Pages

Monday, June 21, 2010

வரும்வரை காத்திரு - தொடர்கதை

"ஏய்!! பிரியா பிரியா.. என்னாச்சி இவ்வளவு நேரம்.. சீக்கிரம் கிளம்பு., நல்லநேரம் முடியுறதுக்குள்ள அங்கப்போகணும்" என்றேன் என்மனைவியிடம். "என்னதுரை சீக்கிரம் கிளம்பியாச்சோ. உங்களுக்கென்ன ஆம்பளைங்க சட்டுபுட்டுன்னு கிளம்பிருவீங்க.. எங்களுக்கு எல்லாவேலையையும் முடிச்சிட்டு கிளம்புறதுக்குள்ள ஒருவழி ஆயிரும்" என்றாள் பிரியா. "சரிசரி ரொம்ப சலிச்சிக்கிறாதே., சீக்கிரம் கிளம்பு நேரமாயிருச்சி"..என்றேன்.

"இங்க வந்து பாருங்க ராஜா பண்ற வேலைய‌.. அப்பாவுக்கு தப்பாம பொறந்திருக்கான்.. டேய் சும்மாயிரன்டா" என்று என்மகன் ராஜாவை அதட்டினாள் பிரியா. "அடடா.., என்ன இது உன்னோட"... என்று சொல்லியவாறே அறைக்குள் நுழைந்த நான் திக்கித்து நின்றேன். அங்கே ராஜா, பிரியாவை சேலைகட்ட விடாமல் சேலையை பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான். "ஆஹா.. என்ன அழகு!! என்ன அழகு!!., இப்படி ஒரு தரிசனம் காலையிலே கிடைக்க கொடுத்துவச்சிருக்கணும்" என்றேன். உடனே பிரியா, "அய்ய..மச்சானுக்கு ஆசையப்பாரு..",என்றாள். "அய்யய்யோ.. சே சே., நான் இயற்கைக்காட்சிய சொன்னேன்.", என்றேன். "இயற்கைக்காட்சியை ரசிக்கிறஆளப்பாரு.. நீங்க எத ரசிச்சிருப்பீங்கன்னு தெரியும்.. குழந்தைய தூக்கிட்டு வெளியப்போங்க.. நான் டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு வாரேன். அய்ய.. ஜொள்ளு ரொம்பத்தான் வடியுது.. கண்ணாடியில போயி துடைங்க.." என்றாள் பிரியா.

கையில் வைத்திருந்த ராஜா கீழே இறங்கிவிட்டான். அப்ப‌டியா.. என்முக‌த்துல‌ ஜொள்ளா வ‌டியுது?.. என்ற‌ப‌டி க‌ண்ணாடியில் பார்த்தேன். பார்த்த என‌க்கு ரொம்ப‌ அதிர்ச்சியாக‌ இருந்த‌து. ஆமா.. என்முகமும் மனதின் நினைவுகளும் கண்ணாடியில் பிரதிபலித்தது.

அப்போது நான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அந்த வருசம் புது அட்மிசன் நடந்துகொண்டிருந்தது. "டேய் அருண்! நியூ அட்மிசனுக்கு நிறையபேர் கூட்டமாக வந்திருக்காங்க. பிகர்ஸ் நிறைய இருக்கும். வாடா அப்படியே.. நமக்கானது எதாவது இருக்கான்னு ஒரு அட்டடென்ஸ் போட்டுவந்திருவோம்" என்று அழைத்தார்கள். "டேய் போங்கடா., உங்களுக்கு வேறவேலையே இல்லையா.." என்றபடி சென்றேன்.

இது வழக்கமாக வருசாவருசம் நிறையபேர் அட்மிசனுக்கு வருவதும்போவதுமாக இருப்பார்கள். நியூ அட்மிசன்ன்னா கேட்கவா வேண்டும். கொண்ட்டாம்தான். எனக்கும் போகணுமென்ற ஆசைதான். ஆனால் மனது கேட்கவில்லை. கிளாஸ்ரூமை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். அப்போது, ஏதோ சிந்தனையில் வந்துகொண்டிருந்த எனக்கு, வராந்தா திருப்பத்தில் வந்த ஆளை கவனிக்கவில்லை. உடம்பு ஒரு குலுக்கலுடன் அதிர்ந்ததும்தான் தெரிந்தது யார்மேலோ நேருக்குநேராக மோதிவிட்டேன் என்று. நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்துவிட்டேன். மோதிய ஆளும் கீழே விழுந்துவிட்டார். நான் மோதியது யாராக இருக்கும் என்று பார்த்த எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. ஒரு 18 வயது மதிக்கத்தக்க பெண்மேல்தான் நான் மோதியது.

எழுந்த எனக்கு சிறிதுநேரம் நினைவுகள் எங்கோ சென்றுவிட்டது. வாவ்.. வாவ்.. என்னே ஒரு அழகு!!.. தங்கசிலைப்போல தளதளன்னு தக்காளிபோல இருந்தாள். என்கண்கள், கால்முதல் தலைவரை அவள்மேனியை ஆராய ஆரம்பித்துவிட்டது. எங்கள் இருவரின் கண்களும் பேசிக்கொள்ள ஆரம்பித்தன. சார் சார்., என்ற தேனினுமினிய குரலைக்கேட்டு சொக்கி நின்றேன். தோளை தொட்டு உசுப்பினாள்; ஓஹோ அழைத்தது அவள்தானோ..

"சாரிங்க, ஏதோஒரு நினைப்புல வந்தநான் தெரியாம மோதிட்டேன்; சாரி சாரி.." என்றேன். "இல்லைங்க நாந்தான் சாரி கேட்கணும். நானும் ஏதோ நினைப்புல வந்து மோதிட்டேன்" என்றாள் அவள். "இப்படி இரண்டுபேரும் எவ்வளவு நேரந்தான் சாரி கேட்டுக்கிட்டே இருப்பது; பரவாயில்லை விடுங்க.. என்ன.. வலிதான் பிச்சிடுச்சி.. எம்மாடி எவ்வளவு பெரிய மோதல்.," என்றபடி கீழே குனிந்து என்புத்தகங்களை எடுக்க கீழே குனிந்தேன். அப்போது அவளும் குனிய என்தலையும் அவள்தலையும் டம் என்ற சத்தத்துடன் பேசிக்கொண்டன. அய்யோ..வலிக்குதே.. இரண்டுபேரும் முனகினோம்.

"என்பெயர் அருண்., உங்க பேரென்ன?.." என்றேன் அவளிடம். "என்பெயர் பிரியா.. ரொம்ப சுவாரசியமா இருந்ததுல்ல நம்ம சந்திப்பு.." என்றாள். "ஆமா இப்படி நடக்குமுன்னு நான் நினைக்கல.. ஆமா உங்களை இதற்குமுன்னாடி இங்க பார்த்ததில்லையே.. நீங்க எப்படி இங்க?.." என்றேன். "நா புதுசா பர்ஸ்ட்இயர் சேர்ந்திருக்கிறேன்" என்றாள் அவள். "எந்த டிப்பார்ட்மென்ட் நீங்க.." என்றதுக்கு "நான் கெமிஸ்ட்ரி" என்றாள். "சரியாப்போச்சி.. நானும் அதே டிப்பார்ட்மென்ட் தேர்ட்இயர், சரி மீண்டும் சந்திப்போம்" என்று அவளிடமிருந்து விடைபெற்றாலும் அவளே என் இதயத்தில் குடியேறியிருந்தாள். போகும்போது அவள் என்னை வெட்கப்பட்டுக்கொண்டு திரும்பித்திரும்பி பார்த்தபடி சென்று கொண்டிருந்தாள்.

சே! என்ன ஒரு அழகு..இப்போது அவள் எப்படி இருப்பாள்?.. என்ற நினைப்பு வகுப்பறையில் நடந்த பாடத்தை கவனிக்கவிடாமல் துரத்திக்கொண்டே இருந்தது.

வீட்டிற்கு வந்தபின்னும் அவளுடைய முகம் வந்துவந்துபோனது. எங்கே மறுபடியும் பார்ப்போமா என்று மனம் ஏங்கியது. பின்னர் கல்லூரியில் இரண்டுநாள்கள் அவளை பார்க்கவில்லை. அன்றுதான் முதன்முதலாக கவிதை எழுத ஆரம்பித்தேன். அவளே என் எழுத்தில் ஆக்கிரமித்திருந்தாள். இப்படியாக அவளை காணாது ஒருவாரம் போயிருந்தது. என்றாவது சந்திப்போம் என்ற நினைப்புமட்டும் மாறவேஇல்லை.

வழக்கம்போல கல்லூரிக்கு பஸ்ஏற பஸ்நிலையத்தில் காத்திருந்தேன். டேய் மச்சான்.. என்னடா படியில் நிக்காம மேலேஏறி போற..என்ற என்நண்பனுக்காக படியில் நின்றேன். பஸ் சிறிதுதூரம் சென்றிருக்கும். பஸ்ஸை நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க.. என்றபடி பஸ்ஸின் பின்னால் ஒருவர் ஓடிவருவது தெரிந்தது. உடனே டிரைவரிடம் பஸ்ஸை நிறுத்தச் சொல்லி குரல்கொடுத்தேன். டிரைவரும் பஸ்ஸை ஸ்லோ பண்ணினார். ஓடிவருபவர் அருகில் வந்த‌தும் பார்த்தால் அட நம்ம பிரியா.. ஓ..பிரியா.. கைகொடுத்தேன். அவள் ஜம்ப் பண்ணி தொத்தினாள். நான் கைகொடுத்து தூக்கியதும் அவள் என்நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். "என்ன பிரியா ஒருவாரமாக ஆளேக்காணோம்.. என்னாச்சி.," என்றேன் அவளிடம்.


தொடரும்..

*********************

அன்புள்ள நண்பர்களே!!

இன்று தந்தையர் தினம். அனைவருக்கும் என்னுடைய இனிய தந்தையர்தின வாழ்த்துக்கள்.

இந்த கதையின்மூலம் தொடர்கதை எழுத ஆரம்பித்துள்ளேன். இதன் தொடர்ச்சியை இனிவரும் நாட்களில் இதே தலைப்பில் எழுதுகிறேன்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

28 comments:

  1. நல்ல ஆரம்பம் .. தொடருங்கள் ...

    ReplyDelete
  2. ஆஹா என்ன நண்பரே
    எதிர்பார்ப்பான நேரத்தில் போய் தொடரும் என்று சொல்லிட்டீங்களே . நாங்களும் அடுத்தப் பதிவுக்கு பஸ்ஸை நிறுத்தச் சொல்லி குரல் கொடுப்போம்ல .
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. நல்லா ஆரம்பிச்சு இருக்கீங்க... தொடர்ந்து அசத்துங்க....

    ReplyDelete
  4. நல்ல துவக்கம் .. அசத்துங்க

    ReplyDelete
  5. தம்பி கலக்கல்.

    எழுத்து மின்னுகிறது.......இது தொடர நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அருமை..ஸ்டார்ஜன் வலையோசை கலகலன்னு பாட்டு ஒண்ணும் போடலையே,அந்த சிட்டுவேஷனுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டீங்க..

    ReplyDelete
  7. சொந்த‌ க‌தையா ஸ்டார்ஜ‌ன்.... தொட‌ருங்க‌...

    ReplyDelete
  8. நல்ல ஆரம்பமாக உள்ளது நண்பரே அடுத்த பதிவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ஆஹா தொடர்கதையா ஆரம்பமே அசத்தல்.. தொடருங்க.. உளமார்ந்த தந்தையர்தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. தொடர்கதையை தொடர்ந்து படிக்கணும் என்று முடிவு பண்ணி, தொடர தொடங்கிவிட்டேன் உங்களை !

    பிரியா என்று ஹீரோயின் பெயரை இப்ப குறிப்பிடாமல் இருந்து இருந்தால் எதிர்பார்ப்பு, இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்திருக்கும் என்பது என் அபிப்பிராயம்.:) valththukal....

    ReplyDelete
  11. ஆரம்பமே அமர்களமாக உள்ளது தொடருங்கள்.

    ReplyDelete
  12. கதை நலலாயிருக்கு சார்.. தொடருங்கள்,,,

    ReplyDelete
  13. நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்..

    தொடருங்கள்.

    ReplyDelete
  14. திருமதி ஸ்டார்ஜன் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு . கொஞ்சம் கவனிங்கப்பா இவரை..:))

    ReplyDelete
  15. ஆரம்பமே அமர்க்களம். தொடர்ந்து அசத்துங்கள்.

    ReplyDelete
  16. நல்ல கதையொன்று ஆரம்பம்.
    அடுத்த பகுதிக்காகக் காத்திருப்புத் தொடர்கிறது ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  17. கதை நன்றாக உள்ளது.., தொடருங்கள்.

    ReplyDelete
  18. எடுத்ததும் வண்டி டாப் கியரில் போகுது. இதே வேகத்தில் தொடருங்கள் சேக்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. வரும் வரை காத்திரு.. அருமையான, அசத்தலான ஆரம்பம். தொடருங்கோ..
    ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு தங்களின் பதிவினைப் படிக்கையில் தெரிகிறது. கதையுடன் ஒன்றித்து விட்டேனா தெரியவில்லை.
    சொந்த அனுபவமோ:))))))

    ReplyDelete
  20. வாங்க செந்தில் @ வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  21. வாங்க பனித்துளி சங்கர் @ ரொம்ப ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பாருங்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ந‌ன்றி

    ReplyDelete
  22. வாங்க சித்ரா @ வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  23. வாங்க கார்த்திக் எல்கே @ வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  24. வாங்க கண்ணன் அண்ணே @ நலமா.. உங்கள் ஊக்குவிப்பு என்னை தொடரவைக்கிறது. மிக்க நன்றி.. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  25. வாங்க ஆசியாக்கா @ நான் அந்தபாட்டு சேர்க்கலாம்ன்னு இருந்தேன்..ரொம்ப நன்றி பாராட்டுக்கு.. உங்களைப்போன்றோரின் ஊக்குவிப்பு என்னை தொடர்ந்து இயங்கவைக்கிறது.

    ReplyDelete
  26. வாங்க ஸ்டீபன் @ நன்றி நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்.. இது என்னோட சொந்த அனுபவமெல்லாம் கிடையாதுங்க.,. இது கற்பனைக் கதை.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  27. அருமையான கதை ஸ்டார்ஜன். ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கு.. வாழ்த்துகள் தொடருங்கள்.

    ReplyDelete
  28. ஆரம்பமே அசத்தல். தொடருங்கள்.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்