுரேஷ் @ மீன் மீனுதான். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  26. வாங்க ஸ்டீபன் @ ந்னறி வருகைக்கும் பாராட்டுக்கும்

    ReplyDelete
  27. வாங்க ஹேமா @ நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  28. ஹலோ நல்லா இறுக்கிங்களா?

    ம் இறுக்கேன் நீ நல்லா இறுக்கியா?

    ம் என்னா காலையிலேயே ஃபோன் பன்னிறுக்கீங்க?

    ஒன்னும் இல்ல வாசல்ல மீன் வந்தால் இனிமே நீ போய் வாங்காதே அம்மாவை வாங்க சொல்லு

    ஏங்க?

    கடைசி வரைக்கும் கூட்டுகுடும்பமா இருக்கலானுதான்!!!

    ReplyDelete
  29. வாங்க பனித்துளி சங்கர் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  30. வாங்க அமைதிச்சாரல் அக்கா @ அட ஆமா.. சரியாச்சொன்னீங்க.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  31. வாங்க அபுல்பசர் @ நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நன்றி

    ReplyDelete
  32. வாங்க அக்பர் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  33. வாங்க சரவணக்குமார் @ நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நன்றி

    ReplyDelete
  34. வாங்க ஜெய்லானி @ வில்லங்கம் விலைக்கொடுத்து வாங்கவா.. பின்னாடியே வந்துக்கிட்டு இருக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  35. வாங்க அத்திரி @ நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்

    ReplyDelete
  36. வாங்க சசிக்குமார் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  37. வாங்க பாலாசி @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  38. வாங்க ஆசியாக்கா @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. உங்க கதையை படிக்க ஆவலாக உள்ளேன்.. சீக்கிரம் வெளியிடுங்கக்கா.

    ReplyDelete
  39. வாங்க அப்துல்காதர் சார் @ நல்லாருக்கீங்களா.. ஆமா.. வந்தவ நல்ல புத்திதான் சொல்லிருக்கா.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  40. வாங்க குணா @ இது திருநெல்வேலி பாஷைங்கோ.. நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  41. வாங்க இளம் தூயவன் @ நன்றி நன்றி.. முதல்வருகைக்கும் முத்தான கருத்துக்கும்.. நன்றிகள் பாராட்டுக்கு..

    ReplyDelete
  42. வாங்க மலிக்கா @ மீன் வாசம் நல்லாருக்கா.. ரொம்ப நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  43. வாங்க ஹூசைனம்மா @ நல்லவேளை மருமக சுதாரிச்சிக்கிட்டா.. நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  44. வாங்க ராஜவம்சம் @ நன்றி நன்றி பாராட்டுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.. :)))

    ReplyDelete
  45. புருசன் வெளிநாட்டில் இருக்கும்பொழுது எங்கே தனிக்குடித்தனம், அதான் சூடு ஆகிட்டாய்ங்க போல.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்