Pages

Sunday, July 11, 2010

வாழ்வில் முன்னேற ஆசை...


மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்ய அல்லும்பகலும் பாடுபட்டு உழைத்து பொருளாதார முன்னேற்றம் கொண்டுவருகிறான். இதனால் அவனும் அவன் குடும்பமும் கவலை இல்லாமல் இருக்கமுடிகிறது. இதன்மூலம் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்கிறது. ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர் இன்று ஒரு நல்லநிலையில் இருப்பதை கண்கூடாக காண்கிறோம். எப்படி இது சாத்தியமானது என்று பார்த்தால் உழைப்பு தான் காரணமாக இருக்கமுடியும்.

ஒருவன் முன்னேறுவதற்கு பல காரணங்கள் உண்டு. முதலில் அவனுக்கு தன்னம்பிக்கை வேண்டும். உழைப்பு, பணமுதலீடு, தொழில்பக்தி, தகவல்தொடர்பு திறமை (கம்யூனிகேசன் ஸ்கில்), நேர்மை, வாய்ப்பு இதெல்லாம் முக்கிய காரணங்களாக இருக்கிறது. ஒரு நிறுவனமோ அல்லது ஒரு தொழில் தொடங்குவதற்கு இந்த காரணிகள் இன்றியமையாததாகிறது.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை தான் எல்லாவற்றிக்கும் முக்கியமாகும். ஒருவன் ஒரு காரியத்தை செய்யும்முன் அவனுக்கு தன்னம்பிக்கை தான் பாதிபலமாகும். எந்த இக்கட்டான சூழ்நிலையானலும் தன்னம்பிக்கை மட்டும் இழக்ககூடாது. நினைத்த காரியத்தை முடித்துவிட வேண்டும். நம்மால் இதை செய்யமுடியாதே; நம்மால் முடியுமா என்று யோசித்துக்கொண்டிருந்தால் காலம்பூராவும் யோசித்துக் கொண்டேதான் இருக்கவேண்டும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

உழைப்பு

ஒருவன் முன்னேற வேண்டுமென்றால் அவனிடம் நல்ல உழைப்பு வேண்டும். எந்தமாதிரியான சூழ்நிலையை சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கடின உழைப்பே அவனை முன்னேற வைத்துவிடும். உழைப்பின் அருமையை எறும்பிடமிருந்து கற்றுக்கொள் மானிடா என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார்.

பண முதலீடு

தொழில் தொடங்குவதற்கோ நிறுவனம் தொடங்குவதற்கோ முதலீடு அவசியம் தேவை. இது இல்லையெனில் எதுவும் நடக்காது.

தொழில்பக்தி

எந்த தொழிலோ அல்லது நிறுவனமோ அங்கு வேலை செய்யப்படும் தொழிலுக்கு மரியாதை கொடுக்கவேண்டும். தொழிலில் ஒரு பயபக்தி இருக்கவேண்டும். சும்மா ஏனோதானோ வென்று இருந்தால் தலையில் துண்டுபோட்டுட்டு செல்லவேண்டியதுதான். தொழில்பக்தி ஒருவனை ஒழுக்கமாக வைத்திருக்கும். எந்த ஒரு கெட்ட பழக்கத்தையும் பழகவிடாது. பண்பாளனாக மாற்றிவிடும்.

தகவல் தொடர்பு திறமை (கம்யூனிகேசன் ஸ்கில்)

இதுவும் முக்கியமான ஒன்று. நாம் தயாரித்த பொருள்களை விற்க வேண்டும். அதற்கு நல்லா பேசத் தெரிந்திருக்கவேண்டும். தப்போதவறோ ஒரு வாடிக்கையாளரிடம் நம்முடைய பொருள்களை விற்கத் தெரிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்களை தன்னுடைய பேச்சித்திறமையால் அவர்களாக மனம்வந்து விரும்பி வாங்கி செல்லவேண்டும். முகம்பார்த்து பேசும்போது அவர்களுக்கு நம்மேல் ஒரு அளவுகடந்த நம்பிக்கை ஏற்பட்டுவிடும். ஒரு பழமொழி சொல்வாங்க. ஆட்டை மாடாக்க தெரிந்திருக்க வேண்டும். கழுதையை குதிரையாக்க தெரிந்திருக்க வேண்டும். பேச்சுக்கலைதான் முன்னேற வழி அமைத்துக் கொடுக்கும்.

நேர்மை

இதுவும் ரொம்ப முக்கியமான ஒன்று. நேர்மை தொழிலில் சிறந்து விளங்க வழி செய்யும். தொழிலில் ஏமாற்றுவேலைகள் இல்லாமல் இருக்குமானால் அது காலாகாலத்துக்கும் நீடித்து நிற்கும். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் தொழிலோ வியாபாரமோ செய்யும் போது அது பல்கி பெருகிவிடும்.

வாய்ப்பு

எல்லாம் இருந்து வாய்ப்பு அமையவில்லையெனில் நம்முடைய முயற்சிகள் வீணாகி போய்விடும். இன்று நாம் அனைவரும் ஒரு நல்ல வாய்ப்புக்காத்தான் காத்திருக்கிறோம். எத்தனை பேர் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நடையாய் நடக்கும்போது இப்போ கிடைத்திடாதா அப்போ கிடைத்திடாதா என்று ஏக்கங்கள் வாட்டி எடுக்கின்றன. வேலை கிடைப்பது அரியது. நல்ல வாய்ப்புகள் நம்கதவை தட்டும்போது கொட்டாவிவிட்டு தூங்கினால் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வெள்ளித்திரை திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு வசனம் பேசுவார். ரொம்ப அருமையானது; யதார்த்தமானது. எனக்குத் தெரிஞ்சி உலகத்துல இரண்டே பேர்தான் உண்டு. வாய்ப்புக் கிடைத்தவன், வாய்ப்பு கிடைக்காதவன். வாய்ப்பு கிடைத்தவன் முன்னேறி செல்கிறான். வாய்ப்பு கிடைக்காதவன் வாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறான்.

வாய்ப்பு சில நேரங்களில் கிடைக்கும். அதை நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று பழமொழி உண்டு. வாய்ப்பு அரிதில் கிடைத்துவிடாது.

ஒரு சிலருக்கு நல்ல வாய்ப்புகள் தானாக அமைவதுண்டு. எனக்கு தெரிந்த இரண்டு பேருக்கு நல்ல வாய்ப்புகள் அமைந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் இப்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரில் வேலை கிடைப்பதே கஷ்டம். அதிலும் வெளிநாட்டில் என்பது அபூர்வம். அப்படிக் கிடைத்த நல்ல வாய்ப்பை தவறவிட்டால் நமக்குநாமே துரோகம் செய்வதுபோலாகும்.

என்னுடைய நண்பர் அவருக்கு தெரிந்த ஒருவரை ஊரிலிருந்து வேலைக்காக கூட்டிவந்தார். வந்தவருக்கு வேலை அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. சரியென்று நண்பரே அவருக்கு நன்றாக வேலை செய்ய சொல்லிக்கொடுத்தார். அவருக்கு எவ்வளவு சொல்லிக் கொடுத்தும் சரியாக மண்டையில் ஏறவில்லை. சரி இதுதான் சரியில்லை. வேறு வேலையில் விட்டாலாவது பிழைத்துக் கொள்வார் என்று பார்த்தால் சமார்த்தியம் இல்லை. இதுவும் செட்டாகவில்லை.

பின்னர் நண்பர் வேறொரு கடையில் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்த்துவிட்டார். அங்காவது சமார்த்தியத்தை வைத்து பிழைத்துக் கொள்வார் என்றுபார்த்தால் அவரால் முடியவில்லை. அவர் இங்குவந்த ஒண்ணரை வருசத்துக்குள்ளாலே நாட்டுக்கு சென்றுவிட்டார்.

இன்னொரு நண்பர் தன்னுடைய சித்தி மகனை தன்னுடன் பணிபுரிய ஊரிலிருந்து கூட்டிவந்தார். வந்த ஒரு மாதத்துலே ஊருக்கு சென்றுவிட்டார். நண்பருக்கு பலத்த நஷ்டம். என்னசெய்ய?... இந்தமாதிரி ஆட்களை?..

இந்தமாதிரி வாய்ப்புகளை எதிர்நோக்கி எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்.

வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள நம்மால் இயன்றவரை முயற்சி செய்ய வேண்டும். என்னால் எதுவும் முடியலியே என்று சும்மா இருந்துவிடக்கூடாது.

எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகளை இறைவன் கண்டிப்பாக ஏற்படுத்திக் கொடுப்பான். அப்படி கிடைக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில் தக்கவைத்துக் கொள்ளவேண்டும். முயற்சிப்போம் முடியாதது என்று ஒன்றும் இல்லை.

வாய்ப்புகளை நோக்கி காத்திருப்போம்.. உங்களுடன் நானும்..

,

Post Comment

15 comments:

  1. //கிடைக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில் தக்கவைத்துக் கொள்ளவேண்டும். முயற்சிப்போம் முடியாதது என்று ஒன்றும் இல்லை.//

    mika nanru...

    ReplyDelete
  2. ந‌ல்ல‌ வாய்ப்புக‌ள் க‌ண்டிப்பா அமையும் ஸ்டார்ஜ‌ன்..... க‌ட்டுரை ந‌ல்லா இருந்த‌து.. வாழ்த்துக்க‌ள்

    ReplyDelete
  3. முன்னேற்றக் காரணிகளை அழகாய் தொகுத்து,
    அருமையாய் விளக்கினீர்கள். நன்று!

    ReplyDelete
  4. தன்னம்பிக்கை ,உற்சாகம் ஊட்டும் அருமையான பதிவு.

    ReplyDelete
  5. க‌ட்டுரை அருமை...

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு ஸ்டார்ஜன். வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டியது.

    ReplyDelete
  8. வாரநட்சத்திர வாழ்த்துகள்.

    "கிடைக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்". நல்ல கருத்து.

    ReplyDelete
  9. ஒவ்வொரு தலைப்பிலும் முத்து முத்தான கருத்துக்கள் சிறப்பான பகிர்வு வாழ்த்துகள் அண்ணே...

    ReplyDelete
  10. அருமை அருமை ஸ்டார்ஜன்.
    அத்தனை கருத்துக்களுமே அருமை.நம்பிக்கையோடு முயற்சி இருந்தாலே போதும் ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு.

    ReplyDelete
  11. நல்ல தன்னம்பிக்கை பதிவு..... வாழ்த்துகள்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்