Pages

Wednesday, July 28, 2010

பொருட்காட்சி


பளபளன்னு லைட்டு வெளிச்சம் கண்ணை கூசியது. சாலையில் எங்கும் சுவரொட்டிகளும் பேனர்களும் ஊர்ல பொருட்காட்சியென்று அறிவித்தது போதாதென்று ஆட்டோவிலும் ஒலிப்பெருக்கி கத்திக்கொண்டு வந்தது.

ஹைய்யா.. பொருட்காட்சி போட்டுட்டாங்களா..செம ஜாலி..அப்பா அம்மா என்னய பொருட்காட்சிக்கு கூட்டிட்டு போவீங்களா.. அங்க வெளாட்டுச்சாமா, பொம்ம, காரு, தண்ணிதுப்பாக்கி, வாங்கித்தருவியளா அப்பா.. அப்புறோம் ராட்டனத்துல ஆடணும், கொலம்பஸ், புதுபுது ராட்டணமெல்லாம் வந்திருக்காமுல்ல.. அப்பா அப்பா.. எங்களல்லாம் கூட்டிட்டுபோவீங்களா என்று பிள்ளைகள் அவங்கஅவங்க அப்பா அம்மாக்கிட்ட ஒரே நச்சரிப்பு.

ஆர்ச், ரத்னா தியேட்டர் ஸ்டாப் தாண்டியதும் பிள்ளைகளுக்கு ஒரே குசி.. ஹைய்யா பொருட்காட்சி வந்தாச்சி பொருட்காட்சி வந்தாச்சி என்று பிள்ளைகள் பஸ்ஸில் ஒரே குதியாட்டாம். ஆங்..ஆங்.. பொருட்காட்சியெல்லாம் இறங்குங்க.. இறங்குங்க.. என்று கண்டக்டர் விசில் கொடுத்து பஸ்ஸ நிப்பாட்டுனதுதான் தாமதம், எல்லா பிள்ளைகளும் தங்களோட அப்பா அம்மா கைய உதறிட்டு ஒரே ஓட்டம் பொருட்காட்சிய நோக்கி..

அந்த பிள்ளைகளைப் போல எனக்கும் சந்தோசம்.. இன்னக்கி நல்லா கூட்டம் வரணுன்னு நினைத்தேன் பொருட்காட்சிக்கு உள்ளிருந்து. ஆம்.. இன்னக்கி நல்லா கூட்டம் வந்திச்சின்னா கடன்காரன், சிறுசுகளுக்கு விளாட்டுச் சாமான் வாங்கணும், பிள்ளைகளுக்கும் அவளுக்கும் ரொட்டிக்கறி வாங்கிட்டு போகணும், அப்புறம் பெரியவனுக்கு நோட்டு புத்தகமெல்லாம் வாங்கணும், சின்னவளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும், சின்னவனுக்கு பால்பாட்டல், துணிமணியெல்லாம் வாங்க வேண்டியிருந்தது.. இன்னக்கி கூட்டம் வருமா.. என்று காத்திருந்தேன்.

நான் இந்த பொருட்காட்சித் திடலில் மேஜிக் ஷோ ஸ்டால் போட்டிருக்கேன். ஆமாம் எனக்குத் தெரிந்த மேஜிக்கை காட்டி மக்களை மகிழவைப்பது என்னுடைய தொழில். இருந்தாலும் மக்களுக்கு முன்னமாதிரி மேஜிக்ல விருப்பமே இல்லாம போயிருச்சி.. நல்லா கூட்டம் வந்தாத்தான் ஏதோ அன்னக்கி வயித்துப்புழப்பு கழியும்.. இது தெனோம் நடக்கிறதுதான். பாப்போம் இன்னக்கியாவது கூட்டம் வருதான்னு... என்ன செய்ய எல்லாம் காலத்தின் கோலம்.

பொருட்காட்சியில் மக்கள் வரவர கூட்டம் அலைமோதியது..

அய்யா.. வாங்க, அம்மா.. வாங்க, எதடுத்தாலும் இருபதுரூபா இருபதுரூபா.. வாங்க வாங்க சீக்கிரம் வாங்க, காலியாயிருச்சின்னா கிடைக்காது என்று பக்கத்துக்கடைக்காரன் கூவிக்கூவி வித்துக் கொண்டிருந்தான். அதற்கடுத்த கடைக்காரன் அம்மா பாருங்க அக்கா பாருங்க விதவிதமான வளையல், பொம்ம, கொண்டப்பூ, சைடு ஜோடி பத்துரூபா.. பாருங்கம்மா வளயல், வளயல், பொம்ம என்று கூவிக்கொண்டிருந்தான். இப்படி எல்லாக்கடைகளிலும் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தனர்.


மேஜிக் ஷோ ஆரம்பமாகப்போகுது. மேஜிக், மேஜிக் ஷோ புதுபுது மேஜிக்குகள் உங்களை மகிழ்விக்க காத்துக்கொண்டிருக்கிறது. ஒரு ஆளுக்கு பத்துரூபா பத்துரூபா.. மேஜிக் மேஜிக் என்று என்னுடன் வேலைப்பார்ப்பவன் மேஜிக் ஷோ டிக்கெட் வித்துக்கொண்டிருந்தான். கொஞ்சம் கூட்டம் வர ஆரம்பித்தது. இன்னும் கொஞ்சம் கூட்டம் வந்தால் நல்லாருக்குமேன்னு நினைத்தபடி திரைக்கு பின்னாலிருந்து யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஏய்.. ஏய்..மேஜிக் ஆரம்பிங்கலே.. எவ்ளோ நேரமாச்சி.. மேஜிக் ஆரம்பிக்கபோறீங்களா இல்லையாலே.. இல்லன்னா பத்துரூபா திருப்பிக்கொடுங்கலே.. என்று கூட்டத்தினர் கத்திக்கொண்டிருந்தார்கள். இனியும் தாமதித்தால் காரியங்கெட்டுருன்னு நினைச்சி திரையை விலக்கிக்கொண்டு வெளியே வந்தேன்.

எல்லோரும் ஜோரா ஒருதடவ கைய தட்டுங்க.. என்றபடி வந்திருந்தவர்களை ஒவ்வொரு தலையாக எண்ணிக்கொண்டே சொன்னேன். நேத்து அளவுக்கு இல்லைன்னாலும் இன்னக்கி கொஞ்சம் சுமாரான கூட்டம்தான். எல்லோரும் இங்கப்பருங்க அம்மா பாருங்க அய்யா பாருங்க.. இந்த மேஜிக் புதுவிதமானது.. ஏய் பையா..பையா இங்க பாரு.. என்ன நல்ல பாரு.. கையில ஒண்ணுமில்லயா... சொயிங்.. இங்கப்பாரு.. பூங்கொத்தை அங்கிருந்த சிறுவனிடம் கொடுத்தேன். அவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அடுத்து இங்கப்பாருங்க.. இப்போ இந்தா நிக்கிறாரே இவரு இப்போ இங்கருந்து மாயமாகப்போறாரு.. எல்லோரும் ஒருதடவ ஜோரா கைய தட்டுங்க.. என்று சொல்லியவாரே அவரை மறைய வைத்தேன். இப்படி எனக்கு தெரிந்த ஒரு அஞ்சாறு மேஜிக்க செய்துகாட்டினேன். மக்களுக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சி..

ராத்திரி 11 மணியா ஆகப்போனது. எல்லோரும் பொருட்காட்சிய விட்டு கிளம்பினார்கள். ஷோவில் சேர்ந்த பணத்த ஸ்டாலுக்கு வாடக, துணிமணி வாடக, அரசாங்க வரி, கூட இருந்தவங்களுக்கு அன்னக்கி சம்பளன்னு போக மிச்சமீதி என்பங்குக்கு ஏதோ கிடைத்தது.

நான் கணக்கு போட்டு வச்சிருந்த காரியத்துக்கெல்லாம் வருமா என்று கணக்கு பார்த்ததில் துண்டு விழுந்தது. என்ன செய்ய.. அரைகுறை மனசோட வீட்டுக்கு நடந்து வந்தேன். வருகிற வழியில் இளங்கோவில் ரொட்டிக்கறி வாங்கினேன்.

வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகளுக்கும் அவளுக்கும் ரொட்டிக்கறி பார்சலை பங்கு போட்டுக்கொடுத்தேன்.

என் சின்ன பையன், நான் மேஜிக் ஷோக்கு பயன்படுத்தும் மந்திரக்குச்சிய வைத்துக்கொண்டு எனக்கு பிரியாணி வேணும், பிஸ்கட்டு வேணும், பொம்ம வேணும் என்று மந்திரகுச்சியால் ஆட்டி ஆட்டி கேட்டுக்கொண்டு இருந்தான்.

நான் அதை ரசித்தபடியே கண்களில் நீர் துளிர்க்க பார்த்துக் கொண்டிருந்தேன்.

,

Post Comment

36 comments:

  1. //என் சின்ன பையன், நான் மேஜிக் ஷோக்கு பயன்படுத்தும் மந்திரக்குச்சிய வைத்துக்கொண்டு எனக்கு பிரியாணி வேணும், பிஸ்கட்டு வேணும், பொம்ம வேணும் என்று மந்திரகுச்சியால் ஆட்டி ஆட்டி கேட்டுக்கொண்டு இருந்தான்.//

    கதையின் மொத்த அழகும் இந்தவரிகளில் ரசித்தேன்...

    ReplyDelete
  2. க‌டைசி வ‌ரிக‌ள் ம‌ன‌தில் ஆழ‌மாக‌ தைக்கின்ற‌து... ந‌ல்லா இருக்கு ஸ்டார்ஜ‌ன்..

    ReplyDelete
  3. என் சின்ன பையன், நான் மேஜிக் ஷோக்கு பயன்படுத்தும் மந்திரக்குச்சிய வைத்துக்கொண்டு எனக்கு பிரியாணி வேணும், பிஸ்கட்டு வேணும், பொம்ம வேணும் என்று மந்திரகுச்சியால் ஆட்டி ஆட்டி கேட்டுக்கொண்டு இருந்தான்.

    நான் அதை ரசித்தபடியே கண்களில் நீர் துளிர்க்க பார்த்துக் கொண்டிருந்தேன்.


    ..... மனதில் ஒரு பாரத்துடன் முடிக்க வைத்து விட்டீர்கள்... பாவம்ங்க!

    ReplyDelete
  4. கடைசி ஒத்த வரியில மனசை கலக்கிட்டீங்க..

    ReplyDelete
  5. கதை அருமை....

    ரத்னா தியேட்டர், இளங்கோ புரோட்டா ஸ்டால்னு ஊர் ஞாபகத்தை கிளறிட்டீங்க

    :))

    ReplyDelete
  6. //என் சின்ன பையன், நான் மேஜிக் ஷோக்கு பயன்படுத்தும் மந்திரக்குச்சிய வைத்துக்கொண்டு எனக்கு பிரியாணி வேணும், பிஸ்கட்டு வேணும், பொம்ம வேணும் என்று மந்திரகுச்சியால் ஆட்டி ஆட்டி கேட்டுக்கொண்டு இருந்தான்.//

    க‌டைசி வ‌ரிக‌ள் ம‌ன‌தில் ஆழ‌மாக‌ தைக்கின்ற‌து.

    ReplyDelete
  7. கடைசி பகுதி நெகிழ வைத்தது.

    ReplyDelete
  8. கதை ரொம்ப நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்.

    மேஜிக் தொழில் செய்பவர்களுக்கு முன்பு போல வருமானம் இல்லை.

    ReplyDelete
  9. கதையின் முடிவோடு மனம் இறுகிப் போகிறது ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  10. வாங்க சீமான்கனி @ வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

    ReplyDelete
  11. வாங்க சசிக்குமார் @ ரொம்ப நன்றி

    ReplyDelete
  12. வாங்க ஸ்டீபன் @ ரொம்ப நன்றி.. இதேமாதிரி எத்தனபேர் அன்றாடம் பிழைப்புக்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. அதை மனதில் வைத்துதான் இந்த கதையை எழுதினேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  13. வாங்க சித்ரா @ ரொம்ப நன்றி.. அன்றாடம் பிழைப்பு பண்றவங்களை பார்க்கும்போது அவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வரணும் என்ற ஆதங்கமே மிஞ்சுகிறது. அவர்களுக்கு எத்தனை இரவுகள் தூங்கா இரவுகள்.. இறைவன் அவர்களின் கஷ்டங்களை நீக்கணும் என்ற உங்கள் பிராத்தனையில் நானும் பங்குகொள்கிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  14. வாங்க ஜெய்லானி @ ரொம்ப நன்றி.. என்ன செய்ய மனசை தேத்திக்கிர வேண்டியது.. அவர்கள் பாடு கஷ்டந்தான். இறைவன் எல்லோருக்கும் நல்ல நிலையை வழங்கணும் என்று பிராத்திப்போம்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  15. உண்மையில் சில தொழில் நசுங்கி போவதை ,அழகாக சிறுகதையாக வெளிபடுத்தியுள்ளிர்கள். அருமை

    ReplyDelete
  16. மேஜிக் இப்போ நிறைய இடத்துலே காசுக்காக கற்றுக்கொடுக்க ஆரம்பிச்சதாலே அதன் மகத்துவம் குறைந்துவிட்டதாமவே உணர்கிறேன்

    ReplyDelete
  17. கடைசி வரில கண்கலங்கிடுச்சு..நன்றாகயிருந்தது...

    ReplyDelete
  18. நிச்சையம் பிரியாணி பொட்டலம் ஒரு நாள் வரும்

    ReplyDelete
  19. வாங்க கண்ணா @ ரொம்ப நன்றி... ஆமா நம்ம ஊர நினைச்சாலே நல்லாருக்குல்ல..

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  20. வாங்க குமார் @ ரொம்ப நன்றி.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  21. வாங்க ஸாதிகா அக்கா @ ரொம்ப நன்றி.. ஆமா.. எனக்கும் ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  22. வாங்க அக்பர் @ ரொம்ப நன்றி.. பாராட்டுக்கு.. என்ன செய்ய..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  23. வாங்க ஹேமா @ ரொமப் நன்றி.. எனக்கும் மனது பாதித்த கதை இது. ரொம்ப நன்றி பாராட்டுக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  24. வாங்க இளம்தூயவன் @ ரொம்ப நன்றி.. இந்த மாதிரி மேஜிக் செய்வர்கள் இப்போது குறைந்துவிட்டார்கள். அவர்கள் வாழ்வு சூன்யமாகி விடக்கூடாது. அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும். அதன்பாதிப்பினால்தான் இந்த சிறுகதையை எழுதினேன்.

    ரொம்ப நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  25. வாங்க ஆறுமுகம் முருகேசன் @ ரொம்ப நன்றி.. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  26. வாங்க அப்துல் மாலிக் @ ரொம்ப நன்றி.. ஆமா நீங்க சொல்வது சரிதான். அவர்கள் மீண்டு வரணும்.. அதான் என் அவா..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  27. வாங்க மேனகா @ ரொம்ப நன்றி... இது வருத்தமான உண்மை. பாராட்டுக்கு நன்றி..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  28. வாங்க மங்குனி @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு...

    ஹைய்யா.. பிரியாணி வருமா.. அப்பஞ்சரி.. நா நல்லா துங்குவேனா.. நீங்க எனக்கு பிரியாணி தருவியளா.. கண்டிப்பா தரணும் என்ன..

    இப்படிக்கு

    (கதையில் வரும் சின்ன பையன்.)

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    ReplyDelete
  29. கடைசி வரிகள் மொத்த கனத்தையும் தாங்கி நிற்கின்றன.. நாடகத்தில் ராஜாவாக நடிப்பவர் நிஜத்தில்????

    ReplyDelete
  30. வாங்க அமைதிச்சாரல் அக்கா @ ரொம்ப நன்றி.. பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  31. http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_19.html
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆசியாக்கா.. நம்ம பொருட்காட்சியையும் அரங்கேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துகள்.

      Delete
  32. Replies
    1. நன்றி அருள் சார். பாராட்டுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

      Delete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்